Jump to content

சிவாஜிலிங்கத்திற்கே ஆதரவு ; ரெலோவின் யாழ் மாவட்டக்குழு தீர்மானம்


Recommended Posts

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கட்சியின் யாழ் மாவட்டக்குழு.

telo1.JPG

சில தினங்களின் முன்னர் ரெலோவின் தலைமைக்குழு கூடி, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ள நிலையில், யாழ் மாவட்டக்குழுவின் இந்த தீர்மானம் கட்சிக்குள் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரெலோவின் யாழ் மாவட்டக்குழு கூட்டம் இன்று (9) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் மற்றும் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கூட்டத்திற்கு முழுமையான அழைப்பு விடுக்கப்படவில்லையென தெரிகிறது. சுமார் 65 யாழ் மாவட்டக்குழுவில் அங்கம் வகித்தாலும் சுமார் அரைப்பங்கினரே வந்திருந்தனர்.

கூட்டத்தின்போது, யாழ் மாவட்ட பொறுப்பாளரான சில்வெஸ்டர், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தலைமைக்குழுவின் முடிவு தவறானது. இந்த தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது, உடனடியாக பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றார். இதையடுத்து, ஏனைய பல உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர். கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவு தவறானது, அதை தாம் ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

telo2.JPG

முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், வலி கிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஸ், நிர்மலநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜிதரன்  உள்ளிட்டவர்கள் அதை எதிர்த்தனர். கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும் என்றனர். கட்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் உள்ளன, ஒவ்வொரு மாவட்டமும் தத்தமது இஸ்டத்திற்கு முடிவுகளை எடுக்க முடியாது. ஏனைய கட்சிகள் எவ்வளவு கட்டுப்பாடாக இருக்கிறார்கள், ரெலோ யாழ் மாவட்டக்குழுதான் கட்டுப்பாடின்றி செயற்படுகிறது என்றனர்.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் இதை ஏற்கவில்லை.

ரெலோவில் அண்மைக்காலத்தில் இணைந்து சிறிகாந்தாவுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் இளம் ரெலோ உறுப்பினர்களே, சிவாஜி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

இந்த விவாதங்கள் முடிவற்று நீண்டதால் அதிருப்தியடைந்த ரெலோவின் முன்னாள் யாழ் மாவட்ட பொறுப்பாளர் திலீப், மத்தியகுழு உறுப்பினர் ரெமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார். தலைமைக்குழுவிற்குள் தகுதியற்றவர்கள் சிலர் வருவதற்கு தான் கதவைத்திறந்து விட்டு தவறிழைத்து விட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து சில உறுப்பினர்கள் தாம் சிவாஜியை ஆதரிக்கப் போவதாக கையை உயர்த்தினர். வாக்கெடுப்பு நடத்தி சிவாஜிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றவே, யாழ் மாவட்ட குழு அங்கத்தவர்களிற்கு முழுமையாக அழைப்பு விடுக்கப்படவில்லையென்றும், நீண்டகாலத்தின் பின்னர் சிலர் “கூட்டி“ வரப்பட்டதாகவும் தீர்மானத்தை எதிர்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

telo3.JPG

இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் சிவாஜிக்கு ஆதரவாக 23 பேர் வாக்களித்தனர். யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், வலி கிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஸ், நிர்மலநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜிதரன்  உள்ளிட்ட 5 பேர் அதை எதிர்த்தனர். 4 பேர் நடுநிலை வகித்தனர்.

இதேவேளை, ரெலோவின் இன்றைய கலந்துரையாடல் நடைபெற்ற யாழ் மாவட்ட அலுவலகத்தின் உள்ளும் வெளியிலும் சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ரெலோவின் யாழ் மாவட்ட அணியிலுள்ள ஒரு பகுதியினர் சிவாஜியை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/68612

Link to comment
Share on other sites

திருகோணமலை பிரகடனம் எனும் சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்

 

திருகோணமலை பிரகடனம் எனும் சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்-Sivajilinga Election Manifesto Launch

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய இனத்தின் திருகோணமலைப் பிரகடனம் எனும் தேர்தல் விஞ்ஞாபனம்  திருகோணமலையில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (09) குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை பிரகடனம் எனும் சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம்-Sivajilinga Election Manifesto Launch

 

 
 

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்..

  • புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து தமிழ்த் தேசத்தின் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
  • இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான சர்வதேச பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.
  • வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்க படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள்  துரிதப்படுத்தப்படல் வேண்டும்.
  • வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல் பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • வடக்கிற்கு மகாபலியின் நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் தொல்லியல் திணைக்களம் வன வள திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில வழிபாட்டுத்தலம் ஆக்கிரமிப்புகளை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
  • போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களிடம் இருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
  • வடக்கு கிழக்கிற்கான அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
  • வடக்கு கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும் மேற்கூறிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்ற மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

எனும் விடயங்கள் குறித்த தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்) 

https://www.thinakaran.lk/2019/11/09/அரசியல்/43629/திருகோணமலை-பிரகடனம்-எனும்-சிவாஜிலிங்கத்தின்-தேர்தல்-விஞ்ஞாபனம்

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

ரெலோவில் அண்மைக்காலத்தில் இணைந்து சிறிகாந்தாவுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் இளம் ரெலோ உறுப்பினர்களே, சிவாஜி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

2010 இல் இவர்கள் TELO, TNA ஐ விட்டு விலகி TNLA ஆரம்பித்து விட்டு 2011 இல் மீண்டும் TELO, TNA இல் இணைந்த கதை ஏதோ நினைவுக்கு வந்து போகிறது. 🤣

https://en.m.wikipedia.org/wiki/Tamil_National_Liberation_Alliance

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.