Sign in to follow this  
colomban

இன்று இறந்த விசுவாசிகள் நினைவு

Recommended Posts

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம்.
        
     இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள். திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள்.  உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க உதவி செய்கின்ற தூய நாள். இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணக பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள்.

   புனிதர்கள் மரித்துப்போன ஆன்மாக்களின் மீட்புக்காகக் கண்ணீரோடும், முழந்தாள்படியிட்டும், கரங்ளை விரித்துப்பிடித்தும் செபித்தனர். ஒருமுறை புனித ஜெத்துருவிடம் இயேசு கிறிஸ்து காட்சியளித்து “இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஒரு ஆன்ம உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கின்றது”  என்று கூறினார்.

   ஒருமுறை காவல்தூதர் ஒருவர் பவுஸ்தீனாவை உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களைச் சந்திக்க தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு ஏராளமான ஆன்மாக்கள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வமாய் செபிக்கிறார்கள்; பலன்ஒன்றுமில்லை. இந்த ஆன்மாக்களுக்கு நம்மால் மட்டுமே உதவி செய்ய முடியும். எரியும் நெருப்பின் இடையில் சென்ற பவுஸ்தீனாவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இறைவனின் அன்பும், இறைவனின் பிரசன்னமும் இல்லாமல் தவிக்கும் நிலையே உத்தரிக்கிற இடத்திலுள்ள ஆன்மாக்களின் மிகபெரிய துன்பம். இவர்களின் தாகம் இறைவனோடு இணைதல். பவுஸ்தீனா இவர்களுக்காகப் பரிகாரம் செய்து செபிக்க வேண்டுமென்று கூறி வானதூதர் மறைந்தார்.
      
        அன்னை மரியா அங்கு தோன்றினார். உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்கள் உரத்த குரல் ‘மனுக்குலத்தின் தாயே’ என்று அழைத்தார்கள். அன்னை அவர்களை ஆறுதல்படுத்தினார். அப்போது பவுஸ்தீனா, “எனது இரக்கம் ஆன்மாக்களின் வேதனையைக் குறைக்கும்” என்ற குரல் கேட்டார். அன்று முதல் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காகச் செபிக்க தொடங்கினார்.

     இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற ஆன்மாக்கள் மண்ணக வாழ்வை விட்டுபிரிந்தாலும் விண்ணகத்தில் அவருடன் வாழ்கின்றனர். விண்ணகப்பேரின்பத்தை இழந்துபோன மக்களுக்கு உயிர் வாழ்வோரின் பரிந்துரை செபத்தால் இறந்தோர் அனைவரும் விண்ணக வாழ்வை உரிமையாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே இறந்துபோன அனைத்து விசுவாசிகளுக்காகவும் செபிப்போம்.

http://punithargalinsarithai.blogspot.com/2018/11/blog-post_2.html

 

 

 

Edited by colomban

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பெற்ற கடனை இழுத்தடிக்காமல் முடிந்தவர்கள் அதை விரைவில் கட்டி முடிப்பதே நல்ல போக்காக அமையும்.
  • நிறுத்தப்பட்ட வட்டியை அறவிடும் முயற்சியில் வணிக வங்கிகள்..!   கொரோனா நிவாரணமாக கடனுக்கான வட்டி அறவிடுவதை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி மீண்டும் வட்டியை அறவிட அனுமதி வழங்குமாறு வணிக வங்கிகள், இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடனுக்காக வட்டியில் ஒரு பகுதியையாவது அறவிட இடமளிக்குமாறு வங்கியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கடன்களுக்கான வட்டி அறவிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட காரணத்தினால், வங்கிகளின் வட்டி வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக வணிக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வட்டியை மீண்டும் அறவிடுவது குறி்த்து வணிக வங்கிகள், மத்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன் ஒரு வாரத்திற்குள் தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்துறை மற்றும் நபர்களுக்காக இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. மார்ச் 24ஆம் திகதி சம்பந்தப்பட்ட நிவாரண யோசனைகளை உள்ளடக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த மத்திய வங்கி, சுற்றுலா, ஆடை உற்பத்தி, பெருந்தோட்டம், தகவல் தொழிநுட்பம், சுயதொழில், சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகங்களுக்கு நிதி சலுகையை வழங்குமாறு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.   https://newuthayan.com/நிறுத்தப்பட்ட-வட்டியை-அ/
  • சாத்தியமாகும் அறிகுறிகள் தெரிகின்றன. தேர்தலுடன் இது சம்பந்தப்படாது.
  • கட்சியிலிருந்து பிரிந்துசென்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலர் பலவிதமான சூழ்ச்சிகளை செய்து சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். கட்சியிலிருந்து பிரிந்துசென்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு கட்சியில் இணைவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தற்போதைய செயற்பாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகள் சரியான போதிலும் தற்போது அவர் கொண்டிருக்கும் சிந்தனையை சுதந்திர கட்சி நிராகரிக்கின்றது. சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது. கட்சித் தலைவரை சுட்டுக் கொன்றார்கள். தலைவியை அழிக்க முனைந்தார்கள். இதனால் கட்சியின் தலைவி மற்றும் அவரது சகோதரரர்கள் வெளியேறி தனிக்கட்சிகளை ஆரம்பித்தார்கள். அண்மையில் கூட ஒருபகுதியினர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் இணைந்தார்கள். கட்சியிலிருந்து சென்றவர்களுக்கு எமது கட்சி திறந்தே இருக்கும். அது அவர்கள் தமது பிழைகளை உணர்ந்து சரிப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144494
  • அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்   அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் போலீசார் மண்டியிட்டு வருகின்றனர். பதிவு: ஜூன் 03,  2020 07:25 AM வாஷிங்டன் அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த மாதம் 25 ந்தேதி கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.  அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கிடையே பல இடங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகள் சிலர் போராட்டக்காரர்களை கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலமும், அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலமும், துக்கத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஜார்ஜியாவின் அட்லாண்டாவில், கடந்த திங்கட் கிழமை நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தின் போது கேடயங்களை வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர்.அதே போன்று டென்வர் காவல்துறைத் தலைவர் பவுல் பாசன் அதே நாளில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து காணப்பட்டார். மற்றொரு புகைப்படத்தில், கேஸ் மாஸ்க், ஹெல்மெட் மற்றும் உடுப்பு அணிந்த ஒரு பொலிஸ் அதிகாரி தெற்கு நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் நான்காவது நாளின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரை அரவணைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நியூயார்க்கில், நியூயார்க் நகர காவல்துறைத் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹான் திங்களன்று தனது நகரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரைத் கட்டி தழுவினார். அவர்களுடன் மண்டியிட்டார். மேற்கு கடற்கரையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வான் நியூஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது எதிர்ப்பாளர் கெவின் வெல்பெக் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரியுடன் கைகுலுக்கினார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03072542/New-York-police-officer-who-took-a-knee-What-happened.vpf