ampanai

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு

Recommended Posts

உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவித்தது கூட்டமைப்பு
Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:17 - 0      - 121


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஏகமனதாக ஆதரிப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்று (07) வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான அந்த அறிக்கையில்-

இலங்கைக்கு சனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2919 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதக) சொல்லப்பட்ட தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.

இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் – சஜித்பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் – அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர்.

தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி (1) உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும், (2) அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், (3) அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், (4) நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்போந்தவை உயரிய வேணவாக்களாகும் என்பதோடு, இப் பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும்.இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் ஈடுபட்டிருந்துள்ளதோடு, அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களாவர். அவர்களுடைய கடந்தகால செயலாற்றுகை எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும். அவர்களது கொள்கைகளை விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் எம்மிடம் உள்ளன.

அவற்றின் அடிப்படையில், எதேச்சாதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிடுவதாக உறுதியளித்தல் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாட்டில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தல் அடங்கலாக அனைத்துப் பிரசைகள் மத்தியிலும் நீதியையும் சமத்துவத்தையும் ஊக்குவித்தல் உள்ளிட்ட அவர்களது ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பாக ஒரு கணிப்பை மேற்கொள்ள முடியும்.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் அபேட்சகர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும்.

அரசியலமைப்பிற்கான 17வது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையை (நாடாளுமன்றத்தை) ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டமை ஆகியன ஆட்சிமுறையின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியான ஒரு தனி மனிதரின் எதேச்சாதிகாரமானதும் தான்தோன்றித்தனமானதுமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின. அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.

இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபரில் கடத்தியமை; பதவி வழங்குவதான வாக்குறுதி, இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் தூண்டப்பட்ட கட்சி மாறல் வாயிலாக நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற ;றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆகியன அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன.

எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காகப் நாடாளுமன்றத்தில் உறுதியாக நின்றது.

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள ;ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.

மற்ற முக்கிய அபேட்சகரான சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் புதிதாக தெரிவு செய்யப்படும் சனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிச நலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின்  சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டும்.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) – இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இரா.சம்பந்தன்,

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உததயகபபரவ-தரமனதத-அறவததத-கடடமபப/150-240779

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, ampanai said:

எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.

எழுதிச்  செல்லும் விதியின் கைகள் !

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள்,  ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.

யாழ் நூலகம் எரிப்பு, 1983 கலவரங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், அப்பாவிகளை சிறைகளில் அடைத்து வைத்திருத்தல், வடமாகாணசபை செயற்பட முடியாது முடக்கி வைத்திருந்ததை, பல வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை நீண்டகாலமாக ஏமாற்றியமை, ... போன்றவை எல்லாமே ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பேணும் நல்ல செயற்பாடுகள் என்று சம்மந்தன், சுமந்திரன்  நம்புகிறார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கோரிக்கையை நிரகாரித்த இருவரும் எவ்வாறு தமிழர்களிடம் வாக்களிக்குமாறு கோருவார்கள் - சிவசக்தி ஆனந்தன் 

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அதனால் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , மதத் தலைவர்கள் , சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட 13 அம்ச கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை. 

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளாகவே உள்ளது. அதாவது அரசியல் கைதிகளின் விடுதலை , காணி விடுவிப்பு , பயங்கரவாத தடைசட்டம் நீக்குதல் , அபிவிருத்தி , வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மீதான இன படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம்.

 ஆனால் பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாகவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் எங்களை  சந்திக்க தயார் இல்லையென கூறிவிட்டார். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று யாருடைய  நிபந்தனைகளுக்கும் கட்டுப்படப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/68471

Share this post


Link to post
Share on other sites

 மக்களே கடவுள் மேல் பாரத்தை போட்டு வாக்களியுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
On 11/7/2019 at 3:04 PM, ampanai said:

நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஒரு சவால்கள் குறைந்த தரப்பை தெரிவு செய்து தமிழ் மக்களை வாக்களிக்க கேட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அளித்த வாக்குறுதிகள், "அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்", எனவும் கூறியுள்ளது.

அன்று தந்தை செல்வா இருந்த இடத்திலேயே இன்றும் அரசியல் ரீதியாக உள்ளோமா இல்லை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வேறு வழிகள் இருந்தும் அவற்றை துணிவுகரமாக முன்னெடுக்க விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த வழியை தெரிவு செய்ததன் மூலம், தமது நாடாளுமன்ற தேர்தலை மட்டும் குறிவைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எதுவானாலும், தந்தை செல்வா அன்று கூறியது போன்று,  "எம்மை காப்பாற்ற கடவுள் தான் வரவேண்டும்" என்ற நிலை. ஆனால், கிடைத்த கடவுளையும் தொலைத்துவிட்டவர்கள் நாங்கள்.     

என்ன தான் கூட்டமைப்பில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் கூட்டமைப்பு சஜித்துக்கு வாக்களிக்குமாறு மக்களை கோரியது மகிழ்ச்சி.

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

Share this post


Link to post
Share on other sites

image_a4c8188f50.jpg

On ‎11‎/‎7‎/‎2019 at 6:41 AM, ampanai said:

தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இரா.சம்பந்தனால் விடப்பட்ட அறிக்கையொன்றில் கோரப்பட்டுள்ளது

எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல.   தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ,  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம்.  - ஏகலைவா

 1. ஆறுகட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையின் பின், அதில் ஐந்து கட்சிகளின் கூட்டணி, 13 அம்சக் கோரிக்கை என்ற அனைத்து நாடகங்களும் அரங்கேறி, இறுதியில் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற முடிவைத் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோரில் ஒருபகுதியினர் எட்டியுள்ளனர்.   

      2. ஒருவரைத் தோற்கடிப்பதற்காக இன்னொருவருக்கு ஆதரவு என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இது புதிதல்ல; இறுதிப்போரை நடத்திப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று தீர்த்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவரான, இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதரவளித்தபோதும், , இதே போன்றதொரு சாட்டையே சொன்னது. இப்போது அது வேறு வடிவங்களில் தொடர்கிறது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எதரபரததத-பலவ-நடநதத-அடதத-வலயப-பரககலம/91-240771

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, Lara said:

 

இம்முறை அநுர களமிறங்குவதால் கோத்தா வெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் தமிழர்கள் வாக்குகளால் வெல்லக்கூடாது.

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

பல அரசியல் அவதானிகள் இதை கூறுவதை அவதானித்துள்ளேன். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

மகிந்த + கோத்தாவின் கோட்டைகளாகக் கருதக்கூடிய இடங்களாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம், முழு வடமேல் மாகாணம் (குருணாகல், புத்தளம்) ஆகியன காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் ஜேவிபி யின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் இடங்களாக இருப்பவை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் ஆகியனவே. ஆகவே மகிந்தவின் கோட்டைகளில் அரைவாசி பகுதிகளில் அவர்களுக்கு செல்லவிருக்கும் வாக்குகள் பிரிந்து ஜேவிக்கு செல்ல சந்தப்பர்பங்கள் அதிகம். அத்துடன் இப் பகுதிகளில் என்றைக்குமே யூ என் பி வெல்வதில்லை என்பதால் (சில இடங்களில் மூன்றாவதாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளன) அவர்கள் இங்கு கிடைக்காவிடினும் ஒட்டு மொத்த வாக்கு வீதத்தை கருத்தில் கொண்டால் பெரிய மாற்றம் வந்து விடாது.

என் கணிப்பின் படி சஜித்துக்கு வடக்கு (65வீதம்), கிழக்கு (55 வீதம்), கண்டி, கொழும்பு (3.5 இலட்சம் வாக்குகளாவது அதிகமாக கிடைக்கும்., நுவரேலியா, மாத்தளை போன்ற இடங்களுக்கு கை கொடுக்கும். இவை ஜேவிபியின் செல்வாக்கு அதிகமற்ற பகுதிகளாகவும் உள்ளன.

ஜேவிபி உடைந்ததும் விமல் வீரவன்ச தரப்பு மகிந்த பக்கமும் சோமவன்ச அமரசிங்க தரப்பு (தொடர்ந்து ஜேவிபியாக இயங்கிய தரப்பு) ஐதேக பக்கமும் நின்றன. 2010 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. 2010 நாடாளுமன்ற தேர்தலில் சரத் பொன்சேகா தரப்புடன் இணைந்து போட்டியிட்டது. 

அநுர ஜேவிபியின் தலைவரானது 2014 இல். 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மைத்திரிக்கு ஆதரவளித்தது. 2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 543,944 வாக்குகளை பெற்றது. போன வருட உள்ளூராட்சி தேர்தலில் 710,932 வாக்குகளை பெற்றது. இத்தேர்தலில் 10 இலட்சம் வாக்குகள் பெறுவது அநுரவின் இலக்கு. ஜனாதிபதி வேட்பாளராக எவ்வளவு வாக்குகளை பெறுவார் என தெரியாது. ஆனால் அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் பெருமளவிலானவை சஜித்துக்கு கிடைக்கவிருப்பதிலிருந்து பிரிந்து வருபவை. அத்துடன் அவருக்கு வாக்களிக்கும் அனைவரும் இரண்டாம் விருப்ப தெரிவை இடுவார்கள் என்றில்லை.

இது 2015 நாடாளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஜேவிபி பெற்ற வாக்குகள்.

கொழும்பு - 81,391

கம்பஹா - 87,880

களுத்துறை - 38,475

கண்டி - 30,669

மாத்தளை - 10,947

நுவரெலியா - 5,590

காலி - 37,778

மாத்தறை - 35,270

அம்பாந்தோட்டை - 36,527

யாழ்ப்பாணம் - 247

வன்னி - 876

மட்டக்களப்பு - 81

அம்பாறை - 5,391

திருகோணமலை - 2,556

குருணாகல் - 41,077

புத்தளம் - 12,211

அநுராதபுரம் - 28,701

பொலநறுவை - 13,497

பதுளை - 21,445

மொனராகலை - 13,626

இரத்தினபுரி - 21,525

கேகாலை - 18,394

2018 உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளை தற்சமயம் என்னால் தனித்தனியாக இணைக்க முடியவில்லை.

வடக்கு கிழக்கில் சஜித் முன்னிலை வகிப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனாலும் பல வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியிருப்பதால் 2015 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளை போல் இம்முறை சஜித்துக்கு கிடைக்காது, குறைவாகவே கிடைக்கும் என நினைக்கிறேன். அதுவும் தேர்தல் இறுதி முடிவில் தாக்கம் செலுத்தலாம்.

Edited by Lara
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சஜித் ஆட்சியில் ஒருமித்த நாட்டுக்குள் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன்

சஜித் பிரேமதாஸ தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எனவே சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அன்னம் சின் னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை சுயேட்சையாக கள மிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒரு போதும் தமிழர்களுக்குச் சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். எனவே அப் படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=19771&ctype=news

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Lara said:

நல்ல வேளை உங்களை மாதிரி புலம்பெயர் டமிழ்ஸ்களால் வாக்களிக்க முடியாது. வாக்களிக்க முடிந்தால் உங்கள் வாக்குகளாலேயே கோத்தாவை வெற்றி பெற வைத்து விடுவீர்கள்.🤣

ஈழ மண்ணின் மீது  காதல் இன்றி வாழ முடியுமா ? 😅

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இவருக்கு வாக்களியுங்கள்... ஆனால் தீர்வு கிடையாது

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் தத்தம் கடமைக்காக ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என அறிக்கை விடுக்கின்றனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது எனத் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, 13 அம்சக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் தமது நிலைப்பாட்டை அறிவிக்காத காரணத்தால், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவைத் தமிழ் மக்கள் தாமாக எடுக்க வேண்டும் எனத் தனது கட்சி நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதேபோல ஏனைய   தமிழ் அரசியல் கட்சி களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி யுள்ளன.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ் கரிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை சரி யாக எடுப்பர் என்பதில் ஐயம் கிடையாது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வைத் தரப்போவதில்லை என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற தமிழ் மக்களின் நினைப்புக் குப் பின்னால், தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவிக்கு வருகின்றவர் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணுவார் என்றோ அல்லது அவர் வந்தால் தமிழினம் தலை நிமிரும் என்றோ தமிழ் மக்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

இந்த உண்மையை தமிழ் அரசியல்வாதிகள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தவர்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

எனவே கோடிகளை கை நீட்டி வாங்கி விட்டோம் என்பதற்காக பொய்யான வாக்குறுதி களை தமிழ் அரசியல்வாதிகள் வழங்கக் கூடாது.

ஆம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் சுதந்திரம். அதைச் செய்யுங்கள்.
அதைவிடுத்து, அவர் ஜனாதிபதியாக வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் கூறு வீர்களாயின் உங்களை விட்ட வடிகட்டினவர்கள் வேறு எவருமாக இருக்க முடியாது.

ஆகையால் தமிழ் மக்களை நம்பவைத்து ஏமாற்றாதீர்கள். சிங்களவர் யாரும் தீர்வு தரமாட்டார்கள். இருந்தும் இவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்வதுதான் ஓரளவுக் கேனும் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19776&ctype=news

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

இன்றும் ஊருக்கு கதைத்தேன் குத்தைப்பு சொல்ல முன்பே பலர் சஜித்துக்கே ஆதரவு நிலை எடுத்து விட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

அதியுச்ச அதிகார பகிர்வு தீர்வை நாம் பெறுவோம்

Monday, November 11, 2019 - 6:00am
NW03.jpg?itok=ZcTypDhI

சஜித் பிரேமதாச  துவேஷமில்லாதவர்

நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களது கடந்தகால அனுபவங்களை சிந்தித்து, ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதி உச்ச அதிகாரப் பகிர்வுடன், எமது மக்கள் கௌரவத்துடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வை பெறுவோம்.

கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையினால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து 98 வீதமான வாக்குகளை அளித்து எமக்கு ஆதரவு

வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் ரவிராஜின் 13வது நினைவு தினம் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதான போட்டி முக்கியமாக இரண்டு வேட்பாளர்களுகிடையில் நடைபெறுகின்றது. சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் வெற்றி பெறுவார். ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்கு பெற்றுவதா இல்லையா என்பது முதல் கேள்வி.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. பங்குபற்றாத காரணத்தினால் தான் மகிந்த தெரிவு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சியின் கீழ் 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றிக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தெரியும். அந்தத் தேர்தலில் நாங்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால், அன்று வாக்களித்திருந்தால், அந்த நிலமை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர் யாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அந்தப் பங்களிப்பு எமக்கு சாதகமான முடிவாக எம்மைப் பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கும். பாதகமான ஒரு முடிவைத் தவிர்ப்பதற்கும், நாங்கள் பங்களிப்பைச் செய்ய முடியுமாக இருந்தால், அந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் நினைக்கின்றோம்.

சஜித் பிரேமதாசவை துவேசவாதியாக நான் கருதவில்லை. அவரை நீண்டகாலமாக தெரியும். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, அனைத்து மக்களும், சமத்துவமாக வாழ வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளதுடன், இதுவே எனது திடமான நிலைப்பாடு என கூறியிருக்கின்றார். அதி உச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென கூறியிருக்கின்றார்.

கோட்டா வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை. நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துக்கொள்ளுங்கள். இனியும் செய்யமாட்டோம் என கூறவில்லை.

நடந்தது நடந்துவிட்டது. நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள் ஒன்றாக பயணிப்போம் என சொல்கின்றார்கள். எங்கு கூட்டிச் செல்லப் போகின்றார்களோ தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

https://www.thinakaran.lk/2019/11/11/உள்நாடு/43665/அதியுச்ச-அதிகார-பகிர்வு-தீர்வை-நாம்-பெறுவோம்

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் சொல்லும் முன்பே மக்கள் சில தீர்மானகளை எடுத்து விடடார்கள். நிச்சயமாக தமிழ் மக்களால் கோத்தாவிட்க்கு வாக்களிக்க முடியாது. பகிஷ்கரித்தல் கோட்டா வர சந்தர்ப்பம் உண்டு. எனவே மக்களுக்கு வேற தெரிவு இல்லை. இருந்தாலும் சிங்கள மக்களில் எழுபது வீதமளவில் கோடாவிட்க்குத்தான் சான்ஸ் இருக்கிறது. எனவே வெற்றி தோல்வியை கணிப்பது மிகவும் சிரமம்.

எனக்கு தெரிந்த அநேகமான சிங்களவர்கள் கோடவுட்குத்தான் வாக்களிப்பதாக கூறினார்கள். கடந்த காலத்தில் யு என் பி இட்கு வாக்களித்தவர்களும் இம்முறை மாறி விடடார்கள்.

தமிழ் தலைமைகள் வன்னி , கிழக்கு தமிழர் பற்றி சிந்திப்பதில்லை. இம்முறை சுமந்திரன் மன்னருக்கு வந்திருந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் கேடட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி விடடார். வன்னி கிழக்கு மக்கள் கோதாவிட்கு போட விரும்பினாலும் அவருடைய கடந்த கால செயல்களினால் அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை. மத்தபடி இவ்ரகள் சொல்லித்தான் சஜித்திட்கு தமிழர்கள் வாக்களிக்கிறார் என்று என்ன வேண்டாம்.

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Vankalayan said:

கோத்த வென்றால் வடக்கு , கிழக்கு மக்கள் ஒட்டு குழுக்களின் கீழ் வாழ வேண்டும். சஜித் வென்றால் வன்னி , கிழக்கு மக்கள் முஸ்லிம்களின் கீழ் வாழ வேண்டும். இதை இங்கு வாழும் மக்கள் விளங்கினால் சரி. 

இதுவும் ஒரு சாத்தியமான எதிர்வுகூறலாக தெரிகின்றது. 

மொத்தத்தில், எமது மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்கைக்குள்ளேயே வாழ நேரிடப்போகின்றது.  

எமது தலைமைகள் மத்தியில் ஒரு தீர்வும் இல்லை அது பற்றி சிந்தித்து அரங்கேற்றகூடிய திறமையும் இல்லை. 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்

1. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்குப் புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும் பழக்கி வைத்திருக்கின்றன.  

2. அரசியலை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கே, அநேகமானோர் பழகியிருக்கின்றனர்; பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மக்கள் அப்படியிருப்பதுதான் தமக்கு நல்லது என்று, பெரும்பாலான அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர். அரசியலை, அறிவு ரீதியாக மக்கள் அணுக முற்பட்டால், பல அரசியல்வாதிகள் தமது ‘கடைகளை’ இழுத்து, மூட வேண்டியேற்படும்.  

3. அறிவு ரீதியாக அணுகுதல் என்பதை, முதலில் விளங்கிக் கொள்ளுதல்  அவசியமாகும். உண்மையைத் தேடுவதே, அறிவுரீதியான அணுகுதலின் அடிப்படையாகும். நமக்குப் பிடித்த அரசியல்வாதியொருவர் கூறுகின்றார் என்பதற்காக, அவர் சொல்லும் விடயங்களைக் கண்களை மூடிக்கொண்டு நம்பாமல், அந்த விடயம் உண்மையானதா என்று ஆராய முற்படுவதே அறிவுரீதியான அணுகுமுறையாகும்.  

மறுபுறம், நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகள் குறித்து வரும் மோசமான செய்திகளை, உடனடியாக நம்பி விடாமல், அதிலும் உண்மையைத் தேடுவதற்கு முற்படுதல் வேண்டும்.  

4. கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் கணிசமானவை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதே வாக்குறுதிகளைத் தற்போதைய ஆளுந்தரப்பு ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் மத்தியில் வழங்கி விட்டுச் செல்கின்றார்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உணரசசககம-அறவககம-இடயல-சககத-தவககம-தரதல/91-240931

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தில்லிக்கு கில்லி அடிக்க தொடங்கியாச்ச.... இந்த இடையில் தமிழர் சுழி ஓட வேண்டும்.  அடுத்த பத்து வருடத்திற்கு தில்லி சில்லி சிக்கன்!  ஈழத்தமிழரில் மூன்று லச்சம் பேரை கொண்டதற்கு கிடைக்கும் பரிசு!   Let Us Combat the Common Enemy   by Ali Sukhanver View from Pakistan    The Pakistan Army has recently said in a statement that it shot down an Indian surveillance drone for allegedly violating airspace along the Line of Control. The drone had intruded 600 meters inside across the LoC on the Pakistani side in Sankh sector. The Pakistan Army said this intrusion was purely a provocative act and there was no other way but to shoot it down just to convey a message that Pakistan would never bear any type of intrusion into its territory. “Such unwarranted acts by the Indian Army were a clear violation of established norms and existing air agreement between two countries”, said the spokesperson of the Pakistan Army. It is not for the first time that India has sent spy-drone to Pakistani territory; India’s sending spy-drones to Pakistan is not a new incident; even last year in the month of March another Indian-drone of the same type was shot down by Pakistan along the Line of Control. As a matter of fact, the recent intrusion and incidents of the same nature in the past reflect India’s consistent disregard to the ceasefire understanding of 2003. Unfortunately it is not only Pakistan; all other neighbours of India are also facing the same situation regarding Indian hegemonic designs.     Recently the government of Nepal has also expressed its grave resentment on Indian activities inside its territory. This resentment was specifically with reference to the Kalapani Territory. According to the details in the second week of this May the Indian Defence Minister Rajnath Singh inaugurated a strategically crucial link road which connects Dharchula in the Indian state of Uttarakhand to the Lipulekh pass near the Line of Actual Control. The southern side of the pass is called Kalapani territory and Nepal claims this territory as its integral part. The Government of Nepal has warned the Government of India to refrain from carrying out any activity inside the territory of Nepal. The people of Nepal are also taking this ‘inauguration’ as a serious intrusion and invasion to their country. On 9th of May several people gathered outside the Indian embassy in Kathmandu and protested against the construction of this road-link. They were holding placards and raising slogans against Indian hegemonic designs. According to different news agencies, people in a large number joined the protest despite a nationwide coronavirus lockdown though all necessary SOPs were strictly followed.   Same is the situation of India’s affairs with China. Presently the international media is replete with the news of clashes between the Indian and the Chinese troops along the LAC. It has also been reported that after three-week long confrontation, the Chinese forces have pushed Indian troops far back from their actual position. The basic reason of this rising tension rather the bone of contention is that India is working on construction plan of a road at the Pangong Tso which would connect the disputed border between the two countries. Pangong Tso also known as the Pangong Lake is an endorheic lake in the Himalayas. An endorheic means a basin-like shape limited drainage water reservoir which normally retains water but does not allows outflow to other external bodies of water, such as rivers or oceans. Instead it converges into lakes or swamps, permanent or seasonal. At its broadest point the width of the Pangong Tso Lake is about 5 Km and this 134 km long lake travels from India to the Tibetan Autonomous Region, China. On construction of this connecting road, China has serious reservations as this road may prove a security threat to China.    In the first week of this May, the Chinese and Indian troops had serious clashes on the banks of the lake leaving dozens of soldiers injured. Most of the injured ones were from the Indian Army. Once again on 9th of May the two armies had another serious clash close to the site of the Doklam standoff. Doklam is a narrow plateau lying in the tri-junction of India, China and Bhutan. According to China, Doklam is a disputed territory between China and Bhutan. China considers the presence of Indian troops in that area is as a transgression. On the other hand India claims that it acts in the area on behalf of Bhutan, with which it has a 'special relationship'. The situation of conflict and confrontation between the two countries at Doklam is not new, even three years back in 2017; the situation became tense in the same way when the military troops of the two countries engaged in a warlike scenario.    Encroachments and illegal advancements by the Indian troops in this area have always been a strong reason of conflict and dispute between the two countries. Keeping the neighboring countries engaged in a state of war has become a routine matter for India. From Pakistan to Nepal and Sri Lanka, none of the neighboring countries is having safe and friendly relations with India. Experts are of the opinion that Indian stubbornness may lead to a new war in the region which would directly or indirectly affect the peace of the whole South Asia. Creating a warlike scenario is never a wise desire particularly in the days when the whole world is in a state of war with the pandemic of Covid-19. We all should join hands to combat this invisible but very disastrous common enemy.   Views expressed in this article are the author's own
  • `பிரதமர் பாராட்டியதை நம்ப முடியல; எதையும் எதிர்பார்த்து உதவி செய்யல!’ - நெகிழும் `சலூன்கடை’ மோகன்   பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அப்பா, நான் காலேஜுக்கு போக இன்னும் நாள் இருக்கு. அதனால மக்களுக்கு உதவி செய்வோம் என்று மகள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தினாங்க. கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்காகத் தன் மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்த பணத்தின் மூலம் உதவி வழங்கிய சலூன் கடைக்காரர் மோகனின் செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   பள்ளியில் படித்து வரும் தன் மகளின் எதிர்காலத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களைக் கடந்த மாதம் வழங்கினார். இவரின் சேவையை அனைவரும் பாராட்டினார்கள். இந்தநிலையில் இன்று காலை வானொலியில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,``கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பு மூலம் ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். மதுரையில் சலூன்கடை வைத்திருக்கும் மோகன் என்பவர், மகளின் படிப்பு செலவுக்காகத் தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயை ஊரடங்கால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று பேசியுள்ளார்.   மோகன் குடும்பம் ஈ.ஜெ.நந்தகுமார் இந்தத் தகவல் மதுரை முழுவதும் பரவவே சலூன் கடைக்காரர் மோகனை நேரில் சென்று மக்கள் பாராட்டி வருகிறர்கள். ``பிரதமர் பாரட்டிப் பேசியதை எப்படி உணர்கிறீர்கள்?'' என்று மோகனிடம் கேட்டோம் `எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விளம்பரத்துக்காக நான் எதையும் செய்யல. நான் தொழில் நடத்தி வரும் பகுதியில் கொரோனா ஊரடங்கால் மக்கள் கஷ்டப்பட்டு வருவதை பார்த்து கவலையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் என் மகள், மனைவி இருவரும் கஷ்டப்படும் மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவர்களும் பேச ஆரம்பித்தார்கள். அதோடுதான் மகளுக்காக வைத்திருந்த சேமிப்புப் பணத்தை எடுத்து எல்லோருக்கும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினேன். இந்த விஷயத்தை அப்போதே பலரும் பாராட்டினார்கள். அதைத்தொடர்ந்து தேடி வந்து கேட்பவர்களுக்கும் உதவி செய்ய ஆரம்பித்தேன்.       பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அப்பா. நான் காலேஜுக்குப் போக இன்னும் நாள் இருக்கு. அதனால மக்களுக்கு உதவி செய்வோம்’ என்று மகள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தினாள். அந்த விஷயம் பிரதமர் வரைக்கும் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன் மதுரைக்கு வந்தேன். அப்படிப்பட்ட சின்ன கிராமத்தில் பிறந்த என்னை பிரதமர் பாரட்டியதற்கு அவருக்கு கோடானகோடி நன்றி'' என்றார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக. https://www.vikatan.com/news/tamilnadu/pm-modis-appreciation-means-alot-say-madurai-man  
  • டாலருக்கு வந்த வாழ்வு புதிய ஏற்பாடு: அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம்  இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று மிதப்பில் உலகப் பொருளாதாரத்தையே தன் கைக்குள் அடக்கியாளப் பார்க்கிறது. அமெரிக்க அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து ஏமாற உடன்படாத நாடுகளைத் தன் வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடைகள் விதிக்கிறது. டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால்தான் அமெரிக்க அரசின் கொட்டமும் அடங்கும். இது சாபம் அல்ல. டாலர் தான் என்றென்றும் உலகப் பணமாக இருந்ததா, என்ன? இல்லவே இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா? உலக வரலாற்றில் எந்தெந்த நாடுகள் வல்லரசுகளாக முன்னணியில் இருந்தனவோ அந்தந்த நாடுகளின் நாணயம் உலகப்பணமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. அவ்வாறு முதலில் போர்த்துக்கீசிய நாணயத்திலிருந்து டாலர் வரை உலகப் பணமாக 6 நாணயங்கள் மாறியுள்ளன. டாலருக்கு முன்பு பிரிட்டிஷ் பவுண்டு உலகப் பணமாக இருந்தது. வரலாற்று வழியாக உலகப் பணமாக ஒரு நாணயத்தின் ஆயுட்காலம் சராசரியாக 90 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறப்பு என்று இறந்தால் இறப்பும் உண்டு இல்லையா, அதற்கு டாலர் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனால் டாலர் தான் ஏற்கெனவே இறந்து பிணமாகி விட்டது என்று கூறினோமே! ஆமாம் அமெரிக்க டாலர் செத்தும் 76 ஆண்டுகளாக உலகப் பணமாக நீடித்து வருகிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போமா? தங்கத்தின் மதிப்பு குறைந்தால் கூட அமெரிக்க டாலர் மதிப்பு குறையாது, டாலர் விலையுயர்ந்தது, அமெரிக்கா சம்பந்தப்பட்ட அனைத்துமே விலையுயர்ந்ததுதான். ஏனென்றால் அமெரிக்கப் பொருளாதாரம் நவீனமயம், தொழில்வளர்ச்சி மற்றும் வெளிப்படைத் தன்மையால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி ஆராய்ந்தால் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என அதிர்ந்து போவோம். ஏமாந்தது நீங்களும் நானும் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் 37 வருடங்களுக்கு மேல் ஏமாற்றியுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது. உதாரணமாக நாம் ஒரு கடையில் தங்கம் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அது 24 காரட் மதிப்பில் இருந்ததால் நம்பிக்கை ஏற்பட்டு அந்தக் கடையின் வாடிக்கையாளராகி விடுகிறோம்., சில மாதங்களுக்குப் பின் தங்கத்துக்கு பதிலாக அச்சு அசலாகத் தங்கம் போல் உள்ள மதிப்பில்லாத போலியை கடைக்காரர் நம் தலையில் கட்டுகிறார். ஆனால் நம்பிக்கை, நாணயம், கைராசி அடிப்படையில் வாடிக்கையாளரான நமக்கு வாங்கிய பொருளின் மதிப்பைச் சரிபார்க்க வேண்டும் என்று ஒரு போதும் தோன்றவில்லை. ஆனால் நம் இரவல் பணத்தில் கடைக்காரர் இலவசமாக ஒரு சொகுசு வாழ்க்கையையும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்று அமோகமாக வாழ்கிறார். இப்போது கடைக்காரருக்கு பதிலாக அமெரிக்க அரசையும், போலித்தங்கத்திற்கு பதில் டாலரையும் போட்டுப் பார்த்தால் நாம் ஏமாந்து போன கதையின் சுருக்கம் கிடைக்கும். டாலர் பற்றிய உண்மையை அறிய முதலில் டாலர் எப்பொழுது உலகப் பணமானது என்பதிலிருந்து பார்ப்போம். டாலருக்கு முன் பிரிட்டிஷ் பவுண்டுதான் உலகப் பணமாக இருந்தது என்று கூறியிருந்தோம் இல்லையா.. இந்தியாவிடமிருந்து பெருமளவு சுரண்டியிருந்த போதும் இரண்டு உலகப்போர்களால் பிரிட்டிஷ் பொருளாதாரம் கடனில் மூழ்கி நிலைகுலைந்ததால் பிரிட்டனின் தங்க இருப்பு குறைந்து போனது. அதனால் பிரிட்டிஷ் பவுண்டை தங்கமாக மாற்ற வழியில்லாமல் போனது. போரில் நேரடியாகப் பங்கேற்காத அமெரிக்கா ஆயுத விற்பனையால் பெருலாபம் பெற்று அதிக உபரித் தங்கத்தைக் கொண்டிருந்தது. உலகின் தங்க இருப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்தது, அதனால் டாலர் அதிகாரப்பூர்வமாக உலக பணமாகும் தகுநிலை பெற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில்,1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போரினால் பாதிக்கப்பட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி ஐக்கிய நாடுகளின் நாணய மற்றும் நிதி மாநாடு (இதுவே பிரெட்டன்வுட்ஸ் மாநாடு என்று அழைக்கப்படுகிறது) நியூ ஹாம்ப்ஷயரின் பிரெட்டன்வுட்ஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் உலகின் 44 நாடுகளிலிருந்தும் 730 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மூன்று வாரம் நடைபெற்ற மாநாட்டில் அன்று ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய நிதி அமைப்புகளே இன்று நவீன தாராளமயத்தால் உலகமக்களை அடக்கியாண்டு வருகின்றன. அந்த அமைப்புகளாவன: சர்வதேசப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐபிஆர்டி) இதுதான் இப்போது உலக வங்கி என்று அழைக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்). கூடுதலாக, வணிகம் மற்றும் கட்டண வீதங்கள் தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) ஏற்படுத்தப்பட்டது இது தற்போது உலக வர்த்தக அமைப்பு (WTO )என அழைக்கப்படுகிறது. அமெரிக்க டாலர் தங்க மதிப்பின் அடிப்படையில் உலகப் பணமாக / சர்வதேசப் பணமாக அங்கீகரிக்கப்பட்டது. $35 அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையான விகிதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு முழுமையாக மாற்றத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்டது. உலகளாவிய நாணயங்களும் யு.எஸ். டாலருடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு அமெரிக்கா உலகின் புதிய பொருளாதாரத் தலைவராக உருவெடுத்தது. பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் விளைவாக, டாலர் "தங்கத்தைப் போலவே பாதுகாப்பானது" என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 1960களில் அமெரிக்காவின் வெளிநாட்டுத் தலையீடுகளாலும், ஆடம்பர நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உபரித் தங்கத்தின் மதிப்பு குறைந்து போனது. வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரால் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்தது. இந்தப் பெருகிவரும் கடனாலும், தொடர்ச்சியான மோசமான நிதி/நாணயக் கொள்கைகளாலும் அமெரிக்க டாலர் மதிப்பிழந்தது. மற்ற நாடுகள் டாலரின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கின. தங்க இருப்பு குறைந்த நிலையில் மற்ற நாடுகளிடம் உள்ள டாலர்களுக்கு ஈடாக அமெரிக்கா தங்கம் வழங்க வேண்டியிருந்தது. இவ்வாறு வாஷிங்க்டன் தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டது. 1971 ஆகஸ்ட் 15,இல், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் யு.எஸ். டாலர்களை இனிமேல் தங்கமாக மாற்ற முடியாது என பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டை அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்து உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இவ்வாறு உலகப்பணமாகிய அமெரிக்க டாலர் 27 வயதிலே மதிப்பிழந்து மண்டையைப் போட்டது அதாவது மதிப்பில்லா வெற்றுக் காகிதமானது. புதிய ஏற்பாடு: அமெரிக்கா தங்க சாளரத்தை அதாவது டாலருக்கான தங்க மாற்றீட்டை ஒரு சுமையாக, தனது செலவினங்களுக்கு ஒரு தடையாகக் கருதியதால் தங்க சாளரத்தை மூடியது."தங்க சாளரத்தை மூடுவதன்" மூலம், வாஷிங்டன் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல - உலகளாவிய பொருளாதாரக் கொள்கையையும் பாதித்தது. பிரெட்டன்வுட்ஸின் சர்வதேச தங்கத் தரத்தின் கீழ், அனைத்து நாணயங்களும் டாலரின் மதிப்பிலிருந்து அவற்றின் மதிப்பைப் பெற்றன. டாலர் அதன் தங்க இருப்புகளின் நிலையான விலையிலிருந்து அதன் மதிப்பைப் பெற்றது. ஆனால் டாலரின் மதிப்பு தங்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட போது, டாலர் “மிதக்கும்” நாணயமானது” (floating currency).அதாவது மதிப்பு நிர்ணயிக்கப்படாத நாணயமானது. “மிதக்கும் நாணயம்” என்பதற்கு, நாணயத்தின் மதிப்பு எதனுடனும் இணைக்கப்படவில்லை என்று பொருள். டாலர் ஒரு "மிதக்கும்" நாணயமாக மாறிய போது, முன்னர் டாலருடன் பிணைக்கப்பட்டிருந்த உலகின் பிற நாணயங்கள் திடீரென்று "மிதக்கும்" நாணயங்களாக மாறின. அது நாணய ஊக வணிகத்தையே ஊக்குவித்தது. எப்படியாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க செய்யவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாயிருந்தது. ஏன் உலகப் பொருளாதாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற பொது நலமா என்ன? இல்லை டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால் பிறகு எப்படி அமெரிக்கா விரும்பிய படி ஏகாதிபத்தியப் போர்ச் செலவுகள் செய்ய முடியும்? அந்நாட்டின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு யார் தீனி போட முடியும்? என்ற சுய தன்னலம்தான். அமெரிக்கா நிதி ஒழுங்கை நிலைநாட்ட விரும்பவில்லை. மற்ற நாடுகளின் தயவில் புதிதாய்க் கிடைத்த இரவல் ஆடம்பர வசதி வாய்ப்பையும் விட விரும்பவில்லை. நிதி ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என மற்ற நாடுகளை ஏவும் அமெரிக்க அரசு, தனது நாணயத்தின் மதிப்பில் நிதி ஒழுங்கை நிலைநாட்டவில்லை. டாலரை நியாயமான முறையில் உலகப் பணமாக நீடிக்கவைக்க அமெரிக்கா என்ன செய்திருக்க வேண்டும்? முதலாவதாக தனது பெருகிவரும் கடனையும், செலவினங்களையும் குறைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக புதிய பொருளாதார யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் துல்லியமாக தங்கத்தின் டாலர் விலையை அதிகரித்திருக்கவேண்டும். இதைச் செய்திருந்தால் டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான நம்பகத் தன்மையை மீட்டெடுத்திருக்கலாம். ஆனால் இவை இரண்டுமே நிதிக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரப் பொறுப்பாண்மையையும் கோருவதால் ஆடம்பர அமெரிக்கா அவற்றை விரும்பவில்லை, குறுக்கு வழியையே விரும்பியது. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் கீழ் சர்வதேசத் தங்கத் தரத்தை நீக்குவது அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தனர். அமெரிக்கா தனது ஆடம்பர மற்றும் போர்ச் செலவினங்களை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டுமானால் இந்த "செயற்கை டாலர் தேவையை" பராமரிப்பது மிக முக்கியமானது என்பதும் அவர்களுக்குத் தெரியும். டாலரைத் தங்கமாக மாற்ற முடியாததால், சர்வதேச அளவில் அதன் நம்பகத்தன்மை காலாவதியாகி விட்டது. அதனால் உலக அளவில் டாலரின் தேவை குறைந்து விட்டால் அதன், மதிப்பும் குறைந்து விடும். பின் அமெரிக்கா நினைத்தபடி செலவு செய்ய முடியாது. என்ன செய்தாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க வைக்க வேண்டும், ஆனால் தங்கச்சுமை வேண்டாம் என்றே முடிவு செய்தனர். டாலரின் மதிப்பை அதிகரிக்க வேண்டுமானால் டாலருக்கான தேவை அதிகமாக வேண்டும். டாலருக்கான சர்வதேசத் தேவையை அதிகமாக்க வேண்டுமானால் எந்தப் பொருளுக்கு சர்வதேச அளவில் அதிகத் தேவையுள்ளதோ அந்தப் பொருளின் வர்த்தகத்தை டாலருடன் கோர்த்து விட வேண்டும், அதாவது டாலரில் விற்க வாங்கச் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நிக்சன் அரசு தீர்மானித்தது உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள், கச்சா எண்ணெய்க்கே என்றென்றும் குறையாத அதிகத் தேவை உள்ளதால் கச்சா எண்ணெய் விற்பனையை டாலருடன் கோர்த்து விட முடிவு செய்தது. தீவிர முயற்சிகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவையைத் தக்கவைக்கும் முயற்சியில், பெட்ரோ டாலர் அமைப்பு என்று புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டது. பெட்ரோ டாலர்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரச குடும்பத்துடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் 1973ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, 1) சவுதி அரேபியா எண்ணெய் விற்பனை அனைத்தையும் யு.எஸ். டாலர்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யு.எஸ். டாலர் தவிர வேறு எந்த நாட்டுப் பணத்தையும் தங்கள் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டணமாக சவுதி அரேபியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.) இவ்வாறு சவுதி அரேபியாவிலிருந்து ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் சவுதிப் பணமான ரியாலில் விற்க அமெரிக்கா தடை விதித்தது. இந்தப் புதிய ஏற்பாட்டின் கீழ், சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வாங்க முற்படும் எந்தவொரு நாடும் முதலில் தங்கள் சொந்தத் தேசிய நாணயத்தை யு.எஸ். டாலராக மாற்றிக் கொள்ள வேண்டும். 2) சவுதி அரேபியா தங்கள் உபரி வருவாயை யு.எஸ். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு பதிலாக அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்கள் வழங்குவதாகவும் இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அதன் எண்ணெய் வயல்களைப் பாதுகாப்பதாகவும் வாக்குக் கொடுத்தது. தங்கத்துக்கு டாலர் என்றிருந்த அமைப்பு எண்ணெய்க்கு டாலர் என்று மாறியது. எண்ணெய் உற்பத்தியாளரால் எண்ணெய் விற்பனைக்கு ஈடாகப் பெறப்படும் அமெரிக்க டாலரே பெட்ரோ டாலர் என அழைக்கப்படுகிறது, பெட்ரோ டாலர்களை அமெரிக்க நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வது பெட்ரோ டாலர் மறுசுழற்சி என அழைக்கப்படுகிறது.. 1975இல் சவுதியின் ஆதிக்கத்தினால் ஒபெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எண்ணெய் விற்பனையை அமெரிக்க டாலர்களில் செய்யவும், அமெரிக்க. அரசின் கடன் பத்திரங்களில் தங்கள் உபரி எண்ணெய் வருமானத்தை முதலீடு செய்யவும் ஒப்புக் கொண்டன. இதனால் அமெரிக்க டாலருக்கான தேவை செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் எண்ணெய்த் தேவை காரணமாக அமெரிக்க. டாலர்களுக்கான தேவையும் அதிகரித்தது. இவ்வாறு டாலர் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டது. யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பால் அமெரிக்க அரசு பெருங்கொள்ளை அடிக்கிறது நாசூக்காகச் சொல்ல வேண்டுமெனில் பெரும் லாபமடைகிறது. இது எப்படி எனப் பார்த்தோமானால், டாலர்களுக்கான உலகளாவிய தேவை அமெரிக்க மத்திய அரசுக்கு மேலும் டாலர் அச்சிட “அனுமதிச் சீட்டு” அளிக்கிறது. அது வரையறை இல்லாமல் தன் விருப்பம் போல் அச்சிடுகிறது. மிதக்கும் நாணயங்களின் இந்தப் புதிய சகாப்தத்தில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தங்கத் தரத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால் புதிய நாணய உற்பத்திக்கு ஈடான தங்க இருப்புக்கள் இல்லை என்ற அச்சம் இல்லாமல் இப்போது விரும்பிய படி "டாய்லெட் பேப்பர்” போல் டாலர் நோட்டுக்களை அச்சிட்டுக் கொண்டே இருக்கிறது. மற்ற நாடுகளில் இந்தளவிற்குப் பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் எக்கச்சக்கமாக உயர்ந்து விடும். ஆனால் அமெரிக்கா பணவீக்கத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா அதிக அளவில் ஆயுதங்களை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை, அமெரிக்க டாலரையும் ஏற்றுமதி செய்கிறது. இதனால்தான் புதிய "எண்ணெய்க்கான டாலர்கள்" முறை முந்தைய "தங்கத்திற்கான டாலர்கள்" முறையை விட அமெரிக்க அரசால் மிகவும் விரும்பப்படுகிறது. அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையின் முதன்மைப் பயனாளி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆகும். இது பொதுத்துறை வங்கியல்ல. இது ஒரு தனியார் வங்கி. யு.எஸ். டாலர் பெடரல் ரிசர்வ் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்குக் கடனாக வழங்கப்படுகிறது, டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறுதான் அமெரிக்கா குறுக்கு வழியில் ஓர் இடைத்தரகு ஏற்பாட்டின் மூலம் நாணயமில்லா டாலருக்கு நாணயமில்லா முறையில் மறுவாழ்வு கொடுக்க சவுதி அரேபியாவைக் கட்டாயப்படுத்தியது.         http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-may20/40253-2
  • உங்களுக்கு தெரியுமா..? நமக்குத் தேவைப்படும் முழுமையான புரதம் ‘பிஸ்தா’விலேயே கிடைத்துவிடுமாம்..! புரதம் மிகு உணவு: அமெரிக்க பிஸ்தாக்கள் ஒரு 'முழுமையான புரதம்' என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையாகும். அவை சைவ உணவு உண்பவர்களிடையே பிரபலமாகியுள்ள குயினோவா, சுண்டல் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான தாவர புரதங்களின் வரிசையில் சேர்கின்றன.     உயர் புரத உணவு: பருப்புகள் என்று பெயரிடும் போதெல்லாம், பிஸ்தா, பாதாம் மற்றும் முந்திரி ஆகியவை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த கொட்டைகள் பல சமையல் பயன்பாடுகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. மத்திய ஆசியப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட பிஸ்தாவைப் பற்றி நாம் குறிப்பாகப் பேசினால், பிஸ்டா குல்பி, பிஸ்தா பாதம் பால், பிஸ்தா இனிப்புகள் மற்றும் பலவகை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நட் மிகவும் சத்தானது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், நல்ல ஆற்றல், குறைந்த கலோரி மற்றும் பல நன்மைகள் உள்ளது. இதைச் சேர்த்து, ஒரு புதிய பகுப்பாய்வு, பிஸ்தாக்களை புரதச்சத்து நிறைந்தவை என்று மட்டும் கூற முடியாது, மாறாக இது 'முழுமையான புரதத்தின்' ஆதாரமாகக் கருதப்படுகிறது, குறிப்பாக விலங்கு சார்ந்த புரதங்களிலிருந்து தாவரத்திற்கு மாற விரும்புவோருக்கு இது மிகவும் அடிப்படையிலானவை.   ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சமீபத்தில் கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்க பிஸ்தா வளர்ப்பார்கள் ஆண்டு மாநாட்டில், "அமெரிக்காவில் விளைந்த வறுத்த பிஸ்தாக்கள் 'முழுமையான புரதம்' கொண்டவை என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையாகும். அதாவது அவை சைவ உணவு உண்பவர்களிடையே பிரபலமாகியுள்ள குயினோவா, சுண்டல் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற புரதங்கள் சைவ உணவு உண்பவர்களிடையே பிரபலமாகிவிட்டன."   அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் முழுமையான புரதத்தின் வரையறைக்கு பிஸ்தாக்கள் தகுதி பெறுகின்றன என்று அறிக்கை கூறுகிறது. எஃப்.டி.ஏ படி, ஒரு முழுமையான புரதம் "தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் போதுமான அளவு" கொண்டிருக்கும் உணவு ஆகும்.   ஊட்டச்சத்து நிபுணர் நுஜெல் மிட்செல், இது தொடர்பாக எழுதிய  'The Plant Based Cyclist' புத்தகத்தில், ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களின் போதுமான அளவைக் கொண்ட வறுத்த பிஸ்தாக்களை இப்போது புரதத்தின் முழுமையான ஆதாரமாக எளிதாகக் கருதலாம் என்று கூறியுள்ளார். வறுத்த பிஸ்தாவில், பாலில் காணப்படும் 81 சதவீத புரதம் மற்றும் 80 சதவீதம் கேசீன் (casein) உள்ளதாக அறிக்கை கூறுகிறது.   "அமினோ அமிலங்கள் என்பது புரதத்தின் 20 கட்டமைப்புத் தொகுதிகளைக் கொண்டது, ஆனால் ஒன்பது 'அத்தியாவசிய' அமினோ அமிலங்கள் மனித உடலால் உற்பத்தி செய்யப்படுவதில்லை, எனவே அவை உணவில் பெறப்பட வேண்டும்" என்று வர்த்தக சங்கத்தின் அமெரிக்க பிஸ்தா வளர்ப்பார்களின் அறிவியல் ஆலோசகர் Dr. Arianna Carughi விளக்கினார்.   தாவர அடிப்படையிலான உணவுகளில் பெரும்பாலானவை 'முழுமையற்ற' புரதங்களாகும், எனவே அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்களில் குறைபாடுள்ளவை; இருப்பினும், இரண்டு முழுமையான புரதங்களை ஒரே நேரத்தில் இணைப்பது அல்லது ஒரு நாளுக்குள் ஒரு முழுமையான புரதத்தை உருவாக்குகிறது. வறுத்த பிஸ்தா ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இப்போது ஒரு முழுமையான புரத மூலமாகக் கருதலாம்” என Dr. Arianna Carughi கூறினார்.   https://food.ndtv.com/tamil/high-protein-diet-pistachios-source-of-complete-protein-shows-new-analysis-2192886
  • உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள் இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.   மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...பெண்ணின் இதழ்கள் மென்மையானது அந்த இதழ் மீது மென்மையான சாயங்களை பூசி மெருகேற்றி இதழை பார்ப்பவர் இதயத்தை கவரச்செய்து விடுகிறார்கள். இதற்காகவே லிப்ஸ்டிக் ஏராளமாக வந்து விட்டன. திரவ வடிவில் கிடைக்கிறது, க்ரீமாக கிடைக்கிறது. இவைகளை தங்கள் முக நிறத்துக்கு ஏற்ப வாங்கி பூசுவார்கள். அதிலும் இப்போது லிப்ஸ்டிக் ஜெல் பிரபலமானது. அதை பூசினால் உதடு சும்மா மினுமினுக்கும்.இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. ஏனெனில் முக கவசம் கட்டாயமாகிவிட்டது. கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து உதட்டுக்கு மெருகேற்றுவது பார்ப்பவர்களை வசீகரிக்கத்தான். ஆனால் அத்தனையும் மூடி மறைத்து விட்டால் என்ன பயன்? இதனால் பாவம் பெண்கள் கவலைப்படுகிறார்கள். இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.மீன் விழி, காந்தக் கண் என்றெல்லாம் கவிஞர்களால் வர்ணிக்கப்படும் கண்களை இப்போது மெருகேற்றி தங்கள் ஆசையை கண்களுக்கு மேக்கப் போடுவதில் அதிகமாக காட்டுகிறார்கள். கண் புருவத்தின் மீது ஆங்காங்கே சிதறி நிற்கும் புருவ முடிகளை (ஐபுரோ) நேர்த்தியாக்க ஐபுரோ செய்வதும் அதன் மீது மை எழுதி விடுவதும் தனி அழகு. அதோடு இமை முடிகளை மஸ்காரா கொண்டு அழகு செய்கிறார்கள்.இதனால் அந்த இமை முடிகள் ஒவ்வொன்றும் கிளர்ந்து நிற்கும். பார்ப்பவர்களை கிளர்ச்சி அடைய வைக்கும். அடுத்து கண்ணின் கீழ் இமையில் மெல்லியதால் ஐ லைனர் கொண்டு மை தீட்டுகிறார்கள். மேல் இமையில் அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற வகையில் வண்ணங்களை பூசி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுகிறார்கள். அது மட்டுமல்ல கண்ணுக்குள் நீந்தும் கருவிழி மீது தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற லென்சுகளையும் பொருத்தி அசத்துகிறார்கள்.இப்படி இப்போது கண்ணின் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள் பெண்மணிகள். அதேநேரத்தில் முககவசத்தையும் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் அணியவும் பெண்கள் ஆர்வப்படுகிறார்கள். இதனால் மாஸ்கிலும் பல வடிவங்கள் பல வண்ணங்களில் வரத் தொடங்கிவிட்டன. https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/05/30120228/1564871/corona-eye-makeup.vpf