ampanai

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

Recommended Posts

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

Thursday, November 7, 2019 - 9:35am
 
57_06112019_SSF_CMY.jpg?itok=5c4MWdml

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால்  இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். 

பட்டிருப்பு தொகுதி சங்கர்புர த்தில்  நேற்றுமுன்தினம் (5)  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற நிலங்களை மீட்பதற்கும், பொருளாதார ரீதியாக தமிழர்கள் வலுவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு அரசியல் அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. 

அந்த வகையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு   வாக்களிக்க வேண்டும்.

அரசியல் பசப்பு வார்த்தைகளாலும்,வீர பேச்சுக்களாலும் தமிழர்களுக்கு என்றும் நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை கடந்த கால அரசியல் உணர்த்தி இருக்கின்றது. 

அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இருக்கின்ற போது எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அந்த காலத்திலேயே தமிழருக்கு எதிரான அதிக கூடுதலான குழப்பங்களும், வன்முறைகளும் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. அதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கின்ற போது கிழக்கில் தமிழர்களுக்கான நில, நிர்வாகம் இருப்புக்கள் மறுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி கூட ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கல்முனையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்தினை தரம் உயர்த்த முடியாத ஐக்கிய தேசிய கட்சி அரசு கிழக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்குமா அல்லது வடக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)  

https://www.thinakaran.lk/2019/11/07/அரசியல்/43478/கூட்டமைப்பு-கிழக்கு-தமிழரை-நேசிக்கவில்லை

Share this post


Link to post
Share on other sites

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

வடக்கு மக்களையும்...   கூட்டமைப்பு நேசிக்கவில்லை என்பதே... உண்மை.
சம்பந்தனும், சுமந்திரனும்... தமது சுயநலத்துக்காக,  
அரசியல் செய்ய வெளிக்கிட்டு, பத்து வருசமாகி  விட்டது.

Share this post


Link to post
Share on other sites

கிழக்கு மட்டுமல்ல , வன்னியயும் இவர்கள் கவனிப்பதில்லை. வன்னியில் ரிசார்டின் ஆட்சி , கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஆட்சி. கோத்த வந்தால் என்ன , சஜித் வந்தால் என்ன இவர்கள்தான் அங்கு அமைச்சர்கள். நம்மட மடையர்கள் அந்த ஆட்சிக்கு முண்டு கொடுப்பாங்க , இவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழனுக்கு அரசியல் உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. எந்த நாளும் பிச்சைக்காரனாகவே இருக்கவேண்டும். 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

கிழக்கில் தற்போது உள்ள தமிழ் தலைவர்களை குறிப்பிடுங்கள் பார்கலாம்

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ampanai said:

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

ததேகூடட்டமைப்பு கிழக்குத்தமிழர்  என்றில்லை

எந்த  தமிழரையும்  நேசிப்பதில்லை

ஆனால் இவரது  நோக்கம்  வேறு

கோத்தபயவை ஆதரிக்கவேண்டும்  என்பது  ஒட்டுமொத்த  தமிழர்களின்  முடிவல்ல

அப்படியானால்  தேர்தலின்  பின் கோத்தபயவுக்கு  எதிராக  தமிழர்கள்  வாக்களித்தால்

கூட்டமைப்பு கிழக்குத்தமிழரை ஒதுக்கியது  சரி  என்று  இவர்  எடுத்துக்கொள்ளவேண்டி  வருமே??

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, Kavi arunasalam said:

7553-E464-A8-D9-42-E1-A74-C-4-A4511-B217

சம்பந்தன் ஐயாவின், கழுத்தில் உள்ள மாலை... நல்ல, வடிவாக இருக்கு.  :grin:

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே. வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

சம்பந்தன் திருகோணமலை (கிழக்கு) தானே?

சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தாலும் கொழும்பில் வளர்ந்தவர். அவர் 2010 இல் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். அப்படி ஆரம்பித்து இப்பொழுது சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து கூட்டமைப்பையே ஆட்டிப்படைக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் எம்மாத்திரம்?

பிள்ளையானின் கட்சி கோத்தாவை ஆதரிப்பதற்காக கூட்டமைப்பும் கோத்தாவை ஆதரிக்க வேண்டுமென்றில்லை. கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பது சரியான முடிவு.

இலங்கை அரசு பிள்ளையான், கருணா போன்றவர்களை எப்படி பயன்படுத்தியதோ அதே போல் முஸ்லிம்களை பயன்படுத்துகிறது. முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது இலகு.

கூட்டமைப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிய வியாழேந்திரனும் இப்பொழுது கோத்தாவுக்கு ஆதரவு. 

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • மேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது.  அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்...  சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.  அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா..?! அதிலும் மெளனம் மேலானது.  ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை..  ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும். 
    • கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது   http://www.samakalam.com/செய்திகள்/கோட்டாபய-ராஜபக்ஷவின்-பத/
    • ருவன் வெலி சாய விகாரைக்கு அருகில் தான் எல்லாளனின் சமாதியும் உள்ளது! இன்னும் திருந்த இடமுண்டு..!