Jump to content

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கட்டாயம் இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்!


Recommended Posts

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கட்டாயம் இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்!

 

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கட்டாயம் இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்!
625.500.560.350.160.300.053.800.900.160.
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.
VOTE.jpg
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் மக்கள் தெளிவு பெற வேண்டும்.

வாக்களிப்பு தொடர்பில் தெளிவின்மையே கடந்த 2015 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிக வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
dc9bbe402a036656963a3ca9eb8a1b72_XL.jpg
இம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிக்கும் மேசையில் நேராக வாக்கு சீட்டினை வைத்து வாக்களிக்கும் போது அதன் ஒரு பகுதி கீழாகக் கூடும். எனவே வாக்களிக்கும் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் மறைவில் வாக்கு சீட்டை குறுக்காக வைத்து வாக்களிக்கும் போது அதன் ஒரு பகுதி கீழ் செல்லும் அசௌகரியத்தை குறைத்துக் கொள்ளலாம்.
zzbvYyt.png
35 வேட்பாளர்களின் சின்னம் தொடர்பிலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் குழப்பம் அல்லது தெளிவின்மை காணப்படலாம்.
Postal-votes-01.jpg
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 1981 – 5ஆம் இலக்க சட்டத்தில் வாக்களிப்பது தொடர்பிலும் , விருப்பு வாக்கு தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1572322635-Election-Paper-2.jpg
வாக்காளர் ஒருவர் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த வேட்பாளரது சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட வேண்டும்.
zzbvYyt.png
மாறாக ஒரு வேட்பாளர் மாத்திரமின்றி பிரிதொரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கினை வழங்குபவர்கள் முதலாம் தெரிவிற்கு ‘ 1 ‘ என இலக்கமிட வேண்டும். இரண்டாம் தெரிவிற்கு ‘ 2 ‘ என இலக்கமிட வேண்டும். மூன்றாம் விருப்ப தெரிவு காணப்படுமானால் ‘ 3 ‘ என்று இலக்கமிட வேண்டும். எனினும் விருப்பு வாக்குகள் என்பது கட்டாயமானதல்ல.
dc9bbe402a036656963a3ca9eb8a1b72_XL.jpg
வாக்களிக்கும் போது முதலாம் தெரிவுக்கு புள்ளடியிட்டால் , இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவுகளுக்கு இலக்கமிட முடியாது.

 

அதே போன்று ஒரே வாக்குச் சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளடியிடவும் முடியாது. இவ்வாறான வாக்குகளே நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக இனங்காணப்படும்.
VOTE.jpg
அத்தோடு முதலில் ஒரு சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட்டு பின்னர் அது தவறெனக் கருதி அதனை கிறுக்கல் மூலம் நிராகரித்து மீண்டுமொரு சின்னத்திற்கருகில் புள்ளடியிட்டால் அந்த வாக்கும் செல்லுபடியற்றதாகவே கருதப்படும்.
625.500.560.350.160.300.053.800.900.160.
எனவே மக்கள் வாக்களிக்கும் விடயத்தில் தெளிவுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்றார்.

https://www.vannibbc.com/archives/15514

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.