ampanai

இன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்

Recommended Posts

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

sajith_jaffna.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில்  இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.

ஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஐனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

இந்த நாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதே போல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

மேலும் பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும். அதே போன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு வசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும். 

பாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

மேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். குறிப்பாக நெல், சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னை என இவை அனைத்திற்கும் தேவையான பசளையை இலவசமாக வழங்குவேன்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதே போன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப புங்கா என்பனவும் உருவாக்கப்படும் இந்த தொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்று தான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கில அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக்க கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்த மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதே போன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

எனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உங்களது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். அந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்த நாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் பிறகு எவருமே சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆகவே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வடகிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.

அதே போன்று ஒருமித்த நாட்டில் இனமத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.

யாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. ஆயிரத்து 611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/68550

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

"யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன். "

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, ampanai said:

ஒரு மாகாண இல்லை மாநில சுய ஆட்சியை வழங்கினால் மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்.

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

13 hours ago, ampanai said:

ஏற்கனவே நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் பல பல இலவசங்களை வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரும் என கூறமாட்டார்கள். காரணம், வெற்றியின் பின்னர் மக்களை மறக்க வைத்துவிடுவார்கள். 

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Lara said:

எவ்வாறு மக்களே தம்மை வளர்த்துக் கொள்வார்கள்?

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

7 hours ago, Lara said:

அது தான் வெளிநாட்டு உதவிகளை பெற்று என கூறியுள்ளாரே.

இவ்வளவு நாளும் உள்நாட்டு பணத்திலா ஏதாவது செய்கிறார்கள்? வெளிநாட்டு பணத்தில் தான் 'வளர்ச்சி' என்ற  திட்டம் மட்டுமே உள்ளது. ஆனால், பின்னர் சிங்கள தேசத்தையே அபிவிருத்தி செய்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

தமிழ் நாடு போன்று 🙂

தமக்கென சில கொள்கைகளை வகுத்து தாமே ஆளும் பொறிமுறை இருந்தால் எமது மக்கள் தாமே தம்மை வளர்த்துக்கொள்ளுவார்கள். 

தமிழ்நாடும் மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் தான் உள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமக்கு சொத்து சேர்க்கும் அளவுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தம்மைத்தாமே வளர்த்துக்கொள்ளும் நிலையில் தமிழகம் இல்லை.

அது போக,

சஜித் தேர்தலுக்கு முன் கூறும் அனைத்தையும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்தால் செயற்படுத்துவார் என்றில்லை. ஆனாலும் சிலவற்றை கூறியுள்ளார். ஐக்கியம் என்ற சொல்லுக்கான சிங்கள சொற்பிரச்சினையை தவிர்த்து இதை வாசியுங்கள்.

மக்களுக்கு அதிகாரம்.

நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம். பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புகள் குறைக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் சட்டத்திலும் நடைமுறையிலும் மட்டுமல்லாமல், அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதை உறுதி செய்யும்.

இதுபோன்று, மாகாணங்களின் அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஜனாதிபதிகளாகிய ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். மையத்தில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மையமும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை - செனட் சபை - ஒன்று உருவாக்கப்படும்.

தேவையான நிதிகளைத் திரட்டுவதற்கும் அவற்றின் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு தேவையான அதிகாரங்கள் இருக்கும். மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்திய அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மையத்தின் முகவர்களாகவும், மாகாண அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது மாகாணத்தின் முகவர்களாகவும் செயற்படுவார்கள். அதிகாரப் பகிர்வு அலகுகளைப் பொறுத்தவரை, உடன்பாடுகளுக்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குவோம்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, ரதி said:

Image may contain: 6 people, people smiling, people standing

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, ரதி said:

இது கல்லடியிலாம் ...புல்லாவை தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் நிக்கினம்...காத்தான்குடியை புல்லா குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரோ🙂 தெரியாது கல்லடியில்  கூட்டம் வைக்கினம் 

அதுவும் பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் மட்டக்களப்பில் கன இடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் வந்துதான் கூட்டம் வைக்கிறார்கள் சஜித் ஐயாக்கு 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இது மட்டு நகரில் இன்று நடந்த கூட்டம் 🤣🤣🤣

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று மூன்று இடத்தில் கூட்டம் மட்டக்களப்பில் , களுதாவளையில் , கல்முனையில்  எனது வாக்கு சுற்றியிருக்கும் கூட்டத்தினரால் மாறிவிட்டது இப்படி கனபேர் கிழக்கில் 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

அதன் பின்னர் முஸ்லிம்களை சிங்களம் அழிக்கும்.  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Lara said:

 

ஹக்கீமின் Twitter பக்கத்துக்கு சென்றால் சஜித்துக்கான பிரச்சார கூட்டங்கள் பலவற்றின் படங்களை பார்க்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து நின்று அரசிடமிருந்து பலவற்றை பெறுவதில் கைதேர்ந்தவர்கள்.

அதே நேரம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது நடக்கும்.

முஸ்லிம்களை வைத்து தமிழர்களை, சிங்களம் அழிக்க நினைக்கும்...அதே தமிழர்களை வைத்து முஸ்லிம்களை அடக்க நினைக்கும்..."தக்கன பிழைக்கும்" ...இப்பத்தைய இலங்கை அரசியல் நிலவரத்தின் படி முதலில்  முஸ்லிம்கள் இல்லாமல் போக வேண்டும் என்பதே சிங்களம் விரும்புகின்றது...அதன் பின்னரே தமிழர்கள் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பட்டது + படிச்சது + பிடித்தது - 202   தமிழரை வாட்டும் மூடுமந்திரம்??   எல்லாமே திட்டமிட்டபடி...?? மகிந்த ஐனாதிபதி இடையில் புகுந்து மகிந்தவின் வளர்ப்பு மைத்திரி ஐனாதிபதி மகிந்தவின் தம்பி கோத்தபாய ஐனாதிபதி அடுத்தது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் மகிந்த இன்னொரு கால் நூற்றாண்டுக்கு ராஐபக்சக்களே ஆட்சி   இதை அறியாமல் உணராமல் தமிழர்களுக்கு வாழ்வில்லை   இனியாவது அடுத்த கட்டங்களை உணர்ந்து ஆதரிக்காவிட்டாலும் தவிர்த்து செல்வதே வாழ வழி.   சிறுபான்மை இனம் என்பது முதலில் தன்னை தங்கவைக்கணும். இருப்பதையாவது காப்பாற்றணும்.   தமிழினம் இதைத்தான் கூட்டமைப்பினரிடமும் சரி வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்கினேசுவரனிடமும் சரி எதிர்பார்த்தது. ஆனால் அவர்கள் தத்தமது அரசியலை அல்லது பிரபாகரனாலேயே முடியாது போன போராட்டத்தை செய்கிறார்களே தவிர.....????????????   ஆனால் எம்மவர்கள் எம்மவர் ஒருத்தர் எடுத்த முடிவை மற்றவர் குளப்ப அல்லது அதற்கு மாற்றாக செயற்படுத்தும் செயல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தாம் செய்யவேண்டிய காலத்தின் பணி சார்ந்து சிந்திப்பதே இல்லையே... இதிலிருந்து தமிழருக்கு விடிவு எப்பொழுது????
  • ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தாபயவுக்கு 100 நாட்கள் நாம் அவகாசம் வழங்குகின்றோம். நூறாவது நாள் முடிவதற்குள் தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை எடுக்க தவறினால் சர்வதேச ரீதியாக ஐ.நாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோருவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட்ட போர்க் குற்றத்தில் ஈடுபட்ட ஓர் போர் குற்றவாளியால் இனப் பிரச்சனைக்கு சரியான தீர்வு நீதி கிடைக்கும் வரை எம்மால் வாழ்த்துக் கூற முடியாது.முன்னாள் பாதுகாப்பு செயலரின் வெற்றிக்காக வாழ்த்துகளை கூறும் மன நிலையில் தமிழ் மக்கள் இல்லை.நானும் அந்த மன நிலையில் இல்லை. ஓர் ஜனநாயக நாட்டிலே நாட்டின் ஜனாதிபதி ஆனதும் முதல் நூறு நாட்கள் வழங்கப்படும். அந்த நாட்காளில் அவருக்கு எதிரான பாரதுரமான போராட்டங்களோ, கருத்துக்களோ, விமர்சனங்களோ முன்வைக்கப்படுவதில்லை. ஆகவே தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தாபயவுக்கும் நூறு நாட்கள் நாம் வழங்குகின்றோம்.நூறாவது நாள் முடிவதற்குள் தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை எடுக்க தவறினால் சர்வதேச ரீதியாக ஐ.நாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோரி இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்களை கோருவோம்.எந்த தடை வந்தாலும் சந்திக்க தயார்.ஆகக் குறைந்தது இணைப்பாட்சி,சமஸ்டியை கொண்டதான தீர்வையாவது ஐக்கிய இலங்கைக்குள் வழங்க முன்வரவேண்டும். பௌத்த மதம் ஆழமாக வேர் ஊன்றிய இடத்தில் வைத்து புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்றுள்ளார்.அனுராதபுரத்தில் துட்டகைமுனு நினைவுசின்னத்துக்கு முன்பாக பதவி ஏற்றுள்ளார். இதன் ஊடாக நவீன துட்டகைமுனுவாக மாறப் போகின்றாரா?அல்லது வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கப் போகின்றாரா?என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/69199
  • பெருமளவான தமிழ்மக்களால் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புதிய ஜனாதிபதி புரிந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார்.  இன்று அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.  இத்தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்கள் தமது ஜனநாயகக் கடைமையை ஒற்றுமைப்பட்டு வெளிப்படுத்தியுள்ளமையையும் , என்னென்ன காரணங்களுக்காக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மக்களை உரிமையோடு கேட்டுக் கொண்டதோ அக்காரணங்கள் அனைத்தும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளது.  தமிழ் மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளும் உள்ளக்கிடக்கைகளும் ஒவ்வொரு வாக்குகளினாலும் உலகத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எமது மக்களின் நீண்டகால அபிலாசைகள், தீர்த்து வைக்கப்படாத அன்றாட பிரச்சினைகள், கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள எதிர்கால வாழ்வு என இவையெல்லாம் ஏமாற்றங்களாக தொடர்வதின் நீட்சியே வாக்குகளுடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெரும்பானமை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே.  சிங்கள தலைமைகள் சிங்கள பெரும்பான்மை இன மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டு அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும், என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது.  புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் சிங்கள மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களதும் தெற்கின் சிங்கள மக்களதும் சம காலத்து தேவைகள் வேறு வேறானவை என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறான பார்வைகளினூடாகவும், அணுகுமுறைகளினூடாகவுமே தமிழ் சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.  புதிய ஜனாதிபதி தனது 5 வருட பதவிக்காலத்தில் இயலுமான வரை கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளை பாடமாக்கி கொண்டு திருத்தங்களுடன் பயணித்தால் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வுண்டு என கருதுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/69198
  • அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம். தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...