• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பிழம்பு

இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்

Recommended Posts

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

DSC_0005.JPG

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள். இதில் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றிய கடைசி சிங்கத் தலைவர்களாக இன்றைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இந்தப் பட்டியல் முடிவடையவேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு 

இதனைப்போன்று சிங்களத் தலைவர்களினால் ஏமாற்றப்பட்ட தமிழ்த் தலைவர் வரிசையில் கடைசி இடத்தை இரா.சம்பந்தன் பெறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கையை ஏற்று இரு நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்.

குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதஸ எனது இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கோரிக்கைகளை திருகோணமலை மறைமாவட்ட ஆயரிடமும் தென்கையிலை ஆதீனத்திடமும் யாழ்ப்பாணம் சிம்மியா மிஷன் சுவாமிகளிடமும் கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தனிடமும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் வாக்குறுதிகளை அவர் வழங்குவாராயிருந்தால் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நான் கூறவிரும்புகின்றேன் 

அதில் ஒன்று இன்றைய அரசியல் அமைப்பில் 19 திருத்தங்கள் அடங்கிய இன்றைய அரசிலமைப்பை நான் முழுமையாக கொண்டு நடத்துவேன் அதாவது 13 ஆவது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட முழுமையாக .அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவேன் என்பதை கூறவேண்டும் 

அத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன அன்று இணைக்கப்பட்ட மாகாணங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த உயர் நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளமுடியும் இன்று இருக்கக்கூடிய அரசிலமைப்பு சட்டத்தில் அருகருகாமையில் இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் இணைக்கப்படமுடியும். எனவே முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இணைக்கப்படவேண்டும் 

மற்றையது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பேச்சுவர்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது ஒற்றையாட்சி பௌத்தத்திற்கு முதலிடம் போன்ற நிபந்தனைகளை அரச தரப்பில் வைக்கமாட்டோம் என்ற நிபந்தனைகளுடன் திறந்த மனதுடன் வரவேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவார்களானால் மேற்குறித்த இரண்டு வாக்குறுதிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் உறுதிப்படுத்துவார்களானால் 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவார்களானால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என்பதனை ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார்.

 

https://www.virakesari.lk/article/68748

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, பிழம்பு said:

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அதிகமான தமிழர்கள் சஜித்தை, அதிகம் தெரியாதவரை ஆதரிக்க முக்கிய காரணம், மற்றைய வேட்ப்பாளர், கோத்தா. அவர், மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தார் செய்த கொலைகள், அவர்களின் சர்வாதிகாரம். ஆனால், அதே கொலைகளும் சர்வாதிகாரமும் தமிழர் மீது தொடுக்கப்பட்ட பொழுது, அதில் சஜித், அவர் சார்ந்த ஐ.தே.க. மற்றும் சிங்களம் பயன் பெற்றது. அது சம்பந்தமாக இன்று ஏன் சிங்கள தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர்?, தமிழர் வாக்குகளை பெறவே. வென்றபின், தமிழர் தரப்பு கடவுளையே நம்பி, வேண்டி இருக்கவேண்டும். 

ஆகவே, தேர்தலை பகிஷ்கரிப்பது தவறு. ஆனால், வாக்கை ஒரு தமிழ் வேட்ப்பாளருக்கு போடுவது தவறில்லை. அது அவரவர் தனிமனித சனநாயக  உரிமை.   

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, ampanai said:

அதிகமான தமிழர்கள் சஜித்தை, அதிகம் தெரியாதவரை ஆதரிக்க முக்கிய காரணம், மற்றைய வேட்ப்பாளர், கோத்தா. அவர், மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தார் செய்த கொலைகள், அவர்களின் சர்வாதிகாரம். ஆனால், அதே கொலைகளும் சர்வாதிகாரமும் தமிழர் மீது தொடுக்கப்பட்ட பொழுது, அதில் சஜித், அவர் சார்ந்த ஐ.தே.க. மற்றும் சிங்களம் பயன் பெற்றது. அது சம்பந்தமாக இன்று ஏன் சிங்கள தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர்?, தமிழர் வாக்குகளை பெறவே. வென்றபின், தமிழர் தரப்பு கடவுளையே நம்பி, வேண்டி இருக்கவேண்டும். 

ஆகவே, தேர்தலை பகிஷ்கரிப்பது தவறு. ஆனால், வாக்கை ஒரு தமிழ் வேட்ப்பாளருக்கு போடுவது தவறில்லை. அது அவரவர் தனிமனித சனநாயக  உரிமை.   

சிவாஜிக்கு வாக்கு போடுவதும் கோத்தாவுக்கு வாக்கு போடுவதும் ஒன்றுதான். கோத்தா அணியினர் விரும்புவதும் அது தான்.

சிவாஜியால் செய்ய முடிவது எல்லாம் கோத்தாவை கொண்டு வந்து தமிழ் மக்களின் வாழ்வை மேலும் அழிவுக்குள்ளாக்குவது மட்டுமே. 

கோத்தாவி வெற்றி நிச்சயம். தாயக மக்களின் அழிவும் நிச்சயம்.

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, நிழலி said:

கோத்தாவி வெற்றி நிச்சயம். தாயக மக்களின் அழிவும் நிச்சயம்.

கோத்தாவின் வெற்றியுடன் தமிழர் இருப்பு முடிவடைந்து விடும் என்பதற்கான பொதுவான காரணம், அவரின் பழைய கொடூர வரலாறு. ஆனால், அதே வரலாற்றை கொண்ட பலரும் சஜித் தரப்பிலும் உள்ளார்கள், குறிப்பாக சரத் பொ. ஆகவே, ஒட்டுமொத்த சிங்கள இனமும் தமிழரை அழித்தன, அழிக்கின்றன, அழிக்கும்.    

அதேவேளை, சஜித் தரப்பு வென்றால் ஒருவேளை ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வாக்களிப்பதும்    ஒரு எதிர்பார்ப்பே. அவ்வாறு ஒருவர் ஒருநாள் வருவார், ஆனால் அதுவரை எமது இனம் இருக்குமா தெரியவில்லை.  

Share this post


Link to post
Share on other sites

தாயகத்தில் தமிழினப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கவே விரும்புகின்றனர்! எந்தவொரு பேரினவாதிகளுக்கும் ஒரு திருடனை விட மற்ற திருடன் பரவாயில்லை என்ற ரீதியில் குறுக்குவழியில் சிந்திப்பது பயனற்றது என்பது அவர்களுக்கு தெரியும்.

இன்னொரு பிரிவினர், நீண்டகாலத்தில் தமிழினம் எக்கேடு கேட்டால் எமக்கென்ன, அடுத்த சந்ததியினர் அடிமைகளாக வாழ்ந்தால் எமக்கென்ன, எமது வாழ்நாளில் எங்களுக்கு அல்லது புலத்தில் வாழும் எங்கள் உறவினருக்கு கிடைக்கக்கூடிய அற்பசொற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு அடிமைகளாக வாழும் நோக்குடன் சுயநலவாதிகளாக சஜித்துக்கு வாக்களிக்க விரும்புவர். இவர்கள் தங்களை நியாயப்படுத்த வெள்ளைவான், பெரியபேய் - சின்னப்பேய் போன்ற பூச்சாண்டிகளைக் காட்டுவர்! சம்பந்தன், சுமந்திரன், மாவை, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றவர்களும் அவர்களின் விசிறிகளும் இதற்கு உதாரணம்.

பிறிதொரு பிரிவினர் தாங்கள் செய்த கடத்தல், கொலை, கொள்ளைகளுக்கு தொடர்ந்தும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நினைப்புடன் கோத்தபாயவுக்கு வாக்களிக்க விரும்புவர். முத்தையா முரளிதரன், டக்ளஸ் போன்றவர்களும் அவர்களின் விசிறிகளும் நல்ல உதாரணம். 

Share this post


Link to post
Share on other sites

ஐயா சிவாஜி அவர்களே , நீங்கள் அரசியல் தெரிந்து கதைக்கிறீர்களா அல்லது தெரியாமல் கதைக்கிறீர்களா? இந்த தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை. இப்பவே கோதாவிட்கு அறுபது வீதத்துக்கும் மேலே சிங்கள வாக்குகள் உறுதி. சஜித்துக்கு இருக்கிற கொஞ்சவாக்கையும் இல்லாமலாக்க செய்யவா முயற்சசிக்கிறீர்கள். அவர்களுக்கு செய்யக்கூடிய காரியங்களை சொல்லவே பயப்படுகிறார்கள் அரசியல் காரணங்களுக்காக. இப்போதைக்கு நல்ல பிசாசை தெரிவு செய்வோம். 

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, Vankalayan said:

இந்த தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை.

தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை என கூற வந்தீர்கள் என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, பிழம்பு said:

அத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன அன்று இணைக்கப்பட்ட மாகாணங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த உயர் நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளமுடியும் இன்று இருக்கக்கூடிய அரசிலமைப்பு சட்டத்தில் அருகருகாமையில் இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் இணைக்கப்படமுடியும். எனவே முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இணைக்கப்படவேண்டும் 

இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் கிழக்கு, வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருப்பதா இல்லையா என மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்பட வேண்டும், இணைந்திருக்க விரும்பாவிட்டால் கிழக்கை தனியாக இருக்க விட வேண்டும் என்றே அவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

அனைத்து ஜனாதிபதிகளும் பொது வாக்கெடுப்பை பிற்போட்டு வந்ததால் அது நடக்கவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கெதிராக வடக்குடன் நீண்டகாலமாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது, அது கிழக்கு மக்களுக்கு பாதிப்பு என்பது போன்ற காரணங்களை JVP கூறி தான் உச்ச நீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பளித்தது.

மீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

மீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.

ஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,... 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ampanai said:

ஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,... 

நாளை, நாளை மறுநாள் என்றதெல்லாம் வேண்டாம்!

இப்பவே மனோநிலை அப்படி தான்!

மலையகத்தில் 60 களில் ஆரம்பிச்சு / விதைச்சு வைக்கப்பட்ட பிரதேசவாதம், மட்டக்களப்பு, திருகோணமலை, ... வழியா தொத்தி தொத்தி இப்ப எல்லா இடத்திலும் வியாபிச்சு இருக்கு.

தமிழன் ஈடேறாததுக்கு இதுவும் முக்கிய காரணம்!

Share this post


Link to post
Share on other sites
45 minutes ago, ampanai said:

ஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,... 

முதலில் நான் என்ன எழுதியுள்ளேன் என புரிந்து கொள்ளுங்கள்.

வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட முன் இரண்டும் தனித்தனியாக தான் இருந்தது. மன்னார் என்பது வடமாகாணத்தினுள் தான் உள்ளது.

மன்னார் மக்கள் தனியாக இருக்க விரும்பினாலும் மன்னாரை தனி மாகாணமாக அறிவித்து தனி மாகாண சபையை அவர்களுக்கு வழங்க மாட்டார்கள்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லதுதான். இருந்தாலும் சட்ட்டபூர்வமாக அது பிரிக்கப்பட்டிருப்பதாலும் , இந்தியாவின் திருவிளையாடல்களினாலும் அது நடக்குமோ என்பது சந்தேகம்தான். இதட்கு மேலால் ஒரு கூடடம் சமஷடி , ஈழம் எண்டு எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் உதாரணத்துக்கு மன்னர் மக்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் அவர்கள் அப்படியான எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கட்டும் , அதிகாரிகளாக இருக்கட்டும் மன்னர் மக்களை பற்றி எந்த கரிசனையும் எடுப்பதில்லை. சொல்லக்கூட்டியதான எந்த அபிவிருத்தியும் , மக்கள் நல திட்ட்ங்கள் எதையுமே செயட்படுவதில்லை.

முன்னர் இருந்த மன்னரை சேர்ந்த உயர் அதிகாரிகளினால் தண்ணீர் திடடம் , மின்சார திடடம் , பாதை அபிவிருத்தி போன்றவை செய்யப்பட்ட்து. இப்போது ஒன்றுமே இல்லை. மற்றைய மாவட்ட்ங்களில் இருந்து வரும் அதிகாரிகள் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு போகிறார்களே ஒழிய , மக்களின் முன்னேற்றம்பற்றி சிந்திப்பதில்லை.

இதுகுறித்து சுமந்திரனிடம் மன்னாரில் விவாதித்தபோது ஆளைவிடடாள் போதுமென்று ஓடிவிடடார். இப்போது மக்களுக்கு வேறு வலி இல்லாமல் ரிசார்டின் பின்னால் செல்கிறார்கள். உண்மை எப்போதும் சுடும். இதை நம்மவர்கள் விளங்கிக்கொண்டாள் சரி. இல்லாவிடடாள் மன்னார் மக்களும் , வன்னி மக்களும் வேறுவிதமான கோஷங்களை எழுப்ப நேரிடும். 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Vankalayan said:

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லதுதான். இருந்தாலும் சட்ட்டபூர்வமாக அது பிரிக்கப்பட்டிருப்பதாலும் , இந்தியாவின் திருவிளையாடல்களினாலும் அது நடக்குமோ என்பது சந்தேகம்தான்.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 31 டிசம்பர் 1988 க்கு முன் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் பொதுவாக்கெடுப்பை தள்ளி வைக்க ஜனாதிபதியால் முடியும்.

அந்நேரமே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருக்க வாக்களித்திருக்கும்.

ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தனா செப்ரெம்பர் 1988 இல், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை வடக்கு கிழக்கு இணைந்து ஒரு நிர்வாக அலகாக செயற்படும் என பிரகடனப்படுத்தி விட்டு பொது வாக்கெடுப்பை தள்ளிப்போட்டார். பின்னர் வந்த ஜனாதிபதிகளும் தள்ளிப்போட்டனர். உச்சநீதிமன்றம் ஜே.ஆர்.ஜயவர்தனாவின் பிரகடனம் சட்டவிரோதம் என தீர்ப்பளித்து விட்டது.

இன்றைய நிலையில் கிழக்கில் பல சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. முஸ்லிம்களும் பெருகி விட்டனர்.

வடக்கு கிழக்கு இணைந்தால் அது தமிழர்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் என்பதால் முஸ்லிம்கள் அதை எதிர்ப்பார்கள். சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைந்தால் ஏதோ தமிழர்களுக்கு தமிழீழமே கிடைத்து விட்டது என்பது போல் நினைத்து அவ் இணைப்பை எதிர்ப்பார்கள் (முன்பும் ஜேவிபிகாரர் உட்பட பலர் எதிர்த்தார்கள்). வடக்கு கிழக்கு இணைந்தால் வடகிழக்கு மாகாணசபையில் வடக்கின் ஆதிக்கம் இருக்கும். அதை கிழக்கு தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.

இந்தியாவின் நிலைப்பாடு 2017 இல்,

India will not press for merger of north, east Sri Lankan provinces: Jaishankar

India will not be pressing Sri Lanka to merge the Northern and Eastern Provinces to form a single Tamil-majority, Tamil-speaking province as envisaged by the India-Sri Lanka Accord of 1987, the Indian Foreign Secretary S.Jaishankar told the Tamil National Alliance (TNA) here on Monday.

He was reacting to a demand made by the leader of the Eelam Peoples’ Revolutionary Liberation Front (EPRLF) Suresh Premachandran, that India should honor its promise to keep the North and East united. It had even said that it would not allow a referendum to be held on the issue. When the united province was de-merged in 2006 by a Supreme Court order, India did not protest saying that it was for the Sri Lankan government to appeal against the judgment. India had clearly lost interest in the issue. Its interests lay elsewhere in Sri Lanka.

Jaishankar told Premachandran that much water has flown down the bridge since 1987 and as the situation has changed it will be better for all concerned to make use of the various windows of opportunity which have opened up recently with the change of regime in Colombo and secure the rights of the Tamils.

He argued that it would not be wise to hold every other matter hostage to one issue - the merger of the North and East.

However, he added that India would not mind if the Tamils kept the issue alive and kept it on the table for talks with the Sri Lankan government.

https://www.newindianexpress.com/world/2017/feb/20/india-will-not-press-for-merger-of-north-east-sri-lankan-provinces-jaishankar-1572830--1.html

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.