Sign in to follow this  
ampanai

டிரம்புக்கு, இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்த பெண் நீதிபதி

Recommended Posts

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பெண் நீதிபதி ஒருவர் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டொனால்ட் டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தசெலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தைதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை மூடப்பட்டது.

இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் ராணுவத்தினருக்காக வசூலிக்கப்பட்ட பணம், 2016ஆம் ஆண்டில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று நீதிபதி சேலியன் ஸ்கார்புலா ((Saliann Scarpulla)) தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/87984/டிரம்புக்கு,-இரண்டுமில்லியன்-அமெரிக்க-டாலர்அபராதம்-விதித்த-பெண்நீதிபதி

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நாம் தமிழர் கட்சி எல்லாவற்றையும் இழந்தோம்; கடைசியாக எந்த மானத்திற்காகப் போராடினோமோ? அந்த மானத்தையும் இழந்தோம்! எதற்காக? விடுதலை என்ற ஒற்றை வார்த்தைக்காக..! சுதந்திரம் என்பது ஒவ்வொரு தேசிய இனங்களின் பிறப்புரிமை! அதைப் படை கொண்டு தடுப்பது பாசிசக் கொடுமை! - சீமான்
  • பூபால சிங்கம் புத்தக சாலையில் ஏன் சித்தி வேலே செய்தவர்.  நியூ மாஸ்டரில் ரியுஷன் முடிந்த பின்னர், பூபால சிங்கம் கடைக்கு போய் வந்திருக்கும் புது புத்தகளை அள்ளிக்கொண்டுபோய், சித்தி வீட்டில் வைத்து வாசித்து முடித்துவிட்டுதான் ஊருக்கு போவேன் அம்மம்மா அன்புடன் போடும் அறுசுவை உணவை உண்டபின். என்ன ஒரு காலம் அது. வாசிக்காத லக்ஷ்மி & ரமணிசந்திரன் புத்தகங்கள் இல்லை  அந்த நேரம். பொன்னியின் செல்வன் மூன்றுதாரத்துக்கு மேல் வாசித்து முடித்தனான். இப்ப வாசிக்க அலுப்பா இருக்கு.  பூபால சிங்க சிறியண்ணா,  மல்லி அக்கா, சித்திக்கு தான் நன்றி செல்லனும் என் வளர்ச்சிக்கு. எந்த புத்தகமென்றாலும் இலவசாமாக எடுத்து தருவார்கள் கெண்டுபோக, நல்ல உள்ளங்கள்.நீடுழி வாழனும். நான் கதை புத்தகம் வாசிக்க வெளிக்கிட்டால் இடி இடித்தால் கூட கேட்கது அந்தளவுக்கு ஒன்றி போய்விடுவோம். நான் கொண்டுவரும் புத்தகங்களை அம்மாவும் நானும் போட்டி போட்டு இரவிரவாக படிப்போம் விளக்கு வெளிச்சத்தில். என் வாசிப்புக்கு அம்மாவும் ஒரு காரணம். மனிப்பாய் வாசிகசாலை பெறுப்பாளர் (எல்லோரும் காளி என கூப்பிடுவார்கள் அந்தளவுக்கு கண்டிப்பு) என்னுடன் பயங்கர அன்பு, வாசிக்க நல்ல நல்ல புத்தகங்களா தேடி தருவா, என்னுடன் அன்பா இருந்த மாதிரி வேறு யாருடனும் நான் பார்க்கவில்லை, அவாவின் செல்ல பிள்ளை நான். புத்தன் சாத்திரி நீங்கள் என்ன மாதிரி காளியுடன்
  • 50 இலும் ஆசை வரும்.அது ஒன்லைனலும் வரும்.
  • சிங்களம் பயப்படுவது இந்த சிந்தனை முறைக்குத்தான்.  பாராட்டுக்கள் மாணவர்களே. 👏👏👍👍👏
  • தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன   இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர்.   தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 21 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.       கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 17-ந்தேதி 1 லட்சம் பி.சி.ஆர். கருவிகளும், 26ம் தேதி 1.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள்  என 2.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள் தமிழகத்திற்கு வந்தன.இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1½ லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன.இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.இதுவரை தென்கொரியாவில் இருந்து 4 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்துள்ளன. இன்னும் 6 லட்சம் கருவிகள் வரவேண்டி உள்ளது. வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் கருவிகள் வீதம் எஞ்சிய கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும்.பி.சி.ஆர். கருவிகள் மூலம் தமிழகம் முழுவதும் நாள் தோறும் 12 ஆயிரத்து 275 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதுவரை இந்த கருவிகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 155 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.தமிழ்நாடு முழுவதும் 72 பரிசோதனை மையங்களில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் 43 அரசு மருத்துவமனைகள், மீதியுள்ள 29 மருத்துவமனைகள் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும்.கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை வர வழைத்தது. ஆனால் அது தவறான முடிவுகளை காட்டியதால் திருப்பி அனுப்பப்பட்டது.பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டக்கூடியது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/31164732/1565068/South-Korean-covid19-PCR-Kit-15-lakhs-arrived-tamilnadu.vpf