பெருமாள்

பசிலின் பிரச்சாரக் கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளும் மோதல்! By admin -

Recommended Posts

மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று (10) மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

மட்டப்பளப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார்.

பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்ட மேடையில் இரண்டு மனைவிகளும் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசில் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரண்டு மனைவிகளிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் பசில் ராஜபக்ச மற்றும் கருணா ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதன் பின்னர், இரண்டு மனைவிகளும் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன்போது செருப்படியும் நடந்ததாக தெரிகிறது.

பின்னர் கருணாவின் உதவியாளர்கள் அவர்களை சமரசம் செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

http://www.pagetamil.com/86387/

Share this post


Link to post
Share on other sites

அம்மானுக்கு வந்த சோதனையை!

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, பெருமாள் said:

பசில் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரண்டு மனைவிகளிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் பசில் ராஜபக்ச மற்றும் கருணா ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதன் பின்னர், இரண்டு மனைவிகளும் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதன்போது செருப்படியும் நடந்ததாக தெரிகிறது.

💇🏿‍♀️ குடும்பியை பிடித்து இழுத்தும்,  👠 செருப்பால் அடித்தும்... நடந்த  சண்டையை....
சிறிய தள்ளுமுள்ளு என்றா... சொல்வார்கள். :grin:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கிழக்கு விடிகிறது ..............

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, Maruthankerny said:

கிழக்கு விடிகிறது ..............

கிழக்கு வெளிக்கிறது...இருக்கட்டும்...!

அம்மானின் மற்ற மனிசி சிங்களத்தி...எண்டு நினைச்சிருந்தன்!🙄

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, புங்கையூரன் said:

கிழக்கு வெளிக்கிறது...இருக்கட்டும்...!

அம்மானின் மற்ற மனிசி சிங்களத்தி...எண்டு நினைச்சிருந்தன்!🙄

அந்த பட்டியல் அது வேற ...
அது நீளம் 
இது மனைவிகள் பட்டியல்.
இதில் இப்போதைக்கு இருவர்தான் இருக்கினம். 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, பெருமாள் said:

இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார்.

இதுக்கும் ஒரு கெட்டித்தனம் இருக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர். இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது. உதவும் விருப்பம் கொண்டவர்கள் இந்த உணவுக் கூடைக்குள் உணவுப் பொருட்களை போட்டுச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவோரும் போவோரும் தம்மால் முடிந்த அளவு உணவுப் பொருட்களை கூடையினுள் வைத்துவிட்டு செல்கின்றனர். இந்த உணவுக்கூடை முயற்சியை, ‘பேனரா சோலிடேல்' என்று இத்தாலி மக்கள் அழைக்கின்றனர். மனிதநேயம் காக்கும் இதனை ஏஞ்செலோ பிகோன் என்பவர்தான் தொடங்கி வைத்துள்ளார்.   இந்த முயற்சி குறித்து பிகோன் அளித்த பேட்டியில், ‘எனக்கு திடீரென்றுதான் இந்த யோசனை வந்தது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படித்தான் உணவுப் பொருட்களை வழங்கினேன். அப்படியே இந்த யோசனை அனைத்து மக்களுக்கும் பயன்படுவதுபோல் ஆகி விட்டது. கொரோனாவால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீட்டுற்குள் இருந்து கொண்டு நம்மை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தக் கூடாது. மற்றவர்கள் நலனையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்றார். உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி உள்ளது. இங்கு 13,915 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 61 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீளவில்லை. https://www.ndtv.com/tamil/italians-hang-food-baskets-from-balconies-to-help-the-homeless-2205696
    • வாணியம்பாடி அடுத்த பசீராபாத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற சுகாதார பணியாளர்களை சிறைப்பிடித்து ரகளை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணைக்காக இழுத்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேரை தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட சுகாதாரதுறை, சம்பந்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 150 பணியாளர்களை கொண்ட 75 இருவர் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி வாணியம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருப்பவர்களின் விவரம், வெளியூர் மற்றும் வெளினாடு சென்று வந்த விபரம், சளி, இருமல் காய்ச்சல், என பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.</p> <p>இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து கணக்கெடுப்பு சீட்டை பறித்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டு களையும் பறித்துக் கொண்டு சிறை பிடித்ததாக கூறப்படுகின்றது. தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்துக் கொண்டு வம்பு செய்ததால், தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டனர். அது மட்டுமல்லாமல் சுகாதார பணியாளர்களிடம் வம்பு செய்து விட்டு வீட்டுக்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த போது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு போலீசுடன் செல்ல மறுத்தார். போலீசார் முறையாக பேசி அழைத்தும் வராமல் அடம்பிடித்த அந்த இளைஞர், வீட்டில் இருந்தவர்களின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் அவரை இழுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் ஆவேசம் ஆனார்கள்..! போலீஸ்காரர் ஒருவர், அடம்பிடித்த இளைஞரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்ததால், அந்த இளைஞர் வீதிக்கு வந்தார். அவரை அதிரடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை போலவே மேலும் ஒரு இளைஞரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். சுகாதார பணியாளர்கள் தங்கள் நலனுக்காக வந்துள்ளார்கள் என்பது கூட தெரியாமல் எதிர்ப்பது, போராடுவது என அனைத்தும் கொரோனா பரவலை அதிகப்படுத்துமே தவிர கொரோனா வைரஸின், சமூக பரவலை தடுக்க உதவாது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், முன் எச்சரிக்கை கணக்கெடுப்பிற்கு தொடட்புடையவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறி வம்பு செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர்.    https://www.polimernews.com/dnews/105722/ஒத்துழைக்க-மறுத்து-எல்லைமீறினால்-இது-தான்-நடக்கும்..!நம்ம-போலீஸ்-கெத்து