Jump to content

ஆயிரம் நாள் போராட்டத்தில் ஜக்கிய நாடுகளின் பிரதிநிதிகள்

Recommended Posts

வவுனியாவில் இன்றுடன் 997ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.  

DSC_0855_1.JPG

அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

DSC_0858_3.JPG

ஒற்றையாட்சி அரசுக்குள் சமஸ்டி மறைந்திருப்பதாக சம்பந்தன் பொய் சொல்லும்போது தமிழ் புத்தி ஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எங்கே?

DSC_0863_1.JPG

சம்பந்தா கடந்த 10 ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிய பிறகு தமிழர்கள் ஏன் மீண்டும் மீண்டும் உங்கள் பேச்சைக்கேட்கவேண்டும்? இனி சிங்கள ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள்  ஆதரிக்க மாட்டோம். தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் அடுத்ததாக மீன் சின்னத்திற்கு புள்ளடி போடவும், அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய் எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே? போன்ற கோசங்களை எழுப்பிவாறும் ஜக்கிய நாடுகள் கொடியுடன் தமது போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/68804

Link to comment
Share on other sites

52 minutes ago, ampanai said:

அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு சம்பந்தரால் ஒரு சுமந்திரனால் ஒரு சித்தார்த்தனால் ஒரு செல்வம் அடைக்கலநாதனால் ஒரு பிரேமச்சந்தி ரானால், ஒரு கஜேந்திரனால், ஒரு விக்கினேஸ்வரனால், ஒரு மனோவால் என பலராலும் செய்யமுடியாததை  இந்த உறவுகள் தங்கள் பலத்தால் விடாமுயற்சியால் மன உறுதியால் செய்துள்ளனர்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.