Jump to content

ஜனாதிபதி தேர்தல். 2 - வடக்கிலும் கொழும்பிலும் வாழும் தமிழ் தலைமைகளுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்


Recommended Posts

ஜனாதிபதி தேர்தல். 2 - வடக்கிலும் கொழும்பிலும் வாழும் தமிழ் தலைமைகளுக்கு வேண்டுகோள்.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

.

Image may contain: 1 person, beard and indoor

.

சோமாலியாவாக சிதைகிறது கிழக்கு. இதுவரை கிழக்குக்குச் செய்த துரோகம் போதும். இனியாவது கிழக்கு தமிழர் தலைவர்களை உங்கள் விருந்துகளில் கருவேப்பிலையல்ல பயன்படுத்துவதை நிறுத்துங்கள். கிழக்கு தலைவர்களை வடமாகாண தலைவர்கள்இனியும் மட்டுமல்ல கொழும்பு தமிழ் தலைவர்களும் கிள்ளுகீரையாக பயன்படுத்துவதை வரலாறு அனுமதிக்காது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரியுங்கள். இணைந்த வடகிழக்கு தமிழர்களின் அதிகாரம்தான் ஈழத் தமிழர் தலைமை. அப்படித்தான் 50பதுகளில் தந்தை செல்வநாயகம் ஈழத் தமிழர் தலைமையைக் கட்டமைத்தார்.
.
தமிழர் தலைமையால் கைவிடப்பட்டு சோமாலியாவாகச் சிதைந்து கிடக்கிறது கிழக்கு தமிழர் தாயக அலகுகள். கிழக்கை பயன்படுத்திவிட்டு உள் மோதல்களை தூண்டி துரோகிப் பட்டம் சூட்டும் இழிந்த விழையாட்டு இனியும் தொடரவேண்டாம்.
.
அரசியல் அதிகாரத்தில் கிழக்கின் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரியுங்கள். இதுவரை ஏமாற்றிக் கைவிடப்பட்ட அரசியற் கைதிகளையும் நிலம் இழந்தவர்களையும் விடுவிக்க ஈழத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் உலகத் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் எங்கள் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரிக்கும் சிங்களவர்களும் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவோம்.
.
தமிழர் தலைமையே சோமாலியாபோல கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட கிழக்கின் மக்களுக்கு துரோகிப் பட்டமும் சூட்டி ஈழ தமிழ் இனத்தின் இருப்பின் கடைசி முடிச்சுகளையும் அறுத்து விடாதீர்கள். சாதகமாகிவரும் இந்துசமுத்திர சர்வதேசிய சூழல்கள் மேலும் சாதகமாக வளர்த்தெடுங்கள். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன வடகிழக்கு ஒருமைப்பாடு உறுதிப்பட்டால் நம்மை இனி யாராலும் ஒடுக்க முடியாது. தேசிய சஎவதேசிய வளர்சிகளால் நாம் மீண்டும் பலத்தின்ன் அடிப்படையில் பேரம்பேசக்கூடிய நிலையை நோக்கி வேகமாக நகர்கிறோம் என்பதை உரத்த குரலில் பதிவு செய்கிறேன்.
.
அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவழித்தும் வாகெடுப்புகளில்கூட நிபந்தனையற்று அரசைப் பாதுகாத்தும் அரசியல் கைதிகளையும் நிலத்தையும்கூட விடுவிக்க முடியாத உங்கள் தோல்வியில் இருந்து பாடம் இனியாவது கற்றுக்கொள்ளுங்கள்.
.
தமிழர் அரசியல் தலைமை அஞ்சல்வழி வாக்கெடுப்புக்கு ஒரு கொள்கை தேர்தல் வாக்களிப்புக்கு ஒருகொள்கையென இரட்டை வேடம் போடக்கூடாது என வலியுறுத்துகிறேன். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விருப்பபடி வாக்களிக்க வகைசெய்வது மட்டுமே வடக்கிழக்கு வாழ் தமிழினத்தின் ஒருமைப்பாட்டை காக்க எஞ்சியுள்ள ஒரே மார்க்கம்.
.
ஈழத் தமிழனத்தை பிழவுபடுத்திவிடாதீர்கள்.

.

பிற்குறிப்பு :- எனக்கு கால் உடையவில்லை ஆனால் கால் உடைந்திருக்கு. நல்லிணக்கத்தின் முதல்பணியே அரசியல் கைதிகள் விடுதலை. இத்தனை வருடங்களாக அரசியல்கைதிகள் விடுதலையைக்கூட நிபந்தனையாக வைக்காமல் அரசுடன் ஒட்டி உறவாடி கால் ஒடிந்துபோயிருக்கும் தமிழ் தலமையை உருவகப்படுத்தவே இந்தப் படம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, poet said:

அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவழித்தும் வாகெடுப்புகளில்கூட நிபந்தனையற்று அரசைப் பாதுகாத்தும் அரசியல் கைதிகளையும் நிலத்தையும்கூட விடுவிக்க முடியாத உங்கள் தோல்வியில் இருந்து பாடம் இனியாவது கற்றுக்கொள்ளுங்கள்.

சாத்மீக வழியிலும் ஆயத போராட்ட வழியிலும் 50 வருடங்களுக்கு மேல் போராடியும் இறங்கி வராத சிங்கள பெரும் தேசியம் எந்த அம்ச கோரிக்கைகளுக்கும் இறங்கி வராது.இந்தியாவோ சர்வதேசமோ மாறிவரும் உலக ஒழுங்கிற்கு அமைய பெரும் அழுத்தம் கொடுக்காமல் அசையாது சிங்கள தேசியம்.இந்து சமுத்திர பூகோள அரசியல் மாற்றத்ற்கு ஏற்ப இந்திய வெளிஉறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.எங்கள்  தந்தை செல்வா  கூறிய ஆண்டவனும் எம்மை கைவிட்டு விட்டான் பொயட் .நீங்கள் கூறுவது போல் வடக்கும் கிழக்கும் முஸ்லீம் மக்களும் இணைவதே பலரது விருப்பமும் கூட இது இப்போதைய இலங்கையின் போருக்கு பின்னான அரசியல் மாற்றங்களோடு எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்றுதெரியவில்லை.எங்கள் வெற்றியிலும் தோல்வியிலும் பங்கு கொண்ட தமிழ் நாட்டுக்கும் டெல்கிக்கும் தார்மீகப் கடமை இருக்கிறது ஈழ தமிழருக்கு ஒரு சமஸ்டி ரீதியிலான தீர்வை பெற்று தருவதற்கு.அரசியல் காய் நகர்த்தலில் நிரந்தரமான நண்பனும் இல்லை நிரந்தரமான எதிரியும் இல்லை.அடிக்கடி கால் உடைக்காதீர்கள் பொயட்.

Link to comment
Share on other sites

அரசியலின் எங்கள் இனத்தின் வகிழக்கு ஒற்றுமையும் நல்ன்களையும் தவிர எதுவும் நிரந்திரமில்லை.

நிரந்தர எதிரியோ நண்பனோ கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் கிழக்கிற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கூட்டமைப்பின் தலைவர் கிழக்கை சேர்ந்தவர்.

கிழக்கு மக்கள் இனியும் ஒட்டுண்ணிகளாக வடக்கில் ஒட்டியிருக்காமல் சுயமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

On 11/2/2019 at 5:40 AM, MEERA said:

அரசியலில் கிழக்கிற்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கூட்டமைப்பின் தலைவர் கிழக்கை சேர்ந்தவர்.

கிழக்கு மக்கள் இனியும் ஒட்டுண்ணிகளாக வடக்கில் ஒட்டியிருக்காமல் சுயமாக இருக்கவேண்டும்.

MEERA அவர்களே கவலையாக இருக்கு.  மிகவும் யாழாதிக்க வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஒட்டுண்ணி என்றுகூறி வடக்கில் போராடி வீழ்ந்த பல்லாயிரம் கிழக்கு மாவீரர்களை கொச்சைப் படுத்திவிட்டீர்கள். உண்மையில் சுரண்டல் காரர்களாகவும் ஒட்டுண்ணிகளாகவும் இருந்தது வடக்கைச்சேர்ந்த மேட்டுக்குடிதான். தயவு செய்து திருத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2019 at 9:17 AM, poet said:

MEERA அவர்களே கவலையாக இருக்கு.  மிகவும் யாழாதிக்க வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஒட்டுண்ணி என்றுகூறி வடக்கில் போராடி வீழ்ந்த பல்லாயிரம் கிழக்கு மாவீரர்களை கொச்சைப் படுத்திவிட்டீர்கள். உண்மையில் சுரண்டல் காரர்களாகவும் ஒட்டுண்ணிகளாகவும் இருந்தது வடக்கைச்சேர்ந்த மேட்டுக்குடிதான். தயவு செய்து திருத்துங்கள்.

நான் குறிப்பிட்டது தமிழ் வார்த்ததை, அதை யாழ் ஆதிக்க வார்த்தை என்று பிரிக்க வேண்டாம். இதற்குள் மாவீரர்களை இழுக்காதீர்கள்.

என்னை திருத்தக் கூறிவிட்டு அதனை வடக்கு நோக்கி திசை திருப்புகிறீர்கள். வேடிக்கையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.