-
Topics
-
Posts
-
இங்கும் மொரோக்கோ சிவப்பு வெங்காயம் கிலோ .25p அதுசரி இவ்வளவு வெங்காயத்தை முஸ்லீம் நாடுகளில் இருந்து இறக்கி சமாளிக்கினம் தானே இந்த பிஜேபி கூட்டம்.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..! வெங்காயம் கட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தொடர் விலை ஏற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பல்வேறு கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த ஒரு நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் நிலைமையை சமாளிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தற்போது எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 30 டன் வெங்காயம் திருச்சிக்கு காந்தி நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்யவும், அவ்வாறு வினியோகம் செய்த பின்னர் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 120 வரை நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 150 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர எகிப்திலிருந்து இறக்குமதி கொண்டுவரப்பட்ட வெங்காயம் பெரிய அளவிலும், சற்று கருமையாகவும் இருப்பதால் வெங்காயம் வாங்க தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும் விலை அதிகமாக இருந்தாலும் "நாட்டு" வெங்காயம் தான் வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://tamil.asianetnews.com/life-style/people-bother-to-but-onion-which-was-imported-from-egypt-q28zw1 -
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறியிருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18–80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம், ஊழல் அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, ஊழல் காரணமாக தனிநபர் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைகின்றது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், தேசிய மட்டத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டே இலஞ்சம் ஊழல் அனுபவம் தொடர்பில் மக்கள் மத்தியில் இக்கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டுமக்கள் நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் எந்தக் கட்டமைப்பைப் பெரிதும் நம்புகின்றார்கள் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பு முடிவுகளின் பிரகாரம் 73 சதவீதமானோர் நீதிமன்றத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை 47 சதவீதமாகவும், பொலிஸார் மீதான நம்பிக்கை 57 சதவீதமாகவும் அமைந்திருக்கின்றது. அதேவேளை இக்கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒருபகுதி மக்கள், தாம் அரசசேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் அவர்களில் மூன்றிலொரு பிரிவினர் இவ்வாறு இலஞ்சம் வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப் பட்ட கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் அரைப்பங்கினர் ஊழல் மற்றும் இலஞ்சத்தின் ஒரு வடிவமாக பாலியல் இலஞ்சமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அரச அதிகாரிகளினால் அரசசேவை கள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதி பலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுகின்றது. பாலியல் இலஞ் சம் கோரப்படும் நிலைமையானது கிராமப்புறங்களை விடவும் நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளபோதிலும் அதனால் தோட்டப்புற மக்களே இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கருத் துக்கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தியுள் ளன. மேலும் இக்கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 86 சதவீமானோர் இலங்கையில் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கென ஆணைக்குழுவொன்று இயங்குகின்றது என்பதை அறிந்திருக்கின்ற போதிலும் 72 சதவீதமானோர் இக்குற்றங்கள் குறித்து முறையிடக்கூடிய பொறிமுறை பற்றிய தெளிவற்றவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் இக்கருத்துக்கணிப்பு முடிவு கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை யொன்றையும் அதற்கான சந்தர்ப்பத்தை யும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர சுட்டிக்காட் டினார். அதேவேளை அரசாங்கமும் பொலிஸா ரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தக்கூடிய விதமாக செயற்பட வேண் டும் என்று வலியுறுத்திய அவர், பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலை யையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் செயற்பாடு களை விரைவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/70772
-
சீனாவுடனான நட்புறவை மேலும் வளர்ப்பதில் அரசாங்கம் நாட்டம்: பிரதமர் மஹிந்த சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சீனாவினால் முன்னெடுக்கப்படும் மண்டலமும், பாதையும் செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு கறித்து சில மேற்குலக ஊடகங்கள் வர்ணிப்பதைப் போன்ற கடன்பொறியாக அமைகிறது என்று தான் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொழும்பு போர்ட்சிட்டி கம்பனியும் இணைந்து நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு நேர்காணலொன்றை வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக கடலிலிருந்து நிறப்பப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அன்றையதினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டிய நிகழ்விற்காக அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமருடன் கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் சியூயுவானும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் சென்றிருந்தனர். 'சீனாவும், இலங்கையும் பலம் பொருந்திய நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்புறவு நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வலிமை வாய்ந்த அத்திவாரத்தை அமைத்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிவருகின்ற நீண்டகால ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மண்டலமும், பாதையும் செயற்திட்டத்திலான இலங்கையின் பங்கேற்பு ஒரு கடன்பொறிக்குச் சமனானது என்று மேற்குலகின் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. சீனாவின் ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பேரார்வம் மிக்க அந்த செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பை அவ்வாறு ஒரு கடன்பொறியாக நான் நினைக்கவில்லை. 'அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பெறப்பட்ட கடன்களை இலங்கையினால் தெளிவாக மீளச்செலுத்த முடியும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. ஆனால் நாம் அதை மீளக்கட்டியெழுப்பும் போது கடனை மீளச்செலுத்துவது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. 'அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாகப் பரபரப்பாக்கியிருக்கின்றன. உண்மையில் அவர் சீனாவுடனான அந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பின்புலத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் அதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த உடன்படிக்கையினால் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி அதனைக் கூறவில்லை. முன்றைய அரசாங்கத்தைப் போலன்றி எமது அரசு பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். 'இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில் அவற்றை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். இலங்கையில் ஒரு புதிய வர்த்தக மையமாக கொழும்புத் துறைமுக நகரம் தோன்றுவதை உறுதி செய்வதற்கு அந்தத் திட்டத்தை நிர்மாணிக்கும் சீனாவின் பணிகளுக்கு எனது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும். கொழும்பு துறைமுக நகரத்தின் முன்னுரிமைக் கொள்கைகளை அரசாங்க மட்டத்தில் துரிதப்படுத்தும் பணிகளை 2020 ஜனவரியிலிருந்து முன்னெடுக்கப்போவதாகவும் பிரதமர் ராஜபக்ஷ நேர்காணலில் தெரிவித்துள்ளார். துறைமுக நகருக்காக கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பை கொழும்பு மாவட்டத்தின் பகுதியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் வருடங்களில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களைக் கவருமெனவும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயின் தூதுவராக வூ ஜியாங் ஹுவா கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சீனத்தூதரகம் விடுத்த அறிக்கையொன்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இணங்கிக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உட்பட பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒத்துழைப்பை தற்போது நடைமுறையிலிருக்கும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இருநாடுகளும் துரிதமாக நடைமுறைப்படுத்தும் என்றும், எதிர்கால ஒத்துழைப்புக்கான புதிய திட்டவரைவொன்று உருவாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70767
-
3 ஆவது நாளாகவும் சி.ஐ.டி.யில் ஆஜரான சுவிஸ் தூதரக ஊழியர்! கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய நேற்றைய தினம் அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அத்துடன் அவரிடம் நேற்றும் நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70768
-