• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Lara

எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாது: நிலைப்பாட்டை அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எவ்!

Recommended Posts

தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்).

அந்த கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இன்று (5) விடுத்த அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

பிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை மேலோங்கியதன் காரணமாக இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தின்மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்களிடமிருந்து சூழ்ச்சிகரமான முறையில் தமிழ் மக்களின் இறைமையைப் பறித்துக்கொண்ட சிங்கள பௌத்த தேசியம் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தை இரண்டாந்தரக் குடிமக்களாகவும் தனது மேலாதிக்க சிந்தனைக்கு அடிபணியும் சக்தியாகவும் மாற்ற முற்பட்டது.

தமிழ்த் தேசிய இனத்தை அழித்தொழிப்பது மற்றும் அதனை தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்வது என்னும் கோட்பாட்டை சிங்கள தேசியம் வெகு கச்சிதமான முறையில் நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் மேற்கொண்டு வருகின்றது. தமிழ்த் தேசிய இனம் தனது அடையாளத்தையும், உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு எதிராக பலவழிகளிலும் போராடி வருகின்றது. இந்த யதார்த்தம் இன்று சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுவரை காலமும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தென்னிலங்கை ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த இரண்டு பிராதன அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற கையுடன் தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய இனம் ஏமாற்றப்பட்டதே இந்நாட்டின் வரலாறு.

சட்டவாக்கல் சபையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று ஆரம்பித்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சிங்கள மேலாதிக்கவாதிகளால் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டதன் காரணமாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தும் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தும் சாத்வீகமுறையில் முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அராஜக நடவடிக்கையின் மூலமாக ஆயுத முனையில் அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாக தனது இருப்பைக் காப்பதற்கும் சுயமரியாதையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தனது இனத்தினை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் தமிழ்த் தேசிய இனமும் இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டமானது, சிறிலங்கா அரசினால், சர்வதேச சக்திகளை பிழையாக வழிநடத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதிலிருந்து தற்பொழுது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்வரை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கீழ் ஐக்கியப்பட்டு தமது உள்ளக்கிடக்கையை ஜனநாயக வழியில் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த ஐக்கியத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தமக்கு விசுவாசமானவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காகவும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் காலடியில் மண்டியிட வைத்துள்ளது.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமூகமும், ஐ.நா மனித உரிமை ஆணையகமும் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் அதனை எமது மக்களுக்குச் சாதகமாக மாற்றுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது சுயநலனுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமுதாயத்தின் பிடியிலிருந்து பிணையெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தமக்கான நலன்களை அதற்குப் பிரதியுபகாரமாகப் பெற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஒரு தீர்வினைக் காண்பதற்கு முயற்சித்தபோதும்கூட, அது முழுமையான தீர்வாக அமையவில்லை என்ற காரணத்தால் அதனை முழுமைபெறச் செய்வதற்காக அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார்.

பின்னர் வந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அம்மையார் அவர்களும் 2000 ஆம் ஆண்டளவில் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தபோதும் பாராளுமன்றத்தில் அது அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினால் முறியடிக்கப்பட்டது.

யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், 13வது திருத்தத்திற்கு மேலே சென்று, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இந்திய அரசுக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அன்றைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஒரு சர்வகட்சிக்குழு நியமிக்கப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பதினெட்டு சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தி அதுவும் எத்தகைய முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.

தற்போதைய மைத்திரி-ரணில் ஆட்சியில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதாகக் கூறி, 83 தடவைகளுக்கும் மேல் இவர்கள் பேசியும்கூட ஏறத்தாழ ஐந்து வருடத்தில் புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவரமுடியவில்லை. இந்த முயற்சிகள் யாவுமே இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை ஒன்று இருக்கின்றதென்பதும் அதற்கு நியாயமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அடிப்படையிலுமே இந்தத் தீர்வுத்திட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அவர்களது கட்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் பற்றி பேசுகின்றார்களே தவிர, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்ற விடயத்தை முற்று முழுதாக தங்களது நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு வேட்டைக்காகச் செல்கின்றார்கள்.

இதனை இன்னும் சிறப்பாகக் கூறுவதாக இருந்தால், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பது போன்றும் தமிழ்த் தரப்பால் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோது அது ஒரு இனவாத கோரிக்கை போன்ற பொய்யான பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து, தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுக்கின்ற ஒரு நிலைமையை நாங்கள் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சிங்கள அரசியல் கட்சிகளின் மேற்சொன்ன போக்கானது தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டில் வெறுமனே பொருளாதார அபிவிருத்தியை மட்டும் மேற்கொண்டால் போதுமானது என்ற மாயையை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இது தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த மண்ணில் அவர்கள் சுயாதிபத்தியத்துடனும், சம அந்தஸ்த்துடனும், தலைநிமிர்ந்து வாழக்கூடிய அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிராகரிக்கும் போக்கு என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். அவர்களது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான விசாரணைகள் நடைபெற வேண்டும். வடக்கு-கிழக்கில் உள்ள பெருமளவிலான இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் . அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். பல்வேறுபட்ட போர்வைகளில் தமிழர் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைத்தபொழுது, இவை அனைத்துமே இனவாதக் கோரிக்கைகள் என்றும் இவை தொடர்பாக பேச்சுவார்த்தையே நடாத்த முடியாதென்றும் ஆனாலும் தமிழர் வாக்குகள் எமக்குத்தான் கிடைக்கும் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் இந்த வேட்பாளர்கள் மறுதலையாக கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வேண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் படையினரை உடன் விடுவிப்போம் என்பதும் யுத்தக் குற்றங்கள் என்ற ஒரு விடயமே இந்த நாட்டில் இல்லை என்றும் யாருக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது பழையனவற்றை மறந்து, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்படியும் இவர்கள் கூறுவதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நியாயங்களும் கிடைக்காது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதி ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகளும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக சமூகமும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் முன்வைத்திருந்தோம். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதுதொடர்பான கலந்துரையாடலை நடாத்துவதற்கோ அல்லது அது தொடர்பில் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கோ எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் முன்வரவில்லை என்பதை எமது மக்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருந்தபொழுதும்கூட, சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்திற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும், அது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல், புதியதோர் அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதுடன், அப்படி நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அது ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னெடுத்துச் செல்லப்படலாம். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த கடந்த ஐந்தாண்டுகளில் செய்ய முடியாத புதிய அரசியல் சாசன விடயத்தை குறைந்த பட்சம் அறுதிப் பெரும்பான்மையே இல்லாத இன்றைய அரசாங்கத்தால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஆகவே தமிழ் மக்களின் கண்துடைப்பிற்காகவே அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்பட்டதே தவிர, சமஷ்டிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் காணிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதியினால் மூன்றுமுறை காலக்கெடு விதிக்கப்பட்டும்கூட அவர் உறுதியளித்தவாறு காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதேநேரம், காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும் நீண்ட போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுதும்கூட, இந்த விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிய ஜனாதிபதி வந்தால் இவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இதே உத்தரவாதங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவினாலும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இவை அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
மறுபுறத்தில் பொதுஜன பெரமுனவையும் அதன் வேட்பாளரையும் பார்க்கின்ற பொழுது, அவர்கள் அதிதீவிரவாத இராணுவவாதக் கண்ணோட்டம் உள்ளவர்களாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில், தமிழ் மக்களை அடக்கி ஆள்வதே அவர்களின் நிலைப்பாடாகவும் தோன்றுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் மாத்திரமே இவர்களால் பேசப்படுகின்றது என்பதுடன், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ, அவற்றிற்கான தீர்வு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாகவோ தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவோ இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவுமே கூறப்படவில்லை.

அத்துடன் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் முன்னெடுத்த யுத்தமும் இவர்களது இனவாத அரசியல் செயற்பாடுகளுமே காரணமாக அமைந்தன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குறித்துரைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒருவராக இவர் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறார். இவரும்கூட, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு நிற்கின்றார். சிங்கள மக்களின் வாக்குகளால் நான் வெல்வேன் என்று கூறிவந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய அவர்கள் தற்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வோம் என்றும் தேர்தல் காலத்தில் பசப்புரைகளைச் செய்து வருகின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் என்பது முழுநாட்டையும் ஒரே தேர்தல் தொகுதியாக முன்னிறுத்தி நடத்தப்படுகின்ற தேர்தல். அதே சமயம், இலங்கை ஒரு பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கின்றார்கள். இது ஒரு பாரிய யுத்தமாகவும் கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்று வந்திருக்கின்றது. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பது நியாயமானதே. அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

https://www.pagetamil.com/85282/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எதுவும் என்றால் அதனை நடு வீதிக்கு இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதே வழக்காகிற்று. நாலு பேருக்கு நல்லது செய்யா விட்டாலும் உபத்திரமாக இருக்காமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கம். கதைக்களம் போரில் கணவனை இழந்த ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் எப்படிப் பார்க்கப்படுகின்றார் என்பதுதான் இதன் சாராம்சம். போரில் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த ஒரு இளம் பெண் தன் இரு குழந்தைகளுடன் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகின்றார். அப்போது அப் பெண்ணின் மேல் அயல் வீட்டுப் பெண்கள் ஒரு கண் வைத்திருந்தனர். ஒருநாள் இவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இவர் வீட்டிற்கு இருவர் வந்திருப்பதாக ஒரு வயோதிபர் அழைப்பு விடுகின்றார். இவளும் செல்கின்றார். இதை அயல் வீட்டு மூன்று பெண்கள் பார்த்துப் புறம் பேசிக் கொண்டே இருப்பர். இப் பெண்ணிடம் ஒரு ஆண் அடிக்கடி வருவதை இவர்கள் பார்க்கின்றனர். இவளிடமும் அதிகமாக பணப் புழக்கம் ஏற்படுகின்றது. இது அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. இவள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கும் இவள் தவறானவள் அவள் குழந்தைகளுடன் சேர வேண்டாம் என பிஞ்சு குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றனர். இந்தப் பெண் ஒரு நாள் கடைக்கு வந்து செல்லும் வழியில் வேறு இரு ஆண்கள் அவளை இடைமறித்து சேட்டை செய்கின்றனர். அவள் ஒன்றும் பேசாமல் செல்கின்றாள். அவர்கள் இருவரும் அவள் வீட்டிற்கு வந்து அவள் உடை மாற்றும் வேளை எட்டிப் பார்த்து போனில் போட்டோ எடுக்கின்றனர். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கும் போது இவர்கள் ஓடுகின்றனர். அச்சமயம் இவள் பதட்டத்துடன் நிற்கைளில் பக்கத்து வீட்டுக் காறி பார்த்து அதை தவறாக புரிந்து எல்லோரையும் அழைத்து அவளை வாய்க்கு வந்தபடி திட்டுகின்றார்கள். பின் இவள் அவமானம் தாங்க முடியாமல், தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் Àக்கு மாட்டி சாக விழைகையில் அவளை காப்பாற்றி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் உயிர் பிழைக்கின்றாள், நடந்தவற்றை வைத்தியரிடம் கூறுகின்றாள். வைத்தியரின் ஆலோசனை அவளுக்குக் கிடைக்கின்றது. பின் அயலவருக்கு உண்மை நிலவரம் தெரிய வருகின்றது. அவள் சமூகத்தின் பார்வையில் நல்லள் ஆக்கப்படுகின்றாள் அத்தோடு படம் நிறைவடைகின்றது. இன்று நம்மைத் Àற்றும் சமூகம்தான் நாளை நம்மை போற்றும் என்பதை இப்படம் உணர்த்தி நிற்கின்றது.  இப்படத்தில் கையாளப்பட்டுள்ள வட்டார மொழி வழக்குகள் அச் சமூகத்தை முன்னிறுத்திக் காட்டுவது சிறப்பாக உள்ளது.  நம்முடைய வாழ்வியலில் ஏற்படும் ஒரு சமூகவியல் பிரச்சினையினை கருவாகக் கொண்டு களம் அமைத்தமை வரவேற்கத்தக்கது. இது போன்று நம் பண்பாட்டு வாழ்வியல் சார் அம்சங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். நம் யதார்த்தம் உலகறிய பறைசாற்றப்பட வேண்டும்.  இப் படத்தில் ஒரு கிராமிய சூழல், நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அச் சூழலுக்கு ஏற்றதாக படைக்கப்பட்டுள்ளமை படைப்பாளியின் கற்பனை யதர்த்தத்தை தோற்றுவித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அதிக கிராமப்புறங்களில் தோட்டத் தொழில் புரிபவர்கள், இதில் வரும் வருமானத்தைக் கொண்டே தமது இயல்பு வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர் என்பதைப் புரிய வைக்கின்றது.  அத்தோடு இப் படம் ஆண்களுக்கு தம் மறைவின் பின்னர் தம் மனைவியர் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் முன்னெச்சரிக்கின்றது.  இப்படத்தில் இயற்கைச் சூழல் கதைக் களமாகக் கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கது. சாதாரண கிராமிய வாழ்வியல் ஒவ்வொரு காட்சியிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உம்- வீடுகள், வீட்டு வேலிகள், வீதியோரக் கடைகள், கிராமிய வாழ் பாத்திரங்கள், உடைகள், ஒப்பனைகள், வீட்டுத்தோட்டங்கள்….  பக்கத்து வீட்டுப் புதினம் பார்ப்பதற்கு மீனை வாங்கிய படி தோழியின் வீட்டிற்கு வரும் காட்சி இயல்பு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  சம்பவங்கள் கோர்க்கப்பட்ட விதம் கதைக்கு தனிச் சிறப்புக் கொடுக்கின்றது. தூக்கு மாட்டுதல், பின் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றுதலோடு ஆரம்பிக்கும் காட்சி விறு விறுப்பை ஏற்படுத்தியது. இங்கு பிரச்சினையுடன் படம் தொடங்குகின்றது.  பார்வையாளர் மத்தியில் கேள்வியை எழுப்பி, சந்தேகத்தை தோற்றுவித்து, இரக்கப்பட வைத்து, குழப்பத்தில் ஆழ்த்தி, பின்னர் தெளிவு பெற வைப்பதாக இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆடம்பரமான ஒளி, ஒலிகள் இதில் பயன்படாமை கதைக்கான சூழலை உண்மையாக உணர வைத்தது. உம்- அவள் வ்டு ஒரு ஓலைக் குடிசை. அதற்குள் குனிந்துதான் செல்ல வேண்டும் அவ்வாறு இருக்கும் போது அதற்குள் ஒளியின் கதிர் வீச்சு செல்லும் வேகம் குறைவாக இருக்கும். அதற்கமைய கமறா பதிவு இடம் பெற்றுள்ளமை அழகை, எழிமைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.  ஓவ்வொரு சம்பவங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இசை அல்லது ஒலிகள் அச்சம்பவங்களை உண்மையாக உணர வைத்துள்ளது. உம்- காலையில் கதிரவன் ஒளி வீசுகையோடு பாடசாலைக்கு செல்லும் காட்சி.  அர்த்தமற்ற எதையோ தேடிக்கொண்டு ஓய்வு இல்லாமல் அலையும் இளம் தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிக்கும் நமது பண்பாட்டை அடையாளம் காண வைக்கும் காட்சிகள் வாழ்வியல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை நன்மையேபயக்கும். உம்- பழங்கஞ்சி சாப்பிடும் பழக்கம்.  பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பதை இதில் வரும் சம்பவங்கள் அடையாளப்படுத்துகின்றது. பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்ற நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்குள் இருக்கும் மறைமுக ஆணாதிக்க செயற்பாடு எதுவாக இருக்கும்?  ‘விதவை விதவை எண்டு அப்பாவியா வெளில காட்டிக் கொண்டு உள்ள நல்ல கூத்துத்தான் நடக்கிது’, ‘ஆழப்பாரன் மினுக்கிக் கொண்டு வாறத’ போன்ற வாய் பேச்சுக்கள் பொறாமைக்கான குறியீடாக உள்ளது. அவ்வாறு பொறாமை ஏற்படுவதற்கு காரணம் என்ன?  தான் பெற்ற பிள்ளை வந்து ‘நீங்க கூடாதாம்… அம்மா! நீங்கள் உண்மையாவே கூடாதா?’ என்று தாயிடம் கேட்கும் போது தாய் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்? தாயின் வயிற்றில் இருக்கும் போது நச்சுக் கொடிக்குள் அகப்படாத குழந்தை, வெளியில் வந்து இந்த சமூகத்தின் நச்சு வசையினால் ஆட்கொள்ளப்படுகின்றது. இங்குதான் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இந்த சமூகம் சூன்னியம் வைக்கின்றது என்று கூறலாம்.  ‘குண்டுக்குத் தாக்குப் பிடீத்த எங்களால இங்க இவங்கட வாய் வார்த்தைக்குத் தாக்குப் பிடிக்க ஏலாம இருக்கு’, ‘வறுமையைத் தாங்கிக் கொள்ளலாம் அவமானத்தை எப்படித் தாங்கிக் கொள்வது?’ போன்ற வசனங்கள் ஒரு பெண்ணின் உளம் கசக்கிப் புளியப்பட்டு இயலாமையில் வரும் வார்த்தைகளாகவே உணர கூடியதாக உள்ளது. ஒரு பிறந்த குழந்தைக்கு அதன் தாய் இதுதான் உன் அப்பா,பாட்டி, பாட்டன் என்று திரும்பத் திரும்ப சொல்லும் போது அதை அக்குழந்தை உண்மையாக்கிக் கொள்கின்றது. ஒரு பொய்யினைத் திரும்பத் திரும்ப நாம் சொல்லும் போதோ அல்லது செய்யும் போதோ அது உண்மையாகின்றது. அது போலதான் நம் சமூகத்தில் பல சம்பவங்கள் நடத்தப்படுகின்றது. தவறான எண்ணங்களை விடுத்து நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம். அ.ஆன் நிவேத்திகா http://globaltamilnews.net/2020/146659/
  • எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது. எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும். எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதனைச் செய்யும் அந்த முகவர்கள் செயல் வீரர்கள் போல நம் மத்தியிலே உலா வருகின்றனர்.வறுமையையும் சமூக சிக்கல் நிலைகளையும் எம்மக்கள் மத்தியிலே திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு அதை தீர்க்கவென தற்காலிக போலிச் சலுகைகளைக் காட்டி அவர்களின் வாக்குகளை விலைபேச முயல்வது மனிதத்துவம் ஆகாது. தமது வறுமையைப் போக்கவென தமது வாக்குகளைச் சலுகைகளுக்காக விற்கும் எம்மவர்களை கோபித்துக் கொள்வதும் அர்த்தமற்றது. அந்தச் சூழ்நிலைக் கைதிகளின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களால் தடம்மாறி நிற்கும் மக்கள், எம் மக்கள் அல்ல என்று ஆகிவிடாது அவர்களையும் தடம்மாற்றி சலுகைகளுக்காக எமது வாக்குகள் விலைபோகாது என்பதை சரியான முறையில் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நிரூபிப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறு விலை பேசும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது எமது விடியலை நோக்கிய பயணத்திற்கு உரம் சேர்க்கும். எலும்புத் துண்டையும் உணவுத் துண்டையும் காட்டி தமது ஆட்டத்திற்கு ஆட்டி வைக்கப்படும் வட்டரங்கு விலங்குகள் (Circus animals) போல நாம் இல்லை என்பதை தெளிவாக்கும்.பொது விடயங்கள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவேனும் நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நாம் பிரித்தாளப்பட்டு எமது அபிலாசைகள் சிதைக்கப்படுவதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. கோணேசர் கோயிலும் நல்லூர் ஆலயமும் கூட நம் பூர்வீகமல்ல என வாதிடுபவர்களுக்குக்கூட இது வரப்பிரசாதமாக அமைந்துவிடும். இந்த ஒற்றுமைக்காக தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ் தலைவர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இந்த முயற்சிகள் தொடரும். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும். எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம்  #தேர்தல்  #ஒற்றுமை #வறுமை  #வாக்கு  #தமிழ்மக்கள்பேரவை தமிழ் மக்கள் பேரவை http://globaltamilnews.net/2020/146701/
  • அமைச்சுப் பதவி பெறுகின்ற எண்ணம் கூட்டமைப்புக்கு அறவே இல்லை என்கிறார் சம்பந்தன்.! "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, 'அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனச் சொல்ல முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்குப் பலம் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசில் அமைச்சுப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். http://aruvi.com/article/tam/2020/07/13/14405/ டிஸ்கி சம்பந்த சிஷ்யர் .. ☺️..😊 வட போச்சே..👍
  • கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.? கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா? கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக் கொண்டவர். இவரது தந்தை மற்றும் தாத்தா கொழும்பை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரது தாத்தா ஜிஜி பொன்னம்பலம் அன்றைய காலத்தில் எடுத்த தீர்மானங்கள் அனைவரும் அறிந்ததே. அதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டிஜி பொன்னம்பலம் தந்தை செல்வநாயகத்தை விட்டு பிரிந்து அரசாங்க அமைச்சராக பதவி ஏற்றமை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அதேபோன்று வடக்கில் முன்னாள் முதல்வர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். கொழும்பில் இருந்து வடக்கு முதலமைச்சராக இறக்குமதி செய்யப்பட்டவர்.  ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் தலைவர்களை விட விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இனஅழிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றாலும் அவரும் கொழும்பின் அல்லது தென்னிலங்கையின் இறக்குமதி என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம். கொழும்புத் தமிழ் தலைமைகளால் ஆளப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் உச்ச கொடுமையாக  சுமந்திரனின் வருகையை குறிப்பிடலாம்.  சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் அதன் தலைமைக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் சினம் கொள்ள வைத்துள்ளன. தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டு தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த தலைவரையும் தமிழ் மக்களுக்காக உன்னதமான போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனை கொழும்பில் இருந்து நாம் ஏன் அழைத்து வரவேண்டும்? அத்தகைய சுமந்திரன் தற்போது அம்பிகாவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றொரு புதிய நபராக அம்பிகா கருதப்படுகின்றார். இவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒருவர்தான். இம்முறை தேர்தலில் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் தலைமை முழுமையாக கொழும்பின் கீழ் போகக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது. சுமந்திரனின் வெற்றியுடன் அம்பிகாவும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றால் அது தமிழ் மக்களுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருகின்ற ஒரு விடயமாகும். பல்வேறு தியாகங்களின் மத்தியில் மிகப் பெரும் தலைவர்களை உருவாக்கிய வடகிழக்கு மண்ணில் ஏன் சிறந்த அரசியல் வாதிகள் இல்லையா? ஏன் நாம் கொழும்பிடம் கையேந்த வேண்டும்? அல்லது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் சில விமர்சனங்களை கொண்டாலும் சிறந்த அறிவை கொண்டவர்களும் அணுகுமுறையை கொண்டவர்களும் உள்ளனர். அப்படி உள்ள நிலையில் நாம் ஏன் தென்னிலங்கையிலிருந்து கொழும்பிலிருந்து அரசியல்வாதிகள் இறக்குமதி செய்ய வேண்டும்? பிரபாகரன் என்ற வரலாற்றில் அதி உன்னத தலைவன் உருவாகிய மண்ணிலிருந்து ஏன் எம்மால் சிறந்த அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியாது? அனைவரும் சிந்திப்போமாக… https://www.vanakkamlondon.com/sumanthiran-ambika-13-07-2020/