Jump to content

அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி

"அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு கலக்கம் தருகிறது" முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்கூலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு தமது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் தாம் "மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.

டெலிகிராஃப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

"அங்கு ஒரு மசூதி இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வந்துள்ளனர். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவனாக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்" என்று 72 வயதான கங்குலி கூறி உள்ளார்.

2ஜி வழக்கில் 2012ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய கங்குலியை அபோதைய பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கொண்டாடியது.

"1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.

தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மசூதி என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு - அது அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மசூதி பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசமைப்பு வந்தபோது அங்கு ஒரு மசூதி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? " என்று கேட்டுள்ளார்.

"அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். " என்று கூறி உள்ளார்.

"அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை. பின்னர் ஒரு மசூதி இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இது போன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மசூதிகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்.

நாம் புராண 'உண்மைகளுக்கு' செல்ல முடியாது. ராமன் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று கூறியுள்ளார்.

"அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு கலக்கம் தருகிறது" முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்கூலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நம்பிக்கையின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மசூதியின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மசூதி கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மசூதியை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?" என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மசூதி இருந்தது என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும் - அது ஓர் உண்மை. அது வரலாற்று உண்மை அல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.

அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒரு மசூதியை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மசூதியை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? ஏன்? மசூதி இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்" என்றார்.

"நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மசூதியை மீண்டும் கட்ட சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, 'மசுதியும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை' என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.

வெவ்வேறு பகுதிகளில் ஒரு மசூதி அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. அப்படித் தரவேண்டும் என்பது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. இப்போது அவர்கள் எந்த மசூதியையோ, வேறு எதையுமோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வந்தனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை இப்படித் தெளிவாக சொல்லப்போவதில்லை " என்று கூறியுள்ளார் நீதியரசர் கங்குலி.

நன்றி: டெலிகிராஃப்

https://www.bbc.com/tamil/50372185

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.