• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
விவசாயி விக்

வெளிநாட்டுக்காரர்

Recommended Posts

1 hour ago, விவசாயி விக் said:

பொருளாதாரம் கொழும்பிற்கு பிறகு யாழ் பக்கம் தான் வீசுது." பிலத்து சொன்னேன்.

30 வருசத்துக்கு பிறகு போன உங்களுக்கே உந்த சிந்தனை வருது எண்டால்....
அங்கையிருக்கிற சிங்களவர் எப்பிடியெல்லாம் யோசிப்பாங்கள்?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

விவாசாயி விக், பயணக்  கட்டுரைகள் என்றாலே... சுவாரசியமானவை.
அதுகும்... தாய் நாட்டு பயணக் கட்டுரைகள், வாசிக்க ஆர்வம் ஊட்டுபவை.
உங்களின்... மிக அழகான எழுத்து வர்ணனையில்...
இந்தப் பயணக் கட்டுரை, மிகவும் நன்றாக உள்ளது. tw_thumbsup:

Share this post


Link to post
Share on other sites

அருமைத்தம்பி விவசாயியை மீண்டும் காண்பதில் சந்தோசம்.

கதையை  பின்னர்  வாசித்து  கருத்தெழுதுகின்றேன்

Share this post


Link to post
Share on other sites
On 11/11/2019 at 6:05 PM, Maruthankerny said:

அசத்தலாக இருக்கிறது ......
முக்கியமானவற்றை மட்டும் எழுதி உங்கள் நேரம் எங்கள் நேரம் இரண்டையும் 
சேமித்து இருக்கிறீர்கள்.

இதில் பெருத்த சோகம் என்றால் .........

நீர்கொழும்பில் ஓர் சின்ன இத்தாலி இருக்கிறது 

புத்தளத்தில் ஒரு சவுதி அரேபியா இருக்கிறது 

வடக்கு கிழக்கு தமிழன்  உலகிலேயே பொருளாதாரத்தை விஞ்சும் 
மேல் நாடுகளில் லட்ஷ கணக்கில் கூட வாழ்ந்தும் 

வந்த ஊரிலும் காவடி ஆடுவதும் ...... மாதவிடாய் சுழற்சி தொடங்கிய பதின்ம வயது பெண்ணை கேலிக்கப்படரில் ஏற்றுவதும் .... திரும்பி ஊருக்கு போனாலும்  ஆலுக்கு கீழே சும்ம இருந்த முனியப்பருக்கு 
தேர் கட்டி இழுப்பதிலும் கடந்த  30 வருடத்தை தொலைத்த ஒரு கேடு கேட்ட இனமாக இருக்கிறான் என்பதே. 

👍👍. அது எப்படிங்க நான் நினைக்கிறத அப்படியே சொல்லலுறீங்க. என்டோட மைன்ட்  வோய்ஸ் ஐக்கிய அமெரிக்காவரை கேட்குதா? 😂

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ஏராளன் said:

இறுதி யுத்தகாலத்தில் கிளிநொச்சி முற்றாக அழிந்து போனது, 2009 பின் மக்களால் தான் கட்டியெழுப்பப் பட்டது. வீதி அரசினால் புனரமைக்கப்பட்டது.

அது தான் உண்மை.

1 hour ago, tulpen said:

வந்த ஊரிலும் காவடி ஆடுவதும் ...... மாதவிடாய் சுழற்சி தொடங்கிய பதின்ம வயது பெண்ணை கேலிக்கப்படரில் ஏற்றுவதும் .... திரும்பி ஊருக்கு போனாலும்  ஆலுக்கு கீழே சும்ம இருந்த முனியப்பருக்கு 
தேர் கட்டி இழுப்பதிலும்

😪

Share this post


Link to post
Share on other sites
On 11/11/2019 at 6:05 PM, Maruthankerny said:

அசத்தலாக இருக்கிறது ......
முக்கியமானவற்றை மட்டும் எழுதி உங்கள் நேரம் எங்கள் நேரம் இரண்டையும் 
சேமித்து இருக்கிறீர்கள்.

இதில் பெருத்த சோகம் என்றால் .........

நீர்கொழும்பில் ஓர் சின்ன இத்தாலி இருக்கிறது 

புத்தளத்தில் ஒரு சவுதி அரேபியா இருக்கிறது 

வடக்கு கிழக்கு தமிழன்  உலகிலேயே பொருளாதாரத்தை விஞ்சும் 
மேல் நாடுகளில் லட்ஷ கணக்கில் கூட வாழ்ந்தும் 

வந்த ஊரிலும் காவடி ஆடுவதும் ...... மாதவிடாய் சுழற்சி தொடங்கிய பதின்ம வயது பெண்ணை கேலிக்கப்படரில் ஏற்றுவதும் .... திரும்பி ஊருக்கு போனாலும்  ஆலுக்கு கீழே சும்ம இருந்த முனியப்பருக்கு 
தேர் கட்டி இழுப்பதிலும் கடந்த  30 வருடத்தை தொலைத்த ஒரு கேடு கேட்ட இனமாக இருக்கிறான் என்பதே. 

மிகவும் சரியான கருத்து.

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, குமாரசாமி said:

30 வருசத்துக்கு பிறகு போன உங்களுக்கே உந்த சிந்தனை வருது எண்டால்....
அங்கையிருக்கிற சிங்களவர் எப்பிடியெல்லாம் யோசிப்பாங்கள்?

யோசிப்பது மட்டுமல்ல அலுவலும் நடக்குது.

12 hours ago, தமிழ் சிறி said:

விவாசாயி விக், பயணக்  கட்டுரைகள் என்றாலே... சுவாரசியமானவை.
அதுகும்... தாய் நாட்டு பயணக் கட்டுரைகள், வாசிக்க ஆர்வம் ஊட்டுபவை.
உங்களின்... மிக அழகான எழுத்து வர்ணனையில்...
இந்தப் பயணக் கட்டுரை, மிகவும் நன்றாக உள்ளது. tw_thumbsup:

நன்றி அண்ணா.  

8 hours ago, விசுகு said:

அருமைத்தம்பி விவசாயியை மீண்டும் காண்பதில் சந்தோசம்.

கதையை  பின்னர்  வாசித்து  கருத்தெழுதுகின்றேன்

அண்ணா வணக்கம்.  உங்கள் கருத்தை பார்க்க ஆவல்.

Share this post


Link to post
Share on other sites

ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் கண்கள் குளமாகின. கதை? பற்றி பின்னர் எழுதுகிறேன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, tulpen said:

👍👍. அது எப்படிங்க நான் நினைக்கிறத அப்படியே சொல்லலுறீங்க. என்டோட மைன்ட்  வோய்ஸ் ஐக்கிய அமெரிக்காவரை கேட்குதா? 😂

 

8 hours ago, சுவைப்பிரியன் said:

மிகவும் சரியான கருத்து.

இது என்னுடைய கருத்து இல்லை ... உண்மை நிலவரம் 
இதுக்கு நானும் பழி சுமந்துதான் ஆகவேண்டும்.

எமது இனத்துக்காக எவ்வளவோ இளைஞர்களும் யுவதிகளும் சாவினை தங்கிகொண்டே 
சிரித்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஒரு பொருளாதார நிலைமையை கட்டி அமைக்க எந்த பயமும் இல்லை 
ஆனாலும் நாம் முயற்சி எதுவும் செய்யவில்லை. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 11/12/2019 at 4:55 PM, விவசாயி விக் said:

வாகனம் கரணவாய் வந்தது எங்கும் தெருவிளக்குகள் LEd  வெளிச்சம்.  ஓட்டுனரை பார்க்கிறேன்.
அவர் வியப்போடு பார்த்தார்.  "இதெல்லாம் எங்கட ஆக்கள் தங்கட காசில போட்ட விளக்குகள்.  ஒன்று பத்தாயிரம் ரூபா மின் வாரியம் இலவசமாக மின்சாரம் கொடுக்கும்" சொன்னேன்

எங்கள் ஊரில் பொது விசயம் என்றால் முன்மாதிரியா இருக்க எப்பவும் ஆட்கள் இருப்பார்கள💪🏽💪🏽💪🏽

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Maruthankerny said:

 

இது என்னுடைய கருத்து இல்லை ... உண்மை நிலவரம் 
இதுக்கு நானும் பழி சுமந்துதான் ஆகவேண்டும்.

எமது இனத்துக்காக எவ்வளவோ இளைஞர்களும் யுவதிகளும் சாவினை தங்கிகொண்டே 
சிரித்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஒரு பொருளாதார நிலைமையை கட்டி அமைக்க எந்த பயமும் இல்லை 
ஆனாலும் நாம் முயற்சி எதுவும் செய்யவில்லை. 

முயற்ச்சி செய்தோம்.  ஆனால் அது சரிவரவில்லை. ஏன் என்று ஒரு தொகுப்பில் விளக்குகிறேன்.  எல்லா பழியையும் வெளிநாடுககாரர் மேல் நானும் ஒரு காலத்தில் போட்டேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

4.  சந்தி சந்தடி 

Nelliyadi-3.jpg

"அத்தான் ஊர்ல நாலு மோதிரம் மூண்டு சங்கிலி போட்டு படங்காட்ட வேண்டாம்.  ஓட்டோவில வந்து சாப்பாடுக்கு காசில்லை என்று அழுவினம்.  வெளிநாட்டுக்காரரை அவையள் வங்கி இயந்திரம் போல தான் பார்ப்பினம் "  மச்சினன் அறிவுரை. அடுத்த நாள் காலை எழும்பி காகம் கரைவதை கேட்டு மகிழ்ச்சியுடன் அசைவு போடுகிறேன்.  

எங்கள் வீட்டில் ஒரு குடும்பம் குடியிருப்பதால் எனது இன்னொரு கனடா மாமனார் வீட்டில் தங்கினோம்.  குளிரூட்டி, துவைப்பி, வெளிநாட்டு கழிவறை என்று வீடு நவீனமாக இருந்தது.   குளிரூட்டி அறை காற்றோட்ட ஓட்டைகளை அடைத்திருந்தாலும் தம்பிரான் கோவிலில் பாட்டு பிலத்து கேட்டது.  மேளமும், நாதசுவரம் விடிய ஆறு மணிக்கே முழங்கியது.  

எழுந்து குளித்து காற்சட்டையை கொழுவி செருப்பை கொழுவிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன்.  விடிய வெயில் சூடு கொளுத்தியது.  எனக்கு வேர்த்து ஒழுகியது.  ஆனாலும் ஒரு மகிழ்ச்சி.  

அதற்குள் துணைவி வீட்டிலிருந்து குரலிடடார்.  "மாமி சம்பல் இடிச்சு வைச்சிருக்கிறா.  றோஸ்ட் பாண் வாங்கி வாங்கோ"  சந்திக்கு போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.   பிள்ளைகள் நேர மாற்றத்தால் நித்திரையால் எழும்ப வில்லை. 

அப்படியே தம்பிரான் கோவில் பக்கம் நடை கட்டினேன்.  அப்போது என்னை கூசி பார்த்து கொண்டு சித்தி ஒருவர் வந்தார்.  எனக்கு அவரை தெரிந்தது ஆனால் அவர் என்னை யாரெண்டு கண்டு பிடிக்க முயன்றார்.  என்னை தொடர்ந்து கோவில் பக்கம் வந்தார்.  

முந்தி இருந்த பாலர் பாடசாலை முருகன் கோவில் கல்யாண மண்டபம் ஆகியிருந்தது.  பக்கத்தில் ஒரு வீடு பாலர் பாடசாலை ஆகி இருந்தது.  முருகன் கோவில் விளமபர சுவரில் ஆசிரியர் தேவை விண்ணப்பிக்கவும் என்று எழுதி இருந்தது.  

இந்த பாலர் பாடசாலையில் தான் தாஸ் குரூப் தங்கிய ஞாபகம் வருகிறது.

தம்பிரான் கோவிலில் ஒரு பத்து பேர் கும்பிட்டு இருந்தார்கள்.  ஐயர் மந்திரம் சொல்லி ஓமம் வளர்த்து கொண்டிருந்தார்.  முன்பு நாங்கள் விளையாடிய பூவரசம் மரங்கள் அப்படியே இருந்ததில் மகிழ்ச்சி.  கோவில், பாம்பு புற்று என்று படங்களை கைபேசியில் தட்டினேன்.  

சித்தி மடடுபிடிக்க முடியாமல் "தம்பி யார் நீங்கள்?"  நான் யாரின் பிள்ளை மற்றும் பேரன் என்று கூறினேன்.  கண்களில் பிரகாசம்.  "டேய் நான் யாரென்று தெரியுதா?  நீ முடக்காட்டில எங்கட வீடடை வந்து கொய்யா களவெடுக்கிறனீ" பிலத்து எனது பெருமை சொல்லி சிரித்தார்.   அப்போது கோவிலுக்கு வந்த இன்னும் சில சொந்தங்கள் பூராயத்தை கேட்டு என்னை சுற்றி வலயம் போடடார்கள்.  

"தெரியும் சித்தி" வழிந்து கொண்டு சொன்னேன்.  ஒவ்வொருவரும் தன்னை தெரிகிறதா என்று கேடடார்கள்.  நான் கனடா முகங்களுடன் ஒப்பிட்டு சிலரை சரியா சொன்னேன்.  

நான் கோவில் பூசையை பார்ப்பதை பார்த்து "இது உங்கட கனடாவில் இருந்து பாமதி வந்து ஒவ்வொரு வருசமும் பத்து நாள் திருவிழா நடத்துறா" சொன்னார்கள்.  "நல்ல விசயம்"

"அக்கா வந்திருக்கிறாவோ?" கேடடார்கள்.  "ஓம் மாமி வீட்டை நிக்கிறா"  அப்படியே என்னையும் தம்பிரானையும் கைவிட்டு சொந்தங்கள் மாமி வீட்டை படையெடுத்தார்கள்.  

நான் புளிய மரத்தை நோக்கி சென்று ஏமாந்தேன்.  புளிய மர காணியில் கத்தரி தோட்டம் இருந்தது.  தோட்டத்தை பார்த்ததில் உற்சாகம் வந்து சில படங்களை தட்டி விட்டு சொந்தக்காரர் வீடுகளை நோடடம் விடடவாறு நடந்தேன்.  

ஓவ்வொரு முடக்கிலும் தெருநாய்கள் ஆனால் முன்பு போல் இல்லாமல் கொழுத்திருந்தன.  தாமும் தம் பாடாக திரிந்தன.   விசர் நாய்களை காணாததில்  திருப்தி.  முன்பு கடி வாங்கி பதினாறு ஊசி குத்திய ஞாபகம் வந்து உடம்பு ஒருக்கால் சிலிர்த்தது.   எதற்கும் நாய்களிடம் ஒரு கண் வைத்திருந்தேன். 

திரும்பி முருகன் கோவில் வந்து ஒழுங்கையால் மகாத்மா தியேட்டர் தெருவிற்கு வந்து நெல்லியடி சந்தி நோக்கி நடந்தேன்.  

எனக்கு இன்னும் வேர்வை கூடி மேற்சட்டை தோய்ந்திருந்தது.  வேர்வையை வழித்து சுண்டி எறிந்துவிட்டு உற்சாகத்துடன் சந்தி வந்தேன்.  எங்கும் பீப் பீப் என்று ஓலி ஓட்டோவும், வாகனங்களும், உருளுந்துகளும் சீறி ஓடின.  

துவிச்சக்கர வண்டிகள் ஒரு  சிலதையே காணக்கூடியதாக இருந்தது.  நான் தெருவை கடந்து சுபாஸ் வெதுப்பக்கத்திற்கு போக காவல் நின்றேன்.  ஒருத்தரும் சடடை செய்யாமல் தம் போக்கில் போனார்கள்.

பக்கத்தில் இருந்த கைபேசி கடையில் இரு இளைய இராணுவத்தினர் எதையோ வாங்கினார்கள்.  அவர்களிடம் துப்பாக்கி இருக்கவில்லை. 

நான் பொறுமை இழந்து கையை காட்டிக்கொண்டு குறுக்கால ஓடி மற்ற பக்கம் சென்றேன்.  வாடிக்கையாளருக்கு இரு பக்கமும் நடை பாதை இருந்தது.  ஒவ்வொரு கடையா பார்த்து கொண்டு சுபாஸ் கடை நோக்கி நடந்தேன்.

எனக்கு முன்னால் ஒரு துரு பிடித்த துவிச்சக்கர வண்டி வந்து திடீர் என்று நின்றது.  ஒரு இளையவர் சிரித்து கொண்டே "நீங்கள் வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறதா உங்கட முன் வீடு காரர் சொன்னவை.  உங்களை பார்க்க தான் வந்தனான். சந்திக்கு போனதா சொல்லிச்சினம்.  நான் ஒரு போராளி காலை இழந்து விட்டேன்"  காலை உற்று நோக்கினேன் அவர் சாரத்தை சற்றே தூக்கி காட்டினார்.  கால் பிளாஸ்டிக்கால் செய்தது.  எண்ணெய் போட்டு துடைத்திருக்க வேண்டும். பளபளத்தது. 

 "எனக்கு சொக்ஸ் தேவை.  எனக்கு உங்களை கேட்க வெட்கமாக இருக்கு ஆனால் நான் செய்யும் வேலை குடும்பத்திற்கு மட்டுமே போதும்.  வாங்கி தருவீர்களா?"

நான் சாந்தி அக்காவுடன் சேர்ந்து உதவிய போராளி கண்முன் வந்து போனார்.  நான் தயங்குகிறேன் என்று நினைத்து "சில வருடத்திற்கு முதல் ஐந்து வெளிநாட்டுக்காரர் எனக்கு ஒரு இலட்ச்சம் தந்தவை.  அதை வைச்சு ஒரு பெட்டிக்கடை வல்வெட்டி துறையில் வைச்சிருக்கிறன்"  என் மாமாவின் முன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள்.

எனக்கு மச்சினனின் அறிவுரை இந்த விடயத்தில் சரி பட்டுவராது என்று தெரிந்தது.  இவர் ஒருவர் தான் காலையில் பார்த்ததில் துவிச்சக்கரவண்டி ஓட்டிய மிக சிலரில் ஒருவர். எமக்காக கால் இழந்தவன் பிச்சை எடுப்பதை பார்க்க கண் கட்டியது.  அவரும் வெட்கத்தில் தலையை மீண்டும் மீண்டும் கோதி கொண்டிருந்தார்.

"எவ்வளவு தேவை?" முகம் இறுக  கேட்டேன்.  "ஒரு இரண்டாயிரம் ரூபா போதும் அண்ணா"  சொன்னார் .  "இஞ்சால வாங்கோ தம்பி" ஓரங்கட்டினேன்.  

கொத்துரொட்டி ஒரு கட்டு தொள்ளாயிரம் ரூபா ஆனால் இவன் இரண்டாயிரம் கேட்கிறான்.  நான் ஒரு காற்சட்டை பையில் சில்லறை தாளுகளையும் மற்றைய பையில் ஐந்தாயிரம் தாள்களையும் வைத்திருந்தேன்.  

"உனக்கு வருசத்துக்கு எவ்வளவு சொக்ஸுக்கு முடியும்?" கேட்டேன்.  " பத்தாயிரம் கிட்ட முடியும் அண்ணா அதை போட்டு தான் செயற்கை கால் போடலாம்.  இப்ப உள்ளது கிழிந்து சிராய்த்து போய் கிடக்கு" இன்னும் சாரத்தை தூக்கி  இரத்த கறையை காட்டினார்.  எனக்குள் குப்பென்று ஒரு சூடு தொடக்கி இன்னும் வேர்த்தது.

புலி சாப்பாட்டு பொதி கேட்டு துன்புறுத்தினம் என்று பொய் சொல்லி அகதி உரிமை பெற்றவர்கள் சொகுசு கார்களும் மில்லியன் டொலர் வீடுகளிலும் வாழ்ந்து ஆங்கிலத்தில் பீட்டர் விடுவது மனதில் வந்து கோபம் இன்னும் கூடியது.  

"இந்தா  தம்பி இதில முப்பதாயிரம் இருக்கு.  பத்தாயிரம் சொக்ஸ் வாங்க.  இருபதாயிரம் ஒரு புது துவிச்சக்கர வண்டி வாங்க.   இந்த கறல் பிடித்த வண்டியை தூக்கி ஏறி.  நான் அடுத்த வருசமும் வருவன் அப்ப முன் வீட்டு அக்காவிற்கு சொல்றன்" ஒருவித பதட்டத்தோடு சொன்னேன்.  

"ஐயோ அண்ணா இரண்டாயிரம் போதும்" அவன் கண்களில் ஆசை இருந்தாலும் அவனது மானம் அதை தடுத்தது.  அண்ணர் போராளிகளை நல்லா வளர்த்திருக்கிறார் என்று தெரிந்தது.

"இல்லை தம்பி வைச்சிரு." காசை கையில் திணித்தேன்.  அவர் தலை கோதுவதை விட்டு எனது கையை இறுக்கி பிடித்திருந்தார்.   

எனக்கு அவருடன் நிற்க ஏனோ பிடித்திருக்கவில்லை.  மன உளைச்சல் கூடியது.  " தம்பி நல்லா இரு.  முயற்சியை கை விடாதே" சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சுபாஸ் கடை நோக்கி நடந்தேன்.  அவன் அங்கு நின்று என்னை பார்ப்பது கழுத்தின் மயிர்கள்  உணர்ந்தது.

சுபாஸ் வெதுப்பக்கத்தில்  ஒரு பெரிய கூட்டமே நின்றது.  அங்கு வரியில் நின்று வாங்கும் பழக்கம் இன்னும் இல்லை என்றதை கண்டேன்.  அடித்துபிடித்து பாண் வாங்கி வெளியில் வந்தேன்.  இந்த முறை சந்திக்கு போய் சுற்றி போக திட்டம்.  

செல்லமுத்தூஸ் கடையில் வந்து என் பழைய நண்பரை தேடினேன்.  அங்கு காசும் மாத்தலாம்.  முதலாளி வர நேரம் எடுக்கும் என்று வேலை செய்த இளையோர் கூறிவிட்டு கடையை திறக்கும் பரபரப்பில் இருந்தார்கள்.

பல கடைகள் எல்லா வகையான பொருட்களும் அங்கிருந்தன.  திருமகள் புத்தகசாலை, மற்றும் சேனாந்தை சந்தை பழைய நினைவுகளை கிளறியது.  அங்கு அங்காடி வைத்திருந்த என் குடும்பத்தினர் இந்திய இராணுவத்துடன் இயங்கிய கைக்கூலிகளால் இலஞ்சம் கேட்டு சுடப்பட்ட இடத்தை பார்க்கிறேன். 
முழங்காலில் கையெடுத்து கும்பிடும் போது வாய்க்குள்ள சுட்டார்கள் என்று நினைவு வந்தது.  தொண்டையில் ஏதோ கட்டியது.   

கார்பெட் தெரு என்றாலும் அதில் இரத்த கறை தெரிந்தது.  பேருந்து நிலையம் பெரிதாக கட்டியிருந்தது.
ஆனால் அதற்கு முன்னாள் சுடப்பட்டு தப்பிய லண்டன் மாமா ஞாபகம் வந்தார்.  ஆனால் மரணித்த மற்றைய 21 பல்கலை மாணவர்கள் ஞாபகம் வரவில்லை.  நிலைய சுவரில்  இரத்த கறைகள் தெரிந்தன, என் மனதில்.

சமிக்ஞை விளக்கில் சிங்கள காவல் துறையினர் நின்று வாகனங்களை ஒழுங்கு படுத்தினர்.   அவர்கள் சைகைக்கு காவல் நிற்கும்போது பக்கத்தில் நிண்ட ஐயாவை கேட்டேன் "சந்தை இப்பவும் இங்க தானோ?"
"இல்லை தம்பி அது பெட்ரொல் ஸ்டேஷன் பக்கம்.  இப்ப இங்க சின்ன அங்காடிகள் இருக்கு.  இதை பெரிய பேருந்து நிலையமாக கட்டிட போயினம்" சொன்னார் ஐயா.  நானும் அவரும் ஒரு சிலரும் தான் நடைவாசிகள் மற்றோர் எல்லாரும் வாகனங்களில் எங்கேயோ அவசரமாக சென்றார்கள்.

நான் இடது பக்கம் திரும்பி கடைகளை பார்த்து கொண்டு முருகன் கோவில் தெருவை நோக்கி நடந்தேன். 

நகை கடைக்குள் யாரோ விடிய வெள்ளனை நகை பாரத்திருந்தார்கள்.  அப்படியே தண்ணி கடை தாண்டி திரும்பினேன்.  சிகை அலங்கார கடைக்கு வெளியால் பல இளையோர் உருளுந்துகளில் நின்று சல்லாபித்தார்கள்.   அதற்கு முன் உள்ள புகைப்பட கடையில் மும்முரமாக ஒரு இளையவர் கணனியில் வேலை செய்திருந்தார். 

அவர்கள் என்னை பார்க்க நான் புன்முறுவலிட்டு தலையை மேலும் கீழும் ஒரு தடவை ஆட்டினேன்.  அவர்களும் திரும்ப மரியாதைக்கு  தலையாட்டி தந்தார்கள்.  முடக்கில் ஒரு ஐந்து நாய்க்கூட்டம் படுத்திருந்தது.  
அவர்களை கண்டும் காணாமல் தாண்டி சென்றேன்.  அதில் இரண்டு பாண் வாசத்தை கண்டு என்னை தொடர்ந்தன. 

நான் செக்கிழுக்கும் ஆலை ஒழுங்கையால் விழுந்து வேகமா நடந்தேன்.  நாய்களும் வேகமெடுத்தன. அங்கு மாடுகள் இப்பவும் செக்கிழுக்கும் சத்தம் கேட்டது.  நல்லெண்ணெய் வாசம் தூக்கியது.

மாமனார் கோவிலுக்கு பூ பறித்துக்கொண்டிருந்தார்.  கல்லெடுப்பது போல் குனிந்தார் எனது தொடராளிகள் தெறித்து ஓடினார்கள்.

"எப்படி சந்தி?" பெருமையாக கேடடார்.  "கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு வளர்ச்சி.  ஒரு பக்கம் தான் பார்த்தனான் பின்னேரம் இன்னொரு சுற்று போக இருக்கு" உற்சாகமாக சொன்னேன். 

"ம்ம் பார்த்து நட இடிச்சுப்போட்டு போயிடுங்கள் இந்த சனம்."  சொல்லி வாய் மூட முதல் உருளுந்தில் யுவதி ஒருவர் பீப் பீப் என்று முடக்கில் சத்தமெழுப்பி வேகத்தை குறைக்காமல் விரைந்து சென்றார்.  மற்ற பக்கத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தெருவில் இருந்து நகர்ந்து மணலுக்குள் வண்டியை விட்டு தப்பினார்.  "இந்த பொடியளை திருத்த முடியாது" சபித்து கொண்டே போனார்.

உரலில் இடித்த சம்பலுடன் முப்பது வருடத்தின் பின் பாண் சாப்பிடும் ஆவலில் மாமி வீடு நோக்கி மாமனாருடன் விரைகிறேன்.

Edited by விவசாயி விக்
 • Like 10
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்

ஆவலுடன்

நான் அங்கு சென்றது போல் ஆசையுடன்  வாசிக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, விசுகு said:

தொடருங்கள்

ஆவலுடன்

நான் அங்கு சென்றது போல் ஆசையுடன்  வாசிக்கின்றேன்

நன்றி அண்ணா.  ஒரு கிழமை யாழில் நின்றாலும் ஏதோ பதினைந்து வருடங்கள் வாழ்ந்த அளவு நினைவுகளை கைப்பற்றினேன்.  இன்னும் இருக்கு :)

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, விவசாயி விக் said:

நன்றி அண்ணா.  ஒரு கிழமை யாழில் நின்றாலும் ஏதோ பதினைந்து வருடங்கள் வாழ்ந்த அளவு நினைவுகளை கைப்பற்றினேன்.  இன்னும் இருக்கு :)

ஒரு கிழமைக்குள் இவ்வளவு சங்கதிகள் தொடரட்டும் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு கிழமைக்குள் இவ்வளவு சங்கதிகள் தொடரட்டும் 

காலை ஆறுக்கு ஒழும்பினால் இரவு 12 மட்டும் மூலை முடுக்கு விடாமல் ஒரே சுற்றல் தான் 😁

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விவசாயி விக் said:

நன்றி அண்ணா.  ஒரு கிழமை யாழில் நின்றாலும் ஏதோ பதினைந்து வருடங்கள் வாழ்ந்த அளவு நினைவுகளை கைப்பற்றினேன்.  இன்னும் இருக்கு :)

நேரமாற்றம் உடம்பு சீரடைய ஒரு கிழமையாகுமே?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் விவசாயி,

அருமையான கட்டுரை. வாசிச்ச உடனே ஊர் விடாய்க்குது எனக்கு. 

முன்பு கருத்துக்களத்தில் நாம் பிடுங்குப்பட்ட காலத்தில் நான் யோசிப்பதுண்டு நீங்கள் ஊருக்கு போய் கனகாலமாக இருக்கும் என்று.

ஆனால் 30 வருடம் எல்லாம் மிகப்பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட ஒரு அரை மனித வாழக்கை!

அடிக்கடி பார்க்கும் எமக்கே ஊரில் பலவிடயங்கள் வியப்பைத்தரும்- உங்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய cultural shock எப்படி இருந்திருக்கும்!

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கோணத்தில் ஊரை பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேரமாற்றம் உடம்பு சீரடைய ஒரு கிழமையாகுமே?

நான் விமானத்தில் படங்கள் பார்க்காமல் தொடர் நித்திரை போட்டு என்னை தயார் படுத்திவிட்டேன். 😁

10 minutes ago, goshan_che said:

வணக்கம் விவசாயி,

அருமையான கட்டுரை. வாசிச்ச உடனே ஊர் விடாய்க்குது எனக்கு. 

முன்பு கருத்துக்களத்தில் நாம் பிடுங்குப்பட்ட காலத்தில் நான் யோசிப்பதுண்டு நீங்கள் ஊருக்கு போய் கனகாலமாக இருக்கும் என்று.

ஆனால் 30 வருடம் எல்லாம் மிகப்பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட ஒரு அரை மனித வாழக்கை!

அடிக்கடி பார்க்கும் எமக்கே ஊரில் பலவிடயங்கள் வியப்பைத்தரும்- உங்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய cultural shock எப்படி இருந்திருக்கும்!

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கோணத்தில் ஊரை பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.


உண்மை கோசன் சே.  ஊரில் போய் பார்த்த போது பல விடயங்களில் தேவையில்லாமல் பிடுங்குபட்டது தெரிந்தது.  நானும் அனுபவத்தில் வளர்ந்து வருகிறேன்.  அரசடி தாண்டி செல்லும்போது உங்களை பற்றி அம்மாவிடம் விசாரித்தேன்.  அவருக்கு உங்களை தெரிந்திருக்கவில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எங்களையும்  யாழ்ப்பாணத்துக்கு  அழைத்து செல்வது போலிருக்கிறது .எடுத்த படங்களையும் எங்களுடன் பகிர்ந்தால் இன்னும் ரசனையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி  தொடருங்கள்.
 

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, நிலாமதி said:

எங்களையும்  யாழ்ப்பாணத்துக்கு  அழைத்து செல்வது போலிருக்கிறது .எடுத்த படங்களையும் எங்களுடன் பகிர்ந்தால் இன்னும் ரசனையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி  தொடருங்கள்.
 

நிறைய படங்கள் இருக்கு எப்படி தொடுப்பது?

Share this post


Link to post
Share on other sites

5. சந்தையும் சாப்பாடும் வருத்தங்களும் 

73398113_121459215649951_701848957005025

"அத்தான் சந்தைல பார்த்து சாமான் வாங்குங்கோ. எங்கட ஆக்கள் நிறைய இரசயானங்கள் பாவிக்கினம்.  பழுத்த மாம்பழம் கரும்புள்ளி விழாமல் ஒரு கிழமை இருக்கும். இப்ப அங்க ஜி எம் ஓ சாமானும் வந்தாச்சு" மச்சினன் ஒரு விடயம் விடாமல் சொல்லி அனுப்பி இருந்தான்.

ஊரெல்லாம் வல்லிபுர கோவில் விரதம்.  மாமிக்கு உதவியாக ஏதாவது சந்தைல வாங்கி வருவம் என்று கிளம்பினேன். உண்மையில் சந்தையை பார்ப்பது தான் குறிக்கோள்.  விவசாயி போகாமல் யார் போவார்?

குழந்தைகள் இரண்டையும் கிளப்பி நடந்தோம்.   தெருவால் நடந்து செல்வது பெரும் சிரமமாக இருந்தது.  தாறுமாறாக சனம் ஓடி கொண்டிருந்தது.  பீப் பீப் என்று ஒரே சத்தம்.  குழந்தைகளை கரைப்பக்கம் விட்டு நான் தெரு பக்கமாக நடந்தோம்.  

நேர வருவோரை முறைத்து பார்த்து கொண்டே வந்தேன்.  நான் விட்டால்  தள்ளி விழுத்தி விடுவேன் என்ற பயத்தில் கொஞ்சம் தள்ளி உருளுந்து கூட்டம் சென்றது.  "எங்கட ஆக்களுக்கு இடம் கொடுத்தால் மடமும் பிடிச்சு அதுக்கு தொலைக்காட்சியும் கேட்பினம். " நினைத்து கொண்டே குழந்தைகளுக்கு கடைகள், சிறு வயது சந்தை கதைகள் சொல்லி கொண்டே வந்தடைந்தேன்.

வாசலில் ஒரு ஆச்சி ஜம்பு காய் விற்று கொண்டிருந்தார்.  வலது பக்கம் பல சரக்கு அங்காடிகள் உணவு கடைகள் இருந்தன.  எமக்கு வேர்க்க தொடக்கி இருந்தது.  பொடியள் நெக்டொ கேட்டு தொல்லை தந்தனர்.

"கொஞ்சம் பொறுங்கோ...சுத்தி பாத்திட்டு வாங்குவம். " கண்ணால் துழாவி கொண்டிக்கும் போது "பீப் பீப்"
பின்னால் ஒரு பெருத்த பெண்மணி வண்டியை தரிக்கும் இடத்திற்கு சந்தைக்குள்ளேயே உருளுந்து விட்டு இறங்காமல் "பீப் பீப்".  

குழந்தைகள் பயந்து தள்ளி போக பார்க்க நான் அவர்களை இழுத்து கொண்டு வழி விடாமல் நடந்து போனேன்.  "பீப் பீப்" திரும்பி சுட்டெரிப்பது போல் பார்த்தேன்.  அவர் பயத்தில் இறங்கி தரிப்பிடம் நோக்கி வாகனத்தை உருட்டினார்.  

"ஏன் இவர்கள் வாகனத்தில் சந்தைக்குள் ஓடுகிறார்கள்?" மகள் கேடடாள்.  "அவர்களுக்கு பஞ்சி. அவர் ஒரு சோம்பேறி " மகன் சொல்லி சிரித்தான்.   மற்றும் படி பட்டம் சொல்ல கூடாது என்று தடுப்பேன் ஆனால் அந்த பெண்மணியின் மேல் இருந்த கோபத்தில் நானும் சேர்ந்து சிரித்தேன்.  அவன் பொய் சொல்லவில்லை.

ஒருவர் மட்டும் வாழைப்பழம், பப்பாசி, விளாம்பழம் சில மாம்பழங்களை வைத்திருந்தார்.  மற்றோர் எல்லாம் ஆரஞ்சு, அப்பிள் என்று வெளிநாட்டு பழங்களை  விற்றார்கள்.  உள்ளூர் முந்திரி காணகிடைக்கவில்லை. ஏக்கத்தோடு உள்ளுக்கும் சுற்றி பார்த்து மீன்கடை இறைச்சி கடை பக்கம் போனேன்.   

இறைச்சி கடைகள் சுத்தம் இல்லாமல் ரத்த சகதியாக இருந்தது. 42 நாள் புரொயிலர் கோழிகள் சிறு கூட்டுக்குள் தூங்கி சாவுக்கு காவல் இருந்தன.  ஆட்டு மாட்டு இறைச்சி கடையில் குல்லா போட்டு வேலை செய்திருந்தனர்.  மகளை திசை திருப்பி மீன் கடைகள் பக்கம் திருப்பினேன்.  

"தம்பி வெளிநாடோ?" பெரிய கட்டிட வாசலில் இருந்து வெங்காயம் விற்ற வயதானவர் கேட்டார்.  "ஓம் கனடா" சொன்னேன்.  "அங்க இறைச்சி வேண்டாதைங்கோ.  அவை காவல் துறைக்கே நாய் இறைச்சி விற்று பிடிபட்டவை.  சிங்களவன் அவைண்ட பழைய கடையை கொழுத்தி போட்டான்."  இரகசியமாக சொன்னார்.

எனக்கு தூக்கி போட்டது.  எமது சிங்கள ஓட்டுனரும் இதையே புத்தளத்தில் சொன்னார்.  "இல்லை ஐயா.  நாங்கள் கோயில் விரதம்.  சும்மா பொடியளோட சுத்தி பார்க்க வந்தனான்" சொல்லி கொண்டே குளிர் பானம் வாங்க வேர்த்து கொண்டு நகர்ந்தோம்.

ஒரு கடையிலும் நெக்டொ இல்லை.  போர்டேலோ சோடா மூன்று வாங்கி வெளியில் இருந்த வாங்கிலில் மூவரும் இருந்து பழ கடைகளை பார்த்து ரசித்து குடித்தோம். 

"தம்பி மாம்பழம் எவ்வளவு?" கேடடார் ஒரு மூதாட்டி வாடிக்கையாளர். "மருந்தடிக்காதது 250 அடிச்சது 150.  எப்ப சாப்பிடபோறாயணை?" வினவினார்.    "நாளைக்கு கோயிலுக்கு பூசைக்கு கொண்டு போக வேணும். 150 பழத்தில நாலு தா தம்பி. விலையை பார்த்து போடு"  மாம்பழம் தந்த கடவுளுக்கு மலிந்த மாம்பழம்.   கடைக்காரர் அந்த பழங்களை எடுத்து திரும்பி நின்று மறைத்து ஏதோ திரவத்தை அடித்து பின் துடைத்து பையில் போட்டு கொடுத்தார்.

இயற்கை விவசாயி பொருமி பார்த்து கொண்டிருந்தேன்   "இந்த சந்தைல ஒண்டும் வாங்க கூடாது" நினைத்தேன்.  எங்கட ஆக்கள் எப்படியெல்லாம் காசு உழைக்கிறார்கள். 

சந்தை பல்பொருள் அங்காடியில் காப்புக்களை பார்த்து மகள் ஆசைப்பட அவளுக்கு ஒரு சோடி.  மகனுக்கு ஒரு வில்லு அம்பு விளையாட்டு சாமான் வாங்கி கொண்டு வாசல் கடை ஆச்சியிடம் வந்தேன்.

அவரிடம் றோஸ் நிற ஜம்பு இருந்தது அது பள பளக்காமல் சிராய்ப்புகளுடன் இருந்தது.  குந்தி இருந்து காய்களை பொறுக்கினேன்.  "ஆச்சி நீங்களும் மருந்து அடிச்ச பழங்கள் விக்கிறீங்களோ? சீண்டினேன்.

"இல்லை தம்பி இது எண்ட மகளிண்ட வீடடை இண்டைக்கு காலமை பிடுங்கினான்" அவர் இன்னொரு பையை எடுத்து கொட்டினார்.   நான் ஒரு சில காய்களை தவிர எல்லாவற்றையும் வாங்கினேன். 

"150 தா தம்பி" கேடடார்.  நான் விலைக்கு வாக்குவாத பட போகிறேன் என்று தயாரானார்.  

"ஆச்சி எவ்வளவு காலமா சந்தைக்கு வாறீங்கள்?" எனக்குள் எதோ அவரை தெரிந்த உணர்வு.  எனது குடும்பத்தினர் பலர் முன்பு அங்காடி வைத்திருந்தவர்கள்.

"அறுபதாம் ஆண்டு தொடக்கம் தம்பி" நான் விலை பேசாமல் இருந்த நிம்மதியில் சொன்னார். 

"அப்ப வள்ளி பிள்ளை ஆச்சியை தெரியுமே? அரிசி வித்தவா" ஆவலுடன் வினவினேன்.  

"ஓம்.. நீ யார் தம்பி?" கண்ணாடி இல்லா கண்ணால் என்னை கூசி பார்த்து கொண்டு கேட்டார்.

"நான் அவவிண்ட மூத்த பூட்டன்" ஆச்சியின் கண்கள் ஒளிர்ந்தது.  "அப்பு நல்லா  இருக்கிறீயே? அக்கா எனக்கு முந்தி நிறைய உதவி இருக்கிறா.  வட்டி இல்லாமல் கடன் தந்து தான் நான் எண்ட மூத்த மகளுக்கு கட்டி கொடுத்தனான். மகராசி"

எனக்குள் ஒரு உற்சாகம்.  ஆயிரம் ரூபாவை நீட்டினேன்.  அவர் சில்லறை தேடும் போது எழுந்து "ஆச்சி போய்டுவாறன்" மிச்சம் எதிர்பார்க்காமல் ஜம்பு காயை கழுவி தின்னும் ஆவலில் வீடு நோக்கி வெளிக்கிட்டோம்.

மகாத்மா தியேட்டர் ஒழுங்கையால் திரும்பினோம்.  இன்னொரு வெளிநாட்டு தெரிந்த முகம் என்னை பார்த்து கொண்டு வந்தது.  "விக்கியே?" கேடடார்.  "ஓம் கனகா அக்காவே?" நான் திருப்பி கேட்டேன். 

"ஓமடா எப்படி கண்டு பிடிச்சாய்?" வியப்போடு கேட்டார்.  "நீங்கள் கனடாவிற்கு போன வருஷம் கலியாணத்திற்கு வந்தனீங்கள் தானே?" பதிலை கேள்வியாய் தொடுத்தேன்.  "அட ஓம் மறந்து போச்சு. பிள்ளையள் வளர்ந்திட்டினம்" கன்னத்தில் கிள்ளினார். 

"பீப் பீப்" பின்னிருந்து  "குறுக்கால போவார் " வாய் தவறி சித்தியின் முன் பேசிக்கொண்டே ஓரங்கட்டினோம்.

சித்தியும் "ம்ம்ம் இங்க விக்கி ஒருத்தரும் நடந்து திரியினம் இல்லை.  எல்லாரும் ஓட்டோவும் உருளுந்தும் என்று திரியினம்.  நாப்பது வயசு தாண்டினவை எல்லோருக்கும் சலரோகமும் கண்ட கண்ட வருத்தங்களும்"

"ஓம் நானும் இண்டைக்கு இரண்டு துவிச்சக்கர வண்டியை தான் கண்டனான்" ஆதங்கபட்டேன்.  

"இப்ப துவிச்சக்கர வண்டி ஓடுவது நடப்பது எல்லாம் ஏழைகளின் போக்குவரத்தாகி போச்சு தம்பி" திரும்பவும் ஆதங்க பட்டார்.  "நான் நோர்வேயில குளிரோ வெயிலோ 40 நிமிடம் நடந்து தான் பாடசாலைக்கு படிப்பிக்க போறனான்.  நானும் அவரோட நேற்று பூரா கரவெட்டி, கிராவளை, அத்துளு, அரசடி எல்லாம் சுற்றி நடந்து பார்த்தனாங்கள்.  சனம் எங்களை ஒரு மாதிரி பார்க்கினம்" தொடர்ந்தார். 

குழந்தைகள் வீடு திரும்பி மாமனாரின் வீட்டு ஆட்டு குட்டிகள் நாயுடன் விளையாட திட்டம் போட்டு நிலையா நிக்கமால் சுழன்றனர்.

"நான் கோவில் முடக்கில எண்ட மாமியார் வீட்டில நிக்கிறன்.  ஆறு மாதத்திற்கு ஒருக்கா வருவம்.  அவாவிற்கு வயசு வந்து வாக்கு மாறி போச்சு" சித்தி நிலைமை உணர்ந்து பேச்சுக்கு முடிவுரை தொடங்கினார்.

"நாங்கள் அம்மாவோட மாமா வீடடை நிக்கிறம், கட்டாயம் வீடடை வாறன்" சத்தியம் கூறி விடை கொடுத்தோம்.

கையில் பை இருந்தபடியால் நாய்கள் தொடர்ந்தன.  குழந்தைகள்வீடு நோக்கி ஓட தொடங்கியிருந்தனர். நானும் எட்ட கால் வைத்து நடந்தேன்.

முடக்கில் "பீப் பீப்" , "அட சனியனுகள் நிம்மதியா நடக்க விடுகுதுகள் இல்லை" சுவரோடு ஒட்டி புல்  வளர்ந்த பக்கத்தில் விரைந்தோம்.

ஜம்பு காயை நோக்கி மனதை திருப்பி கொண்டு வாயூற வீடு வந்தடைந்தோம்.

 • Like 7

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, விவசாயி விக் said:

ஆச்சியின் கண்கள் ஒளிர்ந்தது.  "அப்பு நல்லா  இருக்கிறீயே?

எதையும் எதிர்பார்க்காத இந்த அன்பான வார்த்தைகள்தான் ஊருக்குப் போகவேண்டும் என்ற உந்துதலை எப்போதும் தருவது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

6. அரசமரத்தடி அரசியல் 

AF1QipPKIyQ9worIePeoc642_PT94SuN-pd_nFgZ

"அத்தான் புலி ஆதரவு என்று வருவினம் அரசாங்க ஆதரவு என்று வருவினம்.  ஒருத்தரையோடையும் அரசியல் கதைக்காதைக்கோ!" மச்சினன் பத்து தடவையாவது சொல்லி இருப்பான்.  அது என் பலவீனம் என்று அவனுக்கு தெரியும்.

நான் வீட்டிற்குள் முடங்காமல் ஊரை சுற்றுவதில் குறியாய் இருந்தேன்.  தங்கிய வீட்டில் இருந்து மாமா வீடு நோக்கி செல்லும் போது மாமனார் கல்யாண மண்டபத்தில் சிலரோடு நிற்பதை கண்டு பூராயம் பார்க்க அங்கு சென்றேன்.

சில இளையோர் இரும்பை ஒட்டி கதவுகள் செய்து கொண்டிருந்தனர்.  நான் கேட்க முன் மாமனார் "தம்பி இந்த சின்ன பொடியள் மேல் மாடிக்கும் கீழுக்கும் ஓடி விளையாடுதுகள்.  விழுந்து கிழுந்தால் நாங்கள் தான் பொறுப்பு அது தான் கதவு செய்து படியளுக்கு போடுறம்" 

நான் இரும்பு வேலையை கவனிக்கிறேன். ஒட்டல் வேலை சீராக இருந்தது இளையோரும் வேளையில் கண்ணாக இருந்தார்கள்.  "எவ்வளவு முடியும்?" ஒரு தொழிலாளியின் சம்பளத்தை கணிப்பது நோக்கம்.

"இதென்ன ஒரு ஐயாயிரம் ரூபா முடியுது" மாமனார்.  " நல்ல மலிவா இருக்கு.  வேலையும் நல்லா இருக்கு" நான்.

கதைக்கும் போது உருளுந்து ஒன்று எம் முன் வந்து நின்றது.  "வாத்தியார், எப்படி இருக்கிறீங்கள்?" மாமனார்.

வாத்தியார் என்னை கூர்ந்து பார்த்தார்.  "இது எண்ட அக்கவிட மகன்" திரும்பி என்னை பார்த்து "விக்கி இவர் யார் சொல்லு பார்ப்பம்?" கேடடார் மாமா.

என்னால் மடடுபிடிக்க முடியவில்லை.  "இவர் தான் குமாரியிண்ட புருசன்" மாமா.  நான் சிரித்து கொண்டே அவருக்கு ஒரு தலையாட்டல்  போட்டேன்.  

"எங்க இருந்து வாறீங்கள் வாத்தியார்?" மாமன். 

"நான் அண்ணை இப்ப நாமல் ராஜபக்சவிண்ட கூட்டத்தை முடிச்சிட்டு வாறன்.  நல்ல சனம் 800 பேருக்கு கிட்ட வந்திச்சினம்.  நாமலுக்கும் நல்ல சந்தோசம்" பெருமையோடு கூறினார் வாத்தியார். 

எனக்கு வியப்பாக இருந்தது எம் குடும்பத்தில் ஒரு ராஜபக்ச ஆதரவாளர்.  என் முகத்தில் இருந்த சந்தேகம் கண்டு " தம்பிக்கு எங்கட ஊர் அரசியல் தெரியுமோ?" கேடடார்.  

"கொஞ்சம் தெரியும்" பொய் சொன்னேன்.  "இவன் ஒரு விவசாயி வேற" மாமா பெருமையோடு சொன்னார்.

என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார் ஆசிரியர்.  "தம்பி விவசாய அமைச்சர் எண்ட நண்பன்"

நானும் ஆச்சரியத்தோடு "அவர் தான் ஒழுங்கா இங்க வேலை செய்யுறார்.  பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கை நல்ல விசயம் '

வாத்தியார் கண்ணில் ஒளி.   நான் எனது உடன்தபால்(இன்ஸ்டாக்ராம்) பக்கத்தை எடுத்து காட்டினேன். 

"சூ மரக்கறியள் அந்த மாதிரி இருக்கு.  தக்காளி பள பளகுது" புகழ்ந்தார்.

"இது இயற்கை விவசாய காய் கறிகள்:" பெருமையுடன் நான். 

"சீ உண்மையாவோ?" நம்பாமல் பக்கத்தை தட்டி தட்டி போனார்.  

அப்போது புத்தி கொஞ்சம் பேதலிக்க இளையவன் ஒருவன் வந்தான்.  "அக்கா தேத்தண்ணி தரமாடடாவாம்"
அவன் தலை குழம்பி, பெரிய சட்டை அணிந்து, பெரிய காற்சட்டையை பாவாடை நாரால் இறுக்கி கட்டி இருந்தான்.

எனக்கு மனது உளைய தொடங்கியது.  நான் யாழில் கண்ட மனம் குன்றிய  முதலாமவர் அவர்.  முன்பு சிவநேசம் என்று ஒரு பெண் இருந்தார் எம் ஊரில்.  அவர் A L தேர்வில் மூன்று A ஒரு B எடுத்த படியால் மன உளைச்சல் வந்து புத்தி பேதலித்தவர்.

"சரி வீட்டை போ நான் வாறன்" அவனுக்கு சொல்லிவிட்டு "தம்பி அரசமரத்தடிக்கு ஆறு மணிக்கு வாங்கோ அரசியல் கதைப்பம். " வாத்தியார் சொல்லிவிட்டு அவனை தொடர்ந்தார்.

"இந்த பொடியன் ஒரே பிள்ளை.  பெற்றோர் நல்ல காசு காரர்.  அவை வருத்தத்தில் செத்த பிறகு சொந்த கார கூட்டம் ஏமாத்தி சொத்துக்களை பிடுங்கி போட்டு அவனை தெருவிற்கு கலைச்சு போட்டுதுகள்" மாமா கவலையோடு சொன்னார்.  "பாவம் பொடியன். வாத்தியார் பெற்றோரிண்ட சொந்தம். சாப்பாடு போடுறார். அவன் கோயில்ல உதவி செய்யுறான்" திரும்பவும் சோகத்துடன்.

"இப்படியும் ஆக்கள் இருக்கினமே? " பொடியனின் கள்ளம் கபடம் இல்லாத முகத்தை நினைத்து கொண்டே கேட்டேன்.  மாமரும் மௌனமாக தலையாட்டி கொண்டு ஒட்டு வேலையை மேற்பார்வை செய்ய சென்றார்.

நானும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தை நோக்கி நடை காட்டினேன்.  அரசமரத்தடி கூட்டத்தில் என்னையும் சேர்த்ததில் மகிழ்ச்சி ஆனால் வயது கூடியதில் ஒரு சின்ன கவலை.  சின்ன வயதில் பெரிய ஆக்கள் கதைக்கும் போது வர கூடாது என்று எம்மை விரட்டுவார்கள்.

ஆறு மணி போல் கோவில் கும்பிட்டு திரு நீறு பட்டை போட்ட பெரியோர் அரசமரத்தடியில் கூட தொடங்கினர்.
நான் வெக்கையை தணிக்க மாமனாரின் செவ்விளனி ஒன்றை பிடுங்கி வெட்டி குடித்து கொண்டே மரத்தடி வந்திருந்தேன்.    வாத்தியார் பெரிய சிரிப்புடன் வரவேற்றார்.  அரசியலுக்குள் ஒரேயடியாக குதித்தார்.

"தம்பி நான் இங்க எனது SLPP  தொடர்பால் ஒரு 300 பொடியளுக்கு வேலை எடுத்து கொடுத்துட்டேன்.  இப்பவும் 80 வேலைக்கு ஆள் இல்லை.  இந்த வதிரி சந்தியில வேலை இல்லாமல் சுத்திய பொடியளிட்ட இண்டைக்கு போனனான்.  ஆனால் அவர்கள் என்னை கண்டவுடன் எகிறி ஓடுறாங்கள்" குமுறினார்.

"ஏன்? வேலை சரியில்லையே?" கேட்டேன்.  "சீ சீ மாதம் நாற்பதாயிரம் சம்பளம் தபால் நிலையம், கல்வி, மருத்துவமனை சார்ந்த வேலைகள்.  பொடியளுக்கு பஞ்சி.  எல்லாம் வெளிநாட்டு காசு செய்யிற வேலை" பட படத்தார்.

அவரை ஆமோதித்து சுத்திவர இருந்த பெரியவர்கள் தலை அசைத்தார்கள். 

"அப்ப பொடியள் என்ன செய்யிதுகள்?" கேட்டேன்.

"வெளிநாட்டு காசில் சொகுசு உருளுந்துகளை வேண்டி போட்டு ஊர் சுத்துவது, தண்ணி அடிப்பது, இப்ப போதை பொருட்களும் வந்து விட்டது." இன்னொரு பெரியவர்.  "வெளிநாட்டுக்காரர் வருசத்துக்கு ஒருக்கா காசு அனுப்புவினம்.  கை கடிக்க தொடங்க இப்ப சங்கிலி பறிக்கிறது, பெண்களிடம் கை பை பறிப்பது என்று களவு செய்யுதுகள் பொடியள்" முடித்தார்.

எனக்கு முகம் சுருங்கி இருந்தது.  "போதை பொருள் எப்படி இங்க வருது?" கேட்டேன்.  

"இப்ப கேரளா கஞ்சா, மெத், ஹெரோயின் எல்லாம் கொழும்பில இருந்து தாராளமா வருது.  இங்க நெல்லியடி பள்ளி கூடத்து பொடியளுக்கு வெளியில வைச்சு கேரளா கஞ்சா விக்கிறாங்கள்" வாத்தியார்.

ம்ம் பொருளாதாரம் உயர பிரச்சினைகளும் உயரும்.  அமெரிக்க ராப் பாடகரின் "மோர் மணி மோர் பிராப்ளம்" பாட்டு ஞாபகம் வந்தது.

"காவல் துறை என்ன செய்கிறது?" கேட்டேன்.  "பிடிக்கிறார்கள் ஆனால் இவங்கள் வெளியில உடனே வந்திருவாங்கள்.  வெளிநாட்டில் இருந்து வழக்கறிஞருக்கு காசு வருது" இன்னொரு பெரியவர் கூறினார்.

"தம்பி வடமாகாணத்திற்கு நிறைய காசு இன்னும் இருக்கு ஆனால் எங்கட தமிழ் அரசியல்வாதிகள் பிரேரணை ஏற்றி அந்த நிதியை பெற்று ஏனோ உதவி செய்யினம் இல்லை" வாத்தியார் கூட்டமைப்பை சாடினார்.

"அவையள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா போவதும் தமது சொந்த வியாபாரங்களை காப்பதில் தான் குறி"  வாத்தியார்.  "அவையளை வெளிநாட்டில் கூத்தமைப்பு என்பார்கள்" நக்கலாக அரசியல் சூட்டை தணிக்க சொன்னேன்.  அரசமரத்தடி கூட்டம் விழுந்து விழுந்து சிரித்தது.   அவர்களுக்கு அந்த பட்ட பெயர் தெரியாதது அதிசயமாக இருந்தது.

என்னை பிரகாசமான முகத்துடன் பார்த்தார் வாத்தியார்.  "கூத்தமைப்பு.  நல்லா இருக்கு பெயர்.  அது தான் இங்க நடக்குது.  சனமும் அவையளை மதிக்கிறதில்லை.   ரெண்டாயிரம் மூவாயிரம் வாக்குகள் தான் இவையளுக்கு கிடைக்கும் இங்க"

"முஸ்லிம்களை பாருங்கோ தம்பி.  தமக்கு என்று ஒரு கட்சி இருந்தாலும் இரு சிங்கள கட்சிகளிலும் இருந்து தம் இனத்திற்க்கு உதவுகிறார்கள். " வாத்தியார்.

"இவை அரசாங்க சலுகைகள், வேலைகள், புனரமைப்பு காசுகளை எடுத்து மக்களுக்கு குடுத்தால் எதிர் கட்சிக்கு பெயர் கிடைச்சுடும் என்று எம்மக்களை முடக்குகிறார்கள். " திரும்பவும்  குமுறினார்.

"கோத்தா தான் திரும்பவும் வருவார்.  அவர்கள் நிறைய வெளிநாட்டு திட்டங்களை கொண்டு வருவார்கள்.  அதிலிருந்து எப்படி தமிழ் மக்கள் பயன் பெறலாம் என்று சிந்திக்காமல் அவருடன் மோதுவார்கள்..... இருந்து பாருங்கோ தம்பி" தொடர்ந்தார்.

"வீடில்லா சனத்திற்கு நிலம் வாங்கி வீடு கட்ட அரசாங்கம் பதினோரு இலச்சம் குடுக்குது.  போராளிகளுக்கு கை வேலைத்திட்ட பயிற்சி கொடுக்குது.  மாதம் 1800 ரூபா உதவி தொகை போராளிகளுக்கு  கொடுக்குது.  இப்ப யாழில் தொழில் பேட்டை தொடங்கி சின்ன வியாபாரங்களை பெரிதாக்க உதவுகிறது.  எங்கட சுபாஸ் வெதுப்பி கடை தொழில் பேட்டையில் தொழிற்சாலை தொடக்கி 80 பேர்ல இருந்து 200 பேராக வளர்ந்திருக்கு. 24 நேரமும் தொழிற்சாலை இயங்குது"  மூச்செடுத்தார் வாத்தியார்.  

இருட்டி ஏழு மணியாகியது மனுசிமார் கை பேசிகளால் அழைப்பு விட்டார்கள்.

"தம்பி நாளைக்கும் வாங்கோ.  உங்கட மென்பொருள் நிறுவனத்திற்கு என்ன நடந்தது எண்டு கேட்கவேணும்.  மற்றையது விவசாயம் பற்றி கதைக்கோணும்.  இங்க நிறைய வசதிகள் இருக்கு ஆனால் அதை ஒழுங்காக செய்து கொடுக்க ஆக்கள் இல்லை" வாத்தியார்.

எல்லோரும் என்னுடன் சேர்ந்து முருகன் கோவில் மண்டபத்தின் முன் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் உலகம் பூராக செய்தி அனுப்பினார்கள்.  

"விக்கி எங்களுடன் அரசமரத்தடியில் இருந்து பூராயம் கதைக்கிறான்.  நீங்களும் வாங்கோ!" செய்தி LTE கைபேசி அலைகளாக பறந்து போனது.

அங்குள்ளவர்களுக்கு இடையில் ஒரு தலைமுறை இடைவெளியை நிரப்ப வேண்டும் என்ற ஆசை இருப்பது தெரிந்தது.

எனக்கும் அந்த ஆதங்கம் வந்தது.  ஏன் ஊரை விட்டு போனேன் என்று கவலை வந்தது.  முப்பது வருடங்கள் வரமால் போனது இன்னும் உறுத்தியது.

அடுத்த நாள் கீரிமலைக்கு சாம்பல் கரைக்க போகும் திட்டத்தை மனதில் போட்ட படி வீடு சென்றேன்.

 • Like 9

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.