Jump to content

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சிவாஜிலிங்கம் பேராட்டம்


Recommended Posts

காணாமல் போனார் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

image_9fcb93bf02.jpg

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துகு்கு முன்பாக தனது போராட்டத்தை இன்று (06)   முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர், அலரி மாளிகைக்கு முன்பாக இன்று பிற்பகல் தனது போராட்டத்தைத் தொடர்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனதபத-சயலகததகக-மனபக-சவஜலஙகம-பரடடம/175-240746

Link to comment
Share on other sites

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனரது உறவினர்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கை களை  முன்வைத்தே  ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

 

01.jpg

 

இன்று காலை சுமார் ஒரு மணித்தியாலம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும், அதனைத் தொடர்ந்து அலரி மாளிகைக்கு முன்னாலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் போது தனது கோரிக்கைகளை அடங்கிய மகஜரையும் அவர் ஜனாதிபதி செயலகத்திலும் அலரி மாளிகையிலும் கையளித்ததாக அவரது பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68314

Link to comment
Share on other sites

போராடப் பிறந்த மனுஷன் சிவாஜிலிங்கம்!

மனுஷன் போராடுவதும் தமிழ் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்வைத்து தான்!

ஆனா பேரினவாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளை பெரிதாக நினைப்பவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கப் போவதில்லை! தமிழன் தொடர்ந்து அழிவதற்கு காரணம் பேரினவாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளை பெரிதாக நினைப்பவர்கள் கணிசமாக இருப்பதால் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.