Jump to content

சிறுபான்மை வேட்பாளர்களின் போட்டி ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது-இரா.சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை வேட்பாளர்களின் போட்டி ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது-இரா.சம்பந்தன்

சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும், அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என திருகோணமையில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/சுயேட்சையாக-களமிறங்கியு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தை வெற்றியீட்ட செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டோம் : மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியானமுடிவைத்தான் எடுத்து மக்களுக்கு அறிவித்துள்ளது எமக்குள்ள கடமையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் ஒருமைப்பாடுகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தொரிவிக்கையில்

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள் சிந்தித்துதான் முடிவுகள் எடுத்துள்ளோம் மற்ரவர்கள்போல் நாம் செயற்பட முடியாது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னேடுத்த முடிவுகளுக்கு கூட நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம் நாங்கள் முடிவுகளையோ அறிக்கைகளையோ விட்டுவிட்டு மாணவர்களின் சந்திப்புகளுக்கு வரவில்லை வாக்கு உரிமையை கருத்தில் எடுத்து நாம் ஒன்று கூடினோம் தீர்மானங்கள் ஏடுத்தோம். அதனை வைத்து முன்னகர்தினோம் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம் என தெரவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கூறவில்லை ஏன்றார்கள். தற்போது புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு அவர்களின் மேடைகளில் ஏறவில்லையேன கூறுகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது ஏன்பதைப்பார்த்து சிலரும் தமக்கு சாதகமாக விடயங்களை செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் மேடைகளில் ஏறித்தான் ஆதரவு திரட்டவேண்டும் என்றில்லை நாங்கள் எமது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் எமது ஆதரவாளர்களுடன் இணைந்து செயலாற்ரத் தொடங்கி விட்டோம்.

நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம். சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டோம் கலந்துரையாடல்களை செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/சஜித்தை-வெற்றியீட்ட-செய்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொல்லி தான் சனம் வாக்களிச்சது என்று பீலா விடபோகினம்.
உங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தான் உண்மையான சோதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சஜித்தை வெற்றியீட்ட செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டோம் : மாவை

ஒவ்வொரு லெக்சனிலையும் நீங்கள் செய்யிற வேலைதானே😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிறுபான்மை வேட்பாளர்களின் போட்டி ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது-இரா.சம்பந்தன்

வந்து விழுந்த எலும்பு துண்டு பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக்கும் .

Link to comment
Share on other sites

30 minutes ago, பெருமாள் said:

வந்து விழுந்த எலும்பு துண்டு பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக்கும் .

ஏன்? சஜித்துக்கு ஆதரவாக தானே கதைத்துள்ளார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

ஏன்? சஜித்துக்கு ஆதரவாக தானே கதைத்துள்ளார்?

சிவாஜியையும் போட்டி போடவிடாமல்  இரு சிங்கள கட்சிகளுடன் டீல் பேசியிருந்தால் இன்னும் கூட கிடைத்து இருக்குமல்லவா 😊😊😊😊😊😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.