Jump to content

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Recommended Posts

எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது  வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DSC_0711_4.JPG

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்த அவர்கள்,

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன்  ஓட்டு கேட்டுவருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளதுடன்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டனர்.

DSC_0714_2.JPG

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வ தேசத்துக்கு காட்ட தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

கோத்தாவும், சஜித்தும் சமஸ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பௌத்த அடிப்படை வாதிகள். இந்த சிங்களவர்களிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

தமிழர்களிற்கு எச்சரிக்கை. தந்தையின் மரணத்திற்கு தமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித். சஜித்தை ஆதரிப்பதற்கு தலா 30 கோடி ரூபா கூட்டமைப்பு எம்பிக்கள் பெற்றுள்ளார்கள். என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

https://www.virakesari.lk/article/68552

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது  வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DSC_0711_4.JPG

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்த அவர்கள்,

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன்  ஓட்டு கேட்டுவருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளதுடன்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டனர்.

DSC_0714_2.JPG

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வ தேசத்துக்கு காட்ட தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கே அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு. அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ரனிலுக்கு 2005ல் நீங்கள் வாக்களிக்க மறுத்ததால்தான் உங்கள் உறவுகள் காணாமல் போனது பற்றி அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அக்கறை கொள்ளவில்லை. மீண்டும் நீங்கள் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை வெற்றிபெற விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறீர்கள். உங்களை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் திரும்பியும் பார்க்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான்... **** கிடந்த சம்பந்தனும், சுமந்திரனும்...🏃🏿‍♂️
வீதியில் இறங்கி... பீ ரங்கி...  பிரச்சாரம்,  பண்ணுகிறார்கள் போலுள்ளது. tw_yum:

மாவை... *****, தலை குனிந்து கொண்டு வருவார். 💪🏿
வாசலில்... வைத்தே, திருப்பி அனுப்பி விடுங்கள். 👉🏿

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

ஐக்கிய தேசிய கட்சிக்கே அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு. அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ரனிலுக்கு 2005ல் நீங்கள் வாக்களிக்க மறுத்ததால்தான் உங்கள் உறவுகள் காணாமல் போனது பற்றி அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அக்கறை கொள்ளவில்லை. மீண்டும் நீங்கள் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை வெற்றிபெற விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறீர்கள். உங்களை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் திரும்பியும் பார்க்கா.

நிர்வாகம் சும்மா சும்மா எனது கருத்துகளை நீக்குவதை விடுத்து 4 விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த காணாமல் போனோரின் உறவுகள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க கேட்பதை நான் ஆதரிக்கவில்லை.

ஆனால் அதற்காக 2005 தேர்தலில் ரணிலுக்கு வாக்களிக்க மறுத்ததால் தான் உறவுகள் காணாமல் போனது பற்றி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவை ஏதோ அமைதிக்கொடை வள்ளல்கள், மக்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் என்பது போன்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது.

அமெரிக்கா 2002 இல் கொத்துக்குண்டுகள் வாங்க/பயன்படுத்த இலங்கைக்கு ஆலோசனை வழங்க என்ன காரணம் என நான் ஜூட்டை கேட்டேன்.

ஏற்கனவே இன்னொரு திரியில் இதை இணைத்திருந்தேன்.

The recommendation that the Sri Lanka Air Force (SLAF) acquire Cluster Bomb Units (CBUs) for ‘unarmoured area targets’ was made by USPACOM (United States Pacific Command) assessment team following a study conducted during Sept 12-2002 to Oct 24, 2002. USPACOM was acting on the instructions of the Department of Defence in the wake of Prime Minister Wickremesinghe seeking the intervention of US President George W. Bush.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

உங்கள் விளக்கத்துக்கு நன்றி லாரா கூத்தமைப்புக்கு சளி பிடிச்சால் செம்புகளுக்கு தும்மல் வருகிறது இயற்கைதானே 😎

Link to comment
Share on other sites

கோத்தா வவுனியாவில கூட்டம் நடத்தினவன் அப்ப எங்க தூங்கி கொண்டு இருந்தவயள்.

இதே ஆர்ப்பாட்டத்தை அங்கு செய்திருக்க் முடியாதா??

இதிலிருந்தே தெரிய வேணும் இவர்களை ஏவி விட்டது யார் என்று....!!!!

Link to comment
Share on other sites

5 hours ago, Dash said:

கோத்தா வவுனியாவில கூட்டம் நடத்தினவன் அப்ப எங்க தூங்கி கொண்டு இருந்தவயள்.

இதே ஆர்ப்பாட்டத்தை அங்கு செய்திருக்க் முடியாதா??

இதிலிருந்தே தெரிய வேணும் இவர்களை ஏவி விட்டது யார் என்று....!!!!

கோத்தா கூட்டம் நடத்திய போது அங்கு ஆர்ப்பாட்டம் செய்தார்களா என தெரியாது. ஆனால் அதற்கு முன்னைய போராட்டத்தில் கோத்தாவுக்கு எதிரான பதாகையும் வைத்திருப்பதை பார்த்தேன்.

EHsLqFnVUAA8ZC0?format=jpg&name=large

On 11/8/2019 at 3:50 PM, ampanai said:

சஜித்தை ஆதரிப்பதற்கு தலா 30 கோடி ரூபா கூட்டமைப்பு எம்பிக்கள் பெற்றுள்ளார்கள்.

TNA MPs granted Rs 300mn each for being friendly with govt - Rajitha

November 6, 2019

Health Minister Dr. Rajitha Senaratne has revealed that the northern MPs, backing the government, were granted Rs 300 mn each to spend on their electorates.

A health ministry statement, issued yesterday, quoted Dr. Senaratne as having told a public rally in Manipay, Jaffna, that no previous government had allocated such a big amount for an electorate.

The four-party Tamil National Alliance (TNA) secured 16 seats at the last parliamentary poll in August 2015.

Minister Senaratne addressed a series of meetings in the Jaffna peninsula in support of New Democratic Front (NDF) presidential candidate Sajith Premadasa. Prime Minister Ranil Wickremesinghe led the group of UNP speakers.

Dr. Senaratne said that the Northern Province would experience an accelerated development following the Nov 16 presidential poll because the President and the Prime Minister would be from the same political party.

Dr. Senaratne emphasised that a military rule couldn’t be allowed under any circumstances.

Tamils couldn’t solve problems because those who represented them in Parliament were never a part of the government for a long time. The Ministry quoted Dr. Senaratne as having said though the TNA was not in the government, funds had been made available because the party was friendly with the current dispensation. (SF)

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=213362

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

முதலாவது கேள்வி இரண்டு குழுவும் ஒன்றா!!!

மற்றயது இவர்கள் கோத்தாவுக்கு எதிராக பதாகை வைத்திருந்தாலும் அது தம்மை எல்லாரையும் எதிர்ப்பவர்கள் போல் காட்டி கொள்ளவே; இவர்களது குறி கோத்தாவுக்கு வாக்குகள் பெற்று கொடுப்பது அல்ல சஜித்துக்கு வாக்கு விழாமல் தடுப்பது ஆகும்.

அப்படி தமிழர் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் தடுத்தாலே கோத்தவை வெல்ல வைக்க முடியும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

இரண்டுமே வவுனியா, இரண்டுமே ஒரே குழுவினர். ஆனால் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒரே ஆட்களே வருவார்கள் என்றில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

மற்றயது இவர்கள் கோத்தாவுக்கு எதிராக பதாகை வைத்திருந்தாலும் அது தம்மை எல்லாரையும் எதிர்ப்பவர்கள் போல் காட்டி கொள்ளவே; இவர்களது குறி கோத்தாவுக்கு வாக்குகள் பெற்று கொடுப்பது அல்ல சஜித்துக்கு வாக்கு விழாமல் தடுப்பது ஆகும்.

அப்படி தமிழர் வாக்குகளை சஜித்துக்கு விழாமல் தடுத்தாலே கோத்தவை வெல்ல வைக்க முடியும்.

இவர்கள் வைத்திருக்கும் பதாகைகளிலுள்ள வரிகளை இவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து வழிநடத்துவோர் அதை செய்திருப்பார்கள். அவர்கள் நோக்கம் கோத்தாவை வெல்ல வைப்பதாக கூட இருக்கலாம். இவர்கள் கூட்டமைப்பிலுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் சொற்படி நடக்கலாம் என நினைக்கிறேன். 

இதில் பங்கு பெறுவோரில் ஒரு சிலரின் ஒரு சில  (செருப்பால் அடிக்க செல்வது போன்ற) நடவடிக்கைகளை வைத்து அனைவரையும் அதே போல் நினைக்க முடியாது. சிலர் அமைதியாக நின்று விட்டு செல்பவர்கள்.

Link to comment
Share on other sites

18 hours ago, பெருமாள் said:

உங்கள் விளக்கத்துக்கு நன்றி லாரா கூத்தமைப்புக்கு சளி பிடிச்சால் செம்புகளுக்கு தும்மல் வருகிறது இயற்கைதானே 😎

இந்த பெருமாளுக்கு செம்பும், தும்மலும், சளியும் தவிர வேறு எதுவும் புரியாதா? 😀

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பிடித்திருப்பது அமெரிக்க கொடி, அது கூட தெரியாத இவரெல்லாம் கருத்து எழுதும் களம் யாழ் களம்! எழுத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருப்பதும் நல்லது தான். எங்கள் மத்தியில் இப்படியானவர்களும் இருப்பதை அதனால் தான் நாம் அறிந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

21 hours ago, Lara said:

அமெரிக்கா 2002 இல் கொத்துக்குண்டுகள் வாங்க/பயன்படுத்த இலங்கைக்கு ஆலோசனை வழங்க என்ன காரணம் என நான் ஜூட்டை கேட்டேன்.

ஏற்கனவே இன்னொரு திரியில் இதை இணைத்திருந்தேன்.

The recommendation that the Sri Lanka Air Force (SLAF) acquire Cluster Bomb Units (CBUs) for ‘unarmoured area targets’ was made by USPACOM (United States Pacific Command) assessment team following a study conducted during Sept 12-2002 to Oct 24, 2002. USPACOM was acting on the instructions of the Department of Defence in the wake of Prime Minister Wickremesinghe seeking the intervention of US President George W. Bush.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664

இணைப்புக்கும், தகவலுக்கும் நன்றி லாரா. உங்கள் இணைப்பிலும், தகவலிலும் நீங்கள் கேட்ட காரணம் தரப்பட்டிருப்பதை படித்திருப்பீர்களே? பிரதமர் ரனில் கேட்டுக் கொண்டதற்காக இந்த ஆலோசனை அமெரிக்க அரசின் ஆய்வின் பின் வழங்கப்பட்டது. கிபிர் விமானங்களின் குண்டுகள் இலக்குகளை அடையாததனால் பிரதமர் ரனில் அமெரிக்காவின் ஆலோசனையை நாடினார். நான் ஏற்கனவே குறிப்பிட்டதன்படி, பிரதமர் ரனிலும், அவரின் தெரிவான சஜித்தும் அமெரிக்காவின் விருப்பம். அதற்கு எதிராக செயற்படுபவர்கள் அமெரிக்க கொடியை பிடித்துக் கொண்டு அமெரிக்காவின் ஆதரவை கேட்பது பயனற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இந்த பெருமாளுக்கு செம்பும், தும்மலும், சளியும் தவிர வேறு எதுவும் புரியாதா? 😀

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பிடித்திருப்பது அமெரிக்க கொடி, அது கூட தெரியாத இவரெல்லாம் கருத்து எழுதும் களம் யாழ் களம்! எழுத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருப்பதும் நல்லது தான். எங்கள் மத்தியில் இப்படியானவர்களும் இருப்பதை அதனால் தான் நாம் அறிந்து கொள்கிறோம்.

பாஸ் உங்க அறிவுக்கு நாங்க கிட்டவரமாட்டம் பள்ளிக்கூடம் போகாத கூட்டம் நாங்கள் ஆனால் பாருங்கோ இலங்கை அரசியலில் யார் வந்தும் தமிழனுக்கு விடிவில்லை என்பது நிதர்சனம் ஆனால் பாருங்கோ உங்க கூட்டமைப்பு மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போல் அங்கு அடிபட்டு நொந்து போன தமிழ் சனத்தை ஏமாத்துவது சரிஇல்லை அப்படி சுத்து மாத்து பண்ணும் கூட்டத்துக்கு நீங்க செம்படிப்பது நல்லதா கூடாதா என்று உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க மற்றபடி அங்குள்ள சனம்தான் கொடி பிடிக்குதுகள் செருப்பை தூக்கி கூத்தமைப்பை நோக்கி எறிகினம் தமிழ் சனத்தை ஏத்தி குளிர் காயும் கூட்டம் ஏன் கூட்டமைப்பு வெல்கிற நேரம் வரவில்லை ஏனெனில் நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாய் நம்பினம் இவ்வளவு காலத்தில் ஆக்க பூர்வமாய் தமிழனுக்கு செய்த வேலை என்ன ? உங்களுக்கு மனசாட்சி ஒன்று இருக்குமானால் இன்றுடன் செம்படிப்பதை நிப்பாட்டுவீங்கள் ஆனால் உங்கள்  படிச்ச கெத்து விடாது பாருங்கோ அதுதான் நாங்க அழிந்து இப்படி நாடு நாடாய் அலைவதுக்கு காரணம் .மொத்தத்தில் அங்கு எஞ்சியுள்ள சனம் குழம்பி விட்டுது இப்படியே போனால் சிதறு தேங்காய் போல் அல்ல இப்பவே அங்கு அப்படித்தான் ஒன்றுமே செய்யாத கூத்தமைப்பை நம்புவதை விட வேலை சாப்பாடு தரும் சிங்களவன் மேலானவன் என்று நம்பிவிடுங்கள் அது தேவையா ?

(சிங்களத்துக்கு சார்பாக உலகம் முழுக்க ஓடி ஓடி யுத்த குற்ற விசாரணையை இல்லாமல் செய்தவர் உங்கள் சுத்துமாத்து சுமத்திரன் அதுக்கு அவர் சொன்ன விளக்கம் படு பிரிசித்தமானது அது உங்கள் காதுக்கும் வந்து இருக்கும் அதன் பின்பும் செம்பு தூக்குபவன் முட்டாள்  உங்களுக்கு படிப்பு இருக்கு எங்களுக்கு அது இல்லை ஆனால் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறம் )

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோற்றையும் உப்பையும் சாப்பிட்டால் ஆயுள் வேகமாக முடிந்துவிடும். இவை இரண்டையும் இவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

இணைப்புக்கும், தகவலுக்கும் நன்றி லாரா. உங்கள் இணைப்பிலும், தகவலிலும் நீங்கள் கேட்ட காரணம் தரப்பட்டிருப்பதை படித்திருப்பீர்களே? பிரதமர் ரனில் கேட்டுக் கொண்டதற்காக இந்த ஆலோசனை அமெரிக்க அரசின் ஆய்வின் பின் வழங்கப்பட்டது. கிபிர் விமானங்களின் குண்டுகள் இலக்குகளை அடையாததனால் பிரதமர் ரனில் அமெரிக்காவின் ஆலோசனையை நாடினார்.

தமிழர்களை முன்னிட்டு காரணம் கேட்டேன்.

2005 தேர்தல் புறக்கணிப்பிற்கு முன்பே புலிகளையும் மக்களையும் கொன்று குவிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதன் ஒரு அங்கம் தான் கொத்துக்குண்டுகளை வாங்க/பயன்படுத்த அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது. அதே போல் கருணா பிளவையும் திட்டமிட்டு அரங்கேற்றியது.

2005 தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காமல் வாக்களித்து ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் போர் நடந்து புலிகள் அழிக்கப்பட்டு மக்களும் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகிந்த & கோவால் ஏற்படுத்தப்பட்ட அழிவை விட அழிவு குறைவாக இருந்திருக்கும்.

மகிந்த & கோ பல்வேறு நாடுகளையும் ஒரே நேரத்தில் கையாண்டதாலேயே அதனால் இப்படியொரு இனவழிப்பை செய்ய முடிந்தது. 2007 இல் அமெரிக்காவுடன் ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தில் கையெழுத்திட்டது. இந்திய இராணுவத்தினரும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து போரிட்ட படங்களும் முன்னர் வெளிவந்தன. இன்னும் பல ஒன்றுக்கொன்று எதிரான நாடுகளிடமிருந்து ஒரே நேரத்தில் உதவிகளை பெற்றது. இப்படி பலவற்றை கூறலாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

நான் ஏற்கனவே குறிப்பிட்டதன்படி, பிரதமர் ரனிலும், அவரின் தெரிவான சஜித்தும் அமெரிக்காவின் விருப்பம். அதற்கு எதிராக செயற்படுபவர்கள் அமெரிக்க கொடியை பிடித்துக் கொண்டு அமெரிக்காவின் ஆதரவை கேட்பது பயனற்றது.

இங்கு அமெரிக்காவின் ஆதரவை கேட்பவர்களுக்கு அமெரிக்காவும் சேர்ந்து தான் தமிழர்களை கொன்று குவித்தது என தெரிந்திருக்காது.

ஐ.நா காரரும் மக்கள் வெளியேற வேண்டாம் என கெஞ்ச கெஞ்ச மக்களை கைவிட்டு வெளியேறியவர்கள். மக்களை கொன்று குவிக்க வசதியாக.

ஐ.நா சார்பில் விஜய் நம்பியார் கொடுத்த போலி வாக்குறுதியை நம்பி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்து கொன்றது.

ஆனாலும் சர்வதேசம் தமக்கு உதவி செய்யும் என இன்னும் பலர் நம்புகிறார்கள். அமெரிக்காவின் கொடியை பிடித்து மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை.

அமெரிக்கா MCC மூலம் கிழக்கு தமிழர்களை அழிக்கப்போகிறது. காப்பாற்ற முடிந்தால் காப்பாற்றுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோற்றையும் உப்பையும் சாப்பிட்டால் ஆயுள் வேகமாக முடிந்துவிடும். இவை இரண்டையும் இவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்.

முசலுக்கு மூணு கால் என்று உங்கள் போன்றவர்கள் சொன்னால் நம்பத்தான் வேணும் .🎃😁

 உங்க பைபிளில் உப்பை சிறப்பாக சொல்லியுள்ளார்கள் . பைபிளில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது”. ஆம் நண்பர்களே நாம் நம்முடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை,சிறந்த திறமைகளை இழக்காதவரைக்கும் நாம் இந்த மண்ணில் போற்றப்படுவோம். எப்படி உப்பானது தன்னுடைய சுவை குன்றி சாரமற்றுப் போனால் மீண்டும் அதன் சுவை கொண்டுவருவது அரிதோ, அது போலவே நாம் நம்முடைய மாட்சிமையை இழந்தால் இந்த உலகத்தில் ஒதுக்கப்படுவோம் ஆமென் . இன்று நீங்கள் சொல்லும் இந்த வாசகம் சோறையும் உப்பையும் தின்றால் ஆயுள் முடியும் எனும் வாதம் நாளை முடிவுகள் மாற்றாலாம் இல்லை இன்னும் மோசமாகலாம் .ஆனால் அதுக்காக இவ்வளவு நாளும் உங்க அடுப்படியில் உப்பு போத்தில் இல்லாமல் சமையல் நடந்து இருக்கு போல் உள்ளது 😁🤣

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

உங்க பைபிளில் உப்பை சிறப்பாக சொல்லியுள்ளார்கள் .🤣

பைபிளையும் என்னுடையதாக்கி விட்டீர்களா? 😁. ரிக் வேதத்தையும் சிவபுராணத்தியும், தொல்காப்பியத்தையும் நான் எழுதியதாக சொல்லி எனக்கு ஒரு கோவிலும் கட்டி விடலாமே பெருமாள்? 

7 hours ago, Lara said:

ஆனாலும் சர்வதேசம் தமக்கு உதவி செய்யும் என இன்னும் பலர் நம்புகிறார்கள். அமெரிக்காவின் கொடியை பிடித்து மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை.

அமெரிக்கா MCC மூலம் கிழக்கு தமிழர்களை அழிக்கப்போகிறது. காப்பாற்ற முடிந்தால் காப்பாற்றுங்கள்.

அமெரிக்கா எனது நாடு லாரா. அமெரிக்க நலன்கள், எனக்கு நன்மை தருவன. கிழக்கு தமிழர்கள் எனது அமெரிக்க நலன்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் எம்முடன் ஒத்துழைத்து தங்களை தாமே காப்பாற்றி கொள்ள முடியும். 

Link to comment
Share on other sites

8 hours ago, Lara said:

தமிழர்களை முன்னிட்டு காரணம் கேட்டேன்.

2005 தேர்தல் புறக்கணிப்பிற்கு முன்பே புலிகளையும் மக்களையும் கொன்று குவிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதன் ஒரு அங்கம் தான் கொத்துக்குண்டுகளை வாங்க/பயன்படுத்த அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது.

நீங்கள் தந்த இணைப்பில் இப்படி கொத்துக்குண்டுகளை வாங்க/பயன்படுத்த அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது புலிகளையும் மக்களையும் கொன்று குவிப்பதற்கான திட்டம் என்றோ, அப்படி பொருள்படவோ எதுவும் இல்லையே? இது பற்றிய தகவலை கொண்ட இணைப்பை தருவீர்களா?

Link to comment
Share on other sites

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பு - கல்குடாவிலிருந்து நேரலை

Link to comment
Share on other sites

6 hours ago, Jude said:

அமெரிக்கா எனது நாடு லாரா. அமெரிக்க நலன்கள், எனக்கு நன்மை தருவன. கிழக்கு தமிழர்கள் எனது அமெரிக்க நலன்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் எம்முடன் ஒத்துழைத்து தங்களை தாமே காப்பாற்றி கொள்ள முடியும். 

கிழக்கு தமிழர்கள் என்ன செய்ய வேண்டும். அதனால் எவ்வாறு தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்?

கிழக்கு தமிழர்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே நான் விரும்புவது. ஆனால் உங்களை போல் அமெரிக்கா பற்றிய புரிதல் இல்லாமல் அதை கூறவில்லை.

அமெரிக்காவுக்கு கோத்தாவை அதிகம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

5 minutes ago, Lara said:

கிழக்கு தமிழர்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே நான் விரும்புவதும்.

அமெரிக்காவுக்கு கோத்தாவை அதிகம் பிடிக்கும் என்று நான் கருதவில்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, Jude said:

நீங்கள் தந்த இணைப்பில் இப்படி கொத்துக்குண்டுகளை வாங்க/பயன்படுத்த அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது புலிகளையும் மக்களையும் கொன்று குவிப்பதற்கான திட்டம் என்றோ, அப்படி பொருள்படவோ எதுவும் இல்லையே? இது பற்றிய தகவலை கொண்ட இணைப்பை தருவீர்களா?

The recommendation that the Sri Lanka Air Force (SLAF) acquire Cluster Bomb Units (CBUs) for ‘unarmoured area targets’ was made by USPACOM (United States Pacific Command) assessment team following a study conducted during Sept 12-2002 to Oct 24, 2002.

மேலுள்ள செய்திக்கும் கீழுள்ள செய்திகளுக்கும் தொடர்புள்ளது தெரிகிறதா?

Sri Lanka seeks cluster bombs, MBRLs, sea mines - report.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=18028

NESoHR: 16 cluster bombs dropped on refugee camp

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=27644

The photographic evidence provided to the Guardian depicts cluster bombs uncovered by de-mining teams in parts of the country close to sites where fighting took place in late 2008 and early 2009.

The material is accompanied by the testimony of former de-miners, some of whom claim they identified munitions within government-declared “no fire zones” in which about 300,000 people were told to gather for their safety during the war’s denouement.

https://www.theguardian.com/world/2016/jun/20/cluster-bombs-used-sri-lanka-civil-war-leaked-photos-suggest

இப்படி இன்னும் பல செய்திகளை இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

16 minutes ago, Lara said:

unarmoured area targets என்றால் குண்டு துளைக்க முடியாத கவச பாதுகாப்பற்ற பிரதேச இலக்குகள் என்று தானே அர்த்தம்?  இவ்வாறான இராணுவ இலக்குகளையே அமெரிக்க ஆலோசனை குறிப்பிடுகின்றதேயன்றி பொதுமக்களை அல்ல. பொதுமக்களுக்கு குண்டு துளைக்க முடியாத கவச பாதுகாப்பு எங்கும் இருப்பதில்லை. இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது கொத்து குண்டுகளை போட்டது. அதற்காக அமெரிக்க அரசே மக்கள் மீது குண்டு போடுமாறு ஆலோசனை வழங்கியது என்று கூறுவது, தமிழ் மக்களை என்றும் அமெரிக்க எதிரிகளாக வைத்து இருக்கவே உதவும். இதனால் பாதகம் அமெரிக்காவுக்கு அல்ல, ஈழத்தமிழருக்கே பாதகம்.

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

unarmoured area targets என்றால் குண்டு துளைக்க முடியாத கவச பாதுகாப்பற்ற பிரதேச இலக்குகள் என்று தானே அர்த்தம்?  இவ்வாறான இராணுவ இலக்குகளையே அமெரிக்க ஆலோசனை குறிப்பிடுகின்றதேயன்றி பொதுமக்களை அல்ல. பொதுமக்களுக்கு குண்டு துளைக்க முடியாத கவச பாதுகாப்பு எங்கும் இருப்பதில்லை.

நீங்கள் அமெரிக்க ஆதரவு மனநிலையிலிருந்து நோக்கினால் இவ்வாறு தான் விளங்கிக்கொள்வீர்கள்.

Unarmoured area targets என்ற பெயரில் civilian targets குறிவைக்கப்பட்டுள்ளது.

5 hours ago, Jude said:

அதற்காக அமெரிக்க அரசே மக்கள் மீது குண்டு போடுமாறு ஆலோசனை வழங்கியது என்று கூறுவது, தமிழ் மக்களை என்றும் அமெரிக்க எதிரிகளாக வைத்து இருக்கவே உதவும். இதனால் பாதகம் அமெரிக்காவுக்கு அல்ல, ஈழத்தமிழருக்கே பாதகம்.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அமெரிக்கா மக்கள் மீது கொத்து குண்டுகள் போட ஆலோசனை வழங்கியது உண்மை.

இதில் கோத்தாவுக்கும் Pentagon அதிகாரிகளுக்கும் இருந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=36980

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.