Jump to content

தலைப்பில்லா கதை ஒன்று


Recommended Posts

#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்)

"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...?"

சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி.

ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல்.
எல்லாப் பிரச்சனைகளும்
தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்..

மகனும் மருமகளும் பேத்தியும்
செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர்.

"எப்ப செத்துச்சு "_
அந்த கிழவி.

"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. "

"நெஞ்சுவலி.'

"அடக்கொடுமையே.."

"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து
ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி.."

அழுகை பேச்சை வர விடவில்லை.
அந்தப்பெண் அழுகிறாள்.

"அதுக்குன்னு இப்படி ரோட்லயா"

"இல்லம்மா வீடு சின்ன வீடு
அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு"

"நல்லா இலுக்கு நீங்க சொல்றது.."
சலித்துக் கொள்கிறாள்.

"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..!"

"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம்
ஒதுங்கி நில்லுங்க'

கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு
ஏதோ ஞாபகம் வந்தவளாய்
அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி
குத்தியிருக்கும் போல....

கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள்.

"பொம்பளயாளுக கூட நின்னு சீலய
சுத்திப் பிடிங்க."

விறுவிறுவென்று பிரேதத்தை
சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை
நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள்.

கூட்டம் கண்களை அகல விரித்துப்
பார்த்து கொண்டிருந்தது.

அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது.

"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க."

முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்."

மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள"
ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின்
அழகிய ஒளி அங்கு நிறைகிறது.
குங்குமம் இட்டு பூச்சூட்டி
விடுகிறாள்.

பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது.

"வாசப்படில தேங்கா ஓடச்சு
சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க."

கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம்
கூட ஆரம்பித்திருந்தது

"மாகராசிய நல்ல மொரைல போய்
அடக்கம் பண்ணுங்கப்பா"

சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி.

இறந்தவரின் மகன் ஓடி வந்து,

"ரெம்ப நன்றிம்மா"

"போய்யா போ.நன்றியாம் நன்றி.
யாராருக்கு எவரெவரோ.
ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே
கொஞ்சம் முன்ன பின்ன..
சொல்லிக்கொண்டே
கிளம்பி விட்டாள்.

இல்லையென்றான ஒரு இடத்திலும்
இருப்பின் முகம் அவளுக்கு

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கூட்டத்தினருக்கு இப்பொழுது தான்
கிழவியின் மீது மதிப்பும்.தங்கள்
மீது குற்ற உணர்ச்சியும் கூட
ஆரம்பித்தது

"யாருப்பா கிழவி"

"யாரோ..
தெர்லயேப்பா..வெளியூர் போல"' ஒரு குரல்

இப்படிப்பட்ட மனிதர்களைத்தான்
நாம் கவனிக்காமலேயே
கடந்து விடுகிறோம்

❤️❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, அந்த பர்ஸை கூடைக்குள் வைக்காமல் இடுப்பிலே செருகிக் கொண்டாள் பார் அங்கேதான் கிழவி உசாராய் இருக்கிறாள்.....!   😂

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

எல்லாம் சரி, அந்த பர்ஸை கூடைக்குள் வைக்காமல் இடுப்பிலே செருகிக் கொண்டாள் பார் அங்கேதான் கிழவி உசாராய் இருக்கிறாள்.....!   😂

யாதார்த்தம் ஏனெனில் மனிதர்கள் அப்படி பட்டவர்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

எல்லாம் சரி, அந்த பர்ஸை கூடைக்குள் வைக்காமல் இடுப்பிலே செருகிக் கொண்டாள் பார் அங்கேதான் கிழவி உசாராய் இருக்கிறாள்.....!   😂

அந்த பர்சுக்குள் என்ன தான் இருந்தது?

 

27 minutes ago, அபராஜிதன் said:

யாதார்த்தம் ஏனெனில் மனிதர்கள் அப்படி பட்டவர்கள் தான்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.