ampanai

இரண்டாவது தடவையும் நிபந்தனைகள் அற்ற ஆதரவு ஏன்? - சிவகரன் கேள்வி

Recommended Posts

 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான். 2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன? கடந்த நான்கரை ஆண்டுக் காலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்தீர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா?எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை(9) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

பாவம் தமிழ் மக்களை எத்தனை தடவை தான் ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் வயதிற்கும், அறிவிற்கும் அனுபவத்திற்கும் நீங்கள் கூறிய வாசகங்கள் பொங்கலுக்குத் தீர்வு, அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி, இதோ நல்ல செய்தி வருகிறது மைத்திரியை மண்டேலா, காந்தி என்றும் தமிழ் மக்களுக்குத் தீர்வு வந்து விட்டது போலும் 2015ஆம் ஆண்டிலிருந்து அண்டப்புழுகு, ஆகாசப்புழுகுகள் கூறி ஏமாற்றினீர்கள் மூன்று தடவை நம்பிக்கை இல்லாப் பிரேனையில் இருந்து அரசைப் பாதுகாத்தீர்கள் இதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன ? சில இடங்களில் காணி விடுவிக்கப்பட்டதைத் தவிர அவையும் முழுமை அல்லவே எதுவித முன்னேற்ற கரமான விடயங்களும் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை, புதிய அரசியல் அமைப்பு முயற்சி முற்றுப் பெறாது என்று ஏலவே தெரிந்த விடயம் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு எதுவித முனைவும் மேற்கொள்ளவில்லை

மாறாகக் கூட்டமைப்பினர்தான் பதவி அனுபவத்தீர்கள் எதிர்க்கட்சி தலைவர்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உத்தியோக பற்றற்ற அமைச்சர் இந் அரசுடன் ஐக்கிய உறவாக இருந்தீர்கள் தமிழ்த் தேசியத்திற்கு பெரும் துரோகம் செய்த டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் செய்த பிற்போக்குத்தனமான விடயங்களையே நீங்களும் மேற் கொண்டு மென் சக்தி நகர்வில் தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டீர்கள் சிங்கள கட்சிகளுக்குத் தமிழர்கள் வாக்களிக்கும் மனநிலையை ஏற்படுத்தியது நீங்கள் தான்.

 

sam.jpg

 

தமிழ்த் தேசிய வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. வரலாறு உங்களை துரோகியாகவே பதிவு செய்யும் என்று 2014ஆம் ஆண்டு கட்சி மகாநாட்டில் உங்கள் முன்னிலையிலே கூறியவன் அடியேன். 

நிபந்தனையற்ற ஆதரவில் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுத்தராது என உங்கள் பேரப்பிள்ளைக்கு சமனான என்னால் 2014ஆம் 2015ஆம் ஆண்டில் கட்சி கூட்டத்திலும், பொது வெளியிலும் முன்வைத்த அனைத்து விடயங்களும் சரியாக விட்டது அந்த முரண்பாட்டினால்தான் கட்சியை விட்டு வெளியேறினோம்.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். 2015ஆம் ஆண்டில் விட்ட அதே வரலாற்றுத் தவறுதான் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் செய்துள்ளீர்கள். 

தமிழ் மக்களுக்கு எந்த விதமான அடிப்படைப் பிரச்சனையும் தீராத போது கண்ணை மூடிக் கொண்டு எழுபது ஆண்டுகளாகச் சுதந்திர வாழ்வுரிமை கோரி போராடியவர்கள் தமிழ் மக்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேல் விடுதலை நோக்கி ஆயுதமுனையில் போராடி விடுதலை வேள்விக்காய் பல இலட்சம் தமிழ் மக்களின் இன்னுயிர்கள் ஆகுதியாகின.

 இறுதியில் இந் நூற்றாண்டின் நன்கு திட்டமிட்ட இனப் படுகொலையும் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன ஒவ்வொரு தமிழன் உயிரும் எதற்காக இந்த மண்ணில் மடிந்தது என்பது கூட உங்களுக்குத் தெரியாதா? நிபந்தனை அற்று சிங்களவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வல்லான்மை இல்லாத வழிப்போக்கன் இனம் இல்லை விடுதலைக்காகப் போராடிய வீறு கொண்டு எழுந்த இனம் நீங்கள் பன்நாட்டுத் துரதரகங்களின் அனுசரணையுடன் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரித்திருக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு கால நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் மனச்சாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் இன்றைய மைத்ரிபால சிறிசேன வரை தமிழ்மக்களுக்கு விசுவாசமாக நேசக்கரம் நீட்டிய தலைவர்கள் உண்டா? காலத்திற்குக் காலம் எல்லாத் தலைவர்களும் ஏமாற்றினார்கள். என்னும் வரலாறு தாங்கள் அறியாமல் இல்லை இழப்பதற்கு எதுவும் இல்லாத அளவிற்கு எஞ்சிய உயிரைத் தவிர எதுவும் இல்லாத ஏதிலி தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் தார்மீக தகுதியை இழந்து விட்டீர்கள் .

நீங்கள் நினைத்திருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் போது பல அன்றாட பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் குறைந்த பட்சம் கல்முனை பிரதேச செயலக விடயம் கூட கைகூடவில்லை அரசாங்கத்தின் இதயத்தில் இருக்கிறோம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  செய்தீர்களா?

ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்ற படி ஏறியது போல்  காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் நீதிமன்றப் படி ஏறி இருக்கலாமே! கம்பரலியாவில் காட்டிய வேகம் தமிழ் மக்கள் நலனில் காட்டவில்லை. உங்கள் அரசியல் சித்தாந்தம் தோற்றுவிட்டது தமிழ்மக்களின் கூட்டுத்தலைமையை ஏற்கும் தகுதியை இழந்து விட்டீர்கள். 

உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் தமது வழி வரைபட சித்தாந்தம் தோற்றுவிட்டால் விலகி வழி விடுவதே உண்மையான ஜனநாயக பிரதிநிதித்துவ அரசியல் முறைமை.

ஆகவே மேலும் தமிழ் மக்களை ஏமாற்றாமல் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் 'காற்று இடைவெளியை நிரப்பும் தேசம் தன் தலைமையைத் தீர்மானிக்கும்' இனப்படுகொலை செய்த கோத்தாபய வந்தால் என்ன? இதுவரை கோட்பாடுகள் இன்றி தூர நோக்கு இன்றி பேசும் சஜித் பிரேமதாச வந்தால் என்ன? எதுவும் நடக்கப்போவது இல்லை தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ஒரு சட்ட ஆவணம் இல்லை அதை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. 

கூட்டமைப்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு போதும் பின் பற்றுவதில்லை பெரும்பான்மையான தமிழ் மக்கள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள்.

 பல இயக்கங்கள், கட்சிகள் வந்தபோதும் புலிகளை மட்டும் ஏன் தமிழ் மக்கள் விசுவசித்தார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமை என்பது ஆளுமை இல்லாத வெறும் இறப்பர் முத்திரை தான். 

பல்கலைக்கழக மாணவர்களையும் போலி ஒப்பந்தம் செய்து ஏமாற்றினீர்கள். கூட்டமைப்பின் ஏமாற்று நாடகத்திற்கு ஆமா சாமி போடும் பங்காளிக் கட்சித்தலைவர்களும், கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் தூர நோக்கை இலக்காக கொண்டு இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள் என வேண்டுகை விடுக்கின்றோம் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/68599

Share this post


Link to post
Share on other sites

மக்கள் மனதிலும் இந்த கேள்விகள் உண்டு.
பதில் வராது.

Share this post


Link to post
Share on other sites

நிபந்தனையின்றி ஆதரவளித்தமையால் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன?- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் சம்பந்தனுக்கு கடிதம்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவுகளை வழங்குவதால் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன என்பதை கூட்டமைப்பின் தலைமையுள்ளிட்டவர்கள் வெளிப்படுத்த முடியுமா என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

sambanthan.jpg

அவ்வியகத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நடைபெறவுள்ள  சனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் 2015ஆம் ஆண்டும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன?  கடந்த நான்கரை ஆண்டு காலம் அரசாங்கத்தை தாங்கிப்பிடித்தீர்கள் அதனால் தமிழ்மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா? 

தமிழ் மக்களை எத்தனை தடவை ஏமாற்றிவிட்டீர்கள். உங்கள் வயதிற்கும், அறிவிற்கும். அனுபவத்திற்கும் நீங்கள் கூறிய வாசகங்கள் பொங்கலுக்கு தீர்வு, அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி, இதோ நல்ல செய்தி வருகிறது மைத்திரியை மண்டேலா, காந்தி என்றும் தமிழ் மக்களுக்கு தீர்வு வந்து விட்டது போலும் 2015ஆம் ஆண்டில் இருந்து அண்டப்புழுகு, ஆகாசப்புழுகுகள் கூறி ஏமாற்றினீர்கள்.

மூன்று தடவை நம்பிக்கை இல்லாப் பிரேனையில் இருந்து அரசை பாதுகாத்தீர்கள் இதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன ? சில இடங்களில் காணி விடுவிக்கப்பட்டதைத் தவிர அவைவும் முழுமை அல்லவே எதுவித முன்னேற்ற கரமான விடயங்களும் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பல்லயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை, புதிய அரசியல் அமைப்பு முயற்சி முற்றுப் பெறாது என்று ஏலவே தெரிந்த விடயம் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு எதுவித முனைவும் மேற்கொள்ளவில்லை.

மாறாக கூட்டமைப்பினர்தான் பதவி அனுபவத்தீர்கள் எதிர்கட்சித் தலைவர்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உத்தியோக பற்றற்ற அமைச்சர் இந் அரசுடன் ஐக்கிய உறவாக இருந்தீர்கள்.

தமிழ்த் தேசியத்திற்கு பெரும் துரோகம் செய்த டக்ளஸ் தேவானந்த கடந்த காலத்தில் செய்த பிற்போக்குத்தனமான விடயங்களையே நீங்களும் மேற்கொண்டு மென் சக்தி நகர்வில் தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டீர்கள் சிங்கள கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்கும் மனநிலையை ஏற்படுத்தியது நீங்கள் தான்.

தமிழ்த்தேசிய வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. இந்த நூற்றான்டின் நன்கு திட்டமிட்ட இன படுகொலையும் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன ஒவ்வொரு தமிழன் உயிரும் எதற்காக இந்த மண்ணில் மடிந்தது என்பது கூட உங்களுக்குத் தெரியாதா நிபந்தனை அற்று சிங்களவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வல்லான்மை இல்லாத வழிப்போக்கன் இனம் இல்லை விடுதலைக்காக போராடிய வீறு கொண்டு எழுந்த இனம் நீங்கள் பன்நாட்டுத் துரதரகங்களின் அனுசரனையுடன் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரித்திருக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு கால நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் மனச்சாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை தமிழ்மக்களுக்கு விசுவாசமாக நேசகரம் நீட்டிய தலைவர்கள் உண்டா? காலத்திற்கு காலம் எல்லாத் தலைவர்களும் ஏமாற்றினார்கள். என்னும் வரலாறு தாங்கள் அறியாமல் இல்லை இழப்பதற்கு எதுவும் இல்லாத அளவிற்கு எஞ்சிய உயிரை தவிர எதுவும் இல்லாத ஏதிலி தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தார்மீக தகுதியை இழந்துவிட்டிர்கள்.

நீங்கள் நினைத்திருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் போது பல அன்றாட பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம் குறைந்த பட்சம் கல்முனை பிரதேச செயலக விடயம் கூட கைகூடவில்லை அரசாங்கத்தின் இதயத்தில் இருக்கிறோம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றார் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  செய்தீர்களா?

ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்ற படி ஏறியது போல்  காணாமல் ஆக்கப்படடோருக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் நீதிமன்றப் படி ஏறி இருக்கலாமே கம்பரலியாவில் காட்டிய வேகம் தமிழ் மக்கள் நலனில் காட்டவில்லை. உங்கள் அரசியல் சித்தாந்தம் தோற்றுவிட்டது தமிழ்மக்களின் கூட்டுத்தலைமையை ஏற்கும் தகுதியை இழந்து விட்டிர்கள். உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் தமது வழி வரைபட சித்தாந்தம் தோற்றுவிட்டால் விலகி வழி விடுவதே உண்மையான சனநாயக பிரதிநிதித்துவ அரசியல் முறைமை.

ஆகவே மேலும் தமிழ் மக்களை ஏமாற்றாமல் ஓய்வெடுத்துக் கொள்ளளுங்கள் “காற்று இடைவெளியை நிரப்பும் தேசம் தன் தலைமையை தீர்மானிக்கும்” இனப்படுகொலை செய்த கோத்தபாய வந்தால் என்ன? இதுவரை கோட்பாடுகள் இன்றி தூர நோக்கு இன்றி பேசும் சஜித் பிரேமதாச வந்தால் என்ன? எதுவும் நடக்கப்போவது இல்லை தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ஒரு சட்ட ஆவணம் இல்லை அதை நிறைவேற்றவேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. 

கூட்டமைப்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு போதும் பின் பற்றுவதில்லை பெரும்பான்மையான தமிழ் மக்கள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள். பல இயக்கங்கள், கட்சிகள் வந்தபோதும் புலிகளை மட்டும் ஏன் தமிழ் மக்கள் விசுவசித்தார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. 

தமிழரசுக் கட்சி தலைமை என்பது ஆளுமை இல்லாத வெறும் இறப்பர் முத்திரை தான். பல்கலைகழக மாணவர்களையும் போலி ஒப்பந்தம் செய்து ஏமாற்றினீர்கள். கூட்டமைப்பின் ஏமாற்று நாடகத்திற்கு ஆமா சாமி போடும் பங்காளிக் கட்சித்தலைவர்களும், கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் தூர நோக்கை இலக்காக கொணடு இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள் என வேண்டுகை விடுக்கின்றோம் என்றுள்ளது. 

https://www.virakesari.lk/article/68637

Share this post


Link to post
Share on other sites

Student leaders fail to pinpoint ITAK, blame all five Tamil parties for ‘approach failure’

The leaders of the Jaffna University Student Union (JUSU) have passed the blame of the failure to stipulate the choices to be made if and when the actors in the South fail to meet the thirteen-point terms in the document articulated by the mainstream Tamil political parties last month. The document articulated by six parties and agreed in full by five of them in the signature was about vetting the mainstream candidates in the forthcoming SL presidential elections. The SLPP candidate Gotabhaya Rajapaksa has stated unitary state as the solution and wants to consolidate it further. The NDF candidate Sajith Premadasa has rejected Tamils Right of Self-Determination and their distinct sovereignty in principle through stating ‘undivided and indivisible Sri Lanka’ in his manifesto.

https://tamilnet.com/art.html?catid=13&artid=39629

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நீங்கள் எதிர்பார்க்கிறதுக்காக எல்லாம் மோசமான நிலைக்கு நாம் இறங்க வேண்டும்  என்றில்லையே? நான் மேலே மூன்று கருத்து சீமானின் அரசியில் தளம் பற்றி எதிர்க்கருத்து  இருப்பின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வாருங்கள் என்று எழுதி இருக்கிறேன். மீண்டும் மீண்டும் சீமான் பூரி சாப்பிட்டார் பொரிவிளாங்காய் சப்பிட்டார்  என்று கனோடு இருந்தால் நீங்கள் ஓவருவராக வரிசை கட்டி வர இதை வேலையில்லாமல்  கருத்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா?  எழுதிய பதிலை படிக்க உங்களுக்கு விக்கினம் இருக்கும்போது  நான் மட்டும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமா? எனக்கு சீமான் வன்னியில் தோசை சாப்பிடாரா? பிட்டு சாப்பிடாரா? என்பது தேவை இல்லை ... அரசியல் களத்தில் அவர் என்ன செய்கிறார்  அவருடைய கடைசி என்ன செய்கிறது என்பதே தேவையானது. உங்களிடம் ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் வாருங்கள்  தொடர்ந்தும் விவாதிக்கலாம்.  சீமான் கடவுள் தப்பே இருக்காது என்ற பிற்போக்கு தனமோ அப்படி தவறு  இருப்பின் மூடி வைத்துக்கொண்டு வக்ககாலத்து வாங்கும் மனநிலையில் நான் இல்லை  உங்களிடம் எதிர் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.  
    • அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா.?   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி தினத்திற்கு வயது 50. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், கள ஆய்வுகள் என பல்வேறு அறிவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் Journal Nature இதழில் எரிமலைகள் தொடர்பாக வெளிவந்திருக்கும் ஓர் அறிக்கை (case study) நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கிறது. kilauea eruptionவழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகப்படியான வெப்பச் சலனம், காட்டுத் தீ போன்றவைகள் என்றால், ஆர்டிக், அண்டார்டிகா போன்ற பகுதிகளில் பதிவான அதிக வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகுகிறது. இதனால் கடல் பகுதிகளில் கடல் நீர் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. காலம் தவறாமல் பருவ மழை பொழியும் பகுதிகளில் கூட தலை விரித்தாடிய வறட்சியும், அதற்கு நேர் எதிராகக் கொட்டித் தீர்த்த தொடர் மழைப் பொழிவும் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது. அதிக மழைப் பொழிவால் உண்டான விளைவுகளில் ஒன்றாக 'Kilauea என்ற எரிமலை வெடித்துச் சிதறியது இருக்கலாம்' என்று ஓர் அறிவியல் அறிக்கை வெளிவந்துள்ளது. உலகில் அதிகப்படியான எரிமலைக் குழம்புகள் (lava) வெளிவந்து கொண்டிருக்கும் பகுதி பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சில தீவுக்கூட்டங்கள் ஆகும். இதில் ஒன்று தான் ஹவாய் தீவுகளில் இருக்கும் 'Kilauea' என்ற தீவுப் பகுதி. இங்கு 1983 ஆம் ஆண்டு முதல், எரிமலை ஒன்று தீக் குழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது, அது 'Kilauea' என்ற எரிமலை. இது 2018 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக வெடித்துச் சிதறியது. கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்கு வசித்து வந்த மக்கள் அத் தீவில் இருந்து அப்போது வெளியேறி விட்டார்கள். இந்த எரிமலை வெடித்த சம்பவத்தை கணக்கிடும் போது, இது கடந்த 200 ஆண்டுகளில் காணப்படாத எரிமலை தீப்பிழம்புகள் ஆகும். இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்ட அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் 'அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடியில் சென்ற நீரினால் வெப்ப அழுத்தம் மாறுபட்டதுதான் திடீரென அதிகப்படியான லாவா குழம்புகள் வெளியேறக் காரணம்' என்று கூறியிருக்கிறார்கள். நமது பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய பகுதிதான் என்பதற்கு இன்றளவும் சான்றாக இருப்பது எரிமலைக் குழம்புகள். பூமியின் மேற்பரப்பில் இருந்து அதன் அடிப்பகுதி வரை அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவைகள் முறையே Crust, Mantle, Outer core, Inner core ஆகும். 1. நாம் வசிக்கும் மேற்பரப்பானது Crust ஆகும். இது பூமியின் முதல் நிலை என்று அழைக்கப்படுகிறது. மண், மலைப் பகுதிகள், கடல் சார்ந்த பகுதிகள் இவைகள் எல்லாம் 5 கிலோ மீட்டரில் தொடங்கி 40 கிலோ மீட்டர் ஆழம் வரை அமைந்திருக்கிறது. இந்த Crust layer எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பது கிடையாது. Mantle -ன் மேற்பரப்பில் உடைந்து போன பாகங்கள் plates என்று‌ அழைக்கப்படுகிறது. இவை மெதுவாக சுழன்று கொண்டிருக்கும். சில பகுதிகளில் சிதைந்து போன மண் பரப்பு பகுதிகளாக இருக்கிறது. இதில் தான் மழை நீர் கீழே சென்று ஈரப்பதம் மிக்கதாக அமைந்திருக்கிறது. இது 'light blocks on the upper mantle' என்று அழைக்கப்படுகிறது. 2. இரண்டாவது நிலையில் இருப்பது Mantle ஆகும். இது முழுக்க லாவா நிரம்பி இருக்கிறது என்று உலகில் அனேக மக்களால் நம்பப்படுகிறது. ஆனால், இங்கு இருப்பது தடிமனான பாறைகள். இதிலிருக்கும் வெப்பப் பாறைகள் அதிகப்படியான அழுத்தத்தால் ஆறு (ரோட்டின் மீது தான் தார் இருப்பது போல்) போன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பகுதியில் மட்டும் கனிம மூலக்கூறுகள், பாறைகள் திரவ நிலையில் இருக்கும். இதைத்தான் 'Magma' என்று அழைக்கிறார்கள். அதிக வெப்பநிலையில் உள்ள திரவப் பாறைகள் தீப்பிழம்பு போல் இருப்பதால் இது லாவா என வர்ணிக்கப்படுகிறது. இது 2,900 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. 3. இதற்கடுத்து மூன்றாவதாக கீழே அமைந்திருப்பது Outer core. இங்கு‌ இருக்கும் இரும்புத் தாதுக்கள் உருகிய நிலையில் சற்று தடிமனாக இருக்கிறது. இதன் வெப்பநிலை சுமார் 4000 முதல் 5000 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. இந்தப் படிநிலையில் இருக்கும் இரும்புத் தாதுக்கள், சல்பர் மற்றும் நிக்கல் போன்றவைகள் சேர்ந்து பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகின்றன. 4. நான்காவதாக இருப்பது Inner core. இது வெப்பமான ஒரு இரும்புக் குண்டு போல் தடிமனாக அமைந்திருக்கும். இங்கு வெப்பநிலை சுமார் 5000 முதல் 7000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். எரிமலைகளைப் பற்றி ஆராய்ந்து வரும் அறிவியலாளர்கள், எரிமலை வெடித்துச் சிதறிய பகுதிகளில் மழை நீர் அதிகமாகி நிலத்தடியில் சென்றிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்கிக் கூறுகிறார்கள். அமெரிக்காவின் நாசா மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவு பதிவாகிய செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்ததில், 2018ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் அதிகப்படியாக 2.25m மழைப்பொழிவு இப்பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் பரவலாக மழை பொழிந்து உள்ளது. ஹூவாய் தீவுக்கூட்டங்களில் எரிமலைகள் வெடித்துச் சிதறி வரும் பகுதிகளை 'East Rift zone' என்று அழைக்கிறார்கள். நிலத்தடி நீர் அதிகப்படியாக உள்ளே சென்றதால் இந்த பகுதிகளில் 'dyke intrusion' என்ற கூற்றின் படி magma என்ற லாவா குழம்புகள் அதிக அழுத்தம் கொண்டதாக மாறி வெடித்துச் சிதறி இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. 2018 ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடல் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிகளும் கனமழையும் பெய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மழைப்பொழிவு எரிமலையை ஏற்படுத்தக்கூடுமா? இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து இருக்கிறார்கள் அறிவியலாளர்கள். "இதை நிரூபிப்பது கடும் சிக்கலான காரியம். நீர் அதிக விஷயங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இருக்கிறது. இயற்பியல் நமக்குத் தெளிவாக ஒன்றை விளக்குகிறது, சூடாக இருக்கும் ஒரு பாறையின் மீது தண்ணீரைத் தெளித்தால் அத்தண்ணீர் செயலிழந்து போய்விடும்" என்கிறார் மியாமி பல்கலைக்கழகப் பேராசிரியர் Falk Amelung. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். 2018ல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் வெடித்துச் சிறிய எரிமலை கூட காலநிலை மாற்றத்தால் கொட்டித் தீர்த்த மழையினால் தான் உண்டாகி இருக்கலாம். இப்பூமியில் வாழும் மனிதர்கள் நாம்தான் கால நிலை மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். (நன்றி: https://www.npr.org/2020/04/22/839866607/did-heavy-rain-cause-hawaiis-historic-volcanic-eruption) - பாண்டி http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/40115-2020-04-29-04-47-39