Jump to content

இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு அனுமதியளிக்ககூடாது- இந்தியாவின் எதிர்பார்ப்பு இது

Recommended Posts

இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள்  தனது மூலோபாய நலன்களை  பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின்  எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

chinsesub_no9.jpg

இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன்   ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என  இந்த விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார் என இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் எந்த புதிய ஆட்சியாளரும்  பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/68587

Link to comment
Share on other sites

இந்தியாவை இலங்கையை விட்டு கலைப்பது தமிழனுக்கும் நல்லம் சிங்களபனுக்கும் நல்லம்.  சீனாவின் வழியில் பயனிப்பது தான் எல்லாருக்கும் நன்மை பயக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுகோள் விடுமாப்போலிருக்கே!
நீங்கள் தென்கிழக்காசிய வல்லரசு என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

ஆசை யாரைத்தான் விட்டது.  இந்தியா  ஈழத் தமிழரின்,  சிங்களவரின் உளவியலை சுய விருப்பு வெறுப்பின்றி விளங்கிக் கொள்ளாதவரை அவர்களால். மிகச் சரியான முடிவுகளை எட்ட முடியாது.  

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் இருந்து பாடம் படிக்காத தென் கிழக்காசிய வல்லரசு. 

தனது கையாலாகாத தனத்தை 'எதிர்ப்பார்ப்பு' என்ற சொல்லுக்குள் முடக்கி விட்டுள்ளது. 

சீனா, ஆசிய மற்றும் உலக வல்லரசு, தனக்குள் ஒரு எதிர்பார்ப்பை எழுத்தில் மட்டுமல்லாது அதற்கு செயல் வடிவமும் கொடுத்து வருகின்றது. இந்தியா என்ற பல நாடுகளை மீண்டும் பல நாடுகளாக்குவதும் அதில் இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

அம்பாந்தோட்டையில் இருந்து பாடம் படிக்காத தென் கிழக்காசிய வல்லரசு. 

தனது கையாலாகாத தனத்தை 'எதிர்ப்பார்ப்பு' என்ற சொல்லுக்குள் முடக்கி விட்டுள்ளது. 

சீனா, ஆசிய மற்றும் உலக வல்லரசு, தனக்குள் ஒரு எதிர்பார்ப்பை எழுத்தில் மட்டுமல்லாது அதற்கு செயல் வடிவமும் கொடுத்து வருகின்றது. இந்தியா என்ற பல நாடுகளை மீண்டும் பல நாடுகளாக்குவதும் அதில் இருக்கலாம்.  

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இவ்வாறு உள்ளது.

Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.

2014 இல் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து தரித்து நின்று சென்றது.

2017 இல் சீன நீர்மூழ்கி கப்பல் தரித்து நிற்க அனுமதி கேட்ட போது இலங்கை அனுமதி வழங்கவில்லை. மோடிக்காக.

Link to comment
Share on other sites

30 minutes ago, Lara said:

எல்லா ஒப்பந்தங்களும் சந்தர்பங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, பலம் பலவீனங்களை வைத்து மாறும். 

இந்திய ஒப்பந்தங்களை அவர்களே நம்புவதும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள்  தனது மூலோபாய நலன்களை  பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின்  எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சீனாவின் முத்துமாலைத் திட்டம் கொண்டுவந்த போதும் இந்தியா தனது எதிர்பைக் காட்டியிருந்தது.இருந்தும் நடந்தது.

இந்தக் கோரிக்கையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

எல்லா ஒப்பந்தங்களும் சந்தர்பங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, பலம் பலவீனங்களை வைத்து மாறும். 

இந்திய ஒப்பந்தங்களை அவர்களே நம்புவதும் இல்லை. 

நான் கூற வந்தது எழுத்து மூலம் இந்தியாவிடம் உள்ளது, அதற்கு செயல் வடிவம் கொடுப்பது என்பது இலங்கை கையில்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயற்படுவதால் அந்நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்து செல்வது இந்தியாவுக்கு பிரச்சினையாக இருப்பதில்லை. சீனா தான் பிரச்சினை.

2017 மோடியின் இலங்கை பயணத்தின் போது இலங்கை இந்தியாவுக்கு இது தொடர்பில் வாக்குறுதி கொடுத்தது. இப்பொழுது தேர்தலின் பின் புதிய அரசு (சஜித்/கோத்தா) அமையவுள்ளதால் இந்தியா அது பற்றி கருத்து தெரிவிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Lara said:

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இவ்வாறு உள்ளது.

Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.

2014 இல் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து தரித்து நின்று சென்றது.

இதன் படி, கோத்தா சீன நீர்மூழ்கிகளுக்கு berth இற்கு இடம் கொடுத்தது வாதத்திற்கு உட்படுவதாக சிங்கள அரசு சொல்லலாம். அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாக.

ஆனால், 1987 இந்திய சொறி சிங்கள ஒப்பந்தத்தில், அதற்கு முதல் நடந்த இந்திய சிங்கள அரசுக்கள் இடையேயான கடித மூலமான வாதங்களும், இணக்கப்பாடுகள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், அந்த இன்னக்கப்படுகளே சொறி சிங்களத்தின் இறைமையை பிடுங்குவதாக உள்ளது என்பது சர்வதேச, இருதரப்பு  ஒப்பந்தங்கள் (treaty, உண்மையில் ஒப்பந்தம் (accord) அல்ல) பற்றிய சட்ட வல்லுனர்களின் கருத்தாகும்.

இதை, கிந்தியா பாராமுகவே இருந்தது, புலிகள் உள்ளவரையிலும், ஏனெனில் ஏனைய தரப்புகள் ராணுவ தேவைக்கான முனைப்பை காட்டவில்லை.

10 hours ago, Lara said:

2017 இல் சீன நீர்மூழ்கி கப்பல் தரித்து நிற்க அனுமதி கேட்ட போது இலங்கை அனுமதி வழங்கவில்லை. மோடிக்காக.

2015 இல் ஆட்சி மாறி, ஓர் சிறு காலத்தில், மங்கள சமர வீரா, சீனாவிற்கு சென்று,  சீனாவின் கொள்கை தீர்மானம் எடுக்கும் தரப்புடன் (க்ஸி ஜின்பிங் அதில் இருந்ததாகவே நினைவு உள்ளது) நடந்த பேச்சுவார்த்தை முடிவில், சீன நீர் மூழ்கிகளுக்கு இனி அனுமதிக்கமாட்டோம் என்று சீனாவில் வைத்தே பகிரங்கமாக அறிவித்து இருந்தார். 

ஆயினும், அதற்கு முதலே, கோத்தா இன்னுமொரு முறை சீன நீர்மூழ்கிகளுக்கு அனுமதி வழங்கப்போவதை அறிந்த பிஜேபி,  ஓர் அனாமதேயக் கடிதம் மூலமாக (தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோர்வால் வழிகாட்டுதலில் ) கோத்தாவை மிரட்டி பணியவைத்திருந்தது.

39 minutes ago, Lara said:

நான் கூற வந்தது எழுத்து மூலம் இந்தியாவிடம் உள்ளது, அதற்கு செயல் வடிவம் கொடுப்பது என்பது இலங்கை கையில்.

கேரளா மலையாளிகள் மற்றும் நம்பூதிரிகளின் ஒத்துழைப்பிலும், வழிகாட்டுதலிழும், காங்கிரசின் pussyfooting ஆல் சொறி சிங்களம் கட்டுக்கடங்காத எலியாக தள்ளி விளையாடியது, பிஜேபி இடம் பலிக்கவில்லை என்பதே உண்மை.

இது சமீபத்தில் உறுதி  மாற்றப்பட்ட port city இலும் காணலாம். அதில், சீனா தன்னிடம் இருந்த உறுதியை கையளித்து, uda, chec இற்கு குத்தகையாக வழங்கப்பட்டது. அதிலும் முக்கியமாக, uda சொறி சிங்கள அரசின் ஓர் நிர்வாக அலகு, chec ஓர் சொறி சிங்களத்தின் தனியார் கம்பெனி, சீன கம்பெனி சொறி சிங்கள  கம்பெனி ஆக மாற்றம் பெற்றிருந்தது.

Link to comment
Share on other sites

3 minutes ago, Kadancha said:

இது சமீபத்தில் உறுதி  மாற்றப்பட்ட port city இலும் காணலாம். அதில், சீனா தன்னிடம் இருந்த உறுதியை கையளித்து, uda, chec இற்கு குத்தகையாக வழங்கப்பட்டது.

நீங்கள் இன்னும் சரியாக செய்தியை உள்வாங்கவில்லை. தொடர்ந்து தவறான தகவலை பரப்புகிறீர்கள்.

2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதாக இருந்ததை 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை என முடிவெடுத்தார்கள். அதன் தொடர்ச்சி தான் இப்போதைய உடன்படிக்கை.

The land grant was handed over by Megapolis and Western Development Ministry Secretary Nihal Rupasinghe to UDA Director General S.S.P. Ratnayake, in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan. Later, the UDA DG handed over the lease agreement to CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang. Secretary to the President Udaya R. Seneviratne, and Lands and Parliamentary Reforms Ministry Secretary W.H. Karunaratne were also present on this occasion.

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் நலன் விரும்பிகளும், தலைவர்களும் இந்த சீன, இந்திய மற்றும் அமெரிக்க அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார நலன்களுக்கு நடுவே நீண்ட தூர அரசியல் நோக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

மாறாக, ஒரு குறுகிய இலாபங்களுக்காக  மட்டுமே  அரசியல் செய்வதாக இருக்க கூடாது.   

Link to comment
Share on other sites

16 minutes ago, Kadancha said:

chec ஓர் சொறி சிங்களத்தின் தனியார் கம்பெனி, சீன கம்பெனி சொறி சிங்கள  கம்பெனி ஆக மாற்றம் பெற்றிருந்தது.

CHEC Port City Colombo (Pvt) Ltd through China Harbour Engineering Company (CHEC) is part of China Communications Construction Company Limited (CCCC).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Lara said:

நீங்கள் இன்னும் சரியாக செய்தியை உள்வாங்கவில்லை. தொடர்ந்து தவறான தகவலை பரப்புகிறீர்கள்.

2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதாக இருந்ததை 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை என முடிவெடுத்தார்கள். அதன் தொடர்ச்சி தான் இப்போதைய உடன்படிக்கை.

The land grant was handed over by Megapolis and Western Development Ministry Secretary Nihal Rupasinghe to UDA Director General S.S.P. Ratnayake, in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan. Later, the UDA DG handed over the lease agreement to CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang. Secretary to the President Udaya R. Seneviratne, and Lands and Parliamentary Reforms Ministry Secretary W.H. Karunaratne were also present on this occasion.

ஏற்கனவே சொல்லிவிட்டேன், இது சிங்களத்தின் அறிவிப்பு.

அனால், உண்மையில் நடந்தது, முழு உறுதியையும் chec எனும் சீன அரசின் கம்பெனி இடமே இருந்தது.

நீங்கள் சில வேளைகளில் கேள்விப்பட்டு  இருக்கலாம், அந்த நேரத்தில், சீன அனுமதிக்காத எவரும், சொறி சிங்கள அதிபர் கூட port சிட்டி இற்குள் பிரவேசிக்க முடியாது என்று.  

நீங்கள் வெளியிடப்படும் செய்தியின் படி, சொல்வது சரி.

உறுதியை சீன மீள கையளித்தை, நீங்கள் இணைத்த சொறி சிங்களத்தின் அறிவிப்பிலேயே, பூடகமாக குறிப்பிட்டு இடப்பட்டிருந்தது. 

14 minutes ago, Lara said:

CHEC Port City Colombo (Pvt) Ltd through China Harbour Engineering Company (CHEC) is part of China Communications Construction Company Limited (CCCC).

இதில் ஒருபகுதி என்பது, CHEC முழு சொறி lanka கம்பெனி.  

Link to comment
Share on other sites

17 minutes ago, Kadancha said:

ஏற்கனவே சொல்லிவிட்டேன், இது சிங்களத்தின் அறிவிப்பு.

அனால், உண்மையில் நடந்தது, முழு உறுதியையும் chec எனும் சீன அரசின் கம்பெனி இடமே இருந்தது.

நீங்கள் சில வேளைகளில் கேள்விப்பட்டு  இருக்கலாம், அந்த நேரத்தில், சீன அனுமதிக்காத எவரும், சொறி சிங்கள அதிபர் கூட port சிட்டி இற்குள் பிரவேசிக்க முடியாது என்று.  

நீங்கள் வெளியிடப்படும் செய்தியின் படி, சொல்வது சரி.

உறுதியை சீன மீள கையளித்தை, நீங்கள் இணைத்த சொறி சிங்களத்தின் அறிவிப்பிலேயே, பூடகமாக குறிப்பிட்டு இடப்பட்டிருந்தது. 

உங்கள் கட்டுக்கதைகளை வேறு எங்காவது எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

உங்கள் கட்டுக்கதைகளை வேறு எங்காவது எழுதுங்கள்.

உங்களுக்கு தெரியவில்லை ஆயின், அதில் எனக்கோ, வேறு எவருக்குமோ பிரச்னை இல்லை.

நீங்கள் இணைத்த செய்தியில் (பூடகமாக) இருந்ததை கூட, மறுக்கும் பொது, வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

நான் அறிந்ததை சொல்வதற்கு, எனக்கு உரிமை  உள்ளது.  

உண்மையா, கட்டுக்கதையா என்பதை வசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.

Link to comment
Share on other sites

17 minutes ago, Kadancha said:

இதில் ஒருபகுதி என்பது, CHEC முழு சொறி lanka கம்பெனி.  

கொழும்பிலுள்ள சீன நிறுவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

கொழும்பிலுள்ள சீன நிறுவனம்.

1 hour ago, Kadancha said:

CHEC Port City Colombo (Pvt) Ltd through China Harbour Engineering Company (CHEC) is part of China Communications Construction Company Limited (CCCC)

https://en.wikipedia.org/wiki/China_Harbour_Engineering

நீங்கள் இணைத்த செய்தியில் இருந்து.

எனது வார்த்தை பிரயோகத்தில் துல்லியம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், அது நான் சொல்ல எண்ணியதை மாற்றிவிடாது.

முன்பே சொல்லியுளேன், சொறி சிங்களம் வார்த்தை பிரயோகத்தை மிகவும் லாவகமாக கையாள்கிறது என்று.

சிங்களம் சொல்வதை, read between lines ஆக கிரகிக்க வேண்டும்.

மேலே சொல்லிய  அனைத்து விடயங்கலில் உள்ள யதார்த்த தன்மையை, கட்டுக் கதை உட்பட, வசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.

Link to comment
Share on other sites

13 minutes ago, Kadancha said:

நான் விக்கிபீடியாவில் இருந்து இணைக்கவில்லை.

CHEC, CCCC இரண்டும் சீன நிறுவனம். CHEC என்பது CCCC இன் துணை நிறுவனம். 

CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang என நான் மேலே இணைத்த ஆங்கில செய்தியிலும் உள்ளது. அவரையும் சிங்களவர் என்று நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang என நான் மேலே இணைத்த ஆங்கில செய்தியிலும் உள்ளது. அவரையும் சிங்களவர் என்று நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

இதற்கும், கம்பெனி முழு சொறி லங்கா கம்பெனி என்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

சொறி சிங்களத்தின்  தனியார் கம்பெனி, மற்றும் சர்வதேச வணிக இலகு சுட்டி பற்றி அறியாவிட்டாலும், முந்தைய உதாரணங்கள் உள்ளது.

Sri Lanka airlines இன் managing director, பிரித்தானியர் மற்றும் dutch  (நினைவு) இருந்தனர். 

Sri Lanka airlines இதுவரைக்கும் இலங்கை கம்பெனி, உதாரணம் முற்றாக பொருந்தாவிட்டாலும்.

கம்பெனி இன் shares, யாருக்கு , எந்த சட்டத்தின் கீழ் சொந்தம் என்பதிலேயே, அது சொறி இலங்கை கொம்பனியா அல்லது சீன கம்பெனி யா என்பது தங்கி உள்ளது. 

சொறி லங்கா கம்பெனி என்றால் அது சிங்கள (இந்திய, port city ஐ பொறுத்தவரை ) இறைமைக்குள் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Lara said:

நான் விக்கிபீடியாவில் இருந்து இணைக்கவில்லை.

CHEC, CCCC இரண்டும் சீன நிறுவனம். CHEC என்பது CCCC இன் துணை நிறுவனம். 

இதை விக்கி பீடியாவோ, நானோ மறுக்கவில்லை.

முன்பே சொன்னது போலவே, துல்லியமான வார்த்தைகளை (CHEC Port City Colombo Ltd.) பிரயோகிக்கவில்லை. 

ஆனால், CHEC Port City Colombo Ltd. என்பது, நான் அறிந்த வரையில், CHEC இல் இருந்து பிறிம்பான, சொறி லங்கா,கம்பனி. 

ஆனால், CHEC Port City Colombo Ltd. என்பது, நான் அறிந்த வரையில், CHEC இல் இருந்து பிறிம்பான, சொறி லங்கா,கம்பனி. 

நான் அறிந்த வரையில், முன்பு, CHEC ஏ , அதாவது சீன கொம்பனியே (அதாவது சீன அரசே) உறுதியை வைத்திருந்ததாக.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang என நான் மேலே இணைத்த ஆங்கில செய்தியிலும் உள்ளது. அவரையும் சிங்களவர் என்று நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

லாரா,  உங்கள் கருத்தின் யதார்த்தத்தை இப்போதே புரிந்து கொண்டேன்.

இந்த, managing director, சீன அடி சிங்களவராக இருக்கலாம்.

நீங்கள் அறிந்தீர்களோ தெரியவில்லை, கொழும்பில் (சிங்கள) சீனர்கள், இலங்கை அடி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சீன அடி இருந்தும், சீனவை பற்றியோ, தொடர்புக்களோ இல்லை.

கொழும்பில், இப்படியான சிங்கள சீனர்கள், ஓர் தெருவில், பல  கடைகள் வைத்து இருக்கிறார்கள்.

இது நான் கேள்விப்பட்டாலும், you tube வழியாக, சிங்களம் தெரியாவிட்டாலும், அறிந்துகொண்டேன். 

கொழும்பை பற்றி நன்றாக அறிந்தவர்கள், இந்த விடயத்தை பற்றி அறியத் தரவும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

இதை விக்கி பீடியாவோ, நானோ மறுக்கவில்லை.

முன்பே சொன்னது போலவே, துல்லியமான வார்த்தைகளை (CHEC Port City Colombo Ltd.) பிரயோகிக்கவில்லை. 

ஆனால், CHEC Port City Colombo Ltd. என்பது, நான் அறிந்த வரையில், CHEC இல் இருந்து பிறிம்பான, சொறி லங்கா,கம்பனி. 

Explain the ownership structure of CHEC Port City Colombo (Pvt) Ltd, the investment company of Port City. 

CHEC Port City Colombo (Private) Limited (the Project Company) is a BOI approved Company specifically set up for the purpose of making a foreign direct investment (FDI) in the Colombo Port City Project. It is a 100% owned subsidiary of China Harbour Engineering Company Ltd (CHEC). China Communications & Construction Company (CCCC) which is the Parent Company of CHEC is listed on the Stock Exchanges of Shanghai and Hong Kong.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

CHEC Port City Colombo (Private) Limited (the Project Company) is a BOI approved Company specifically set up for the purpose of making a foreign direct investment (FDI) in the Colombo Port City Project. It is a 100% owned subsidiary of China Harbour Engineering Company Ltd (CHEC). China Communications & Construction Company (CCCC) which is the Parent Company of CHEC is listed on the Stock Exchanges of Shanghai and Hong Kong.

இதில் உள்கட்டமைப்பு என்னவென்று சொல்லப்படவில்லை, boi approval பெறுவதற்கு.  

ஆனால், 100% owned subsidary  கூட, சட்ட அடிப்படையில் வேறு ஓர்  அமைப்பு, அதாவது சொறி லங்கா கம்பெனி.

100% owned subsidary  இனால் கூட, CHEC மிகவும் கூடிய risk ஐ எடுக்கிறது, அதாவது CHEC colombo வின் சட்ட மற்றும் அரசியல், பொருளாதர நிலைமைகள் (சொறி லங்காவில்) மாறுமிடத்து , இது  நேரடியாக CHEC இடம்,  உறுதி இருப்பதை  விட சொறி சிங்கள சட்டத்திற்கு (இறைமைக்கு) உட்படுகிறது  .

இதற்கு முதல் இப்படி, சொறி லங்கா கம்பெனி ஆக இல்லை, அது முழு சீன கம்பனி ஆகவே இருந்ததாக, அதாவது சீன சட்டத்தின் கீழ், நேரடி CHEC (CCCC, சீன அரசின்) கட்டுப்பாட்டின் கீழ் என்பதே அவர்கள் சொல்லியது.   

இந்த செய்தியில் உள்ளதும், ஏறத்தாழ அந்த கருத்தையே சொல்கிறது 

https://uk.reuters.com/article/us-sri-lanka-china-portcity/china-harbour-engineering-to-invest-1-billion-in-sri-lankas-port-city-minister-idUKKBN1ER1DX
 
 அதாவதுCHEC colombo  , CHEC CCCC ஆல் பணிக்கப்பட்ட ஓர் project கம்பெனி ஆக. 

"CHEC Port City Colombo (Pvt) Ltd, the Sri Lanka company handling the project for CCCC, aims to deliver the first site for construction by the end of 2018."

முழு கட்டுப்படும் CHEC CCCC இடமே இருந்திருக்கிறது.

இப்பொது,  குத்தகை uda ஆல் chec colombo இற்கு வழங்கப்பட்டுள்ளது, முன்பு வழங்கப்பட்ட உறுதியை மீளப் பெற்று.  

அவர்கள் சொல்வது சரி என்பதே எனது கருத்து.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து, கோத்தவே அதிபர் ஆகுவதற்கு மிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக பிஜேபி நம்புகிறதா?

இவ்வளவு வெளிப்படையாக    கோரிக்கை (ஆணை) வைப்பதால், சொறி சிங்கள அதிபர் தனது இறைமைக்குள் என்பதை கிந்தியா வெளிப்படையாக சொல்கிறதா?

மேலும், ஆங்கிலத்தில், economic times இல் வந்த செய்தியில், வேறு ஒருவருக்கும் சொறி லங்கா நிலப்புலத்தில் நிரந்தர இடம் (strategic establishment or structure)  கொடுக்கக்கூடாது  என்று சாரப்படவும் ஓர் கருத்து இருந்தது. 

இது அம்பாந்தோட்டை, மற்றும் சீனாவை பொறுத்தவரையில் port city இல் சமீபத்தில் நடந்த உறுதி, உரிமை  மீளளிப்பு (forefeit),  மற்றும் மாற்றம் (கடந்த 18 மாதங்களில், சீன கம்பனி மற்றும் அரசிடம் இருந்த உறுதி, உரிமை சொறி சிங்கள lanka  கம்பெனி இற்கு மாற்றப்பட்டது, கிந்தியாவின் அழுங்குப்பிடியால்)  போன்றவை நடைபெற சொறி சிங்களதை கிந்தியா அனுமதிக்காது என்ற கறாரான, வெளிப்படையான ஆணையும் உள்ளதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.