Jump to content

யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-airport.jpg

யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு இந்தியா நோக்கி விமானமொன்று பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 12,990 ரூபாய் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

எனினும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பணிகள் காரணமாக விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழிலிருந்து-இன்று-முதல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த முதலாவது விமானத்தில் வடக்கு ஆளுநரும் பயணம்

யாழிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் சென்னைக்கு பயணித்தது.இந்த விமானத்திலேயே வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் முதலாவது விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)Suren-2-720x450Suren-3-428x241

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-சர்வதேச-விமான-நிலைய-9/

Link to comment
Share on other sites

On 11/11/2019 at 5:42 AM, தமிழ் சிறி said:

புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு இந்தியா நோக்கி விமானமொன்று பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

10.35 இற்கு சென்னையில் இருந்து தான் யாழுக்கு விமானம் புறப்பட்டது. புதுடெல்லியில் இருந்து அல்ல.

அதேபோல் யாழிலிருந்து சென்னை நோக்கி விமானம் 12.45 இற்கு புறப்படும், அங்கு சென்றடையும் நேரம் தான் 2.10 என போட்டிருந்தார்கள். (தாமதங்களை கருத்தில் கொண்டு பயண நேரத்தை அதிகமாக போட்டுள்ளார்கள் போலுள்ளது)

இதில் இடது பக்க கீழ் மூலையில் நேர விபரங்கள் உள்ளன.

EI1l6eIWkAAGAyY?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனை என்றால்.. உந்த விமான சேவைகளை நிறுத்திவிட்டு.. ஹிந்தியப் படைகளை இலகுவாக நகர்த்திக்கலாம். அதற்கு ஏற்ப நல்ல தயாரிப்பு.

எனி சீனா.. கச்சதீவில் கப்பல் விட முடியுமா..??! 

சீனாவுக்கு ஹிந்தியாவின் பதில்.. தான் இது. 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

ஒரு பிரச்சனை என்றால்.. உந்த விமான சேவைகளை நிறுத்திவிட்டு.. ஹிந்தியப் படைகளை இலகுவாக நகர்த்திக்கலாம். அதற்கு ஏற்ப நல்ல தயாரிப்பு.

தலைமன்னார் - தமிழகம், காங்கேசன்துறை - தமிழகம் கப்பல் போக்குவரத்தும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சொல்லி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விரைவாக ஆரம்பியுங்கோ, சனம் மலிவா கோவில் சுற்றுலா செல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

எல்லாத்தையும் விரைவாக ஆரம்பியுங்கோ, சனம் மலிவா கோவில் சுற்றுலா செல்ல.

சத்தமா சொல்லாதீங்க அதுக்கும் சண்டை பிடிப்பாங்கள் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சத்தமா சொல்லாதீங்க அதுக்கும் சண்டை பிடிப்பாங்கள் , 

சரி சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சத்தமா சொல்லாதீங்க அதுக்கும் சண்டை பிடிப்பாங்கள் , 

ஏன் என்னத்துக்கு சண்டை பிடிப்பாங்கள்?

Link to comment
Share on other sites

SriLankan to operate flights to Jaffna

07/11/2019

SriLankan Airlines will operate flights to the newly opened Jaffna international airport soon, said Group Chief Executive Officer, SriLankan, Vipula Gunatilleka.

Speaking to ‘Daily News’ after the Sri Lanka Tourism WTM Press Conference here on Monday he said SriLankan plans to lease smaller aircraft for this operation. ‘’The airline will include Jaffna as a stopover destination when operating flights to some of the Indian destinations thus establishing good connectivity between Colombo (BIA) and Jaffna as well.’’

He said the opening of the Jaffna international airport was a step taken in the right direction. ‘’This will help boost economy and tourism in the area and as the national carrier we want to help this effort by operating flights.’’

‘’Our current fleet do not have the required equipment (aircraft) to operate to Jaffna and we will look at the option of acquiring a suitable aircraft to launch this operation next year.”

http://www.dailynews.lk/2019/11/07/finance/202225/srilankan-operate-flights-jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/13/2019 at 2:47 AM, குமாரசாமி said:

ஏன் என்னத்துக்கு சண்டை பிடிப்பாங்கள்?

இப்ப எதுக்கெடுத்தாலும் இந்தியாக்குத்தான் போறாங்கள் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப எதுக்கெடுத்தாலும் இந்தியாக்குத்தான் போறாங்கள் என்று 

ஜனாதிபதி தேர்தலில்... கோத்தா  வென்றால்,
சம்பந்தன், சுமந்திரன் கோஷ்டி தான்... முதல்ல இந்தியாவுக்கு, ஓட வேண்டி வரும். :grin:

Link to comment
Share on other sites

யாழில் இருந்து பெய்ஜிங்கிற்கும் விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விமானங்களை பார்க்க ஏறவே பயமா இருக்குது.

உலகத்தரம் வாய்ந்த விமானங்கள்.. சேவையில் ஈடுபடாமல்.. உந்த ஹிந்தியன் சேவைகளை நம்பி.. இந்து சமுத்திரத்தில் மீன்களுக்கு இரையாக விருப்பமில்லை. 

இந்த விமானங்களின் பயணப்பாதுகாப்பு விபரங்கள் வெளியிடப்படுவதோடு.. இவை எவ்வளவு காலம் சேவை மூத்தவை என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஏலவே பாதுகாப்பற்ற கடவைகளை அமைச்சு ரயிலை விட்டு தமிழ் மக்களை தினமும் கொன்றொழிப்பது போல்.. பழைய பறைனை விமானங்களை விட்டு.. தமிழர்களை கடலுக்குள் கொட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அங்கு நிற்கும் போதே வான் ஓடுபவர்கள், ,உடுப்பு கடைக்காரர்கள் தங்கட வியாபாரத்தில் மண் விழப்  போகுது என்று கவலைப்பட் டார்கள் ...இப்பவே யாழில் இருக்கும் பொம்பிளையல் எல்லோரும் இந்தியக்காரர் மாதிரி உடுத்தினம்...விமானமும் ஓட வெளிக்கிட்டால் சொல்லி வேலை இல்லை 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஈடுபடும்.  ATR 72- 600, ATR 42-320.. எல்லாமே 30 வருடம் பழமையானவை. பல விபத்துக்களை சந்தித்தவை.

https://en.wikipedia.org/wiki/ATR_42

https://en.wikipedia.org/wiki/ATR_72

https://en.wikipedia.org/wiki/Alliance_Air_(India)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

இதில் ஈடுபடும்.  ATR 72- 600, ATR 42-320.. எல்லாமே 30 வருடம் பழமையானவை. பல விபத்துக்களை சந்தித்தவை.

https://en.wikipedia.org/wiki/ATR_42

https://en.wikipedia.org/wiki/ATR_72

https://en.wikipedia.org/wiki/Alliance_Air_(India)

இருக்கிற கொஞ்ச நஞ்ச  தமிழனையும் அழிக்கிறதுக்கு புதுசு புதுசாய் கண்டுபிடிக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் அங்கு நிற்கும் போதே வான் ஓடுபவர்கள், ,உடுப்பு கடைக்காரர்கள் தங்கட வியாபாரத்தில் மண் விழப்  போகுது என்று கவலைப்பட் டார்கள் ...இப்பவே யாழில் இருக்கும் பொம்பிளையல் எல்லோரும் இந்தியக்காரர் மாதிரி உடுத்தினம்...விமானமும் ஓட வெளிக்கிட்டால் சொல்லி வேலை இல்லை 😍

இஞ்சை வெளிநாட்டிலை இருக்கிறவையள் பெரிய திறமே?
பாக்கியளின்ரை கடையிலையும் பஞ்சாபியளின்ரை கடையிலையும் தானே அளவெடுத்து போட்டுப்பாக்கினம்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை வெளிநாட்டிலை இருக்கிறவையள் பெரிய திறமே?
பாக்கியளின்ரை கடையிலையும் பஞ்சாபியளின்ரை கடையிலையும் தானே அளவெடுத்து போட்டுப்பாக்கினம்.

தரமான விலை மலிவான பொருட்களை தேடி வாங்கிவதே நுகர்வோரின்  வழமை. தரமான சேவையை வழங்காத தமிழ் வர்த்தகர்களில்  தான் தவறு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

தரமான விலை மலிவான பொருட்களை தேடி வாங்கிவதே நுகர்வோரின்  வழமை. தரமான சேவையை வழங்காத தமிழ் வர்த்தகர்களில்  தான் தவறு உள்ளது. 

நீங்கள் சொல்லுறது சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை வெளிநாட்டிலை இருக்கிறவையள் பெரிய திறமே?
பாக்கியளின்ரை கடையிலையும் பஞ்சாபியளின்ரை கடையிலையும் தானே அளவெடுத்து போட்டுப்பாக்கினம்.

  குசா எங்கடை நாலுமுழ வேட்டி  மூண்டு பவுன் அவையின்ட  கல்லு வைச்ச சாரி பத்தாயிரம் பவுன் பஞ்சாபி ஸ்ரைலில் இருக்கு அல்பெர்டனில் வெம்பிளி யில்  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

  குசா எங்கடை நாலுமுழ வேட்டி  மூண்டு பவுன் அவையின்ட  கல்லு வைச்ச சாரி பத்தாயிரம் பவுன் பஞ்சாபி ஸ்ரைலில் இருக்கு அல்பெர்டனில் வெம்பிளி யில்  .

அதை விட கொடுமை என்னவெண்டால் கல்லுவைச்ச பத்தாயிரம் பவுன்ஸ் சாரி ஒரு பங்சனுக்குத்தான் கட்டுவினமாம்.....நாங்கள் 20 வயதிலை வாங்கின நாலு முழம் வாழ்க்கை.....அதோடைதான்
இன்னுமொண்டு கேட்டால் உங்களிட்டை அங்கையொரு நாலு முழம் இருக்கல்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதை விட கொடுமை என்னவெண்டால் கல்லுவைச்ச பத்தாயிரம் பவுன்ஸ் சாரி ஒரு பங்சனுக்குத்தான் கட்டுவினமாம்.....நாங்கள் 20 வயதிலை வாங்கின நாலு முழம் வாழ்க்கை.....அதோடைதான்
இன்னுமொண்டு கேட்டால் உங்களிட்டை அங்கையொரு நாலு முழம் இருக்கல்லே

வேட்டியத்தானே சொல்லுறியள் சாமியோவ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இஞ்சை வெளிநாட்டிலை இருக்கிறவையள் பெரிய திறமே?
பாக்கியளின்ரை கடையிலையும் பஞ்சாபியளின்ரை கடையிலையும் தானே அளவெடுத்து போட்டுப்பாக்கினம்.

இல்லை அண்ணா, நான் சொல்ல வந்தது ஊர்ல முந்தி இளம் பெண்கள்  முழங்கால் அளவிற்கு சட்டை, பாவாடை ,சட்டை [கட்டையாகவோ ,நீட்டாகவோ] போடுவார்கள்...இப்ப எல்லோரும் லெக்கின்ஸ் போட்டு இந்திய பெண்கள் போடும் நீட்டு குருத்தா மாதிரி போடுகிறார்கள்...அந்த காலத்திலேயும் முழங்காலோடு உடுப்பு போட்டாலும் கவனமாய் சைக்கிள் ஓடியவர்கள் எங்கள் பெண்கள்.

இன்னும் கொஞ்ச நாள் போனால் பாவாடை தாவணி போட்டு பூ வைத்துக் கொண்டு திரிவினம்.


முஸ்லீம் பெண்கள் பர்தாவுக்கு மாறி விட்டார்கள் என்று பேசும் நாம் இதை கண்டு கொள்ளவில்லை .
நாம் தெரிந்தோ,தெரியாமலோ அவர்களது கலாச்சாரத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.