• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

தூக்கிலிட வேண்டும் எனக் கூறும் ஜனாதிபதி ஏன் கொலையாளியை விடுதலை செய்கிறார்- பிம்மல்

Recommended Posts

தூக்கிலிட வேண்டும் எனக் கூறும் ஜனாதிபதி ஏன் கொலையாளியை விடுதலை செய்கிறார்- பிம்மல்

bimma

ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு  அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது சட்டம் நீதியை மீறும் செயற்பாடு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(11) விளையாட்டில் சூதாட்டம் தவிர்ப்பதற்கான விசேட  சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் ஒரு நாடு என்றவகையில், நாம் பாரிய பின்னடைவை சந்திக்கின்றோம். நாட்டின் சட்ட- நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளமை  மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் நாம் பாரிய அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.

ஏனெனில் கொல்லப்பட்ட அந்த பெண்  சுவீடன் நாட்டை சேர்ந்த பெண் என்பதால் இது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகவும் காணப்படுகின்றது. ஆகவே ஜனாதிபதி முன்னெடுத்த இந்த செயற்பாடு காரணமாக  சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய அவமானமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையினால் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்த கடிதத்தை வாசித்தால் இதயமே வெடித்து சிதறுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

ஜனாதிபதி ஏன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்தார். விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் ஜனாதிபதியின் உறவினரா? அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு செய்யும் நன்றிக்கடனா? அல்லது வேறு பண பரிமாற்றல்கள் உள்ளனவா? பண பரிமாற்றல் இதில் இடம்பெற்றதாக கதைகள் வெளிவருகின்றது.

பொதுமன்னிப்பு வழங்க வேண்டிய பலர் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுத்து ஏன் இவ்வாறான கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார். தூக்கு மேடை கொண்டுவருவதாக கூறும் ஜனாதிபதி இறுதியாக நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விசாரணைகளை நடத்தி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நபரை ஏன் விடுவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஏன் எதிர்ப்பை விடுவிக்கவில்லை. அனுரகுமார திசாநாயக மட்டுமே இது குறித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கேவலப்படுத்தும் வேலையையே நீங்கள் அனைவரும் செய்கிறீர்கள்.

உண்மையில் இது பெண்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு. நீதிமன்றமே குற்றவாளி என அடையாளபடுத்திய ஒரு குற்றவாளியை விடுவிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன. தாரிமீக உரிமை என்ன. சட்டத்தில் என்ன இருந்தாலும் மனிதாபிமானம் இல்லாது கீழ்த்தரமாக ஜனாதிபதி செயற்படுவது மோசமானது எனவும் அவர் மேலும் விமர்சனம் செய்துள்ளார். 

http://www.dailyceylon.com/192125/

Share this post


Link to post
Share on other sites

மக்கள் மனதில் உள்ளதெல்லாத்தையும் பிமல் ரத்நாயக்க கேட்டுவிட்டார்.

Share this post


Link to post
Share on other sites

ஐயோ சிறிசேன ஒரு நாளும் சொல்வதின்படி செய்வதில்லை। இவர் இந்த பதவிக்கு வரு முன்னரும் , வந்த பின்னரும் சொல்லியவகையாளை ஆராய்ந்து பார்த்தல் விளங்கும்। இதைவிட சொல்வதட்கு ஒன்றுமில்லை।

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும் பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது  கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார் அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/14847
  • நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன்.  இதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்ன என்றால் நீங்கள்  புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள் எனவே உங்கள் பதவியையும் என்றென்றும் தக்க  வைத்துக்கொள்ளலாம்.
  • காலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான்  நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின்  அடிப்படை. தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும்.   சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.
  • கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக கவனம்  செலுத்தியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பேருந்துகளை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. http://athavannews.com/கொழும்பிற்குள்-பிரவேசிக/
  • Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.