Jump to content

2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழின அழிவிற்கு......இனக்கலவரம் ஊடாக சகல அழிவிற்கும் எம் அரசியல் தலைவர்களே முக்கிய காரணம்.
தமது அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறக்கணித்திருக்கா விட்டாலும் மகிந்த வென்றிருப்பார். 

அன்று இருந்த சூழலில்.. 2004 ம் ஆண்டு முரளிதரன் பிளவு..  சுனாமி.. ரணில் - பிரபா உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படாமை.. சுனாமி நிதி முடக்கம்.. தாய்லாந்து..  ஜப்பான் பேச்சுத் தோல்வி என்பது மட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் மீது சர்வதேசப் பயணத் தடைகள் என்று  வெளிநாட்டு அழுத்தங்கள் பல வழிகளில் சூழப்பட்டு இருந்தன. 

அதுமட்டுமன்றி.. விடுதலைப்புலிகளின் சர்வதேச விநியோகக் கப்பல்கள் பல சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டும் இருந்தன.

இந்தச் சூழலில்.. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில்.. ஹிந்தியாவின் தலையீடு மீண்டும் ஈழப் போராட்டத்துக்குள் வருவதை விரும்பி இருக்கவில்லை.

இதனை 2002 தீச் சுவாலை முறியடிப்போடு.. யாழ் நகர் நோக்கிய விடுதலைப்புலிகளின் முன்னெடுப்புக்கள் முடக்கப்பட்ட நிலையில்.. ஹிந்தியப் படைகளின் உதவியை அம்மையார் சந்திரிக்கா.. சொறீலங்காப் படைகளை மீட்க கோரி இருந்த நிலையில்..  புலிகள் எடுத்தனர். 

அந்தச் சூழலில் அது தவறே அல்ல. 

மேலும்.. விடுதலைப்புலிகள் விட்ட தவறு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வி குறித்து சிங்களத்துக்கு ஹிந்தியா உட்பட்ட சர்வதேசம்.. செய்து வந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்கால இராணுவத் திட்டங்களை முறியடிக்க தம்மை தயார் செய்யாமையே.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னடைவின் போதே.. வன்னியை கைப்பற்றும் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில்.. வன்னியின் இரு பக்க கரையோரங்களையும் குறிவைத்து படை நகர்த்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹிந்தியப் படை அதிகாரிகள் பகிரங்கமாகவே ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் நடந்ததும் அதே.

விடுதலைப்புலிகள் தமது ஆளணி.. ஆயுத பலத்தைக் கூட்ட எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காததும்.. அவர்கள் போர்க்களத்தில் தோல்வி அடைய இன்னொரு காரணம். அதற்கு வன்னி மக்கள் நீண்ட போர் காலத்தை சந்தித்து போர் குறித்த சலிப்படைந்ததும் ஒரு காரணம். இப்படிப் பல பின்னணிகள்.. மத்தியில் அமைந்த ஒரு வெற்றியை வெறும் மகிந்த வெற்றியாகக் காட்ட முடியாது. 

அதனால்... தான் மகிந்த கும்பல் செய்த இனப்படுகொலையை கூட உலகம் மூடி மறைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏனெனில்.. இந்தக் கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியோர் பலர். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு. அவர்களின் மனித உரிமை அக்கறையின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம்.. மட்டுமன்றி.. ஆளாளுக்கு இதனை சாக்கு வைச்சு ஆதாயம் தேடும் களமாக இலங்கையை சூதாட்டக் களமாக்குவதே அவர்களின் நோக்கம்.

அதை இன்று வெளிப்படையாகவே காண்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது.

Quote

எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...ரணில் குள்ளநரி..! 

https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528

நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது.

Quote

மகிந்தவுக்கு வாக்களிக்க வேணும்,ஏனெண்டால் அப்பத் தான் சர்வதேச ஆதரவு எமது பக்கம் திரும்பும்.ரணில் வந்தால் மீண்டும் சர்வதேசம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி , சர்வதேச வலைப் பின்னல் இறுகும்.

ஆனா யாரு வந்தாலும் நடக்கப் போறது ஒண்டு தான் ,
அது தமிழ் ஈழம் மலருவது.அது சண்டை பிடிச்சுத் தான் நடக்கும் எண்டா சண்டை தான்.ரணில் வந்தால் காலம் தாழ்த்தி சண்டை நடக்கும், மகிந்த வந்தால் சர்வதேச ஆதரவு எம் பக்கம்.சண்டை கெதியாக எமக்கு சாதகமாக சர்வதேச ஆதரவோட நடக்கும்.

https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530

Link to comment
Share on other sites

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

தத்துவ அளவில் இவை உண்மையானாலும் இந்த பதிவுகளின் தாக்கம் ஒப்பீட்டளவில் நிராகரிக்க கூடிய மிகவும் சிறிய அளவிலானது. இங்கு நாம் ஒப்பிடுவது, ஜனாதிபதியாக வரக்கூடிய இருவருக்கிடையிலான கொள்கை, கடும்போக்கு, இனவாதம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும், இவர்களின் தெரிவில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உள்ள பல்லாயிரம் தமிழரது வாக்குகளும் ஆகும். இவற்றின் பெறுமதி மேற்படி பதிவுகளிலும் பார்க்க மிகவும் அதிகமானது.

8 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

விடுதலைப்புலிகள் போன்ற வெற்றிகரமான அமைப்புகள் தோல்வியடைவது பல தவறான முடிவுகள் அடுத்தடுத்து எடுக்கப்படுவதாலும் அந்த முடிவுகளின் தாக்கங்கள் மீள முடியாதவகையில் அழுத்தி மூழ்கடிக்க செய்வதாலுமே இடம் பெறுகிறது. மேலே காட்டப்பட்ட முடிவும் இவற்றுள் ஒன்று.

1 hour ago, Maharajah said:

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல, சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

"இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ , சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.  "

நன்றி  Jude

நன்றி உணர்வும் ஒற்றுமையும் இல்லாத எந்த இனமும் உருப்படுமா  ?  அல்லது  அழியுமா  ? 

எங்களினம்  அழிவதற்கான சகல குணாம்சமும் தாராளமாக எம்மிடம் உண்டு.  அவற்றை பட்டியலிட ஏராளம் உதாரணங்களை கூறமுடியும்.  ஆனால் நாங்கள் விடுதலைக்கு தகுதியான இனம் எனக்கூற ஒர் உதாரணம் உங்களால் கூற முடியுமா ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

மன்னிக்கவும் விசுகு, 

தவறுகளை சுட்டிக்காட்டுதலுக்கும் ஒருவர் மீது பழி போடுதலுக்கும் வேறுபாடு உண்டு.  

தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை சரிசெய்துகொள்ளலாம்.  ஆனால் பழிபோடும்போது முதலில் ஒருவர் தன்னை காத்துக்கொள்வதற்காக தவறினை நியாயப்படுத்த முனைவர்.  எங்களுடைய தவறுகள் திருத்தப்பட வேண்டுமானால் முதலில் நேரடியாக ஒருவரை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maharajah said:

இதைத்தான் நானும் சொல்கிறேன்  சகோ

தவறுகளை  சுட்டிக்காட்டுதல்  நன்று

ஆனால் அதற்குள்  நானும்  இருந்தேன்

தோற்றதனால் அவர்கள் செய்தது  தவறு  என்பதை  இப்பொழுது உணர்கின்றேன்  என்பது  தான் தவறு

இது  அந்த தோல்வியிலிருந்து  தன்னை  மட்டும்  தப்ப வைத்துக்கொள்ளும் மிக  மிக  சுயநலம்  மட்டுமே இதுவன்றி  ஒரு  போதும்  எம்மை  சீர்தூக்கிப்பார்க்கவோ எமது பலத்தை அதிகரிக்கவோ  இவை உதவப்போவதில்லை

மாறாக  எம்மை  மேலும்  மேலும்  பிரித்து  தனிமைப்படுத்தி

பலவீனப்படுத்திவிடும்.  அதற்காக  எதையும்  நாம் பேசவேண்டியதில்லை  நேரத்தை  வீணாக்கவேண்டியதில்லையே

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன.

2005 இல் மகிந்த எடுத்தது 50.29 வீதம் மாத்திரமே (ரணில் 48.43%, ஏனையவர்கள் 1.28%). அதாவது 0.29 வீதம் மாத்திரமே அதிகமாக ஏனையவர்களை விட எடுத்து இருக்கின்றார். தமிழர்கள் வாக்களித்து இருந்தால் இது மாறியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

எமது அறிவுக்கு தெரிந்ததை மட்டும் வைத்துக்கொண்டு நாம் கருத்துக்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம் 
அது பொதுவானதும் சாதாரணமானதும்தான். 

2005இல் போர் யுத்தம் என்பதோ புலிகள் இருப்பு என்பதோ 
சிங்களம் எடுக்கும் முடிவில் இருக்கவில்லை. மாறாக இது சர்வதேச அரசுகளின் தலையீடாக இருந்தது.
இலங்கை வந்த நோர்வே மத்தியஸ்த்தர் ஆன சொல்கெய்ம் அவர்களின் பயணம் ஒவ்வரு முறையும் 
ஒஸ்லோ - கொழும்பு - டில்லி - ஒஸ்லோ என்றுதான் இருந்தது. இது நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான ஒப்பந்தம் என்பது சிங்களம்- புலிகள் மட்டுமாக இருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள எதுவாக இருக்கும்.
இதில் இன்னொரு விடயத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமர் ஆனது 2004இல் தான். ஒப்பந்தம் உடன்பாடை எட்டியது 2002இல். அப்போதில் இருந்தே இந்தியாவின் தலையீடு இருகாது என்பதே உண்மை.

மஹிந்த வெற்றிபெற்ற போது சமாதான ஒப்பந்தம் அமுலில் இருக்கிறது ... வெற்றி விழாவில் பேசிய அமெரிக்க அம்பேசடர் அமெரிக்கா பயங்கரவாத்தை அழிக்க முழு உதவியும் செய்யும் என்றும் தங்களுடைய ரணில் அரசுடன் இருந்த உறவு  மகிந்த அரசுடனும் தொடரும் என்றும் பேசினார். இவர் முழுதாக  யுத்தம் பற்றியே  பேசினார் ... கிட்ட தட்ட  யுத்தம் நடந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் நடந்த பேச்சுபோல் இருந்தது. 

சுனாமி உதவிக்கு ஒதுக்கிய பணத்தை ஒரு பகுதியை தமிழர் புனர்வாழ்வு கழகத்த்தின் ஊடாக தருவத்துக்கு 
அக்கூஸி ஒத்துக்கொண்டு இருந்தார். அவரது இரண்டவு கொழும்பு வருகையின்போது .. அதைக்கூட மறுத்தார்  
அவர் இரண்டு காரணங்களை கூறினார் ஒன்று இலங்கை அரசு மற்றது அது புலிகள் கைக்கு போகும் என்பதையும். அப்போது புனர்வாழ்வு கழகம் உதவிகளை மக்களுக்கு அவர்களையே நேரடியாகவே  வழங்க கேட்டிருந்தது அதுக்கு எந்த பதிலும் இல்லாமலே அந்த சந்துப்பு முடிந்தது. இதில் இருந்து ஒன்றை புரிய முடிகிறது  ...புலிகளின் கட்டுப்பாடு பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு அவசர அவல நிலையில் கூட ஐ எம் எவ்  உதவ முன்வரவில்லை என்பதுதான். 

எனக்கு தெரிந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவு என்பது வன்னியில் எடுக்கப்படவில்லை 
இது வெளியில் இருந்தவர்களால்தான் எடுக்கபட்டது. தி மு கவின்  காங்கிரஸ்  ஆதரவு என்பது கூட அன்று 
ஈழ தமிழர்களுக்கு சாதகமானது என்றும் காங்கிரஸ் வெற்றிபெற்றது பெருத்த வெற்றி என்றும்தான்  அப்போதைய  புலிகளின் சர்வதேச அறிவியல் மட்டத்தில் நம்ப பட்டு இருக்கிறது. இவர்கள் கனிமொழியுடன் நெருங்கிய உறவை தொடர்ந்து இருக்கிறார்கள். யுத்தம் ஒன்று இல்லாமல்  சமாதானத்தை  தொடர அவர்கள் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு இருந்து இருக்கிறார்கள். அதுக்கு முக்கிய காரணம் தற்போதைய இராணுவ தொழில்நுட்பம் என்றுதான் சொல்கிறார்கள் .....  இனிவரும் போரை  முன்புபோல எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து இருக்கிறார்கள். 

நாம் அறிந்துகொள்ள விவாத பொருளாக்க நிறைய இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் .
எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

3 minutes ago, tulpen said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கோஷான் சொல்லாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்களில் 2019 இல் விட்ட தவறு என்னவென்று ஒரு திரி திறக்க யாழ் களம் இருக்கும்😁

அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, இங்கிலாந்தில் பொறிஸ் ஜோன்ஸன் போன்றோர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கையில் கோத்தா இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை (சிங்களவர்களுக்கு)

Link to comment
Share on other sites

24 minutes ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉

நானும் கொமடியாக தான் இதை  இணைத்தேன். இரு வேட்பாளர்களும் இதைத் தான் செய்வார்கள் எமக்கு. சரி தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

பிந்திய பிழை, முந்திய பிழையை சரியாக்காது.

1 hour ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கிருபன் சொன்னதுபோல் 2029 இல் ரகு திறக்க போகும் திரியில் சொல்கிறேன்.

1 hour ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉

சஜித் - சோறில்லை எனச் சொல்வார்.

கோட்ட - சோறில்லை “போடா” எனச் சொல்லி ரெண்டு அடியும் போடுவார்.

இருவரிடமும் சோறு கிடையாது ஆனால் ஒருவரிடம் அடி கிடைக்கும்.

இதுதான் நான் சொல்ல வந்த கிழக்கு மக்கள் விடப்போகும் பிழை. 2005 இல் அப்போ சொன்னது விளங்காதது போல, 2019 இல் இப்போ சொல்வதும் விளங்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.