• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
colomban

தமிழரை மாற்றான் பிள்ளையாகவே இன்னும் கருதுவதை உணர்த்திய ஜனாதிபதியின் பொது மன்னிப்பு !

Recommended Posts

IMG_ORG_1573547268523.jpeg

 

போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை 

கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. 
 
 
இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த ஆண்டு 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.
 
இவர் அவரது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது.
இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வன்னி  மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேச நாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருந்தார்கள். 
 
 
 
ஆனால் இந்த மனித நேயக் கோரிக்கையில் இருந்த நியாயத்தினை விட போதைவஸ்துக்கு அடிமையாகி அப்பாவிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பினை வழங்கவதனூடாக அதில் அதிக நியாயம் கண்டுள்ளாரா ஜனாதிபதி அவர்கள் என மேலும் கேள்வி எழுப்பி உள்ளார் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள். மேலும் ஜனாதிபதியின் இப்படியான செயற்பாடுகள் தமிழர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்துப் பெரும்பான்மை கட்சிளும் மாற்றான் தாய்ப் பிள்ளைகளாகப் பார்ப்பதையே உணர்த்துகிறது. 
 
 
 
மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு கொடுக்க தனது அதி உச்ச அதிகாரத்தினை பயன்படுத்திய ஜனாதிபதிக்கு பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமலேயே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஞாபகம் வராதது தமிழர்களை இவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார். 
 
ரிஸ்கான் 
(ஊடகப் பிரிவு 
ஜனநாயக மக்கள் முன்னணி

Share this post


Link to post
Share on other sites

இவருக்கு கிடைக்கக்கூடாத பதவி கிடைத்துவிட்ட்து। எனவே அவர் என்ன செய்கிறார் எண்டு அவருக்கே விளங்குவதில்லை। அந்த மனுஷனுடன் உள்ளவர்களும் சரியான ஆலோசனை சொல்வதில்। எந்த காரியம் செய்தாலும் மூக்குடைபடுவதுதான் வழக்கமாகிவிட்ட்து। இனி வேறு வழி இல்லை , மனுஷன் விடைபெறுமட்டும் பொறுமை காக்க வேண்டியதுதான்। நல்ல காலம் இந்த பதவியை ஒரு வருடத்தால் குறைத்தார்கள்। ஜனகன் கவலைப்படுவதிலும் நியாயம் உண்டு। என்ன செய்வது। Blood is thicker than water ।

Share this post


Link to post
Share on other sites

image_d953b7ae0c.jpg

 


image_599ad7f675.jpgTo assess this claim, we used data from the Grave Crimes Abstract (GCA) from the Sri Lanka Police. Since the MP specified “girls”, we considered reported cases of rape of women under 16, which is classified as statutory rape. 


GCA data records the number of statutory rape cases reported from 2015 to 2018 in a range from 1,438 to 1,686 per annum. The average reported cases of statutory rape during this period was 1,556. The MP’s claim of 1,600 aligns with the data. 


Therefore, we classify the MP’s statement as TRUE.

http://www.dailymirror.lk/fact_check/MP-Anura-Kumara-Dissanayaka-correctly-quotes-statutory-rape-statistics/328-177432

In an open letter, Shramantha Jude Jayamaha, who was convicted over the Royal Park murder and released on a presidential pardon recently, requested society to give him another chance.

“I ask for your understanding, because that is the kind of country we live in - where there is hope for even the worst criminal and mercy and forgiveness is a way of life. Please give me another chance,” he said.

In a lengthy letter, Mr. Jayamaha elaborated on his story, his family background, the murder, conviction, prison life and the pardon.

He said he has no adequate words to express his grief towards what has come upon the Johnson family and said he was so ashamed for what has happened.

http://www.dailymirror.lk/top_story/Please-give-me-another-chance-Shramantha/155-177831

Share this post


Link to post
Share on other sites

இது முன்னைய சஜித்தின் பதிவு.

 

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Lara said:

இது முன்னைய சஜித்தின் பதிவு.

இதேபோன்று பல 'சிறப்பான பதிவுகளை' மைத்திரியும் நல்லாட்சி ஆரம்பத்தில் தெரிவித்தவர்.

12 minutes ago, Lara said:

இது முன்னைய சஜித்தின் பதிவு.

தமிழ் அரசியல் கைதிகள், குற்றம் சாட்டப்பட்டு ஆனால் குற்றம் நிரூபிக்கப்படமால் இருக்கும் கைதிகளை பற்றி ஏதாவது பதிவு இட்டுள்ளார்? இல்லை என்றால் அதுவும் ஒரு ஏமாற்றம் தானே ?

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ampanai said:

இதேபோன்று பல 'சிறப்பான பதிவுகளை' மைத்திரியும் நல்லாட்சி ஆரம்பத்தில் தெரிவித்தவர்.

சஜித் சொல்வதற்காக அதை செய்வார் என நான் கூற வரவில்லை. ஒரு தகவலுக்காக இணைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, ampanai said:

தமிழ் அரசியல் கைதிகள், குற்றம் சாட்டப்பட்டு ஆனால் குற்றம் நிரூபிக்கப்படமால் இருக்கும் கைதிகளை பற்றி ஏதாவது பதிவு இட்டுள்ளார்? இல்லை என்றால் அதுவும் ஒரு ஏமாற்றம் தானே ?

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “குற்றம் சுமத்தப்படாமல், விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என கூறப்பட்டிருக்கிறது.

விஜயகலா “சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்­படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன” என கூறியிருந்தார்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Sri_Lankan_Presidential_Election_2015.pn

மும்முரமாக வடக்கு கிழக்கு மக்கள் இவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ எதுவுமில்லை. இந்த தேர்த்தலும் அப்படியே அமையும்.

Share this post


Link to post
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

இன்றைய அமைச்சர்களும் தமிழருக்கு ஒரு நீதியும் சிங்களவரக்ளுக்கு இன்னொரு நீதியையும் அமுல்படுத்தி தலைவர்கள் ஆகிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, nunavilan said:

Sri_Lankan_Presidential_Election_2015.pn

மும்முரமாக வடக்கு கிழக்கு மக்கள் இவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ எதுவுமில்லை. இந்த தேர்த்தலும் அப்படியே அமையும்.

சஜித் தமிழர்களுக்கு ஏதும் தருவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அம்பனை கேட்ட கேள்விக்காக தான் அதை குறிப்பிட்டேன்.

மைத்திரி ஐதேக இல்லை. அவர் பொது வேட்பாளராக போட்டியிட்டவர். ஜனாதிபதியாக வந்த பின்னர் அவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடுகள் இருந்தன.

சஜித் ஐதேக. இவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடு இருந்தாலும் இருவரும் ஒரே கட்சி. அது ஒரு நன்மை.

இவர் ஜனாதிபதியானால் இவரது அதிகாரத்தை ரணில் குறைக்கிறாரோ, அல்லது ரணிலை விடுத்து வேறு யாரையும் இவர் பிரதமராக்குவாரோ, அல்லது இப்படியே தொடர்வார்களோ என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, Lara said:

சஜித் தமிழர்களுக்கு ஏதும் தருவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அம்பனை கேட்ட கேள்விக்காக தான் அதை குறிப்பிட்டேன்.

மைத்திரி ஐதேக இல்லை. அவர் பொது வேட்பாளராக போட்டியிட்டவர். ஜனாதிபதியாக வந்த பின்னர் அவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடுகள் இருந்தன.

சஜித் ஐதேக. இவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடு இருந்தாலும் இருவரும் ஒரே கட்சி. அது ஒரு நன்மை.

இவர் ஜனாதிபதியானால் இவரது அதிகாரத்தை ரணில் குறைக்கிறாரோ, அல்லது ரணிலை விடுத்து வேறு யாரையும் இவர் பிரதமராக்குவாரோ, அல்லது இப்படியே தொடர்வார்களோ என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது சத்தியமாக எனக்கு தெரியாது.
நான் சொல்ல வந்த செய்தியின் சாராம்சம் தமிழ் மக்கள் வாக்களித்து வென்ற மைத்திரியும் சரி இம்முறை தமிழ் மக்களால் வெல்பவரும் அப்படியே என எதிர்வு  கூறுகிறேன். 

நீங்கள் வீதியால் போகும் அப்பாவி நாய்க்கு கல் எறிகிறீர்கள்.😝😝

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, nunavilan said:

உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது சத்தியமாக எனக்கு தெரியாது.
நான் சொல்ல வந்த செய்தியின் சாராம்சம் தமிழ் மக்கள் வாக்களித்து வென்ற மைத்திரியும் சரி இம்முறை தமிழ் மக்களால் வெல்பவரும் அப்படியே என எதிர்வு  கூறுகிறேன். 

நீங்கள் வீதியால் போகும் அப்பாவி நாய்க்கு கல் எறிகிறீர்கள்.😝😝

எனது கருத்துக்கு பதிலாக தான் அக்கருத்தை எழுதினீர்கள் என நினைத்து பதிலளித்தேன்.

சரி சரி... இம்முறை கோத்தா வெல்வாரோ சஜித் வெல்வாரோ என்பதை முதலில் பார்ப்பம். 😀

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.