• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

செம்பருத்தி பூக்காறி-பா.உதயன்

Recommended Posts

செக்கச் சிவந்த முகம் 
எப்பவுமே சிரித்த முகம் 
எங்க ஊரு சொந்தக்காறி 
தங்கமான உதட்டுக்காறி 
இவளை விட அழகுராணி 
எவள் இருப்பாள் 
அந்த அழகு ரோசா
தோத்துப்போகும் 
இவள் ஆடிப்பாடி 
சிரிக்கும் போது .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை   விவசாயப் பயிர்கள் ஏற்றுமதியின்போது பூரணப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி – ஹசலக பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மிளகை மீள் ஏற்றுமதி செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மிளகு விதைகள், மிளகுத் தூள் அல்லது வேறு பூரணப்படுத்தப்பட்ட விவசாய பொருட்களாக மாற்றி அதனை ஏற்றுமதி செய்யமுடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பெறுமதி சேர் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அதிக அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.   https://newuthayan.com/விவசாய-ஏற்றுமதிகளுக்கு-ம/  
    • சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து வர்த்தமானியை அரசு வெளியிட வேண்டும்..! கபே வலியுறுத்து! கொரோனா தொற்று காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் கொவிட்-19 அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், இவ்விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அறிக்கையில், ”சுகாதார நடைமுறைகள் தொடர்பான இந்த தாமதமானது, பிரசாரங்கள் நடத்துவதை மிகவும் பாதித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின் வர்த்தமானி, இவ்விடயங்களை செயற்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு தேவை. இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடும். நிச்சயமாக வாக்காளர்களின் எண்ணிக்கையை இது பாதிக்கும். வழிகாட்டுதல்களை வெளியிடுவது மட்டுமல்ல. அரசாங்கம் அவற்றை வர்த்தமானியிலும் வெளியிட செய்ய வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் அவற்றைச் செயற்படுத்த முடியும். இந்த வழிகாட்டுதல்களை யாரும் எதிர்க்கவில்லை, ஆனால் பிரசாரத்தின் போது யாரும் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தற்போது நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுவது அவசியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.   https://newuthayan.com/சுகாதார-வழிகாட்டுதல்கள்/  
    • அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம் பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகல வென்னும் கைம்மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் பணிய அன்பில்லால் பயனதிலில்லை சாந்தமும் தயவும் சகல நற்குணமும் போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள புகழிறு மாப்பு பொழிவு பொறாமை பகைய நியாயப் பாவமுஞ் செய்யா சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது தீமை செய்யாது சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும் மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்  
    • வல்லோனின் தூதே வான்மதியே யாரசூல்லாஹ்  
    • அரசியலுக்கு அப்பாற்பட்ட விதத்திலேயே அபிவிருத்தி சாத்தியமாகும். உள்ளூர் - வெளிநாட்டு சமூக சேவை நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் பொருத்தமான வகையில் ஒன்றிணைந்து, அரசியல்வாதிகளுக்கும், ஏனையாருக்கும் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படும் இலஞ்சத்தையும் கொடுத்து, கோவிட்-19 காரணமாக பரம ஏழை நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேகமான அபிவிருத்தியை பொருத்தமான தொழில்நுட்ப முயற்சிகள் மூலம் முன்னெடுக்க புலம்பெயர்ந்த தமிழரும் அவர்தம் அமைப்புகளும் முன்வர வேண்டும்.