• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

கோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்

Recommended Posts

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

sambanthan.jpg

திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது 

பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம் எதிர் காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் 

தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் 

ஆனால் கோத்தாபய முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் என கூறி வருகிறார் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு தீர்வை தராது மட்டும் அல்லாது இந்தநாட்டிற்கும் பொருந்தாதாது

கோத்தாபய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரி யாக செயற்பட்டு எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படத்திய சர்வாதிகாரி. நாம் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காக அதனை விடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது 

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

ஆதலினால் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எமது பிரச்சினை களை சுதந்திரமாக பேசவல்ல சஜித்திற்கு 95வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் 

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும் எனவும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/68829

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

உங்களுக்கென்ன????
ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

"அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்."

 

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாத்தப்போகிறீர்கள். இனவாதிகள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே பக்கம்தான் மோசமான இனவாதிகள் இருக்கிறார்கள். ரணில் எதாவது தீர்வு திடடத்தை கொண்டு வந்தால் இவர்கள் தடுத்து விடுவார்கள்.

ராஜபக்ஷே தீர்வை கொண்டுவர தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை எண்டு கூறுகிறார்கள். ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுபோல இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? யுத்தம் முடிந்தபின்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? இதட்கு முன்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இது எனது தனிப்படட அபிப்பிராயம். இல்லாவிட்ட்தால் இதட்கு ஒரு முடிவு varum எண்டு நான் நினைக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஏழு வருடங்களுக்கு முன்னர் வரைந்த படம்

D66528-DC-BC96-406-E-AC38-7-A19-C942-C48

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, ampanai said:

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

அவரை ஏன் கேட்கிறீர்கள்? 

Sampanthan refused to answer calls as LTTE political heads faced final moments

https://www.tamilguardian.com/content/sampanthan-refused-answer-calls-ltte-political-heads-faced-final-moments

இதை வாசித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

17 hours ago, ampanai said:

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும்

இது உண்மை. இதை கருத்தில் கொண்டு மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ampanai said:

இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வாக்கு கேட்கின்றார் 

நாமல் சின்னப்பெடியனாக இருந்தாலும் வடக்கு கிழக்கில் ஆதரவை திரட்டி வருகிறார்.

யாழ்ப்பாணத்திலேயே இப்படி நிலை.

EIhcpHdU0AEKVYA?format=jpg&name=medium

EIhcpHgU4AAbBbq?format=jpg&name=medium

Share this post


Link to post
Share on other sites

முதல் முறையாக தமிழில் உரையாற்றிய கோத்தபாய ..!

 

 

சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தில் பேச வேண்டும்  🙂 

Share this post


Link to post
Share on other sites

யாழில் தேரேறி வலம்வந்தார் சஜித்

 

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ampanai said:

 

 

வாக்குகளுக்காக அவர்கள் தமிழ் கதைப்பார்கள். “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்ற பாடலை மாற்றி “நாளை நமதே இந்த நாடும் நமதே” என கூறி வாக்கு கேட்கும் மகிந்த. 😀

Share this post


Link to post
Share on other sites

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, ampanai said:

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

நீங்கள் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்புவதால் கோத்தா ஆதரவாளர்களின் செய்திகளை இணைத்து வருகிறீர்கள்.

வெள்ளை வான் முன்பே இருந்தது, கறுப்பு, பச்சை வான்களும் இருந்தன, 86,87 இல் ஆட்களை கடத்திய Morris Minor காரும் இருந்தது என முன்பு கோத்தாவே கூறியிருந்தார்.

ஆனால் மகிந்த & கோ காலத்தில் வெள்ளை வான் பயன்பாடு எவ்வாறு இருந்தது, அதனால் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்தது.

இத்தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா போட்டியிடவில்லை. சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

கீழேயுள்ள வீடியோவை இன்னொரு திரியில் நுணாவிலானும் இணைத்திருந்தார். இப்படியானவரை தான் வெல்ல வைக்க முயல்கிறீர்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ? அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார்.  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும். ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும். நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள். இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:- இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/71000
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 பேர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றிபெற்றுள்ளார். சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றிபெற்றுள்ளனர்.  https://www.polimernews.com/dnews/92684/இந்திய-வம்சாவளியை-சேர்ந்த-14பேர்-பிரிட்டன்-தேர்தலில்வெற்றி
    • மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக  மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை  ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. குறித்த கண்டன அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70973
    • (ஆர்.யசி) இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும்  இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.  2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழகத்தில் இது குறித்த கருத்து முன்வைப்புகள் மற்றும் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழ் தரப்பின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார்.  இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது. அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.  அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னைய ஆட்சியின் போதும் நாம் கூறினோம். அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும்  வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70998