Sign in to follow this  
ampanai

காற்றுமாசில் டெல்லியை மிஞ்சிவிட்டது சென்னை: கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 என ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Nov_3__986690700054169.jpg

சென்னை: சென்னையில் காற்றுமாசு அளவு தொடர்ந்து மிகவும் அதிகரித்து இருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அமபலமாகியுள்ளது. டெல்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 254 ஆக இருந்தபோது சென்னையில் 264 வரை அதிகரித்திருந்தது. வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 ஆக உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளிக்கிழமை வரை காற்றுமாசு அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கினால் சென்னையில் காற்றுமாசு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. சுவாசிக்க தகுந்த காற்றின் மாசு அளவு 100க்குள் தான் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று  மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் நவம்பர்  8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், காற்றுமாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதை நேற்று உறுதிப்படுத்தியது.

அதே நேரத்தில் சென்னையில் 150க்கு கீழ் என்ற நிலையில் இருந்த காற்று மாசின் அளவு  அதிகரித்து, தற்போது சென்னையில் அதிகபட்சமாக 201 முதல் 168 வரை உள்ளது. சென்னையின் வழக்கமான காற்றுமாசின் அளவு 0-150 என்ற அளவில் இருந்ததாக தெரிவித்திருந்தது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் பரவலாக காற்று மாசு மோசமான அளவுக்கு அதிகரித்துவிட்டதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது. மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு காற்றில் கலந்துள்ள மாசுத்துகள் 224 பிபிஎம்  ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னையில் காற்றுமாசின் அளவு டெல்லியில் இருப்பதை விட அதிகரித்திருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539238

Share this post


Link to post
Share on other sites

large.575F8C71-495E-43DF-8D08-9783EA9CB6BD.jpeg.84babab58f3609137fe32f8ad1349390.jpeg

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, tulpen said:

large.575F8C71-495E-43DF-8D08-9783EA9CB6BD.jpeg.84babab58f3609137fe32f8ad1349390.jpeg

இதனை செய்பவர்கள் முழு முட்டாள்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.
  • போட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........!   💐
  • அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள். 1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம். 2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது. 3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு. 4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள். 5. scrunity என்பது scrutiny என வர வேண்டும். 6. of the என்பது the என வர வேண்டும். 7. in order to என்பது to என வர வேண்டும். 8. intitated என்பது initiated என வர வேண்டும். 9. encl. என உபயோகித்துள்ளார்கள். 10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.
  • மேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது.  அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்...  சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.  அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா..?! அதிலும் மெளனம் மேலானது.  ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை..  ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும்.