• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்

Recommended Posts

“நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம்.

download.png

We fear Gotabaya

கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவரது காரணம். அவருக்குப் பேசத் தெரியாது. கடினமான கேள்விகளால் அவர் இலகுவாகக் கொதித்தெழுபவர். அண்ணன் மஹிந்த மாதிரி அவர் இனிக்கப் பேசுபவர் அல்ல. இவ்வளவு காலமும் கட்டியெழுப்பிய அவரது பிம்பத்தின் நிஜம் தெரிந்துவிடக்கூடாது; தேர்தல் முடியும் மட்டும் அவர் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என அவரது மேய்ப்பர்கள் கருதியிருக்கலாம்.

அப்படியிருந்தும் அவரது உண்மையான முகம் அப்பப்போ வெளிவந்து விடுகிறது.

பொலநறுவவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஐ.தே.கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குத் தாவிய வசந்தா சேனநாயக்காவைச் ‘சுடச் சுட’ மேடையேற்ற முயன்றபோது ஊடகக் கமராக்கள் முகத்துக்குள் இருப்பதையும் உதாசீனம் செய்துவிட்டு “அவனைத் தூக்கிலிடுவேன்’ எனக் கத்தியவர் கோதபாய.

கேகாலையில் நடைபெறவிருந்த கூட்டமொன்றிற்கு மக்களை அழைத்துச் சென்ற ஒரு பஸ் வண்டியில் புத்தி பாதிக்கப்பட்ட (Down syndrome) ஒரு இளம் பெண் ஐந்து தடவைகள் வன்புணர்வு செய்யப்பட்டாள். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவோ அல்லது அவளிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறவோ அச்சம் காரணமாகக் காவற்துறை முனையவில்லை. முறைப்பாடு செய்யக்கூடாது என அவளது குடும்பத்துக்கு அழுத்தம் வேறு கொடுக்கப்படுகிறது. இச் சம்பவத்தைப் பற்றி அறிந்த மூன்று கேகாலை காவற்துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ராஜபக்சவின் கூட்டமொன்றில் கலந்துகொள்ள மறுத்தமைக்காக மாத்தளை மாவட்டத்தில் புத்த பிக்கு ஒருவர் பொதுஜன பெரமுன பிரதேச சபைத் தலைவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் 25% வாக்குகள் ராஜபக்சவுக்கே போடப்பட வேண்டுமென நாவலப்பிட்டி பொதுஜன பெரமுன நாட்டாமை மஹிந்தானந்த அளுத்கமகே முஸ்லிம் சமூகத்துக்கு விடும் எச்சரிக்கை காணொளியாக வலம் வருகிறது. “உங்களுக்காக நாங்கள் போராட வேண்டுமானால் எங்களுக்கு முஸ்லிம்களின் 25% வாக்குகள் வேண்டும்” என அவர் முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு எச்சரிப்பதாக அதில் காட்டப்படுகிறது.

வடக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீர் வீதித் தடைகள் மூலமும், இராணுவ மறிப்புகள் மூலமும், வாகாளர்களை எச்சரிப்பது சமீபகால சம்பவங்கள்.

வெள்ளை வான் காலத்து சூழ்நிலை மீளவும் ஒப்புவிக்கப்படுவது தெரிகிறது. கோதபாய வெற்றி பெற்றால் நாடு முழுவதும், சகல இனங்களும், ஒரு புதிய இருளான காலத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்பதற்கு மேற்கூறிய சில உதாரணங்களே போதும்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் மூன்று விடயங்கள் உறுதிப்படுத்தப்படும். குடும்ப நிர்வாகம், ஊழல், மிருகத்தனம்.

உலகம் ஜனநாயகத்தை நோக்கி நகரும் வேளையில் கணிசமான எண்ணிக்கையான மக்கள் காடைத் தனத்தால் ஆளப்படுவேண்டுமென்று விரும்பும் நாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெருந்தெருக்களுக்காகவும், துறைமுகங்களுக்காகவும், விமான நிலையங்களுக்காகவும், தாமரைக் கோபுரங்களுக்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை அடகுவைக்க விரும்பும் மக்கள் இந்நாட்டில் மட்டும்தான் வாழமுடியும். நேற்றய வெள்ளை வான் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் தான் இன்றய நாளின் அறிவுசார் கோட்பாட்டாளர்கள்.

இது தேர்தலுக்கு முன்பான கடைசிப் பதிப்பு. வருகிற ஞாயிறு இந் நாட்டின் 7வது நிறைவேற்று ஜனாதிபதி தெரிசெய்யப்பட்டிருப்பார். நவம்பர் 16 ம் திகதி எம் வாசகர்கள் சரியான வகையில் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆசியாவின் மூத்த ஜனநாயகத்தை ஒளிரச் செய்யுங்கள். உண்மையைச் சொல்ல முயற்சிக்கும் இப் பத்திரிகையின் ஊடகவியலாளர்களினதும், நாடெங்கிலுமுள்ள இதர ஊடகவியலாளர்களினதும் உயிர்கள் அச்சுறுத்தப்படாது இருப்பதற்காகவாவது சிந்தித்து வாக்களியுங்கள்.

நவம்பர் 16 தேர்தலில் 35 வேட்பாளர்கள் நிற்கின்றார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் இரண்டு பேர்களுக்கிடையேயான தேர்வு பற்றியது மட்டுமே.

அவர்களில் ஒருவர் எங்களுக்குத் தீராத அச்சத்தைத் தருபவர்.

https://marumoli.com/நாங்கள்-கோதபாயவிற்கு-அஞ/

Share this post


Link to post
Share on other sites

இன்றைய சமூக ஊடகங்களில் கோத்தவுக்கு எதிரான கனோளிகளும் இந்த ஒப்சேர்வர் அறிக்கையும் இனி ஒரு அதிசயம் நடந்தால் தான் கோத்தா வெல்ல முடியும் எனும் நிலைக்கு கொண்டு போயுள்ளது .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, பெருமாள் said:

இன்றைய சமூக ஊடகங்களில் கோத்தவுக்கு எதிரான கனோளிகளும் இந்த ஒப்சேர்வர் அறிக்கையும் இனி ஒரு அதிசயம் நடந்தால் தான் கோத்தா வெல்ல முடியும் எனும் நிலைக்கு கொண்டு போயுள்ளது .

சமூக ஊடகங்களை பார்க்காத, பெருமளவு பயன்படுத்தாத பாமர சிங்கள மக்கள தான் மகிந்த அணியின் ஆதரவு தளம். இவர்கள் இவற்றை கணக்கெடுக்காது மகிந்தவிற்கே வாக்களிப்பர்.

இம் முறை வடக்கு மட்டுமே சஜித்துக்கு கை கொடுக்க முயலும்.

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, நிழலி said:

சமூக ஊடகங்களை பார்க்காத, பெருமளவு பயன்படுத்தாத பாமர சிங்கள மக்கள தான் மகிந்த அணியின் ஆதரவு தளம். இவர்கள் இவற்றை கணக்கெடுக்காது மகிந்தவிற்கே வாக்களிப்பர்.

இம் முறை வடக்கு மட்டுமே சஜித்துக்கு கை கொடுக்க முயலும்.

அந்த பாமர கூட்டத்தை யாருமே  எக்காலமும் மாற்றியமைக்க முடியாது  ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவுத்தளம் இருக்கும் உதாரணம் mgr தமிழ்நாடு இப்பகூட அசைக்க முடியாத ஆதரவு தளம் ஆனாபாருங்க நாலு எழுத்து படிச்ச்சிட்டம்  நாங்கள் அறிவாளிகள் எனும் கூட்டம் இருக்கே அதுகள் இந்த ஒப்செர்வரை பார்த்து பிரளுங்கள் எங்கள் இனத்திலும் அதேதான் .

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
On 11/12/2019 at 11:33 PM, பெருமாள் said:

அந்த பாமர கூட்டத்தை யாருமே  எக்காலமும் மாற்றியமைக்க முடியாது  ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவுத்தளம் இருக்கும் உதாரணம் mgr தமிழ்நாடு இப்பகூட அசைக்க முடியாத ஆதரவு தளம் ஆனாபாருங்க நாலு எழுத்து படிச்ச்சிட்டம்  நாங்கள் அறிவாளிகள் எனும் கூட்டம் இருக்கே அதுகள் இந்த ஒப்செர்வரை பார்த்து பிரளுங்கள் எங்கள் இனத்திலும் அதேதான் .

பாமர மக்கள் என்றுமே பாமர மக்கள்தான். அவர்கள் மாறுவதும் இல்லை எதையும் மாற்றுவதுமில்லை. சிறீலங்காவைப் பொறுத்தமட்டில் பிக்குகள் எங்கு நிற்கிறார்களோ அவர்கள் பயன்படுத்தும் பாமர மக்களும் அங்குதான் நிற்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சினிமா உலகம் எங்கு நிற்கிறதோ அங்குதான் பாமர மக்களும் நிற்பார்கள். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
On 11/11/2019 at 9:35 PM, nunavilan said:

 

 

இப்படியான காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சகலருக்கும் கிடைக்க ஆங்கில புலமைசாலிகள் முன்வர வேண்டும்.

இணைப்புக்கு நன்றி நுணா.பச்சை முடிந்தது.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இன்றைய அதிக இளையவர் கைகளிலும் பல பாமர மக்களின் கைகளிலும் செல்லிடை தொலைபேசி / கணனி உள்ளது.

அதனால் தான் உலகில், கட்சிகள்  உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக, பொய்பிரச்சாரங்கள் மக்களால் மக்களுக்குள் பரப்புரை செய்யப்படுகின்றது.  

கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலில் பல பொட்களை உருசியாவின் பூட்டின் உருவாக்கி அமெரிக்க தலைவரை மட்டுமல்லாது உலக தலைவர்களையே மாற்றி வருகிறார். 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

இன்றைய அதிக இளையவர் கைகளிலும் பல பாமர மக்களின் கைகளிலும் செல்லிடை தொலைபேசி / கணனி உள்ளது.

அதனால் தான் உலகில், கட்சிகள்  உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக, பொய்பிரச்சாரங்கள் மக்களால் மக்களுக்குள் பரப்புரை செய்யப்படுகின்றது.  

இலங்கையில் இன்னும் குடிசை வீடுகள் பல உள்ளன. இலங்கையை உலகத்துடன் ஒப்பிட முடியாது.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, Lara said:

இலங்கையில் இன்னும் குடிசை வீடுகள் பல உள்ளன. இலங்கையை உலகத்துடன் ஒப்பிட முடியாது

உலகத்தின்  பல  குடிசை வீடுகளிலும் இன்று செல்லிடை தொலைபேசி உள்ளது. நிச்சயம் ஒப்பிடலாம்.

Image result for cell phone in rural areas

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ampanai said:

உலகத்தின்  பல  குடிசை வீடுகளிலும் இன்று செல்லிடை தொலைபேசி உள்ளது. நிச்சயம் ஒப்பிடலாம்.

Image result for cell phone in rural areas

இலங்கையில் பல வீடுகளில் மின்சார வசதி கூட இல்லை. A/L, O/L க்கு கூட விளக்கு வெளிச்சத்தில் படித்து பரீட்சை எழுதுபவர்கள் உள்ளார்கள்.

பல மக்களிடம் சிறிய வீடுகள் இருந்தாலும் அவர்களிடம் இணைய வசதிகள் இல்லை.

நீண்ட காலமாக இலங்கையுடன் தொடர்பிலில்லாத உங்களுக்கு இலங்கை நிலை தெரியப் போவதில்லை. 

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25வது படமான ‛நோ டைம் டூ டை ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.     http://www.tamilmirror.lk/video/ஜமஸ-பணட-ந-டம-ட-ட-டரலர/52-242073
    • இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்? மின்னம்பலம்   - இராமானுஜம் இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்லப்படும் தகவல்களின் தெளிவான பிம்பம் என்ன என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன. இளையராஜா இசைப்பணி மேற்கொண்டு வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில், அவருக்கு முன்பாக இசையமைப்பாளர் தேவா பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார். அவருக்குப் புதிய படங்கள் போதுமான அளவு இல்லை என்ற நிலைமை ஏற்பட்டபோது இங்கே இருப்பது தனக்குப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படியாகாது என்று நிர்வாகத்திடம் கூறி இன்முகத்தோடு காலி செய்துவிட்டு சென்றார். அவர் பயன்படுத்தி வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவை சில மாற்றங்கள் செய்து இளையராஜாவுக்குக் கொடுத்திருக்கிறது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது இருக்கும் இடத்தில் இளையராஜா தனது இசைப் பணிகளைச் செய்து வந்ததாகவும், திடீரென்று ஸ்டூடியோ நிர்வாகம் அவரை காலி செய்ய சொன்னதாகவும் கூறுவதில் உண்மை இல்லையா? இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ கிடைத்தது எப்படி? அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானது 1976ஆம் வருடம். அந்தப் படத்துக்கான இசைப் பணிகளை அவர் மேற்கொண்டது ஏவி.எம் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்தான். சில வருடங்கள் அந்த வளாகத்திற்குள் தனது இசைப் பணிகளை இளையராஜா மேற்கொண்டு வந்தார். அன்னக்கிளி படத்தைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த படங்கள், அதன் இசைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்களால் கவரப்பட்டு வெற்றிப் படங்களாகின. அதன் பின்னர் சினிமா விளம்பரங்களில் இசை - இளையராஜா என்று இடம் பெற்றாலே அந்தப் படம் வியாபாரமாகிவிடும் எனும் சூழல் ஏற்பட்டது. இளையராஜாவால் ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் வருமானமும் அதிகரித்தது. ஏவி.எம் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற வேண்டும் என்று இளையராஜா எண்ணிய நேரத்தில், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தங்களது வளாகத்துக்குள் அவர் குடிபுகுந்தால் வருமானம் அதிகரிக்கும் என்று வணிகரீதியாகக் கணக்குப் போட்டு அழைத்து வந்தது. ஆனால், அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்டது இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் இடம் இல்லை. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இசைக்கூடத்துக்கு எதிரில் உள்ள கட்டடத்தில் இளையராஜா குடி புகுந்தார். ஸ்டூடியோவால் இளையராஜாவும் அவரால் நிர்வாகத்தினரும் தங்களை வணிகரீதியாக வளர்த்துக் கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோவை கட்டத் தொடங்கவில்லை. இளையராஜா அந்த முயற்சியை மேற்கொண்டபோது பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை விட்டு அவர் வெளியேறினார். ஆனால், அவர் ஆசையாகக் கட்டிய ரெக்கார்டிங் ஸ்டூடியோ பிரச்சனைக்குரிய இடமாக இருந்ததால் அது கை நழுவிப்போனது. பின்னர், அவர் தனது இசை பணிகளைச் செய்வதற்கு யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி வந்த சாலிக்கிராமத்தில் உள்ள கலசா ஒலிப்பதிவு கூடத்தைச் சில காலம் பயன்படுத்தினார். பின்னர் போக்குவரத்து இட நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து மீடியா ஆர்டிஸ்ட் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு இடம்பெயர்ந்தார். ‘இளையராஜா என்னும் இசைக்கலைஞன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இசைக் கோயிலாகப் பயன்படுத்தி வந்த இடத்தை எப்படி காலி செய்யச் சொல்லலாம்?’ என்கிற இளையராஜா ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு தவறானது என மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்குகின்றனர் திரையுலகின் ஒரு பகுதியினர். இளையராஜா தனது இசைப் பணியை சுமார் பத்து வருட காலம் பல்வேறு ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் செய்தாலும் அவருக்கு நிறைவைத் தந்த இடம் பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோ தான். இதை அறிந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீண்டும் தனது வளாகத்திற்குள், அவரது இசைப்பணியை மனநிறைவோடு தடையின்றி செய்துகொள்வதற்காக தற்போது அவர் பயன்படுத்தி வரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை பல லட்ச ரூபாய் செலவு செய்து நவீனமாகப் புனரமைத்துக் கொடுத்திருக்கிறது.   “இத்தனை தாராள மனப்பான்மையோடு நடந்து கொண்ட ஸ்டூடியோ நிர்வாகம் வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்ற முயற்சி செய்வது ஏன்?” என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு இளையராஜா இன்றுவரை பொதுவெளியில் தனது தரப்பு நியாயத்தைக் கூறவில்லை. பிரசாத் ஸ்டூடியோ ஏன் இளையராஜாவை வெளியேற்றுகிறது? ஸ்டூடியோ நிர்வாக வட்டாரத்திலும், தமிழ்சினிமாவில் இளையராஜாவோடு நெருங்கிய வட்டத்தில் பயணித்த பலரிடமும் உண்மையான காரணங்கள் என்ன என்ற கேள்வியை முன்வைத்தபோது, ‘இளையராஜாவின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை. அவர் பக்கம் நியாயம் இருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கூட்டம் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்த முயன்றது எதிர்கால சந்ததியினருக்குத் தவறான முன்னுதாரணம்’ என்கின்றனர். விளக்கமாகக் கூறுமாறு கேட்டபோது மேற்கொண்டு பேசினார்கள். “பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தற்போது மூன்றாவது தலைமுறை நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. சினிமா டிஜிட்டல்மயமாகி பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசாத் ஸ்டூடியோ, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் எந்த ஒரு திரைப்படமும் பிரசாத் ஸ்டூடியோவைப் பயன்படுத்தாமல் முழுமையடைவதில்லை. அந்த அளவுக்கு பிரசாத் ஸ்டூடியோ தமிழக சினிமாவில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறது. பட வெளியீட்டின்போது வியாபாரப் பற்றாக்குறை ஏற்பட்டு தயாரிப்பாளர்கள் பிரச்சினையைச் சந்திக்கின்ற போது இரவு பகல் பாராது, தங்களது பணிக்கான பணத்தைக் காலம் கடந்தும் பெற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக விட்டுக்கொடுத்து முன்னுதாரணமாகச் செயல்பட்டு வருகிறது பிரசாத் நிர்வாகம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பிலிம் ரோலில் படம் தயாரான கால கட்டத்தில் அந்த படங்களின் ஒரிஜினல் படப் பிரதியைக் குளிரூட்டும் அறைக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். இதை எந்த தயாரிப்பாளரும் படம் வெளியானதற்குப் பின்னால் கடைப்பிடிப்பதில்லை. பிரசாத் நிர்வாகம் தனது சொந்த பொறுப்பில் பாதுகாத்து வந்திருக்கிறது. அதனால்தான் காலம் கடந்தும் வரலாறு படைத்த நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இன்றைய தலைமுறையினருக்கு டிஜிட்டல் வடிவத்தில் கிடைத்திருக்கிறது. இத்தனை பெருமை மிக்க நிர்வாகம் சிறுபிள்ளைத்தனமாக இளையராஜா விஷயத்தில் நடந்து கொள்ளுமா” என்கின்றனர்.   தமிழகத்தில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருக்கும் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மணியான அமைச்சர் உறவினர்கள், பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியை விலை பேசி முடித்திருப்பதாகவும் அதற்கான நுழைவாயிலாக இளையராஜா தற்போது இருக்கும் இடம் இருப்பதால் காலி செய்யச் சொல்வதாகக் கூறப்படுகிற தகவலை உறுதி செய்ய மறுத்துவிட்டனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், இந்த வளாகத்திற்குள் வர விரும்புவதாகவும் அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் என்பதால் காலி செய்யச் சொல்கிறார்கள். அதனால்தான் இளையராஜா இடம்பெயர மறுத்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்கிற தகவலும் கூறப்படுகிறது. இதில் உண்மையில்லை என்று ஸ்டூடியோ நிர்வாக தரப்பில் மறுப்பதோடு, ‘திடீரென்று இளையராஜாவை காலி செய்யுமாறு நிர்வாகம் கூறவில்லை’ என்கிற உண்மை தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது என்கின்றனர். அப்படியென்றால் இந்தப் பிரச்சினை எத்தனை காலமாக இருக்கிறது என்று விசாரித்தோம். இடப் பிரச்சினை புதுப் பிரச்சினை இல்லையா? இளையராஜா உச்சத்திலிருந்தபோது அங்கு நடைபெறும் இசைப் பணிகளால் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கு வருமானம் கூடியது. பட வாய்ப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் அவருக்கு மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் நிர்வாகத்துக்கு வருமானம் மிகக் குறைவாக கிடைத்ததோடு ஒரு கட்டத்தில் அதுவும் இல்லை என்று ஆகிப்போனது. இளையராஜா பயன்படுத்தி வருகிற இசைக் கூடத்துக்குச் செலவாகும் மின்சாரக் கட்டணம் மற்றும் அந்த இடத்துக்கான சொத்து வரி அளவுக்குக்கூட அந்த இடத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை. பட வாய்ப்பு குறைந்தாலும் உலகம் முழுமையும் இளையராஜா வணிக ரீதியாக நடத்துகின்ற இசைக் கச்சேரிக்கான முன்னோட்ட பணிகள் நடைபெறுவது ஸ்டூடியோவில்தான். ‘ரெக்கார்டிங் ஸ்டூடியோவை காலி செய்து கொடுங்கள் என்று இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டபோது சரி என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்கு கால அவகாசம் தேவை என்று அவரது தரப்பில் கேட்டுக்கொண்டபோது ஸ்டூடியோ நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், இளையராஜா காலி செய்து கொடுப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக 11 முறை கால நீட்டிப்பு கேட்டு காலம் கடத்தினார்’ என்று ஸ்டூடியோவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மேலும், ‘பிரசாத் ஸ்டூடியோ மேலாளராக KRS இருந்தபோதும், அவரது ஓய்வுக்குப் பின் பொறுப்புக்கு வந்த பாஸ்கர் இருவரும் இளையராஜாவுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார்கள். ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்திய இளையராஜா மறுபக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சரியா?’ என்பதே இளையராஜாவுக்காகப் பேசச் செல்லும் அவரது ஆதரவாளர்களிடம் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது. இளையராஜாவுக்குத் தமிழ் சினிமா ஆதரவாக இல்லையா? ஒரு திரைப்படம் உருவாகிறபோது அதில் இடம்பெறுகின்ற பாடல்கள் உருவாக்கம் செய்யப்படுவதற்கான அனைத்து செலவுகளும் தயாரிப்பாளரால் செய்யப்படுகிறது. இசையமைப்பாளருக்கான சம்பளமும் கொடுக்கப்பட்டு விடும். ஆனால், தன் இசை மூலம் உருவாக்கப்பட்ட திரைப்பாடல்களை வணிக ரீதியாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு அந்தப் படத்தின் இசையமைப்பாளருக்கு ராயல்டி வழங்க வேண்டுமென்று இளையராஜா சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தொடங்கியதன் விளைவாக, இவரது பாடல்களைத் தனது குரலால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாதிப்புக்குள்ளானார். ‘ராயல்டி விஷயத்தில் இளையராஜா சட்டத்தின் துணைகொண்டு தயாரிப்பாளர்களுக்கு துரோகம் இழைக்கிறார்’ என்று சிறு படத் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியபோது அதற்கு எந்தவிதமான பதிலையும், சமரச தீர்வையும் காண்பதற்கு இளையராஜா முயற்சி செய்யவில்லை. இளையராஜா இதுபோன்ற அணுகுமுறைகளைத் தொடர்ந்த காரணத்தால் வானொலிகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்கள் ஒளிபரப்பப்படுவது குறைந்து வருகிறது. பெரும்பான்மையோர் பயன்படுத்துகிற கைபேசிகளில் இளையராஜாவின் பாடல்கள் காலர் டியூனாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதற்காக செலுத்த வேண்டிய ராயல்டி தொகை அதிகம் என்பதால் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாடல்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறது. இப்படி எல்லாத் தரப்பிலும் தனது தனிப்பட்ட குணங்களால் அவர் செய்யும் செயல்கள்தாம் இத்தனை பிரச்சினைகளுக்குக் காரணம். இப்படி இளையராஜாவால் வாழ்ந்ததாக சொன்ன திரையுலகமே, இப்போது அவரால் பாதிக்கப்படுகிறோம் என்று பேசுகின்றனர். தங்களுக்கு இளையராஜா பதில் சொல்லாமல், சட்டத்தின் துணைகொண்டு இழைத்த அநீதியே திரும்ப அவருக்கு நடக்கிறது” என்கிறது அவரிடம் இக்குறைகளை சொல்ல இயலாத அவரது நட்பு வட்டாரம். இளையராஜா தரப்பின் வாதம் என்ன? இந்தப் பிரச்சினை சம்பந்தமாக இளையராஜா தரப்பின் கருத்தை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்தபோது ‘எதுவாக இருந்தாலும் இளையராஜா மட்டுமே பதில் கூற முடியும். வேறு யாரும் என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூறுவது இயலாத காரியம்’ என்று கூறிவிட்டனர். இருப்பினும் இந்தப் பிரச்சனையில் அவருக்கு உதவியாக இருந்து வருபவர்கள் சிலர் ஆதங்கம் தாங்காமல் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சிலவற்றைக் கூறினர். “இளையராஜாவால் பிரமாண்டமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்ட முடியும். அவருடைய முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்குப்பின் அப்படியொரு முயற்சியை மேற்கொள்ள அவர் விரும்பவில்லை. ‘சொந்தமாக ஸ்டூடியோ கட்டக்கூடிய பிராப்தம், ஆண்டவன் நமக்கு வழங்கவில்லை’ என்கிற மனநிலைக்கு அவர் வந்து விட்டார். இருக்கும் வரை பிரசாத் வளாகத்தில் இருப்போம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். இளையராஜாவைப் பொறுத்தவரை அவரது திரை இசைப் பயணத்தில் அவருக்கு சர்வதேச புகழும், இந்திய அளவிலான விருதுகள், பட்டங்களும் கிடைத்தன. ஆன்மிகத்தில் அழுத்தமான ஈடுபாடுகொண்ட இளையராஜா, பிரசாத் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை இசைக் கோயிலாகவே தனக்குள் வசீகரித்துக் கொண்டார். அதிலிருந்து அவரால் மீண்டு வர இயலவில்லை. பாரம்பரியமிக்க பிரசாத் நிர்வாகம் காலம் கடந்தாவது இதைப் புரிந்து கொள்வார்கள் என்று பொறுமை காத்தார். ஆனால் அதிரடியாக தனது ஸ்டூடியோ முன்பு தேவையற்ற பொருட்களைக் குவித்து தனக்கு இடையூறு செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தார் என்பதே உண்மை. தன்னுடனும், தன் புகழுடனும் நேருக்கு நேர் மோதுவதாக நினைத்தார். அதன் காரணமாகத்தான் நீதிமன்றத்துக்குச் செல்லும் முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார். சட்டப்படி, தார்மிக அடிப்படையில் இடத்துக்கு உரியவர்கள் கேட்கிறபோது காலி செய்து கொடுக்க வேண்டியது இருப்பவர் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு புகழும் பெருமையும் சேர்த்த இசைக்கலைஞனின் மன உணர்வுக்கும், நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வது, சாதனையாளனை அவன் வாழும் காலத்தில் கௌரவப்படுத்துவதாக இருக்கும் அல்லவா?” என்று இளையராஜா தரப்பினர் கூறுகின்றனர்.     https://minnambalam.com/k/2019/12/06/20/Ilayaraja-prasad-lab-music-stuido-issues-that-unfold
    • எப்படி................?  கடந்த 2500 வருடங்களாக பயன்படுத்திய விதமாகவோ   .......... ?  போங்கப்பு நீங்களும் உங்கடவுள் கேலிச்சித்திரமும்.  இரண்டுபேரின் தலையையும் இடம் மாத்திப்போட்டடிருந்தால் கொஞ்சம் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்.
    • பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகை பாதிக்கபட்டவர்களுக்கு எப்படி உதவும்? இதற்கு நஷ்ட ஈடு அல்லவா வழங்கப்பட்டிருக்கவேண்டும்!
    • Killings of a six-year-old girl and a vet are just two examples of a problem that appears to be getting worse Hannah Ellis-Petersen in Rajasthan Her family called her Twinkle. In the dry desert brush of Rajasthan where her body was found, blood spattering her tiny legs and brown school uniform and a belt fastened around her neck, she lay among scattered toffee wrappers. Her family could barely utter the words to describe what happened to the six-year-old. “If you saw her body, you will never sleep again,” said her grandfather Mahvir Meena. Over the past week, a wave of anger and repulsion has enveloped India in response to the gang rape and murder of a 27-year-old vet in Hyderabad as she made her way home from work last Wednesday. The four men who allegedly carried out the attack deliberately deflated her scooter tyres, then waited. After offering her help, they allegedly dragged her to isolated scrubland by the side of the road, raped her, asphyxiated her and then dumped her body in a motorway underpass, before dousing it with kerosene and setting it alight. The four suspects were controversially shot dead by police on Friday Yet while the horrific crime has prompted hundreds to take to the streets, and calls for lynching and hanging in parliament, it was far from an isolated incident. According to statistics, a woman is raped in India every 20 minutes. India is the most dangerous place to be a woman, according to a survey by the Thomson Reuters Foundation last year, and the stark reality of this was brought to the fore this week. As well as the Hyderabad case, there was the abduction, gang rape and murder of a young lawyer in Jharkhand; the rape and murder of a 55-year-old cloth seller in Delhi’s Gulabi Bagh neighbourhood; and a teenager in the state of Bihar was gang raped and killed, before her body was set on fire on Tuesday. And last Saturday, in the small rural Rajasthan village of Kherli, Twinkle became one of the youngest recent victims of India’s sexual violence pandemic. Her alleged attacker was a neighbour who she would often visit on the way home from school. Mahendra Meena, a truck driver with two daughters of his own, aged two and 18, would give sweets and hugs to the boyishly faced six-year-old with cropped hair whenever she stopped by. So when he was seen on Saturday cuddling her and handing her some toffees, no one thought it strange. But that afternoon, as she left through the bright orange school gates, Meena allegedly took her to the forest behind the school. In an abandoned concrete hut with a single window he is accused of raping her, and then, to hide the evidence of his crimes, putting his belt around her neck and strangling her, discarding her body in the parched scrubland. It was here, still in her school uniform, that she was found by a neighbour at dawn the next morning. Meena later told police he had been drinking. Remnants of Twinkle’s possessions were still scattered all over the village where she lived with her grandparents when her family spoke about the crime. A small pair of pink trousers hung from a nail. One of her jelly sandals lay on the roof where she had flung them. Her mother, Bintosh Meena, sat on the floor, her face wrapped in blankets, rocking back and forth in grief and howling out her daughter’s name. “Wherever you are my little quail, come back to me, come back to me,” she repeated. She was called Twinkle because she was like a tiny little star, said her grandmother, Kiskinda Meena, wiping away tears. She and her younger brother were always seen laughing and playing together in the fields that surround the village, but every morning her grandmother would dress her in her brown skirt, blouse and striped tie, and at 10.30am she would walk the few hundred metres down the dusty path to her school. “She was friendly with everyone, she was a very quiet child and never a nuisance,” said her teacher, Vinod Kumar. She had loved school, carrying her books everywhere. But on the day she was killed, she had run out of the gates in such a rush to get home, she had left her school bag behind. Ram Krishnan, the senior police officer overseeing the investigation, said he was so haunted by the case he had not eaten or slept for two days. Villagers,meanwhile, expressed disbelief that this savage sexual crime had come to their doorstep. Many said their daughters were too afraid to go back to school. Kiskinda Meena said: “You hear about this in other places in India, in the cities, but such a thing has never happened here. And to my girl who is still such a baby. We should be protected here from this. “The government says you should educate the girls to help them against attacks but there is nothing to save them when this happens. Until the government takes a strong stance then this will not stop.” It was seven years ago, after the brutal gang rape of Jyoti Singh, a student on a bus in Delhi in 2012, that India’s systemic problem with sexual violence was first pushed into the spotlight. Thousands took to the streets to demand action in the name of Singh, – who was christened Nirbhaya, meaning fearless, by the media. New legislation doubled prison terms for rapists to 20 years. But seven years on, the consensus among activists and women is that the problem is getting worse. The key social issues behind the crisis remain unaddressed and the culture of impunity for sexual crimes remains firmly embedded. In the courts there are 133,000 pending rape cases. In May, a panel of judges dismissed allegations of sexual harassment against the chief justice of India, made by a former court employee, as being of “no substance”, in a ruling that triggered anger and protests. He denied the claims. Advertisement “Unless this becomes a problem of nationalism and national pride, I don’t see anything changing,” said Deepa Narayan, a social activist and the author of Chup: Breaking the Silence About India’s Women. “Society here devalues women systematically and makes them subhuman, and rape is the worst symptom of that. It does feel like the levels of depravity and cruelty in these crimes are increasing.” State governments have not even touched the Nirbhaya fund, for which the government put aside 10bn rupees for initiatives to help women’s safety. As of today, 91% of the fund remains unspent. Delhi, which bears the unwelcome title of “rape capital of the world”, has spent 5% of its allocation. In the Indian parliament this week, the response by several politicians to the Hyderabad rape case was simply to call for the accused to be lynched and hanged. But Kavita Krishnan, the secretary of the All India Progressive Women’s Association, said this was only making the problem worse. “The cry for the death penalty is nothing but a red herring,” she said. “It’s the easy option because it avoids any institutional accountability and doesn’t cost a thing, it’s just lawmakers reassuring themselves that all it will take to solve this problem is to eliminate one or two of these devils. We are still not having the conversation which needs to happen, so nothing changes.” She added: “All the talk of the death penalty for rape just means we may be seeing more women murdered so they can’t remain alive as a witness.” Krishnan said that far from things improving since 2012, under Narendra Modi “we’ve gone several steps back. We have a government which is actively invested in rape culture, in protecting powerful rape-accused persons and communalising every incident of rape.”   Ranjana Kumari, the director of India’s Centre for Social Research, said she ultimately held the government responsible for the problem. “They are failing in law enforcement, they are failing in dispensation of justice, they are failing in implementing safe environments for women,” said Kumari. “There is no political will to address this problem, so how is it ever going to get better?”   https://www.theguardian.com/world/2019/dec/06/i-dont-see-anything-changing-despair-india-rape-crisis-grows?fbclid=IwAR0ljVnencghXlrt6Mv632Ig0oM1-S54jyglrfVNMZ6KTD0A9Sz8nk-E0aY