• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

விடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்

Recommended Posts

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டு தடையை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபின், விடுதலைப்புலிகள் அமைப்பு மீது மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின் அந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14ம் தேதி மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘இலங்கை போரில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை. இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது.  இந்த அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என கூறியிருந்தது.

இந்த தடை நீட்டிப்பை எதிர்த்து விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் தீர்ப்பாயத்தில் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்(ஊபா) கீழ், கடந்த மே 27ம் தேதி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையிலான் தீர்ப்பாயம் டெல்லி மற்றும் சென்னையில் இது தொடர்பான விசாரணை நடத்தியது. மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உட்பட பலர்  தீர்ப்பாயத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.  இதனை கேட்ட தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த 7ம் தேதி உறுதி செய்து அந்த தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540226

Share this post


Link to post
Share on other sites

இல்லாத அமைப்புக்கு தடை போட்டா என்ன?! எடுத்தா என்ன?!
சனத்துக்கு சும்மா பீலா விடுறாங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ampanai said:

ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை. இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது.  இந்த அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஈழம் என்ன ஹிந்தியாவிலா அமைக்க நிதி திரட்டுகிறார்கள்.. பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதெல்லாம் ஹிந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அப்பட்டமான பாசிசம். இதுதான் பாசிசத்துக்கான உண்மையான விளக்கமே. 

ஹிந்திய நீதித்துறைக்கு ஈழ விவகாரத்தில் தலையிட.. கருத்துச் சொல்ல.. தடைவிதிக்க என்ன அதிகாரம் உள்ளது. ஈழம் என்ன ஹிந்தியாவின் நிலப்பரப்பா அல்லது ஹிந்திய சட்டத்துக்கு உட்பட்டதா.

இதெல்லாம் அடாத்தான பாசிசச் செயற்பாடுகள். இவர்கள் எல்லாம் வல்லரசானால்.. அமெரிக்கா இன்று செய்வதை விட மோசமாக மனித குலத்திற்குச் செய்வார்கள் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் ஹிந்தியாவை விஞ்சி நாங்கள் ஒன்றுமே செய்ய ஏலாது என்று பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு.. ஹிந்தியாவின் உண்மையான பலவீனம் தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள். அவ்வளவே. 

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ampanai said:

இதுகுறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘இலங்கை போரில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை. இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது.  இந்த அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என கூறியிருந்தது.

உண்மை. எந்த இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை.

நாளை இலங்கையில் சீனர்கள் கால் பதித்து விட்டால், இதே இந்திய கொள்கைவாதிகள் தமிழர்களுக்கு ஆயுதம், நிதி வழங்கி, 'விடுதலை வீரர்கள்' என்றும் கொண்டாடலாம்.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • காதலன் - காதலி தியாகராஜ சுவாமி திருக்கோவில்
    • பின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு. மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள். 
    • இப்பிடியே போன மோசடியா கொள்ளையடித்த ஸ்ரீதர் தியேட்டர் என்ன ஆகிறது?
    • தவறாக புரிந்துவிட்டீர்கள்! வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்? சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை! சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.
    • Tholar Balan 12 hrs •ஏழரைக் கோடித் தமிழரில் உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை? ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார். எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும்? இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”. ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார். என்னே கொடுமை நிலை தமிழனுக்கு? உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா? அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை? ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை. அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே? இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா? ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது? தமிழ்நாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் ஒருவன் கூட இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?