Jump to content

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்..! - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

 

supremecourt.jpg

 

புது தில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும்.

அந்த தீர்ப்பில், அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த அயோத்தி ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான முக்கியம்சமாக உள்ளது.

வழக்கின் பின்னணி:

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.

அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவாா்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதைத் தொடா்ந்து, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகின. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தினமணி

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.