Jump to content

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் ஈழத் தமிழர்களும் பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 


அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் அந்த தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று.ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை.

எப்பொழுது ஒரு சிறு பான்மை இனம் தனது போராட்டத்தின் பலத்தை இழக்கிறதோ (balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power)இழந்து பெரும் பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு  அடிமையாகிவிடுகிறது .அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்குமுறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரயைகளாக ஒடுக்கப்படுவர்.ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது.

தொலைந்தவனை தேடும் தாயின் கண்ணீர் நிலம் முழுக்க நனைகிறது.யுத்தம் முடிந்து 
பல வருடம் ஆகிறது பதின் மூன்றுக்கு மேல் (13th plass amendment)தருவோம் என்றார்கள் அதில் பாதி கூடி தரவில்லை.இன்று வரையில் எந்த அதிகாரப் பரவலாக்கலையும்(devolution of power)செய்ய முயலவில்லை .அரசியல் கைதியாக அவர்கள் படும் துன்பம் வேறு.
தாய் வேறு பிள்ளை வேறாய் தமிழன் துயர் தொடர்கின்றது.இனவாத பெரும் தேசியமாய் 
தின்று கொழுத்த பெருச்சாளிகள் எதுகுமே தமிழனுக்கு தர இல்லை என்பது போல் இன்னும் ஒரு தேர்தலுக்காய் இனவாத போர் முழக்கம் இலங்கையையே உலுப்புகிறது.
கோத்தபோபியா(kothaphobia) என்னும் பெரும் பூதம் மீண்டும் ஒரு அழிவோடு தமிழர் நிலங்களை விழுங்க வருமோ என்ற பயம் தமிழர்களிடத்தே ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

தானாகவே வந்து சிங்களம் தமிழனுக்கு தருவதற்கு என்ற ஒன்றும் இல்லை.
அன்று ஒரு நாள் அந்த கிழவன் கேட்ட சமஸ்டியை(federal state )கொடுத்து இருந்தால் இத்தனை அழிவு இலங்கையில் இருந்திருக்குமா,அன்று தொடக்கம் அரசியல் தலைவர்கள் விதைத்த இனவாதம்,மதவாதம்,பெரும் தேசியவாதம் இன்று எல்லா இன மக்களையும் பிரித்து இருக்கிறது.

இன்று கூட சொல்கிறது இணைந்த இலங்கைக்குள் தான் தீர்வாம் இப்படி இருக்கையில் இன்னும் ஒரு தோர்தல், அதிகாரக் கதிரையில் யார் இருபத்தொன்று.
கொழுத்த தேசிய இனவாத பெருச்சாளிகள் கொன்று தின்ற சொத்தும் மனிதரும் எத்தனை எத்தனை.இன்னும் அதிகார பசி அடங்கா குடும்ப அதிகாரம், ஆணவம், இனவாதம் ,அத்தனை ஆயுதத்தையும் கையில் எடுத்து சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மக்களை யுத்தத்தில் வென்ற வெற்றி கதைகளையும் ,இலங்கையின்  இறைமைக்கு (Sovereign)பிரிவினை வாதிகளால் அச்சுறுத்தல் உண்டாகி இருப்பதாகவும் இனவாத கருத்துக்களை மஹிந்தவின் கட்சி பரப்பி வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க அமைதியையும், சமாதானத்தையும் ,அன்பையும் ,போதித்த புத்த பகவானின் சிந்தனையில் இருந்து விலகி இன்று இலங்கையின் பௌத்த தேரர்கள் முழுமையான இனவாதத்தை பேசி இலங்கையின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் விளைவிப்பதோடு மட்டும் அன்றி சகல இனங்களுக்கு இடையிலான பிளவை ஏற்படுத்தி மேலும் இனங்களுக்கு இடையிலான மோதலை வன்முறையை வளர்த்து வருகின்றனர்.

இலங்கையின் சிங்கள  அரசியல் தலைவர்கள் உண்மையான  பெளத்தர்களாக இருந்து இருந்தால் நாம் துப்பாக்கி ஏந்தி இருக்க மாட்டோம்.if jayawardana was real buddhist we would not be carrying a gun. என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்(India today)இந்தியா ருடே என்ற இதழுக்கு பேட்டி கொடுக்கும் போது கூறியது இன்று எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று தெரிகிறது.

இரு பெரும் தேசிய கட்சிகளும் இன்று வரை எமக்கு தந்த துன்பம் எழுத்தில் அடங்காது.கல்வியே வாழ்வு என்று இருந்த தமிழன் வாழ்வை தீ இட்டு எரித்தது இன்னும் ஒரு இனவாத அரச பயங்கரவாதம்.தமிழனின் வாழ்வும் வளமும் அடையாளமும் அழித்து ஒழித்த வரலாறு அந்த மண்ணுக்குள் சிவப்பாக சிதறிக் கிடக்கிறது.எழுதுவதும் ஏமாற்றுவதும் கிழிப்பதுமாய் எத்தனை ஒப்பந்தங்கள்.அரசியல் தீர்வு ரீதியாக நாங்கள் ஏமாற்றபட்ட(Political duplicity)வரலாறுகளே அதிகம் .

இது இவ்வாறு இருக்கையில் இலங்கை வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பெரும் இனவாத பூதங்களின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தத் தமது அபேச்சகர்களை இறக்கி உள்ளனர்.இந்த இரு பெரும் கட்சியின் கைகளிலும் ஈழ தமிழனின் இரத்த கறைகள் பதிந்துள்ளன.இப்படி இருக்கையில் எவரை தெரிவு செய்வது என்ற பெரும் குழப்பம் தமிழர்களிடையே நிலவுகின்றது.இரு வேட்ப்பாளர்களிடமும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தீர்வுக்கான  எந்த அரசியல் தீர்வும் முன் வைக்கப்படவில்லை.

இப்படி இருக்கையில் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிக்க படாத இலங்கைக்குள் அதி கூடிய அதிகாரப்பரவலாக்கத்தை அமுல் படுத்துவதாக கூறி உள்ளார்.கறிக்கு கொஞ்சம் கறிவேப்பிலை போட்ட மாதிரி சிங்கள தரப்பின் வாக்கு பலத்தை தன் பக்கம் இருந்து இழக்காமல் ஏதோ பூசி மெழுகி அரசியல் தீர்வு பற்றி பேசி இருக்கிறார்.

ஆகவே கடந்த கால படிப்பினைகளை கொண்டு பார்க்குமிடத்து ஏதோ இப்போதைக்கு ஒரு வழியில் தீர்வை காண வேண்டும் என்ற அடிப்படையில் தமிழர் தேசிய கூட்டு அமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்கும் படி கோரி உள்ளது.வேறு எந்த தெரிவும் இல்லாத தமிழ் மக்கள் முள்ளி வாய்க்காலின் பின் தம் பலத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்கள் என்ன தெரிவை மேற்கொள்ள போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.கடந்த காலங்களில் விட்டு சில பிழைகளையும் படிப்பினையாக கொண்டு என்ன முடிவை எடுப்பதென்பது அந்த மக்களின் நீண்ட கால அரசியல் விடுதலைக்கு வித்து இடுவதாக அமைய வேண்டும்.

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசதில் அவிவிருத்தி எதுகும் இல்லை.அரசியலும் அவிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே.அரசியல் தீர்வு ஒன்று அடிப்படையாக அமையும் இடத்து அவிவிருத்தி பாதைக்கு இது வழி சமைக்கிறது.இன்றும் கூட சர்வதேச நாடுகளினால் ஒரு பாரிய அவிவிரித்தி பணி செய்ய முடியாமைக்கு அங்கு ஓர் அடிப்படை அரசியல் தீர்வு ஒன்று இல்லாமல் இருப்பது தான்.

அரசியல் ஸ்த்திரதன்மை இல்லாமல் செய்யும் எந்த அவிவிரித்தியும் உதவிகளும் அந்த மக்களுக்கு போய் சேர முடியாது மாறாகவே ஊழ அரசியல் வாதிகளின் கைகளுக்குகே போய் சேருகின்றன.சுனாமி  நிதியாக சர்வதேச நாடுகளினால் கொடுக்கப்பட்ட உதவிகள் அந்த மக்களுக்கு சேராமல் அரசியல் வாதிகளின் கைகளுக்கு போய் சேர்ந்தது.

யுத்தத்துக்கு பின்னரான ஈழ தமிழர் வரலாறு இன்று ஒற்றுமை இன்றி சிதைந்து கிடக்கிறது.ஒரு பொது தெளிவான இலக்கின் அடிப்படையிலேனும் இவர்களால் ஒன்று பட முடியவில்லை.ஜனநாயக சூழலுக்கு ஏற்ப பல கட்சி அமைப்பு இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் சார்பில் ஒற்றுமையாக குரல் கொடுக்க முடியாதவர்களாகிப்போனார்கள்.

இனி ஒரு விதி செய்வோம் என்பது போல் ஈழ தமிழத் தலைமைகள் இனி ராயதந்திர போர் செய்யவேண்டும்.இந்த தேர்தலில் பெரும் சிங்கள தேசியத்தை எப்படி கையாளப்போகிறது தமிழர் தந்திரம்.மிஞ்சி இருக்க ஒன்றும் இல்லை என்பவனுக்கு எது தெரிவாகப் போகிறது.ஏதோ எல்லாமே நாம் இழந்து நின்றாலும் எமது கோரிக்கைகளையும் எங்கள் முழுமையான விடுதலைக்கான பாதையிலும் நாம் என்றும் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்தியா,சர்வதேசம்,இலங்கை இந்த மூன்று தரப்பையும் ஈழ தமிழர் தலைமை தன் அரசியல் தீர்வை அடைய இதை எப்படி கையாளப்போகிறார்கள்  என்பதும் . இன்னும் பல கடினமான பாதையை மாறி வரும் பூகோள அரசியலுக்கு அமைய எப்படி கடப்பது என்பதில் இருந்து இவனின் இன்னும் ஒரு விடுதலை அரசியல் பயணம் தொடரவே செய்யும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.