Jump to content

இந்த இடம் தெரியுமா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

பல திரைப்படங்களின் பாடல்களில் சென்னையின் இந்த வரலாற்று சின்னத்தை பார்த்திருப்பீர்கள்..! (அம்புக் குறியீடு காட்டும் இடம்)

எந்த இடம், என்ன சின்னம் என ஊகிக்க முடிகிறதா..?

 

test.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை. எந்த திரைப்படத்தில் வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தெரியவில்லை. எந்த திரைப்படத்தில் வந்தது?

உங்கள் காலத்து பாடலில்.. இந்த வரலாற்று சின்னம் இடம் பெற்றுள்ளது..! 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

உங்கள் காலத்து பாடலில்.. இந்த வரலாற்று சின்னம் இடம் பெற்றுள்ளது..! 😎

 

 

எலியட்ஸ் கடற்கரை....!😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

எலியட்ஸ் கடற்கரை....!😀

Exactly...!

சரியான இடத்திற்கான பதில்..! 😍

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t2jls6a43oy40lsowiwnzg9o2.jpg

எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும்.

மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது. முந்தைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக 'பெசன்ட் நகர் கடற்கரை' என்றே அறியப்படுகிறது.

சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது.

கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னம் (karl schmidt memorial)

785683_Viator_Shutterstock_460048.jpg

பெசன்ட் நகர் கடற்கரையில் கோயிலின் நுழைவு வாயில்போல உள்ள கட்டிடத்தைப் பல சினிமாவில் பார்த்திருப்போம்.

இந்தக் கட்டிடம் டச்சு மாலுமி ஸ்மித் நினைவாகக் கட்டப்பட்டது. சென்னை இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பெசண்ட் நகர் கடற்கரையில் 1930-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கிலச் சிறுமி கடல் அலைகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டாள்.

இதைக் கண்ட டச்சு மலூமி, அந்தச் சிறுமியைப் போராடிக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாலுமி கடல் அலைகளுக்குள் சிக்கி இறந்துபோய்விட்டார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் சென்னை ஆளுநர் அவருக்கு நினைவகம் எழுப்ப உத்தரவிட்டார். அதுதான் இந்தக் கட்டிடம். சுதந்திரம் அடைந்த பிறகு கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தக் கட்டிடத்தை இப்போதுதான் 2014-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி புதுப்பித்துள்ளது.

- தமிழ் இந்து குறிப்பு.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.