கிருபன்

அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக தீர்ப்பு!

Recommended Posts

அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக தீர்ப்பு!

 

 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், 3 மாதத்துக்குள் இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அமர்வு அளித்த தீர்ப்பில்,

“ 1934 ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் 1949 இல் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள் முற்றம் இருந்திருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் 1857 க்கு முன்னர், இந்துக்கள் உள் முற்றத்தில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. 1857 ஆம் ஆண்டில் வெளி மற்றும் உள் முற்றத்தை பிரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ராமரின் பிறப்பிடம் மசூதியின் உள் முற்றத்தில் இருப்பதாக இந்துக்கள் எப்போதும் நம்பினர்.

ராம் சபுதாரா, கர்ப் கிர்ஜாவில் இந்துக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, சர்ச்சைக்குரிய சொத்தின் மீது முஸ்லிம்களுக்கு உடைமை உரிமையை நிறுவ முடியவில்லை.

சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் சன்னி வக்ஃப் வாரியத்தால் உடைமைகளை நிறுவ முடியவில்லை. 1949 க்குப் பிறகு அந்த இடத்தில் நமாஸ் செய்யப்படவில்லை.

325 ஆண்டுகளாக, மசூதி கட்டப்பட்டதிலிருந்து 1857 வரை, இந்துக்களை விலக்கி சர்ச்சைக்குரிய கட்டமைப்பில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை . 1992 ல் மசூதியை தகர்த்தது சட்ட விரோதமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்து வகையான நம்பிக்கைகளும் அரசியலமைப்பிற்கு சமம்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து மதத்தினருக்கே கொடுக்கப்படுகிறது. அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் அமைப்பினரிடம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறது.

இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதியாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மாநில முதல்வர்களோடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அயோத்தியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றன.

 

https://minnambalam.com/k/2019/11/09/85/Ayodhya-sc-Verdict-ram-temple-in-ayothya-alternate-land-for-muslims

ராமஜென்மபூமி- பாபர் மசூதி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

23.jpg

 

அயோத்தி சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) முக்கியத் தீர்ப்பை வழங்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசன அமர்வில் இருக்கும் மற்ற நான்கு நீதிபதிகளுடன் நேற்று (நவம்பர் 😎 ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் பிறகு இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதற்குள் தீர்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டது. எனினும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாகக் கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது? என்ற 27 ஆண்டுகள் கேள்விக்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.

வரலாறு சொல்வது என்ன

1528-1529ஆம் ஆண்டில் அப்போதைய முகலாய பேரரசர் பாபரால் ஒரு மசூதி கட்டப்பட்டது, எனவே இது பாபர் மசூதி என்று அழைக்கப்பட்டது.

1850ல் இங்கு முதல் மதக் கலவரம் ஏற்படுகிறது. இந்து தரப்பு அந்த இடத்தை கையகப்படுத்த முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அப்போதைய காலனித்துவ ஆட்சியாளர்களால் அது மறுக்கப்பட்டது..

1946ல் இந்து மகாசபாவின் ஒரு பிரிவான அகில் பாரதிய ராமாயண மகா சபா, சர்ச்சைக்குரிய இடத்துக்காக ஒரு போராட்டத்தைத் தொடங்கியது.

1949- பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இது முஸ்லீம் தரப்பிலிருந்து ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்தது, இதையடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்குச் சென்று சிவில் வழக்கு தாக்கல் செய்தனர். அப்போது மாநில அரசு அவ்விடத்தை சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவித்து, அந்த இடத்தின் கதவுகளை மூடியது.

1950- பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்து தரப்பினரால் இரு வழக்குகள் தொடரப்படுகின்றன. அதில் ராமரின் சிலைகளை வணங்க அனுமதி கோரப்பட்டது.

1959ல் அந்த இடத்துக்கு நிர்மோகி அகாராவும் உரிமை கோரி மனுத் தாக்கல் செய்கிறது.

1961 – அங்குள்ள சிலைகளை அகற்றக் கோரி சன்னி வக்பு வாரியம் வழக்குத் தொடருகிறது.

1986- மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பூட்டு அகற்றப்பட்டு, இந்துக்கள் வழிபடுவதற்காகத் திறக்கப்பட்டது.

1992- டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய இடம் குறித்து விசாரிக்க மத்திய அரசு லிபர்ஹான் ஆணையத்தை அமைத்தது.

2009 – இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையில் இடம் பெற்று இருந்த சரத்துக்கள் வெளியாகவில்லை.

2010 - செப்டம்பரில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ராம் லீலாவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், சன்னி வக்பு அமைப்புக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம், நிர்மோஹி அகாராவுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் என்று பிரிக்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மூவர் குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கு ஆரம்ப நிலைக்கே சென்றது.

23b.jpg

சர்ச்சைக்குரிய இடம் குறித்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 40 நாட்களாக விசாரணை நடத்தியது.

முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மிரட்டல், நீதிமன்றத்திலேயே அயோத்தி தொடர்பான புத்தகத்தைக் கிழித்தது என 40 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்ற வாதங்கள் கடந்த மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் இல்லத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட முக்கியமான கூட்டம் நடைபெற்றது. அயோத்தி தீர்ப்பை ஒரு வெற்றியாக அதிகமாக கொண்டாடுவதோ, தோல்வியாக கருதி விரக்தியடைவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருந்தார்.

உபி மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அம்மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோருடன் தலைமை நீதிபதி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி

தீர்ப்பு வழங்கவுள்ளதை அடுத்து உபியில் இன்று முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,000 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உபியை போன்று கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

23c.jpg

தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் 15,000 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதிகள், கோயில்கள் என முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வேண்டுகோள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதனை எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினரின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல், தேசத்தின் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு அனைவரும் மேலும் வலுசேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

https://minnambalam.com/k/2019/11/09/23/supreme-court-verdict-in-ayodhya-temple-mosque-today

Share this post


Link to post
Share on other sites

மோடியின்ர ஆட்சியில் தீர்ப்பு வேற மாதிரி வரும் .. என்டு நினைச்ச புள்ளிங்கோ எல்லாம் கைய தூக்குங்கோ..☺️

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அடுத்தது எந்த பள்ளிவாயல் ???? 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மோடியின்ர ஆட்சியில் தீர்ப்பு வேற மாதிரி வரும் .. என்டு நினைச்ச புள்ளிங்கோ எல்லாம் கைய தூக்குங்கோ..☺️

தீர்ப்பை வேறு விதமாக கூறி இருந்தால், இரத்த ஆறு ஓடி இருக்கும் !

''ராம் பக்தியோ ரஹீம் பக்தியோ, நாம் அனைவரும் தேசம் மீதான பக்தி உணர்வை வலிமைப்படுத்த வேண்டிய சமயம் இது'' என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Share this post


Link to post
Share on other sites

அயோத்தி தீர்ப்பு: முக்கிய சான்றை மறைக்க தொல்லியல் துறை முயன்றது - பேராசிரியர் டி.என். ஜா

பாபர் மசூதிபடத்தின் காப்புரிமைK K MUHAMMED

பேராசிரியர் டி.என். ஜா பிரபல வரலாற்றாளர். இன்று வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள "ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்றாளர்களின் அறிக்கை" என்ற அறிக்கையை எழுதிய வரலாற்றாளர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்.

போராசிரியர் சூரஜ் பான், அர்தர் அலி, ஆர். எஸ். ஷர்மா மற்றும் டி.என்.ஜா ஆகிய அந்த நான்கு சுயாதீன வராலாற்றாளர்களும் தொல்லியல் சான்றுகளில் தீவிர ஆய்வு நடத்தி, பாபர் மசூதிக்கு அடியில் கட்டப்பட்டிருந்தது இந்து கோயில் அல்ல என்று அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அது பற்றி டிஎன் ஜா என்ன சொல்கிறார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள்படத்தின் காப்புரிமைKK MUHAMMED Image captionசர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள்

கேள்வி: இந்த தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த தீர்ப்பு இந்து மத நம்பிக்கைக்கு முதன்மை அளிக்கிறது. குறைபாடுடைய தொல்லியல் ஆய்வை நம்பி இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

கேள்வி: நீங்கள் ஆய்வு செய்து உண்மை கண்டறிந்த "ராம் ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித்: தேசத்திற்கு வரலாற்றாளர்கள் அறிக்கை"யின் முடிவு எதுவாக இருந்தது?

பதில்: நாங்கள் எங்ளுக்கு கிடைத்த எல்லா சான்றுகளையும் கவனத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், 1992ம் ஆண்டு அரசிடம் இந்த அறிக்கையை சமர்பித்தோம். தீவிர ஆய்வுக்குப் பின்னர், இந்த மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருக்கவில்லை என்று அதில் தெரிவித்திருந்தோம்.

சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுபடத்தின் காப்புரிமைKK MUHAMMED Image captionசர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு

கேள்வி: இந்திய தொல்லியல் துறை (ஏஏஸ்ஐ) எப்படி பங்காற்றி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: அயோத்தி சர்ச்சையில் இந்திய தொல்லியல் துறை நிச்சயமில்லாத தகவல்களை அளித்து பங்காற்றியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், அயோத்தியில் கிடைத்த தொல் பொருட்களை நாங்கள் பரிசோதனை செய்ய பழைய கோட்டைக்கு சென்றபோது, மிகவும் முக்கிய சான்றுகள் இருந்த அகழி 4-ன் தளக் குறிப்பு புத்தகத்தை தொல்லியல் துறை எங்களுக்கு காட்ட மறுத்தது.

சான்றுகளை மறைப்பதை இது தெளிவாக காட்டியது.

அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட சில பொருட்கள்படத்தின் காப்புரிமைKK MUHAMMED

பாபர் மசூதியை இடித்த பின்னர், முன் தீர்மானத்தோடு இந்திய தொல்லியல் ஆய்வு துறை அகழ்வாய்வு நடத்தியது. கோயில் இருந்தது என்ற கருத்துக்கு முரணாக இருந்த சான்றுகளை அது மறைத்து விட்டது.

இந்திய தொல்லியல் துறை ஓரிடத்தை அகழ்வாய்வு செய்யும்போது அறிவியல்பூர்வ விதிகளை கடைபிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: இந்தியாவுக்கு அயோத்தி தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

பதில்: இந்த தீர்ப்பு பொரும்பான்மைவாதத்துக்கு தூபம் போடுகிறது. இது நமது நாட்டுக்கு நல்லதல்ல.

https://www.bbc.com/tamil/india-50358748

Share this post


Link to post
Share on other sites

அயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 

முஸ்லிம்களுக்கு மாற்றீடாக வேறு நிலம் வழங்கப்படும்
Hindu devotees celebrate after the Supreme Court's verdict [Danish Siddiqui/Reuters]
தீர்ப்பைக் கொண்டாடும் இந்துக்கள் படம்: டானிஷ் சித்திக் / ராய்ட்டர்ஸ்

அயோத்தியிலுள்ள பிரச்சினைக்குரிய பாபர் மசூதியிருக்கும் நிலம் இந்துக்களுக்குரியது என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகச், சற்று முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முஸ்லிம்களுக்கு, மாற்றீடாக உததரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதே வேளை பிரச்சினைக்குரிய நிலத்தில், இந்துக்கள் தெய்வமாகக் கருதும் இராமருக்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையொன்றை அரசு உருவாக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தியில்லை எனினும் அதை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் கலந்தாலோசித்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கவிருக்கிறோம்” என சுனி வாக்ஃப் சபையின் வழக்கறிஞர் சஃபார்யப் ஜிலானி என்டிரிவி செய்தி ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியின்போது தெரிவித்தார்.images-2.jpg

பாபர் மசூதி

தீர்ப்பு ‘பிரச்சினைக்குரியது’ என நல்சார் சட்டத்துறைப் பலகலைக்கழக உப வேந்தர் ஃபைசான் முஸ்தாபா கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இராமர் இங்கு தான் பிறந்தார் என்று இந்துக்கள் நம்பினால் அதை நாம் மீற முடியாது” என நீதிபதிகள் கூறியிருந்ததாகவும் மத நம்பிக்கைக்கு, சட்டத்திற்கும் மேலான இடம் வழங்கப்பட்டது புதிராகவே இருக்கிறது. நீதிபதிகள் தங்களால் இயன்றவற்றைச் செய்திருக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத்தான் வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிலைக் கட்டும் பணியை நிர்வகிக்க அரசினால் மூன்று மாதங்களுக்குள் ஒரு அறங்காவலர் சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான மாற்றிடம் மத்திய அல்லது மாநில அரசுகளினால் தீர்மானிக்கப்படும்.

இப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இரு சமூகங்களுக்குமான சமாதானத்தைப் பேணும் நோக்கத்துடன் முஸ்லிம் புத்திமான்கள் மாற்றிடம் பற்றிய ஆலோசனையை வழங்கியிருந்தனர் என அறியப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட, இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் எனவும், முதலாம் முகலாய சக்கரவர்த்தி பாபர், ராமர் கோவிலை இடித்துவிட்டு அதன் மேல் தான் மசூதியைக் கட்டினார் எனவும் நன்புகிறார்கள்.

1949 இல் இந்துக்கள் ராமரின் சிலைகளை இங்கு வைக்கும் வரை, பல தலைமுறைகளாக அங்கு வழிபட்டு வந்ததாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

460 வருடப் பழமை வாய்ந்த மசூதி 1992 இல் இந்துத் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக் கலவரத்தில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லிம்கள், கொல்லப்பட்டிருந்தார்கள்.

பாபர் மசூதி வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை, அங்கு ஏற்கெனவே ஒரு கட்டிடம் இருந்தது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கீழ் நீதிமன்றத் தீர்ப்பின்போது, மொத்த நிலத்தின் (2.77 ஏக்கர்கள்) மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கும், மிகுதி முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது. இதை இரு பகுதியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் போடியும், முஸ்லிம் அமைப்புக்களும் தமது ஆதரவாளர்களை அமைதியைப் பேணும்படி கேட்டுக்கொண்டனர். பல்லாயிரக் கணக்கான பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். சில நகரங்களில் இணையத் தொடர்புகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

ராமர் பிறந்த நிலத்தில் அவருடைய கோவில் மீள நிர்மாணிக்கப்படவேண்டுமெனப் பல வருடங்களாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்தது. இத் தீர்ப்பு பிரதமர் மோடிக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இவ் விடயத்தைப் பேசித்தீர்ப்பதற்கு பிரித்தானிய அரசு மற்றும் தலாய் லாமா ஆகியோரும் முன்னர் முயற்சிதிருந்தனர்.

https://marumoli.com/அயோத்தி-இந்துக்களுக்குர/?fbclid=IwAR0LzMQyTc-UtrX2nLaInwFrQG0x09i3YOTXgwwP-OXLQ1WfyhzGRuK3xvY

Share this post


Link to post
Share on other sites

தென் ஆசிய பிராந்தியரீதியில் இந்த தீர்ப்பு முக்கியமானது.  மதத்தை முதன்மைபடுத்திய உணர்வுகளுக்கு இது முக்கியமளிப்பதால் பெரும்பான்மை மதத்தை சார்ந்தவர்களுக்கு மென்மேலும் உத்வேகமளிக்கும்.  சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு பய உணர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏட்படுத்துவதால் பதட்டமும் வன்முறையும் ஏட்படுத்தும்.  இலங்கை,  பங்களாதேஷ்,  பாகிஸ்தான்,  மியான்மர் போன்ற நாடுகளிலுள்ள சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. 

Share this post


Link to post
Share on other sites

அண்டாவை திருடியவனுக்கே பிரியாணி என்று தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவில் மதவாதிகளும் அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
பொழுதுபோக்கு சினிமாவையே அரசியலாக்கி வைத்திருக்கும் நாடு.

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, tulpen said:

அண்டாவை திருடியவனுக்கே பிரியாணி என்று தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. 

ருல்பன், பிரியாணி என்றால்... மாமிசம் தான், உடனே நினைவுக்கு வருகிறது.
வெஜிடபிள் பிரியாணி என்று, சொல்லுங்கோ..... :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Quote

1992- டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது, 

Quote

அயோத்தியிலுள்ள பிரச்சினைக்குரிய பாபர் மசூதியிருக்கும் நிலம் இந்துக்களுக்குரியது என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகச், சற்று முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், மீம் மற்றும் உரை

.

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ராவணன் அபகரித்தால் சீதை ராவணணுக்கே சொந்தம் என்ற தீர்ப்பு வந்தால்??

நாடாமை தீர்ப்பை மாத்து 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்தில் தூய தமிழில் அழகான அறிவிப்பு..
  • கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை  சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறிமுகமானார். இவரது பெற்றோர் இலங்கை அகதி என்று முறையாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ளனர். முதலில் ஊரபாக்கத்திலும், பின்னர் வளசரவாக்கத்திலும் வசித்தனர். பிரசாந்தி என்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் பிரசாந்தியும், அவரது தாயாரும் எனக்கு போன் செய்து அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழுதனர். நான் அவர்களை மெரினா கடற்கரை, காந்திச்சிலை முன்பு சந்தித்து பேசியபோது, கியூ பிரிவு பெண் காவல் துறை  அதிகாரி தனக்கு போன் செய்து, பேசி விட்டு, கடைசியில் மாதவிலக்கு திகதி குறித்து விசாரித்தார் என்று பிரசாந்தி கூறி அழுதார். இனிமேல் அந்த அதிகாரி போன் செய்தால், என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.   பாலகணேசன் என்பவருக்கு எதிராக பிரசாந்தி கடந்த ஜூன் மாதம் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த, பிரசாந்தி நேரில் வரவேண்டும் என்று வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆகஸ்டு மாதம் சம்மன் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் கியூ பிரிவு காவல் துறை , வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரசாந்தியிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். இதுகுறித்து என்னிடம் தொலை பேசியில்  பிரசாந்தி கூறினார். அவரை நேரில் வரும்படி கூறினேன். அதன்பின்னர் அவரையும், அவரது பெற்றோரையும் காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவுகாவல் துறை  பிடித்து, மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக கியூ பிரிவு காவல் துறை  பிடியில் உள்ள பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த தமிழக டி.ஜி.பி., கியூ பிரிவு காவல் துறை  சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. http://eelamurasu.com.au/?p=23125&fbclid=IwAR18Oq4Jw-u5EiRfgcqPAImxNjICZFp4DIsQm5KbMUPOa5KGTUMNT737NkQ
  • நீங்கள் அவரின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பீர்கள்? ஒரு மாதிரி கடிதம் எழுதுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.