• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

அமெரிக்காவில் பருமனான மாகாணம் எது தெரியுமா? – வித்தியாசமான ஆய்வின் முடிவை பாருங்கள்!

Recommended Posts

Fat.jpg

அமெரிக்காவில் பருமனான மாகாணம் எது தெரியுமா? – வித்தியாசமான ஆய்வின் முடிவை பாருங்கள்!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் பருமனானவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

பருமன் பிரச்சினை சார்ந்த ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வொலட் ஹப் என்ற இணையத்தளம் அமெரிக்காவில் பருமனானவர்கள் அதிகம் உள்ள மாகாணங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது.

குறித்த ஆய்வில், “அமெரிக்காவின் வொஷிங்டன் உட்பட 30இற்கும் அதிகமான மாகாணங்களில் உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தினோம்.

இதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் அதிகம் பருமனானவர்கள் உள்ள மாகாணமாக மிசிசிப்பி கண்டறியப்பட்டுள்ளது.

முதல் ஐந்து இடத்தில் மிசிசிப்பி, மேற்கு வெர்ஜினியா, கென்டக்கி, டென்னிசி மற்றும் அலபாமா ஆகிய மாகாணங்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறி வரும் வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

உடல் பருமன் பிரச்சினைக்கு துரித உணவுகள் முக்கிய காரணமாக இருப்பதால் அவற்றைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவில்-பருமனான-மா/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மகளிர் இல்லத்தில் நில்மனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ( நில்மினி பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல மனதிற்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள். மகளிர் இல்ல பிள்ளைகளின் முகத்திலிருக்கும் சந்தோஷத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நல்ல தினங்களை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடலாம். உங்கள் சேவை தொடரட்டும் எம் மக்களுக்கு, ஆண்டவனின் அருள் உங்களுக்கு என்றொன்றுமிருக்கும். நில்மனி: தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன் எப்படி தெரிந்தது என்று       DONATION DETAILS Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button. Postal address: The Fund For Mahalir Illam (ABN 47 467 887 194) P.O.Box 8072 Seven Hills West NSW 2147, Australia. Bank account details: Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000. BSB: 062 006 Account No: 1103 3596   https://mahalirillam.org/au/    
    • நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்   நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 09,  2020 05:00 AM புதுடெல்லி,  பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும். இதுபோல், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆகஸ்டு மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும். “உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது இல்லை. பிரிவினைக்கு பின்னர் இத்தகைய திடட்ம் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை“ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் சலுகை, கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இச்சலுகையை செப்டம்பர் மாதம்வரை நீட்டிக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் 7 கோடியே 40 லட்சம் ஏழை பெண்களுக்கு மேலும் தலா 3 இலவச சிலிண்டர்கள் கிடைக்கும். வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் 12 சதவீத பங்களிப்புத்தொகையை மத்திய அரசே செலுத்தும் சலுகையை ஆகஸ்டு மாத சம்பளம்வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதனால், 72 லட்சம் பணியாளர்களும், 3 லட்சத்து 67 ஆயிரம் நிறுவனங்களும் பலனடையும். மத்திய அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 860 கோடி செலவாகும். நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 450 கோடி மூலதனம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் மலிவான வாடகை குடியிருப்புகள் உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஏற்கனவே காலியாக உள்ள அரசாங்க குடியிருப்புகள், மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக, 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09034400/The-Union-Cabinet-has-approved-the-provision-of-free.vpf
    • இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு   இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது. பதிவு: ஜூலை 09,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 22 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது. இதே 24 மணி நேரத்துக்குள் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக 482 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 642 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் 9,250 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121 ஆக இருக்கும் நிலையில், இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துவிட்டனர். தமிழகத்தில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 74 ஆயிரத்து 167 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 831 ஆகவும், பலி எண்ணிக்கை 3,165 ஆகவும் உள்ளது. அங்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 26,815 பேரும், ஆந்திராவில் 21,197 பேரும், கேரளாவில் 5,894 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடகாவில் 416 பேரையும், ஆந்திராவில் 252 பேரையும், கேரளாவில் 27 பேரையும் கொரோனா காவு வாங்கி இருக்கிறது. புதுச்சேரியில் 930 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கும் வேளையில், அங்கு 14 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09031338/Corona-damage-affecting-7-lakhs-in-India.vpf
    • மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். பதிவு: ஜூலை 09,  2020 05:45 AM சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆகவும், சென்னையில் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 64 பேர் பலி ஆனார்கள். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழந்த 64 பேரில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் வரை சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. பெருந்தொற்று நோயான கொரோனா அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவராகவே கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் தனது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்த நேரத்தில்தான், கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணியையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 10 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. அமைச்சர் பி.தங்கமணி கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ரூ.5 கோடியை வழங்கினார். மத்திய எரிசக்தித் துறை இணை மந்திரி ராஜ்குமார் சிங், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிகழ்ச்சியிலும், அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட மருத்துவ அறிக்கை கிடைத்ததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார். அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுஉள்ளது. சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசி இருக்கிறார். இதேபோல், மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 6-ந் தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே, இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09052402/To-Minister-ThangamaniCorona-Intensive-care-in-Chennai.vpf