• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
விவசாயி விக்

வெளிநாட்டுக்காரர்

Recommended Posts

(30 வருடங்களிற்கு பின் ஊர் பயணம்.  எனது மாமனாரின் சாம்பல் கரைக்க கீரிமலைக்கு சென்றோம். எனது அனுபவங்களை சிறு கதைகளாக பகிர்கிறேன்.)

luggage-info.jpg

"அத்தான், எயர் போர்டில முழுசி முழுசி உங்களை பார்ப்பினம் பயந்தால் உடனே விசாரிக்க கூப்பிட்டு காசு பறிக்க பார்ப்பினம்"  மச்சானின் அறிவுரை மனதில் ஓடுகிறது.

குடும்பத்துடன் எயர் லங்கா விமானத்தில் இறங்கி வரி திணைக்களம் நோக்கி நடக்கின்றோம்.  இராணுவ சீருடையில் சின்ன பொடியள் நின்று எங்களை முழுசி பார்க்கிறார்கள்.  நாங்கள் அவர்களை அசடடை செய்யாமல் நடக்கின்றோம். 

ஓடுபாதைக்கு அப்பால் வான்படை துருப்புகள் பழைய ரஷ்ய விலங்கூர்திகளை கழுவி கொண்டிருத்தந்தார்கள். 

"பேரிச்சம் பழம் கூட தேறாது," எம்முடன் பயணித்த ஒரு கனடா அண்ணர் சிரித்து கொண்டே சொன்னார்.  நானும் சுற்றவர பார்த்துவிட்டு சிரித்தேன்.

"குண்டுவெடிப்பிற்கு பிறகு எல்லா இடமும் ஆர்மி தான்"   அக்கா  அண்ணருக்கு  சொல்லி கொண்டு வந்தார். 

எம்மை உற்று நோக்கினார் அதிகாரி.  எனது குழந்தைகளுக்கு முதல் பயணம் அவர்கள் எப்போது அங்கிருந்து வெளிக்கிடலாம் என்று ஆங்கிலத்தில் அங்கலாய்த்து கொண்டிருந்தார்கள்.   

அதிகாரியும் கனடா பாஸ்போர்டை பார்த்து கடுப்பில் கணணியை தட்டி முடித்து ஆவணங்கள் தந்தார்.  அவருக்கு தெரியும் இந்த கூடடத்திடம் ஒன்றும் தேறாது.  

வரியில்லா அங்காடிகள் ஊடாக வெளிக்கிட்டு வந்தோம்.  அங்காடிகளில் குளிரூட்டி, துவைப்பி, தொலைக்காட்சி தகடுகள், கணனி என்று கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள்.  

எம்மை கண்டவுடன் தமிழில் கூவினார்கள்.  "வெளியில் வாங்குவதிலும் பார்க்க 40 விகிதம் கழிவு"   நன்றி சொல்லி கொண்டே அங்காடிகளை தாண்டி உடைமைகளை எடுக்க செல்கின்றோம்.  

எம்மை ஒரு சிங்கள சுமை தூக்கி பட்டாளம்  தொடர்கிறது.   நாமும் பெரிய குடும்பம் என்ற படியால் அதில் ஒருவரை நான் தேர்ந்தெடுத்தேன்.  

எனது தாயார் "ஏன் அவங்கள்?  நாங்கள் தூக்கலாம் தானே?

எனக்கோ திரும்பி அந்த அப்பாவிக்கு இல்லை என்று சொல்ல மனமில்லை. 

அவர்  ஓடி போய் பைகள்  சுழலியில் நின்று என் துணைவி காட்டும் பைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.  சுங்கவரி அதிகாரி மேல்மாடி கண்ணாடி அறையில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்தார்.  

சுமை தூக்கி இல்லாமல் பைகள் எடுத்து வெளியேறும் வெள்ளை, சிங்கள பயணிகளை நிறுத்தி விசாரித்து அனுப்பி கொண்டிருந்தார்கள்.   

எமது 13 பைகளை இரண்டு தள்ளியில் ஏற்றி சுமை தூக்கி இன்னொரு உதவியை பிடித்து தள்ளி கொண்டு எம் முன்னால்  சென்றார்.   சுங்கவரி அதிகாரிக்கு எதையோ சிங்களத்தில் சொன்னார்.  அவரும் எம்மை போகுமாறு சைகை செய்தார். 

சுமைதூக்கி புன்சிரிப்புடன் என்னை பார்த்தார்.   நான் புன்சிரிப்புடன் தாயாரை பார்த்தேன்.  

"ம்ம்ம் இவர் இல்லாட்டில் மினக்கெடுத்தி இருப்பங்கள்"  தாயார். 

வெளியில் வந்து எமது வண்டிக்கு காவல் நின்றோம்.   32 செல்சியஸ் எனக்கு வேர்த்து ஒழுகியது.  

சுமைதூக்கி இரகசியமாக "எமக்கு சம்பளம் இல்லை.  டிப்சுக்கு வேலை செய்கிறோம்"  வழிந்தார்.   நான் அதை நம்பவில்லை என்றாலும்   கனடா கலாச்சாரத்தின் படி சிறு உதவி செய்ய எனது பணப்பையை துழாவுகிறேன்.

சுமை தூக்கி "டொலர் இருக்கா?"  கொச்சை தமிழில் கேடடார்.   

"இல்லை எல்லாவற்றையும் ரூபாவாக மாற்றிவிடடோம்" நான்.  

வாடகை வண்டி வந்தது. வேற்று ஒழுகி சுமை தூக்கிகள் பத்திரமாக பைகளை ஏற்றி வைத்தார்கள்"

ஆளுக்கு ஆயிரம் ரூபா எடுத்தேன்.  " ஏன்டா அவ்வளவு?  நூறு ரூபா காணும்."  தாயார்.   அதை கேட்டு ஏக்கத்துடன் முகம் சுருங்கி இருந்தனர் எமது சுமை தூக்கிகள்.  

நான் தாயாரை கேட்காமல்  ஆளுக்கு ஆயிரம் கொடுத்தேன்.  அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  

எமக்கு கதவு திறந்துவிட்டு நாம் ஏறிய பின் அதை சாத்தி எமது சிங்கள வாகன ஓட்டிக்கு "பார்த்து ஓடு" என்று சிங்களத்தில் அறிவுறுத்தினார்.

என்னை பார்த்து சொன்னார்கள்.  "ஸ்துதி மாத்தையா!" .  எனக்குள் ஒரு குளிர்ச்சி.  "ம்ம்ம் ஸ்துதி மல்லி"

வாகனம் வெளிக்கிட்டது.  எனது மாமனார் வைத்தியசாலையில் இருக்கும் போது பகிர்ந்த பழைய நினைவுகளில் ஒன்று வந்தது.   

"தம்பி 50, 60 களில் சிங்களவர் எங்களை மாத்தையா என்று தான் அழைத்தார்கள்.  ஏனென்றால் அவர்களில் பலர் தமிழ் வியாபாரிகளிடம் கூலிக்கு வேலை செய்தவர்கள்.  இப்ப காலம் மாறி போச்சு!"

ம்ம்ம்ம் காலம் திரும்பவும் மாறுது சிந்தித்துக்கொண்டே நீர்கொழும்பை ரசிக்க தொடங்கினேன். 

 • Like 14
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, விவசாயி விக் said:

(30 வருடங்களிற்கு பின் ஊர் பயணம்.  எனது மாமனாரின் சாம்பல் கரைக்க கீரிமலைக்கு சென்றோம். எனது அனுபவங்களை சிறு கதைகளாக பகிர்கிறேன்.)

luggage-info.jpg

-----எமது 13 பைகளை இரண்டு தள்ளியில் ஏற்றி சுமை தூக்கி இன்னொரு உதவியை பிடித்து தள்ளி கொண்டு எம் முன்னால்  சென்றார்.   சுங்கவரி அதிகாரிக்கு எதையோ சிங்களத்தில் சொன்னார்.  அவரும் எம்மை போகுமாறு சைகை செய்தார். 

விவசாயி விக்,  13 சூட்கேசிலை...  அப்பிடி என்ன பொருட்களை, கொண்டு சென்றீர்கள்? 
என்று அறிய... ஆவலாக உள்ளது. :)

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் தான் ஆசை.  அம்மாவையும் மனுசியையும் கேட்கவேணும்.  நான் ஒரு முதுகு பையோட போனனான்.  😪

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, விவசாயி விக் said:

சுமைதூக்கி இரகசியமாக "எமக்கு சம்பளம் இல்லை.  டிப்சுக்கு வேலை செய்கிறோம்"  வழிந்தார்.  

2015 இல் 25-26 வருடங்களின் பின்பு மனைவியும் நானும் போகையில் இப்படித் தான் ஒருவர் வந்து ஒட்டிக் கொண்டார்.விருப்பமில்லா விட்டாலும் எதுக்கும் உதவுமே என்று கூட்டி போனால் முதலிலே கூறிய தொகையை விட ஏறத்தாள இரண்டு மடங்கு கூடவே அதுவும் குரலை கொஞ்சம் உயர்த்தி கேட்டார்.
முதலில் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைத்தவர் இப்போ முழு சிங்களவனாக மாறிவிட்டார்.முதலிலேயே பேசிய தொகை எடுத்து இது வேணுமா?வேண்டாமா?புடி என்று பதிலுக்கு நிற்காமல் தள்ளிக் கொண்டு போய்விட்டேன்.
2017இல் போனபோது 2-3 பேர் தமிழிலேயே சுற்றினார்கள்.அகப்படவே இல்லை.

சரி விவசாயி பயணத்தை முழுதாக எழுதுங்கள்.

10 hours ago, தமிழ் சிறி said:

விவசாயி விக்,  13 சூட்கேசிலை...  அப்பிடி என்ன பொருட்களை, கொண்டு சென்றீர்கள்? 
என்று அறிய... ஆவலாக உள்ளது. :)

ஆட்கள் கூடனால் பொதியும் கூடும்.

இங்கிருந்து 50 இறாத்தல் இரண்டு பொதி.சின்ன பொதி 15 இறாத்தல்.கணனி பொதி என்று வேற அது கணக்கில்லை.
அப்படிப் பார்த்தா ஒராளுக்கே 3-4 பொதி வந்துடுமே?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சப்போர்ட் 

Untitled-10(97).jpg

"அத்தான் ஊருக்கு போகும் போது பார்த்து போங்கோ!  டிரைவரை அவசர படுத்தாதைங்கோ.  ஆளோட முன்னுக்கு இருந்து கதை குடுங்கோ.  ஒருத்தரோடையும் அரசியல் கதைச்சு போடாதைங்கோ!"  மச்சினன் சொல்லி அனுப்பி இருந்தான்.

வாகனம் நீர்கொழும்பு தெருவால் யாழ் நோக்கி பயணிக்கிறது.  நீர் கொழும்பு வீடுகள் மாளிகைகள் போல் இருந்தது.  அடுத்தடுத்து அழகு அலங்கார அங்காடிகள்.  எங்களது வெளிநாட்டு முவா (MUA) கூட்டம் கூட வீட்டு அடித்தளங்களில் வைத்து தான் வியாபாரம் செய்கிறார்கள்.  ஆனால் இங்கு கண்ணாடி பளிங்கு அங்காடிகள் பல.

"நீர்கொழும்பின் பொருளாதாரம் என்ன? வாகன விற்பனை நிலையங்களும், அலங்கார அங்காடிகளும், மாளிகைகளும் அள்ளி கொட்டி கிடக்கு" இலகுவான ஆங்கிலத்தில் எங்களது வாகன ஓட்டி துசாரவிடம் கேட்டேன்.  அவருக்கு தமிழ் தெரியாது.

"இந்த பக்கத்தை சின்ன இத்தாலி என்று அழைப்பார்கள்.  கத்தோலிக்கர்கள் நிறைந்த இடம்.  இந்த மாளிகைகளில் பலதில் ஆக்கள் இல்லை.  அவர்கள் இத்தாலியில் இருந்து தங்க கட்டிய விடுமுறை வீடுகள்" அவரின் பேச்சில் ஒரு நக்கலும் சின்ன எரிச்சலும் தெரிந்தது. 

"இந்த தேவாலயத்தில் தான் குண்டு வெடித்தது" சொல்லி கொண்டே தாண்டி போனார்.  தேவாலயத்திற்கு முன் காவல் நின்ற துருப்பு முறைத்து பார்த்தார்.  

வாகனம் புத்தளம் கொழும்பு தெருவால் அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.  தெருவை கார்பெட் வீதி என்று அழைத்தார்கள்.  கனடா தெருவிலும் பார்க்க சீரமைப்பாக இருந்தது.  

முந்திய லொறிகள் சிலதே இருந்தது.  பெரிய லொறிகள், கனரக கட்டுமான இயந்திரங்கள் என்று எல்லா வெளிநாட்டு நவீன இயந்திரங்களையும் கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.  

"முந்தி வாகனம் போனால் பின்னுக்கு ஒரு புகை படலத்தை விட்டு செல்லும்.  இப்ப ஓட்டோவில் கூட புகையை காணோம் ?" கேட்டேன்.

"இப்ப நாங்கள் எமிசன் சோதனை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும்" துசார சொன்னார். 

"தெருக்களும் அருமையாக உள்ளது" சொன்னேன் நான். 

"எல்லாம் ராஜபக்ச கட்டி தந்தது"  ஆங்கிலத்தில் துசார சொன்னார். 

":எல்லாம் சீனா கடன்"  ஆதங்கத்துடன் தாயார் தமிழில் பின்னிருந்து முணுமுணுத்தார்.

வந்து ஒரு மணி நேரத்தில் அரசியல் பேச்சுக்கு அடித்தளம் இடடார் வாகன ஓட்டி.  மச்சினன் சொன்ன எல்லா அறிவுரையையும் கேட்ட நான் அரசியலுக்கு மட்டும் விலக்களித்தேன்.

"நீங்கள் யார் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" வினவினேன். 

"கோத்தபாய தான் நாட்டுக்கு வேண்டும்.  எமக்கு பாதுகாப்பு தேவை. " துசார சொன்னார். 
ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பு பல சிங்கள மக்களில் ஒரு பீதியை உருவாக்கி இருப்பதை உணர கூடியதாக இருந்தது. 

இரு மணிகள் ஓடி இருக்கும்.  தெருவில் ஒவ்வொரு சில கிலோ மீட்டருக்கு இரு காவல் துறையினர் வேகப்பிடி கருவியுடன் நின்றார்கள்.  

"ஒவ்வொரு வாகன அளவிற்க்கு ஏற்ப வேகம் இருக்கும்" தெருவோர அடையாளத்தை காட்டினார் துசார.

"நாங்கள் ஓட்டிகள் வாகன விளக்கை அடித்து காட்டி எங்கு காவல் துறையினர் நிற்கிறார்கள் என்று அறிந்து வேகத்தை குறைப்போம்." விளக்கினார்.

"கனடாவிலும் அப்படிதான்.  அனால் இப்ப கைபேசி மென்பொருள் எல்லாம் வந்திடுச்சு" விளக்கினேன் நான்.

மாதம்பை முருகன் கோவிலை தாண்டி சென்றோம்.  பின் நிறுத்தி திரும்பி சென்று வழிபட்டு இளநீர் வாங்கி குடித்தோம்.    அங்கிருந்த பிச்சை எடுப்போருக்கு குழந்தைகளிடம் காசு கொடுத்து குடுக்க வைத்தேன். 

மாதம்பை முருகன் கோவிலின் அழகை ஆல மரத்தின் கீழ் இருந்து ரசித்தேன்.  தாய் குலங்கள் யாழ் செல்லும் அவசரத்தில் வாகனத்திற்குள் இருந்து கூவி அழைத்தார்கள்.   
"நாங்கள் மூண்டு கிழமை சுற்றுலா வந்திருக்கிறம்.  என்ன அவசரம்?" சினந்தேன் நான்.  மாமியும் மருமகளும் வென்றார்கள்.

சிங்களத்திலும் தமிழிலும் உண்டியல் என்று எழுதி இருந்தது.  அதில் ஒரு ஐயாயிரம் ரூபாவை எனது மூத்தவனிடம் கொடுத்து "உன் காது பிரச்சினை, பேச்சு நல்லா வர வேண்டி உண்டியலில் போடு".   காவலாளிகள் எனது மகனை பார்த்து புன்முறுவினர்.

"இந்த பக்கம் தமிழர் இருக்கிறார்களா?" கேட்டேன்.

தயங்கி சிந்தித்து "ஒரு சிலர் இருக்கிறார்கள்" சொன்னார் துசார.  "அடுத்து எங்கே?" கேடடார்.

கூகிள் வரைபடத்தை பார்த்து "அனுராதபுரம் சென்று அங்கிருந்து A 9 தெருவால் செல்வோம்.  தெருக்கள் நல்லது தானே?" கேட்டேன்.  ஓம் என்று தலை ஆட்டினார் துசார.

வாகனம் பல தெரு வேக தடுப்புகளையும், முழுசி பார்க்கும் துருப்புகளையும், காவல் துறையினரையும் தாண்டி சென்றது.   புத்தளம் வந்தடைந்தோம்.   பல முஸ்லிம் கடைகள், மசூதிகள், மாளிகளை தாண்டி சென்றோம்.

நான் கேட்க முன் "இது சின்ன அரேபியா.  எல்லோரும் அங்கு கக்கூஸ் கழுவுகிறார்கள் ஆனால் இங்கே அரபி சேக் போல் பென்சில் உலவுகிறார்கள்"  துசாரவின் பேச்சில் ஒரு கடுப்பு தெரிந்தது.   சிங்கள முஸ்லீம் பிரிவினை குண்டு வெடிப்பின் பின் சில மாதங்களில் வங்காள விரிகுடா போல பிரிந்திருந்தது.

ஒரு கொத்து ரொட்டி கடையை கண்டேன்.  பழைய முஸ்லீம் கடை கொத்து ரொட்டி வாசம் வீச, "இங்க எப்படி சாப்பாடு?"  கேட்டேன்.

"ஐயோ இங்க சாப்பிட வேண்டாம்.  இவர்கள் கெமிக்கல் கலந்து முஸ்லீம் இல்லாதோரை மலடாக்குகிறார்கள்." துசார பட படத்தார்.

"எனக்கு மூண்டு பொடியள் ஏற்கனவே.  இலவச கப்பாத்து சேவையை ஏன் விடுவான்?" நக்கலடித்தேன்.  சிரித்தார் வாகன ஓட்டி.  

"இருள போகுது வீடடை போகோணும்" பின்னிருந்து பொம்பிளையள் தின்ன தடை போடடார்கள்.

வாகனம் திரும்பி அனுராதபுரம் நோக்கி சென்றது.  பல அங்காடிகள் வாசலில் தாடியுடனும் குல்லாவுடனும் முஸ்லிம் சகோதரங்கள் ஆவலுடன் தாண்டி செல்லும் வாகனங்களை பார்க்கிறார்கள்.  எல்லாம் தாண்டி சென்றது.   

புர்கா அணிந்த பெண்கள் அந்த சுடு வெய்யில் தாக்க வேர்த்து நடந்து சென்றார்கள். 

"தொண்ணூறுகளில் பெண்கள் சீலையை வைத்து தலையை மறைத்தார்கள்.  ஆனால் இப்ப புர்கா அணியினம்."  அம்மா சொன்னார். 

"அப்ப இருந்தது சூஃபி இஸ்லாம்.  சவூதி காசை கொட்டி பலரை வகாபிகளாக மாற்றிவிட்டது.  அதன் பயனை இப்போது அனுபவிக்கிறார்கள் அப்பாவிகள்" எனது ஆதங்கத்தை கொட்டினேன்.

வாகனம் அனுராதபுரத்தை நோக்கி சென்றது.  இருட்ட தொடங்கி இருந்தது.  கார்பெட் வீதி என்றாலும் தெரு விளக்குகள் இருக்கவில்லை.   அடுத்தடுத்து வெள்ளை விகாரைகள்.  பல மக்கள் தெருவில் டோர்ச் லைட் அடித்து நடந்து சென்றார்கள். 

"இந்த பகுதியில் நிறைய ஏழை விவசாயிகள் வாழ்கிறார்கள்" சின்ன வெட்கத்துடன் சொன்னார் துசார.  
"கோத்தபாய வந்தால் தான் இவர்களுக்கு சுபீட்ச்சம்"  புகழ்ந்தார்.

"ம்ம்ம் வந்து இன்னும் சீனாவிட்ட கடன் வாங்கி கடடுவினம்" முணுமுணுத்தார் துணைவி தமிழில்.

திடீர் என்று ஒரு டோர்ச் லைட் ஒன்று வாகனத்தை ஓரங்கட்டுமாறு சைகை செய்தது.

"மன்னிக்கவும் மாத்தையா நான் கதையில் கவனத்தை இழந்து வேகத்தை கூட்டி விட்டேன். வாகனத்திற்குள் இருங்கள்.  கதைத்து விட்டு வருகிறேன்."  தனது பணப்பையில் இருந்து காசை தேடுகிறார். "என்னிடம் ஐந்தாயிரம் ரூபா தாழும் சில்லரையும் தான் இருக்கு.  உங்களிடம் ஆயிரம் ரூபா இருக்கா? "

"ஏன் ஆயிரம் ரூபா?"வினவினேன்.  

"சப்போர்ட் குடுக்க வேணும்" அப்பாவியாக வழிந்தார் வாகன ஓட்டி.  காசை கொடுத்தேன்.  அதை தனது வாகன ஓட்டுனர் அட்டையை சுத்தி கொண்டு காவல் துறையிடம் சென்றார்.  ஒரு நிமிடத்தில் சிரித்து கொண்டு வந்தார். 

"எல்லாம் ஓகே" வாகனம் வெளிக்கிட்டது. 

"இங்க வாகனம் வேகமா ஓடினால் 3500 ரூபா தண்டம்.  அதில காவல் துறைக்கு இருபது விகிதம்.  பின் வாகன ஓட்டி தபால் சாலை சென்று தண்டம் கட்டி துண்டு வாங்கி பின் நீதி மனை சென்று சான்று காட்டி தான் வாகன அடடையை திரும்பி பெறலாம்.  தலையிடி மாத்தையா"  விளக்கினார்.

"அது தான் காவல் துறை ஆயிரம் ரூபா சப்போர்ட் வாங்கி ஒரு முன்னூறு ரூபா நோகாமல் இலாபம் பார்க்கிறது"  சொல்லிவிட்டு விளங்குகிறதா என்று என்னை நோக்கினார். 

"விளங்குது விளங்குது.  அது தான் ஒவ்வொரு முடக்கிலும் நின்று சேவை செய்யினம் " தலையாட்டி கொண்டே சிரித்தேன்.   வாகனம் வெளிக்கிட்ட்து.  ஊரை பார்க்கும் ஆவல் இன்னும் கூடுகிறது.

 • Like 13

Share this post


Link to post
Share on other sites

விவசாயி ஏன் தொடராக எழுதாமல் தனித்தனியே எழுதுகிறீர்கள்.
தொடராக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

இடையிலே வருபவருக்கு எது முதல் எழுதியது என்று தெரியாதே?

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, ஈழப்பிரியன் said:

2017இல் போனபோது 2-3 பேர் தமிழிலேயே சுற்றினார்கள்.அகப்படவே இல்லை.

திரும்பி வரும் போது இது தான் எங்களது அனுபவமும்.  இரண்டாயிரம் காணாது என்று இன்னும் ஆயிரம் பறித்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, ஈழப்பிரியன் said:

விவசாயி ஏன் தொடராக எழுதாமல் தனித்தனியே எழுதுகிறீர்கள்.
தொடராக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

இடையிலே வருபவருக்கு எது முதல் எழுதியது என்று தெரியாதே?

உண்மை.  யாரவது மட்டுறுத்தினரை வைத்து தொடராக்க முயற்சிக்கிறேன். நன்றி. 

Share this post


Link to post
Share on other sites

விவசாயியை மீண்டும் காண்பதில் சந்தோசம்.

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, குமாரசாமி said:

விவசாயியை மீண்டும் காண்பதில் சந்தோசம்.

அந்த மனுசன் ஊர் போய் வந்து கதை எழுதுது இவருக்கு  கண்டதில சந்தோஷமாம்  மிச்சத்தையும் எழுதுங்கள் விவசாயியே

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, குமாரசாமி said:

விவசாயியை மீண்டும் காண்பதில் சந்தோசம்.

உங்களை காண்பதில் எனக்கும் மகிழ்ச்சி.  

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த மனுசன் ஊர் போய் வந்து கதை எழுதுது இவருக்கு  கண்டதில சந்தோஷமாம்  மிச்சத்தையும் எழுதுங்கள் விவசாயியே

நாலு வருசம் காணாமல் போய் மீண்டிருக்கிறேன்.  அது தான் பழைய உறவுகள் சொந்தம் கொண்டாடினம்.  😀

Share this post


Link to post
Share on other sites

அசத்தலாக இருக்கிறது ......
முக்கியமானவற்றை மட்டும் எழுதி உங்கள் நேரம் எங்கள் நேரம் இரண்டையும் 
சேமித்து இருக்கிறீர்கள்.

இதில் பெருத்த சோகம் என்றால் .........

நீர்கொழும்பில் ஓர் சின்ன இத்தாலி இருக்கிறது 

புத்தளத்தில் ஒரு சவுதி அரேபியா இருக்கிறது 

வடக்கு கிழக்கு தமிழன்  உலகிலேயே பொருளாதாரத்தை விஞ்சும் 
மேல் நாடுகளில் லட்ஷ கணக்கில் கூட வாழ்ந்தும் 

வந்த ஊரிலும் காவடி ஆடுவதும் ...... மாதவிடாய் சுழற்சி தொடங்கிய பதின்ம வயது பெண்ணை கேலிக்கப்படரில் ஏற்றுவதும் .... திரும்பி ஊருக்கு போனாலும்  ஆலுக்கு கீழே சும்ம இருந்த முனியப்பருக்கு 
தேர் கட்டி இழுப்பதிலும் கடந்த  30 வருடத்தை தொலைத்த ஒரு கேடு கேட்ட இனமாக இருக்கிறான் என்பதே. 

 • Like 4
 • Haha 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ்தான் 
எனக்கு மனதுக்குள் ஒரு குற்ற உணர்வை தருகிறது 

தொடருங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறேன் 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், விவசாயி விக்...!

கண்டது மிகவும் மகிழ்ச்சி......!


காலம் தன் பாட்டில்....பயணிக்கின்றது...!

எமது கனவுகள் மட்டும்....வெறும் நினைவுகளாக....!

Share this post


Link to post
Share on other sites

அனுபவப் பகிர்வை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மேலும் தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன்......

 

.தொடரை  1..2..3..என்று இலக்கமிடுங்கள்

. ஒழுங்கமைப்புடன் இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த மனுசன் ஊர் போய் வந்து கதை எழுதுது இவருக்கு  கண்டதில சந்தோஷமாம்  மிச்சத்தையும் எழுதுங்கள் விவசாயியே

memes on vadivelu

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கின்றது பயணக் கட்டுரை......தொடருங்கள் நண்பரே......!   😁

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Maruthankerny said:

உங்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ்தான் 
எனக்கு மனதுக்குள் ஒரு குற்ற உணர்வை தருகிறது 

தொடருங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறேன் 

இதில் என்ன குற்ற உணர்வு.  எனக்கு தெரிந்த தமிழில் தட்டி விடுகிறேன் அவ்வளவு தான் 😁

13 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், விவசாயி விக்...!

கண்டது மிகவும் மகிழ்ச்சி......!


காலம் தன் பாட்டில்....பயணிக்கின்றது...!

எமது கனவுகள் மட்டும்....வெறும் நினைவுகளாக....!

நாம் இந்த உலகை விட்டு போகும்போது அந்த நினைவுகள் தான் வாழ்க்கையாகி இருக்கும்1

12 hours ago, நிலாமதி said:

மேலும் தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன்......

 

.தொடரை  1..2..3..என்று இலக்கமிடுங்கள்

. ஒழுங்கமைப்புடன் இருக்கும். 

நன்றி. எண்ணிடுறேன். 

1 hour ago, suvy said:

நன்றாக இருக்கின்றது பயணக் கட்டுரை......தொடருங்கள் நண்பரே......!   😁

ஊக்கத்திற்கு நன்றி சகோ.

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, விவசாயி விக் said:

அத்தான் ஊருக்கு போகும் போது பார்த்து போங்கோ!  டிரைவரை அவசர படுத்தாதைங்கோ.  ஆளோட முன்னுக்கு இருந்து கதை குடுங்கோ.  ஒருத்தரோடையும் அரசியல் கதைச்சு போடாதைங்கோ!"  மச்சினன் சொல்லி அனுப்பி இருந்தான்.

விவசாயி நாங்கள் முதல் தடவை போகும் போது ஊரிலிருந்தே வாகனம் கொண்டு வந்தார்கள்.
அடுத்த தடவை நானே வாகனம் ஒழுங்கு செய்து போயிருந்தேன்.

அப்போது எனது மைத்துனன் சொன்ன சேதி அத்தான் முன் சீற்றில் மட்டும் இருந்துடைங்கோ.சாரதி நித்திரை கொள்ளாமல் இருக்கிறானா என்று பாருங்கோ.

நேற்று மாத்தயாவாக இருந்த கதை எப்படி வெளிநாட்டுக்காரனாக மாறியது?

Share this post


Link to post
Share on other sites

3. தெருவிளக்கு 

ledlightglare.jpg

"ஆ ஆ அனுராதபுரம் கிட்ட வந்துடீங்களோ? அங்க மாங்கோ மாங்கோ எண்டு ஒரு சாப்பாடு கடை இருக்கு. நல்ல சாப்பாடு.  ஓட்டுனருக்கு ஒரு கோப்பி வேண்டி குடுங்கோ"  மச்சினன் வட்ஸ் அப்பில் கனடாவில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்தான். 

 தெருவில் விளக்குகள் இல்லை.  விளக்கோ மற்றும் பிரதிபலிப்பான் இல்லாத துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒரு சிங்கள முதியவரை எம் ஓட்டுனர் சிராய்த்துக்கொண்டு போனார்.  பின் சிங்களத்தில் திட்டினார்.  

"அவசரமில்லை துசார.  பார்த்து போங்கோ" வாகனத்தின் வேகத்தை கட்டு படுத்தினேன். "மாங்கோ மாங்கோ இல  சாப்பிட்டு போவம்."

துசார கண்ணில் ஒரு உற்சாகம் தெரிந்தது.  "அது நல்ல கடை.  நல்ல சாப்பாடு"

"ஏன் இவ்வளவு செலவில் தெருவை போட்டுவிட்டு தெருவிளக்கை போடவில்லை?" ஆதங்கத்தை கொட்டினேன்.

ஓட்டுனர் தனது தலைவரை குற்றம் சொல்ல விரும்பாமல் எதையோ முணுமுணுத்து சமாளித்தார்.

கடையில் இறங்கி எல்லோரும் மலசல கூடங்களை பாவித்தோம்.  நான் ஒரு மேசையை பிடித்து எல்லோருக்கும் நெஸ்கபே கோப்பி குழந்தைகளுக்கு நெக்ட்டோ சிங்கள நங்கியிடம் உத்தரவிடடேன்.
சாப்பாடு பட்டியலை துளாவினேன்.  பயங்கர பசி.

"ஏன் இருக்கிறாய்? அங்க மாமி சாப்பாடு செய்துபோட்டு காவல் இருக்கிறா!" அவசரப்படுத்தினார்கள் மாமியும் மருமகளும்.  பசி சூடை கண்ணால் அவர்களுக்கு காட்டினேன்.  அவர்கள் அசட்டை செய்யாமல் கோப்பியை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறினார்கள்.  

நான் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவருக்கு ரோல்ஸ் வாங்கி கொடுத்து கிளம்பினோம்.

"இந்த பொம்பிளையளை யாழ்ப்பாணத்தில கழட்டிவிடோணும்.  இல்லையோ சுற்றுலாக்கு ஆப்பு தான்" பசி கோபத்தில் மனம் திட்டமிட்டது.

வாகனம் அனுராதபுர சுற்று சந்தியில் சுற்றி எ9 தெருவில் தொடர்ந்தது.  மதவாச்சி தாண்டி வவுனியா நோக்கி பயணம்.  

"சுந்தரம் சித்தப்பா இப்பவும் வவுனியாவிலேயே?" தாயாரை வினவினேன். 

"ஓம் பிள்ளையும் இங்க தான் இருக்கிறா" தாயார்.  "சுந்தரம் இளைப்பாறிடடான். பிள்ளையிண்ட மனுசன் பள்ளிக்கூட அதிபரா இருக்கிறார்."

"ம்ம்ம் பிள்ளையக்காவிண்ட கலியாணத்திற்கு 86 ஆம் ஆண்டு வந்தது ஞாபகம் இருக்கு.  குரங்குகளுக்கு வெடி எறிஞ்சு கலைச்சனான்" பழைய நினைவுகளை சிரித்துக்கொண்டே சொன்னேன். 

"அப்பா தட்ஸ் சோ மீன்.  ஏன் அந்த பாவ மிருகத்தை துன்புறுத்தினீங்கள்?"  ஆறு வயது மகள் பின்னிருந்து குரலிட்டாள்.  அவளின் பேரில் வனம்  என்ற அர்த்தம் இருந்த படியால் வந்த பாசம் போல்.

"பேபி இல்லாவிட்டால் குரங்குகள் சோடனைகளை பிச்சு உதறியிருக்கும்" காரணம் சொன்னேன். 

"ஸ்டில் நீங்கள் அதை சூ என்று கலைச்சிருக்கலாம்" பிஞ்சு மனசு குரங்கிற்காக வாதிட்டது.  தாயாரும் நானும் சிரித்தோம்.

"இது பகிடியில்லை" ஆங்கிலத்தில் அண்ணர்கள் தங்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள். 

"ம்ம் வாங்கோ உங்களுக்கு எங்கட குரங்குகளை பற்றி சொல்லிதாறன்.  நீங்களும் அதுகளிண்ட சகோதரங்கள் எண்ட படியால் ஆதரவு குடுக்கிறியள்"  சத்தமாக சொன்னேன்.  பின்னுக்கு இருந்து குரங்கு போல் கூச்சலிட்டு குழந்தைகள் நக்கலடித்தார்கள்.

வவுனியா சந்திக்கு வந்திருந்தோம்.  பல வியாபார தட்டிகள் சிங்களத்தில் உறுத்தி கொண்டிருந்தது.  தமிழ் தட்டிகள் அரிதாக இருந்தது.   பேருந்து நிலையத்தில் தார் எடுபட்டு மண் பள்ளம் திட்டியாக இருந்தது. 

 
ஓமந்தை தொடக்கம் மாங்குளம் வரை பல பெரிய தட்டிகள் சிங்களத்தில் தான் இருந்தது.  

"ஓமந்தை, தமிழ் பக்கம் தானே?  தாயாரை கேட்டேன்.  "ஓம் ஆனால் இப்ப ஆர்மியும் அவன்களிண்ட குடும்பங்களும் தான் கூட" பின்னிருந்து குரல்.

தெரு பக்கங்களில் வங்கி, காப்புறுதி, வாகன தமிழ் பதாதைகள் கண் கூசும் வர்ணங்களில் ஒளிக்க தொடங்கி இருந்தது.  

"சிங்கள பக்கம் ஒண்டும் இப்படி பதாதைகள் இருக்கவில்லை" முணுமுணுத்தேன்.   இரவு 9 மணி என்றாலும் எ9 தெரு ஓய்வில்லாமல் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தது.   பல சொகுசு பேருந்துகள் தெற்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது.  

"எல்லாம் வெள்ளவத்தைக்கு போகுது"  துசார சொன்னார்.  சிங்கள பக்கங்களில் நீல நிற இபோச தட்டிவான் பேருந்துகள் தான் கூட.   ஆனால் யாழை நோக்கி பல ஆடம்பர சொகுசு வாகனங்கள் சென்று வந்தன. 

"பொருளாதாரம் கொழும்பிற்கு பிறகு யாழ் பக்கம் தான் வீசுது." பிலத்து சொன்னேன்.  "எல்லாம் வெளிநாட்டு காசு" அம்மா பதிலளித்தார். 

இன்னொரு காங்கேசந்துறை கொழும்பு பேருந்து தெரு சட்டத்தை மீறி சீறி போனது.  

"எனக்கு எண்ட முதலாளி யாழிலும் திருகோணமலையிலும் பார்த்து ஓட சொன்னவர்.  உங்கட ஆக்கள் சட்டத்தை மீறி ஓடி விபத்துகள் கூட"  ஓட்டுனர் சொன்னார்.  நானும் தலையாட்டி ஆமோதித்தேன்.


"இந்த வானொலி கோபுரத்தை தான் புலிகள் தகர்த்தவர்கள்.  புதுசா கட்டி இருக்கு" துசார சொன்னார்.  

கோபுரம் தாண்டி முருகண்டி தாண்டி கிளிநொச்சி சந்தி வந்தடைந்தோம்.  நாலு தெரு சந்தி நடுவில் பல தெருவிளக்குகள் பளிச்சென்று தோற்றமளித்தது நகர்.  

"எல்லாம் புலி கட்டிய கட்டுமானம்"  அம்மா தமிழில் முணுமுணுத்தார்.  

நான் ஒரு நாலு அங்காடி கட்டிடத்தை தேடினேன்.  அதை கண்டவுடன் "இந்த கட்டிடத்திற்க்கு கனடா தாய் வீடு பத்திரிகையில் விற்க விளம்பரம் செய்திருந்தார்கள்.  எவ்வளவு சொல்லுங்கோ பார்ப்பம்?"" கேட்டேன்.

"ஐம்பதாயிரம் டொலர்?" அம்மா சும்மா ஒரு எண்ணை எடுத்துவிடடார்.   

"இல்லை. $940,000.  கிட்டத்தட்ட மில்லியன் டொலர்" கூறினேன்.  ஓட்டுனரின் வாய் பிளந்து இருந்தது.

"இங்க உள்ள கடைக்கு ஏன் கனடாவில விளமபரம் செய்யினம்? இந்த கடை அம்பது இலச்சம் தேறாது. வாடகை இரண்டு இலட்ச்சம் கிடைப்பதே பெரிய விசயம் "  பேச்சுக்கள் குதித்தார் ஓட்டுனர்.  

"ஆ அங்க உள்ள ஆட்களுக்கு விபரம் தெரியாது.  நல்ல காசோட இருக்கினம்.  கடைல விற்பனை விளம்பரத்தை காணவில்லை. யாரோ வாங்கிவிடடார்கள்"  பரந்தன் தாண்டி ஆனையிறவு நோக்கி பயணித்தோம். 

ஆனையிறவு சோதனை சாவடியில் நின்ற துருப்பு நமது வாகனம் வேகத்தை குறைக்க நிற்காமல் போகுமாறு சைகை செய்தார்.   

"இது தான் புலி கொண்டுவந்த புல்டோசர்" என்று புலிகள் முகாமை தாக்க பயன்படுத்திய கனரக இயந்திரத்தை காட்டினார் ஓட்டுனர்.  

"ம் தெரியும் நாங்கள் அப்ப யாழில் தான் இருந்தோம்" இறுக்கத்துடன் சொன்னேன்.

யாழுக்குள் 30 வருடம் கழித்து புகும் போது மனது ஆறுதல் அடைந்து எனக்குள் ஏதோ உருத்திய விடயம் சீரமைப்பான உணர்வு.  தாய் நிலத்தின் மகிமையோ என்னவோ!

இரவு 11 மணி ,கொடிகாமம் வந்தது , "கொடிகாம தெருவால் போனால் விரைவாக வீடடை போகலாம்"  தாயாருக்கு என்னை நாள் பூரா பட்டினி போட்டது உருத்தியிருக்கும் போல. 

நானும் கூகிள் வரைபடத்தை பார்த்து வலது பக்கம் போக சொன்னேன்.  அத்தெருவில் வேலை நடந்துகொண்டிருந்தது.  பள்ளங்கள் எல்லா இடமும் ஒரு நூறு அடி தாண்ட ஐந்து நிமிடம் எடுத்தது.

"துசார வாகனத்தை திருப்பும் இந்த தெருவில் போனால் வீடு போய் சேரும்போது வாகனத்திற்கு சில்லு இருக்காது" வாகனம் திரும்பி எபி 32 எடுத்து வல்லை தெருவால்  நெல்லியடி செல்ல திடடம்.

தெருவும் சீராக இருந்த படியால் வாகனம் வேகமா சென்றது.  யாழில் காவல் துறை தடைகள் சிங்கள பக்கம் இருந்தது போல் இருக்கவில்லை.  

தெருவில் சின்ன சின்ன கோவில்கள் பல தென்பட்டன ஆனால் பனைகளை காண கிடைக்கவில்லை. 

வல்லை எபி 30 தெருவில் வலது பக்கம் திரும்பி ஊர் பக்கம் வேகமெடுத்தது.  வல்லையில் பனைகளை காணவில்லை.  இறால் நீர் தேக்கங்களையும் காணவில்லை.  

"வரம்புயர நீர் உயரும்.  வடமராட்சி வரவேற்கிறது." என்ற வளைவை தாண்டி வந்தோம்.  பல நெல் வயல்கள் தெரிந்தது.   மழை பெய்த படியால் நீர் உயர்ந்திருந்தது. 

வல்வெட்டித்துறை 6 KM என்ற பதாகை தெரிந்தது.  அதன் முன் தகரத்தால் கூரை மேய்ந்த இராணுவ முகாம் தெரிந்தத்த்து.  வல்வெட்டித்துறை பெயரை பார்த்து என்னை நோக்கி சிரித்தார் ஓட்டுனர்.  தெரியும் என்று சிரித்தேன் நான்.

வாகனம் கரணவாய் வந்தது எங்கும் தெருவிளக்குகள் LEd  வெளிச்சம்.  ஓட்டுனரை பார்க்கிறேன்.
அவர் வியப்போடு பார்த்தார்.  "இதெல்லாம் எங்கட ஆக்கள் தங்கட காசில போட்ட விளக்குகள்.  ஒன்று பத்தாயிரம் ரூபா மின் வாரியம் இலவசமாக மின்சாரம் கொடுக்கும்" சொன்னேன்.

ஒரு பிரமிப்போடு பார்த்தார் துசார.   நெல்லியடி வந்தது.  "எங்கே திரும்புவது?" ஓட்டுனர். 

"வாகன சமிக்ஞை விளக்கில் வலது பக்கம் போகோணும்"  சொன்னேன். 

"எல்லா இடமும் தெருவிளக்கு இருக்கு இங்க. நாங்கள் நீர்கொழும்பில் வெளிக்கிடடதற்கு இங்க தான் முதல் சமிக்ஞை விளக்கு" வியப்படங்காமல் சொன்னார் சிங்கள ஓட்டுனர்.

பெருமிதத்தோடு வீடடை கண்டுபிடிக்க புகுந்து நோக்க தொடங்கினேன்.   

 • Like 9

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

விவசாயி நாங்கள் முதல் தடவை போகும் போது ஊரிலிருந்தே வாகனம் கொண்டு வந்தார்கள்.
அடுத்த தடவை நானே வாகனம் ஒழுங்கு செய்து போயிருந்தேன்.

அப்போது எனது மைத்துனன் சொன்ன சேதி அத்தான் முன் சீற்றில் மட்டும் இருந்துடைங்கோ.சாரதி நித்திரை கொள்ளாமல் இருக்கிறானா என்று பாருங்கோ.

வழக்கமான கொழும்பு யாழ் வான் சாரதிகள் அனுபவசாலிகள், விபத்துகள் குறைவு. புதுசா வாற சாரதிகள் தான் நித்திரை தூங்கி விபத்து ஏற்படுத்திறவங்கள். இரவு வான் ஓட்டும் சாரதிகள் அதிகாலை 3/4 முன்னர் வீட்டை வந்திடுவினம்.

சாரதி தூங்காமல் பேச்சு குடுக்க தான் முன் சீற்றில் இருக்க சொல்றவை. பாடல்களை சத்தமா போட்டு வெத்திலையும் போட்டால் தூங்காமல் ஓடுவினம், அதையும் மீறி தூக்கம் வரும்போல இருந்தால் இறங்கி தண்ணியால முகம் கழுவுவாங்கள்/ அரைமணி நேரம் தூங்கிவிட்டு ஓட்டுவார்கள்.

இப்ப விபத்துகளுக்கு பயந்து பலரும் பகலில் தான் பயணம் செய்கிறார்கள்.

ஜப்பான் வான்களில் ஹைறூவ் வான்கள் பயணத்திற்கு உகந்தவை, காலை நீட்டி வசதியாக பயணிக்கலாம். டொல்பின் ரக சிறிய வான்களில் காலை நீட்டி மடக்க இயலாது, இவற்றில் 5பேர் பயணிக்கவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10-12பேர் வரை நெருக்கி பயணிப்பார்கள், காவல்துறை தண்டம் அறவிடும்.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, குமாரசாமி said:

memes on vadivelu

FB-IMG-1443630963436.jpg

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

விவசாயி நாங்கள் முதல் தடவை போகும் போது ஊரிலிருந்தே வாகனம் கொண்டு வந்தார்கள்.
அடுத்த தடவை நானே வாகனம் ஒழுங்கு செய்து போயிருந்தேன்.

அப்போது எனது மைத்துனன் சொன்ன சேதி அத்தான் முன் சீற்றில் மட்டும் இருந்துடைங்கோ.சாரதி நித்திரை கொள்ளாமல் இருக்கிறானா என்று பாருங்கோ.

நேற்று மாத்தயாவாக இருந்த கதை எப்படி வெளிநாட்டுக்காரனாக மாறியது?

வெளிநாட்டுக்காரர் தொடர் தலைப்பு.  மாத்தையா, சப்போர்ட், தெருவிளக்கு எல்லாம் தொகுப்புகள்.

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, விவசாயி விக் said:

"எல்லாம் புலி கட்டிய கட்டுமானம்"  அம்மா தமிழில் முணுமுணுத்தார்.  

இறுதி யுத்தகாலத்தில் கிளிநொச்சி முற்றாக அழிந்து போனது, 2009 பின் மக்களால் தான் கட்டியெழுப்பப் பட்டது. வீதி அரசினால் புனரமைக்கப்பட்டது.

2002கும் 2005கும் இடையான காலத்தில நண்பன் ஒருத்தனோட கதைச்சன், மச்சான் இயக்கம் கிளிநொச்சிய கட்டியெழுப்புவதை பாக்க இனி சண்டை நடக்காது தானே என்று சொன்னன்! அவன் சொன்னான் இல்லையடா சண்டை நடந்தாலும் கிளிநொச்சில கைவைக்கேலாது, ஏவுகணைப் பாதுகாப்பிருக்கும் (தரையால வாறத கற்பனையும் பண்ணேல).
எல்லாம் ஒரு கனவு போல இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தால் கடற்புலிகளின் தலைவி மீலா விடுதலை!   பிரான்ஸ் தூதரக தமிழ் அதிகாரியான நயனாகணேசன் விசாரணைக்கு பெரிதும் உதவினாரர் • பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ். கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிக்கு 10 நாட்களில் பிணை வழங்கப்பட்ட ஒரே வழக்கு இந்த வழக்காகும். • தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்புலிகளின்தலைவி. பகிரதியும் 9 வயது மகள் பார்கவியும் விடுதலை. • பயங்கரவாத தடை சட்டத்தின். கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒரே மகளான. ஒன்பது வயதான பார்கவி பிறப்பால் ஒரு பிரெஞ் நாட்டவராகையினால் தாயினதும் மகளினதும் விரைவான விடுதலை சாத்தியமானது. • பகிரதி கைது 1998ம் ஆண்டில் பிரான்ஸ். நாட்டிற்கு சென்றிருந்த மீலா என்ற பகிரதி முருகேசு சுகவீனம் அடைந்திருந்த தனது தாயாரையும் உறவினர்களையும் பார்ப்பதற்காக இலங்கை. வந்து சில வாரங்கள் தங்கி மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 2015ம் ஆண்டு பங்குனி மாதம் 2ம் திகதி கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது ஒன்பது வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.. பகீரதி போலீசாரால் கைது செய்ய பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளான பார்கவியும் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால்அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடாத்தப்பட்ட பத்து நாட்களும் சிறுமி பார்கவி தனது தாயுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். • பகீரதிக்கு எதிரான விசாரணைகள். சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்கு எதிராக விசாரணையை நடாத்திய பயங்கரவாதத் தடைப் பிரிவு பொலிசார் சந்தேக நபரான பகிரதி முருகேசுவையும் அவரது மகளான பார்கவியையும் பத்துநாட்கள் தடுப்புக் காவலின் பின்னர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு விசாரணையின். முதல். அறிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். • விசாரணை அறிக்கை.  அந்த அறிக்கையில் 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சிகள் பெற்ற பின்னர் 1996ஆம் ஆண்டு கடற் புலிகள் பிரிவிற்கு உயரத்தப்படுவதற்கு முன்னர் நான்கு ஆண்டுகள் அவர் ஒருதொடர்பாடல் உத்தியோகத்தராகப் பணியாற்றி உள்ளார் • பகிரதி சாம்ராஜ் திருமணம் சந்தேக நபரான. பகிரதி முருகேசு. சாம்ராஜ் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஜெயகணேஸை விடுதலைப் புலிகள் அமைப்பின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். பகிரதியை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருமணத்தின் பின்னர் பகிரதி முருகேசுவும் அவரது கணவரும் விடுதலைப் புலிகளின் மேலதிகாரிகளின் ஆசீர்வாதத்தோடு அவ்வியக்கத்தின்சர்வதேசசெயற்பாடுகளின் பிரிவு இயக்குனர்களாக செயற்படுவதற்காக 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சந்தேக நபரான பகிரதி பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் கடற் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு. தலைவியாக பணியாற்றினார் என பயங்கரவாதப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். • பகிரதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பகிரதி முருகேசுவும் அவரது மகளான பார்கவியையும். பயங்கரவாதத். தடைப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பத்து நாட்களில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். • பிணை மனு பகிரதி முருகேசு சார்பாக பிணை வழங்கும்படி நீதிமன்றிற்கு முன்வைக்கப்பட்ட எனது சமர்பனத்தில். இந்த வழக்கின். சந்தேக நபரான பகிரதி முருகேசு 2005 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சில். வாழ்ந்து வருகிறார். தனது ஒன்பது வயது மகளுடன் 2015ம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி கிளிநொச்சியில் வசிக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான தனது தாயை பார்வையிட்டு ஆறுதல் கூறுவதற்காவே இந்த நாட்டிற்கு வருகை தந்தார் . கிளிநொச்சியல் அவரது தாயார் வீட்டிலிருந்து. புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இரகசிய பொலிசார் அவரை விசாரித்தனர் எனினும் அவரைகைது செய்வதற்குஅப்போதுஎவ்வி தமுயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை • பார்கவி ஒரு பிரெஞ்சு பிரஜை இந்த வழக்கில் சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் ஒன்பது வயதுடைய ஒரே மகளான பார்கவி பிறப்பால் ஒரு பிரெஞ் பிரஜை .பிரெஞ் மொழியில் மட்டுமே தேர்ச்சியுடையவராகையால் இவ்விசாரணை காலத்தில் அவரது கல்வியை. தொடர்தல் இருப்பிடம் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. • சட்டமாஅதிபர் பிணை வழங்க சம்மதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மட்டுமே உள்ளபடியால் சட்டமா அதிபர் திணைக்களம் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் சந்தேக நபரை விடுதலை செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்துகொழும்பு மேலதிக நீதவான் அருனிஆட்டிகல சந்தேக நபரான பகீரதி முருகேசுவை மூன்று நிபந்தனைகளுக்கமைய பிணை வழங்கினார் (1) இரண்டுவாரங்களுக்கொருமுறை முப. 9 மணிக்கும் நற்பகல் 12 மணிக்குமிடையில் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். (2) கடவுச் சீட்டு நீதிமன்றிற்கு கையளிக்க வேண்டும் (3) ரூபா 200 000 பிணை விதிக்கப்பட்டது. தாயும் மகளும் நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் பொழுது நீதிபதி நீதிமன்ற பதிவாளர் வழக்குத் தொடர்வர்களான பொலிசார் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த வழக்காளிகள் சாட்சியமளிக்க நீதிமன்றம் வருகை தந்தவர்கள் பார்வையாளர்கள் அனைவரது உணர்வு பூர்வமான பார்வைகள் சிறுமி பார்கவிமீதே விழுந்தன –இந்த வழக்கில் சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டதையடுத்து தொடர்ந்து மேலதிக விசாரணை மேற்கொண்ட. பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் ஒவ்வொரு தவணையிலும் மேலதிக விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தனர் • சாம்ராஜ் – சிவசுப்பிரமணியம் ஜெய்கணேஷ் விசாரணை அறிக்கைகள். சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஜெயகணேஷ் தற்போது தமிழ் ஈழவிடுதலைப் புலிகளிகளுக்குச். சொந்தமாகவிருந்த. உலகெங்குமுள்ள ஏறத்தாழ. .(1) 200 எரிபொருள் சேவை நிலையங்களையும் (2) தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள பல சிறப்பங்காடிகளையும் (3) ஐவரிகோஸ்ட்டில் அமைந்துள்ள துருப்பிடிக்காதஉருக்குஉற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையையும் முகாமைத்துவம் செய்வதாகவும் சாம்ராஜ் பிரான்சிற்குச் சென்றதன் நோக்கம் தமிழ். ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு வலையமைப்பொன்றை கட்டியெழுப்புவதாகும் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்ததாகவும் அறிக்கை சமர்ப்பித்ததுடன் மேலும் அந்த அறிக்கையில் • சாம்ராஜ் காஸ்ட்ரோவின் நெருக்கமான உதவியாளர் சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ்காஸ்ட்ரோவின் ஒருநெருக்கமான. உதவியாளராவார். நிதியை தனியாகக் கையாள்வதில் காஸ்ட்ரோ கேபியை நம்பாததால்; காஸ்ட்ரோவிற்கு அறிக்கையிடுவதற்காக சாம்ராஜ் அனுப்பிவைக்கப்பட்டதுடன் புலம் பெயர்ந்த தமிழர்களுடன் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கிளைகளை நிருவகித்த நெடியவனோடு சாம்ராஜ் செயற்பட்டதாகக் அறிக்கையில் பதியப்பட்டதுடன் மேலும் அந்த மேலதிக அறிக்கையில் கூறப்பட்டதாவது ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கிய நெடியவன் உலகெங்கும் நிதிதிரட்டியபோது சாம்ராஜ் ஆயுதங்களை கொள்வனவு செய்து அப்பணத்தைச் செலவிட்டதுடன் சாம்ராஜ் சர்வதேச ஆயுத வியாரிகளோடு தொடர்புகொண்டுசெயற்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் சாம்ராஜின் பணிகளுள் மேலும் நிதிகளைத் உருவாக்குமுகமாக வெளிநாடுகளில் பாதுகாப்பான இடங்களில் பணத்தை முதலீடு செய்வதும் செயல்படுத்தப்பட்ட தெனவும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மேலும் அந்த அறிக்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சாம்ராஜினால் கையாளப்பட்ட நிதிகள் அவரிடமே இருந்தன அதனைப் பெறுவதற்கு கேபிஎனும்பத்மநாதன் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. • புத்துயிரூட்டல் 2010ஆம் ஆண்டின் பின்னர் சாம்ராஜின வகிபாகம் மாறியது தமிழ் ஈழவிடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிப்பதற்காக அவர் நெடியவனோடு பணியாற்றத் தொடங்கினார். அவரது அண்மைக்கால. செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில்இளைஞர்நிகழ்வுகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் நிதியளிப்பதாக கண்டறியப்பட்டுளளது. பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு அறிக்கையின்படி சாம்ராஜ் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் அணியினதும் பணத்தை சுத்தப்படுத்தல் ஆயுதமற்றும் வர்த்தகம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் மூலம் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதிசேகரிப்பதற்குப் பொறுப்பான அவ்வியக்கத்தின் குற்றவியல் சர்வதேச பிரிவினதும் ஓர் அங்கமாவார் இக்குழுவின் செயற்பாடுகள் 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பித்தன. சாம்ராஜின் குழு உறுப்பினர்கள் இலங்கையில் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கிய இராணுவ. நடவடிக்கைகளின் இறுதிக் கட்டங்களில் தப்பியோடிய ஒரு சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான வினாயகம் அச்சுதன் மற்றும் சங்கர் ஆகியோராவார் எனக் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது பகீரதிக்கு எதிராக வழக்குத் தொடுக்க சான்றுகள் இல்லை எனவே சந்தேக நபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எனது வாதத்தில்! • பகிரதி சாம்ராஜ் விவாகரத்து இந்த வழக்கின் சந்தேக. நபரான பகிரதி தனது முன்னாள் கணவரான சாம்ராஜியிடம் விவாக ரத்து பெற்றமைக்கான சட்டரீதியான ஆவணத்தை பொலீசாரிடம் கையளித்துள்ளார் 2015ம்ஆண்டு பங்குனி. மாதம் 2ம் திகதி கட்டுநாயகா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட. பிரான்ஸ். நாட்டை வதிவிடமாகக் கொண்ட பகிரதி. முருகேசு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டு 15 மாதங்கள் கடந்தநிலையில் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகளை நடாத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசார் சந்தேக. நபரான. பகிரதி முருகேசுவின் முன்னாள் கணவரான சாம்ராஜ்க்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கைகளை மட்டும் தாக்கல் செய்துள்ளனர். சந்தேக நபரான பகிரதி முருகேசுவின் கணவரான சாம்ராஜ்க்கு எதிராவே பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசார் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சந்தேக நபரான பகிரதி முருகேசு கடற் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு தலைவியாக பணியாற்றினார் என பயங்கரவாதப் புலனாய்வுப். திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்த போதிலும் அதனை உறுதிப்படுத்த .. எந்த விதசான்றுகளையும். பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசார் முன்வைக்கவில்லை . அறிக்கைகளை மட்டும் சான்றாகக் கொண்டு வழக்கத் தாக்கல் செய்ய முடியாது என எனது வாதத்தை முன்வைத்ததுடன் மேலும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தது யாதெனில் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்படவேண்டும். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதி முருகேசுவின் மகள் அவரது தாயார் கைது செய்யப்பட்டதிலிருந்து கடந்த 15 மாதங்களாக தனது பிறந்த நாட்டிற்கு செல்ல முடியாததினால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . எனவே இந்த விடயங்களை. கவனத்தில் கொண்டு சந்தேக. நருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் உள்ளனவா என பயங்கரவாதத் தடைப் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை இந்த நீதிமன்றிற்கு அறிவிக்கவேண்டும் என எனது வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு தெரிவிப்பதாக பொலிசார் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்த நிலையில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் சட்டமா அதிபரை தொடர்பு கொண்டதையடுத்து சட்டமா அதிபர் இந்த வழக்கின் சந்தேக நபரான பகிரதியை விடுதலை செய்யநீதிமன்றில்அறிக்கைசமர்ப்பித்ததையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி அருணு ஆட்டிகல பகிரதி முருகேசுவை விடுதலை செய்தார். . • தூதரக உதவி பகிரதி முருகேசுவின் ஒரே மகளான பார்கவி பிறப்பால் ஒருபிரெஞ் நாட்டவராகையினால் பிரெஞ் தூதரகம் அவருக்கு தூதரக உதவிகளை வழங்கியது. அப்பிள்ளை பிரெஞ்மொழியில்மட்டுமேதேர்ச்சியுடையவராகையால் இவ்விசாரணை காலத்தில் அவரது கல்வி தொடர்பாக. பிரெஞ் தூதரகம் கரிசனை வெளியிட்டமை தாயும் மகளும்விடுதலையாவதற்கு முக்கிய காரணமாகும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சகல விசாரணை. தினங்களிலும் தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் தமிழ் அதிகாரியான நயனாகணேசன் பகீரதியினது விடுதலையில் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். https://uthayannews.ca/2020/07/09/சட்டத்தரணி-கே-வி-தவராசாவ/?fbclid=IwAR2Q5jAXtj5_XrArsZie9EVyKDAr3beS_FCB66jyx1sgNetl2eEnT8YNl88
  • கவனம் பாத்து, எஜமானர்  முகம் கோணப்போறார். எப்பிடித்தான் இவங்களால மாத்தி மாத்திப் பேச முடியுது? மானங் கெட்டவன் எல்லாம் இனத்துக்கு தலைவனாம்!
  • இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.    சில சிங்கள கட்சிகள் கடந்த காலங்களில் அரசியலில் மிளிர, ஏமாந்த தமிழரே காரணமானார்கள். இன்றும் நிலைக்க சுயநல தமிழர் காரணம்.  பவுத்த சிங்களம் போதும் தாம் அரசியல் அமைக்க, என்று சிங்களம் எவ்வளவுதான்  எகத்தாளம் போட்டாலும், உண்மை அதுவல்ல. சிங்களம் அரசியல் செய்ய,அசைக்க முடியாத வலு தமிழரே. அல்லாவிடின் சிங்களம் ஏன் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டி இடுகிறது? ஏன் தலைமைகளை விலை கொடுத்து இழுக்கிறது? ஏன் நம்மை தனித்து விட மறுக்கிறது? 
  • அதில்லை விசயம்.... பிரச்சனை... எக்கோ எண்டு சொல்லிக் கொண்டெல்லே நிக்கிறார். 
  • மகன், குஜராத்திக்கார பிள்ளை ஒருத்தரை தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லுறார். பிள்ளை... நல்ல வடிவு.... அங்கிள், ஆன்டி எண்டு சரியான பாசமா இருக்கிறா. கொஞ்சம் பசையான ஆக்கள்.... மோடியிண்ட தூரத்து சொந்தமாமே. நாங்களும் விசாரிச்சு பார்க்கேக்குள்ள, அவியல் அங்க பிராமணராமே. சுத்த சைவமமாம். நாமளும் இனி மச்சம் சாப்பிடாமல் இருப்போமா எண்டு எண்ட மனிசி சொல்லுறா.... ஹீ... ஹீ.... இதுதான் நிலைமை பையா... உந்த நக்கல் அடிக்கிற கோஸ்ட்டிகளுக்கும் நாளை இதுதான் நிலைமை எண்டு விளங்கினா, கப்சிப் ஆயிடுவினம்.