ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்..
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும்.
இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும் பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார்
அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://jaffnazone.com/news/14847
நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான்.
புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை.
அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன்.
இதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்ன என்றால் நீங்கள் புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள் எனவே உங்கள் பதவியையும் என்றென்றும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
காலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின் அடிப்படை.
தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும்.
சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது.
பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பேருந்துகளை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
http://athavannews.com/கொழும்பிற்குள்-பிரவேசிக/