• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

Recommended Posts

பௌலா மிக்கிராத் சுகாதார பிரிவு, பிபிசி

பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.

பெண்களின் உடல்நலத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவர், “ட்விட்டரில் வாழும் மகப்பேறு மருத்துவர்” என்று குறிப்பிடப்படுகிறார்,

"த வஜைனா பைபிள்" என்கிற குன்டரின் சமீபத்திய புத்தகம் பல நாடுகளில் அதிக அளவில் விற்கப்படும் புத்தகங்களில் ஒன்றாகும்.

நடைமுறை ஆலோசனைகளை கொண்டுள்ள இந்த புத்தகம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்கள் தங்களின் சுகாதாரத்தை கவனிக்க உதவவும் எழுதப்பட்டதாகும். பெண்குறி பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென டாக்டர் குன்டர் விரும்புகின்ற சில உண்மைகளை இங்கு பகிர்கிறோம்.

பெண்குறி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்படத்தின் காப்புரிமை EMMA RUSSELL

1. யோனிக் குழல் மற்றும் யோனிப் புழை பற்றி அறிந்து கொள்வது முக்கியம்

யோனிக் குழல் (vagina) உடலுக்குள் உள்ளது. கருப்பையை வெளி உலகுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. உங்களது உடையை தொடுகிற வெளியில் பார்க்கக்கூடிய பகுதி யோனிப் புழை (vulva).

நாசூக்காக குறிப்பிடும் சொற்களை பயன்படுத்தாமல், இவற்றின் சரியான சொல்லை அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் குன்டர்.

"யோனிக் குழல், யோனிப் புழை என்ற சொற்களை சொல்ல நீங்கள் தயங்குவது, அதில் அசிங்கமான அல்லது வெட்கக்கேடான ஏதோ இருப்பதான குறிப்பைத் தருகிறது.

யோனிப் புழையின் வெளிப்பகுதியைக் குறிப்பிடும் “ப்யூடென்டா” என்கிற மருத்துவ துறை சொல், “வெட்கக்கேடு” என பொருள்படும் “ப்யூடெட்” என்கிற லத்தீன் சொல்லில் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இத்தகைய சொற்களை பயன்ப்படுத்துவது, பெண்களுக்கு உணர்ச்சிபூர்வமாக தீங்கு விளைவிக்கக்கூடியது மட்டுமல்ல, மருத்துவ ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்று குன்டர் நம்புகிறார். சரியான சிகிச்சை பெற முடியாமல் போவதற்கு, சரியாக என்ன செய்கிறது என்று சொல்வதற்கு நோயாளிகளால் முடியாமல் போவதே காரணமாகும்.

2. யோனிக் குழல் தன்னையே சுத்தப்படுத்திக் கொள்கிறது

தங்கள் யோனிக் குழல் வாசனையை மாற்றியமைக்க சில நறுமண பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பல பெண்கள் நம்புகிறார்கள். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குன்டர் கவனித்து வந்துள்ளார்.

வட அமெரிக்காவில் கடந்த ஆண்டில் 57 சதவீத பெண்கள் தங்கள் யோனிக் குழாயை சுத்தப்படுத்தியுள்ளனர். பலரும் தங்களின் காதலர் இவ்வாறு செய்ய ஊக்கமூட்டியதாக கூறியுள்ளனர்.

ஆனால், யோனிக் குழலை சுத்தப்படுத்தி கொள்ள எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று டாக்டர் குன்டர் தெரிவிக்கிறார்.

“யோனிக் குழல் தன்னையே சுத்தப்படுத்திக் கொள்கிறது” என்கிறார் அவர். நறுமண பொருட்களை இதற்கு பயன்படுத்துவதற்கு எதிராக அவர் குறிப்பாக எச்சரிக்கிறார்,

தண்ணீர் கூட இந்த மென்மையான இயற்கை அமைப்பை சீர்குலைக்கலாம்; பாலியல் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தை அதிகரிக்கும்.

பெண்கள் மத்தியில் பரவி வரும் மற்றொரு பழக்கம், நீராவி செலுத்தி சுத்திகரிப்பது. இது அவசியமற்றது. தீக்காயத்தை ஏற்படுத்தும் இடர்ப்பாடு உடையது.

யோனிப்புழையை - அதாவது பெண்ணுறுப்பின் வெளிப்பாகம்- தேவைப்படும்போது, தண்ணீர் அல்லது மென்மையான பொருளை பயன்படுத்தி சுத்தப்படுத்தி கொள்ளலாம்.

சோப்பை பயன்படுத்துவது, இந்தப் பகுதியின் மேற்பரப்பில் உள்ள அமிலப் படலத்தை அகற்றும். இந்த அமிலப் படலம்தான் தோலில் தண்ணீர் புகாமல் பாதுகாக்கும் இழையாக செயல்படுகிறது.

மாதவிடாய் நிற்கும்போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்பகுதி உலர்வாக மாறி அசௌகரியமாக இருந்தால், சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் போன்றதைப் பயன்படுத்தலாம்.

யோனிக் குழல் செல்கள் ஒவ்வொரு 96 மணி நேரமும் புதிதாகத் தோன்றுகின்றன. தோலின் பிற பகுதிகளில் ஏற்படுவதைவிட மிக விரைவாக அங்கு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் விரைவாக குணமாகிவிடும்.

பெண்குறி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்படத்தின் காப்புரிமை EMMA RUSSELL

3. உங்கள் யோனிக் குழல் ஒரு தோட்டம் போன்றது

யோனிக் குழலில் ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா கூட்டமே உள்ளது. அந்த பாக்டீரியாக்கள் யோனிக்குழலின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

“பல வகை பாக்டீரியாக்களையும் உள்ளடக்கிய ஒரு தோட்டம் போன்றது யோனிக்குழல் நுண்ணுயிரித்தொகுதி. பெண்குறி இயற்கை அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க இவை ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன” என்று மருத்துவர் குன்டர் தெரிவிக்கிறார்.

சற்றே அமிலத் தன்மையுடைய சுற்றுச் சூழலை உருவாக்கும் பொருட்களை நன்மை செய்யும் பாக்டீரியா உற்பத்தி செய்கின்றன. இதனால் தீய பாக்டீரியாக்கள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் வழுவழுப்பாக்கும் சளி போன்ற பொருள் உருவாகவும் இந்த பாக்டீரியாக்கள் காரணமாகின்றன.

இதனால்தான், பாக்டீரியாவுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பொருட்களை கொண்டு துடைப்பது அல்லது சுத்தப்படுத்தி கொள்வது நல்லதல்ல. பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரித்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

இதுபோல, யோனிக் குழலை உலர செய்வதற்கு தலைமுடியை உலர வைக்கின்ற கருவியை பயன்படுத்த கூடாது என்கிறார் குன்டர். அங்கிருக்கும் தோல் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

பெண்குறி பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்படத்தின் காப்புரிமை EMMA RUSSELL

4. அந்தரங்க முடி வளர காரணமுண்டு

அந்தரங்க முடியை நீக்கிவிட வேண்டும் என்ற போக்கு பெண்களிடத்தில் அதிகரித்து வருவதை மருத்துவர் குன்டர் கவனித்து வந்துள்ளார். அந்தரங்க பேன்களை ஒழிக்க இது உதவும். ஆனால், இதற்காக கையாளும் முறைகள் அந்தரங்க முடிகளை அழித்துவிடும் ஆபத்தும் உண்டு.

மெழுகு, மழிப்பது போன்ற வழிகள் மூலம் முடியை அகற்றும்போது தோலில் நுண்ணிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். வெட்டுக்கள், சிராய்ப்புகள், தொற்றுநோய்களும் இதனால் ஏற்படுகிறது” என்கிறார் மருத்துவர் குன்டர்.

அந்தரங்க முடியை நீக்குபவர் மெழுகு தேய்க்க பயன்படுத்தும் குச்சியை அந்த மெழுகில் ஒருமுறைக்கு மேலாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே குச்சியை கொண்டு மீண்டும் மீண்டும் எடுத்து தேய்க்க பயன்படுத்துவதால் பிற வாடிக்கையாளர்களுக்கு பாக்டீரியா பரவலாம்.

அந்தரங்க முடியை மழிப்பதாக இருந்தால் சுத்தமான ரேசரை பயன்படுத்தவேண்டும். சருமம் வளரம் திசையிலேயே மழிக்கவேண்டும். எதிர்த் திசையில் மழித்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள் இது பற்றி தெரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென மருத்துவர் குன்டர் கூறுகிறார்,

“அந்தரங்கத்தில் முடி வளர்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இது அநேகமாக தடுப்பு கருவியாகவும் மற்றும் சருமத்திற்கான பாதுகாப்பாகவும் இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.

5. முதுமை அடைவது யோனிக் குழலை பாதிக்கலாம்

மாதவிடாய் வந்து அல்லது குழந்தை பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு கருப்பை முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. மாதவிடாயும் நின்று விடுகிறது. பெண்களை கருவளம் உடையவர்களாக வைத்துகொள்ளும் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென குறைவது, குறிப்பாக சொன்னால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது யோனிக் குழலையும், யோனிப் புழையையும் பாதிக்கும்.

சளி போன்ற நிலையில், ஈரப்பதமாக வைக்கப்பட்டிருந்த இந்த திசுக்கள் நலிய தொடங்கலாம். அதன் விளைவாக ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து, உடலுறவின்போது வழுவழுப்பு இல்லாமல் வலி ஏற்படும்.

“இதனை பெண்கள் தெரிந்து வைத்திருப்பது உண்மையிலேயே முக்கியமானது” என்று கூறும் மருத்துவர் குன்டர், “இது பற்றி தெரிந்து வைத்திருந்தால் நீங்கள் துன்பப்பட வேண்டி இருக்காது” என்கிறார்.

உடலுறவு கொள்வது எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொள்ள உதவும் என்று சரியாக ஆராயாத கருத்து ஒன்று நிலவுகிறது. ஆனால் நுண்ணதிர்வுகள் யோனிக் குழல் தசைகளை மிகவும் பாதிக்கும்.

பிபிசி உலக சேவையின் ஹெல்த் செக் பிரிவுக்குப் பேசியபோது குன்டர் இவற்றைத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/science-50355187

Share this post


Link to post
Share on other sites

பயனுள்ள தகவல்கள் ...... பெண்கள் மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது,..... ஆண்கள் தெரிந்து கொள்ளுமளவுக்கு விசேஷமாய் ஒன்றுமில்லை  என்று நான் நினைக்கிறன்.....!   🤔

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மயூரி கடை தெரியும் சிறி. றஞ்சு மாமா வேண்டித்தந்து இங்கயும் கொண்டு வந்தனான் 
  • அம்மாவை நினைத்து கதறும் பார்வையற்ற சிறுவனின் பாட்டு  
  • சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு   சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான்.   ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்று, உலக மாற்றுத் திறனாளிகள் தினம். தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து,  வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒருசில சாதனையாளர்கள் பற்றிய தொகுப்பு இதோ… ஹெலென் கெல்லர்   இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தி மிராக்கிள் உமன்’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி,  பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. சுதா சந்திரன் நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தமிழ் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். மிகச் சிறந்த பரதக் கலைஞர். இயற்கை இவரோடு விளையாடியபோது இவருக்கு வயது 17. திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இழக்க நேரிட்டது, அதன் பிறகு, ‘ஜெய்ப்பூர் ஃபூட்’ எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார். ஆனால் இவர் நடப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தேர்ந்த பரதக் கலைஞரான இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவரது வாழ்க்கையைத் தழுவி தெலுங்கில் ‘மயூரா’  ( தமிழில் 'மயூரி') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் இவர். தனது சோதனையை பெரிதுபடுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் இவர். ஸ்டீபன் ஹாகிங் 1942ல் பிறந்த இந்த அறிவியல் மேதை தனது 21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப் பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவரது ‘ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம்,  விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது. 2009ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதிலும், அசராமல் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளார் இவர். ஜான் நேஷ்   நோபல் பரிசு பெற்ற இவர், கணிதத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியவர். இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் எனப் பல இடங்களிலும் பயன்படுகிறது. சைசோப்ரேனியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட நேஷ், ஜாமெட்ரி, டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தீவிர மன நோயால் பாதிக்கப்பட்ட இவர், கற்பனையாக சில விஷயங்களை புனைந்து கொண்டு பயப்படுவார் என்று அவரது மனைவி கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு மிகவும் பிடித்த கணிதத்தை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. கணிதத்தோடு வாழ்ந்ததால்தான் அவர் நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் நிணைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. பீத்தோவன்   இசை உலகின் பிதாமகனாய் கருதப்பட்டவர் பீத்தோவன். மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞரான இவர், மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும் பாலமாய் விளங்கியவர். இவர் முதன்முதலில் இசைக் கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது 8. தனது 26-வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீத்தோவன். ஆனால் இவர் அசரவில்லை. இசையிலேயே மூழ்கினார். இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. பைபோலார் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த இசை மேதை. மர்லா ருன்யான்     அமெரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனையான இவர் பார்வையற்றவராவார். மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில்,  மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1992 பாராலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களும்,1996ம் ஆண்டு 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஹெப்டத்லான், மாரத்தான், 500 மீட்டர், 20000 மீட்டர் ஆகிய பிரிவுகளில் அமெரிக்காவின் தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான். நிக் வுஜுசிக்     வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. 1982ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக்கிற்கு இரண்டு கைகள், கால்கள் கிடையாது. சிறு வயதில் பல துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளான நிக்,  பின்னர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். ‘லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி,  மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்காக உதவி செய்து வருகிறார். பட்டர்பிளை சர்க்கஸ் எனும் குறும்படத்தில் நடித்து,  அதற்காக சில விருதுகளும் வென்றுள்ளார். 2005-ம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியன் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “என்னுடைய வீட்டில் நான் எப்போதும் ஷூக்கள் வைத்திருப்பேன். எனக்கு ஆச்சரியங்களின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது” என்று சிரிக்கிறார் நிக். ஆஸ்கர் பிஸ்டோரியஸ்   https://www.vikatan.com/oddities/miscellaneous/55895-inspiring-stories-of-10-famous-disabled