• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஏராளன்

இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

Recommended Posts

இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து
இலங்கைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?படத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY

நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும்?

இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் தற்போது 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் பிரதானமான போட்டி என்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்(எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவுக்கும் இடையில்தான்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் பல சர்சைகளுக்கு உள்ளானதாகவும் உற்சாகமற்றதாகவும் இருந்த நிலையில், அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அவர் சார்ந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடவில்லை. கட்சியே இரண்டாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் சஜித்தையும் ஆதரிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பால் குற்றம்சாட்டப்பட்டார். மஹிந்த தோற்கும் பட்சத்தில், சீனா தொடர்பாக இலங்கை அரசால் எடுக்கப்பட்ட முடிவுகள் மாறக்கூடுமா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த நிலையிலும் சீனாவின் முதலீடுகளும் நெருக்கமும் இலங்கையில் தொடரவே செய்தது. தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் அவருடைய எதிர்பாராத தோல்விக்கு, இந்தியா முக்கியப் பங்காற்றியதாக குற்றம்சாட்டினர்.

இந்த பின்னணியில், இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் இலங்கையின் சீன, இந்திய உறவுகளை எந்த அளவுக்குப் பாதிக்கக்கூடும்?

"கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ராஜபக்ஷ தரப்பு, ரணில் தரப்பை அமெரிக்க மற்றும் மேலை நாட்டு சக்திகளின் ஆதரவாளர்களாகக் காண்பிக்க முயற்சித்துவந்தது. ஆனால், தற்போது அது குறைந்திருக்கிறது. பொதுவாகப் பார்த்தால், வெளியுறவு விவகாரம் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஒரு முக்கியப் பிரச்சனையாக இல்லை" என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையின் முன்னாள் பேராசிரியரான கலாநிதி ஜெயதேவா உயங்கொட.

Presentational grey line Presentational grey line

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைக்குப் பெருமளவில் பொருளாதார உதவிகளைச் செய்துவரும் சீனா, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டையில் உள்ள மகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கட்டப்பட்டது இந்தத் துறைமுகம்.

இந்தியப் பெருங்கடலில் வலம்வரும் சீன போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப வாகான இடத்தில் அமைந்திருக்கிறது இந்தத் துறைமுகம். கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதிலும் சீனா பெரும் பங்காற்றியிருக்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கொழும்பு துறைமுகத்தில் ஈஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினல் என்ற சரக்குப் பெட்டக டெர்மினலை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான், இலங்கையுடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது போன்ற வெகு சில திட்டங்களிலேயே ஆர்வம் காட்டியிருக்கிறது. கொழும்பு கண்டெய்னர் திட்டமும் நீண்ட கால இழுபறிக்குப் பிறகே கையெழுத்தானது.

இலங்கை சீனாபடத்தின் காப்புரிமைOLEKSII LISKONIH / GETTY

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பமில்லாத நிலையில், கடந்த அக்டோபரில் நடந்த கேபினட் கூட்டத்திலேயே பிரதமர் ரணிலும் ஜனாதிபதியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும், ஜப்பான் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு இப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பெருமளவு சரக்குகள், கொழும்பு துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா பெரும் ஆர்வம் காட்டுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை யார் வெற்றிபெற்றாலும் சேர்ந்து செயல்பட விரும்பக்கூடும். ஆனால், தமிழர் பிரச்சனை குறித்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடு, சீனாவுடனான நெருக்கமான உறவு ஆகியவை இந்தியாவுக்குக் கவலையளிக்கின்றன.

"யார் வெற்றிபெற்றாலும் இலங்கை தன் அண்டை நாடுகளுடன் பேணும் உறவில் பெரிய மாற்றம் வந்துவிடாது. கோட்டபய வெற்றிபெற்றாலும் சஜித் வெற்றிபெற்றாலும் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணுவதையே விரும்புவார்கள். அதேபோல, யார் ஜனாதிபதியானாலும் இந்தியாவும் சீனாவும் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயங்கமாட்டார்கள்," என்கிறார் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் குறித்து எழுதிவரும் அகிலன் கதிர்காமர். பிரசாரத்திலும் அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது என்கிறார் அவர்.

தவிர, உள்நாட்டு யுத்தம் முடிந்த பிறகு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். "யுத்தத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்தது. இங்கிருந்த தமிழர்கள் பலர் இந்தியா துரோகம் செய்ததாகக் கருதினார்கள். சிங்களர்களும் இந்தியாவை நெருக்கமாகக் கருதவில்லை. அவர்களை அச்சுறுத்தலாகவே கருதினார்கள்," என்கிறார் ஜெயதேவா.

இந்தியாவோடு ஒப்பிட்டால், சீனா அமைதியாக ஆனால், தொடர்ந்து இலங்கையில் முதலீடு செய்துவந்திருக்கிறது; கடன்களை வாரி வழங்கியிருக்கிறது. இப்போது இலங்கையின் பல இடங்களில் சீனா கட்டிய கட்டடங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் இந்த உறவுக்குச் சாட்சியமாக எழுந்து நிற்கின்றன.

"கடந்த 30 ஆண்டுகளுக்குள் இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டது. இப்போது இந்திய உறவை ஒரு விஷயமாகப் பேச முடியுமெனத் தோன்றவில்லை," என்கிறார் ஜெயதேவா.

2015ஆம் ஆண்டின் தேர்தல் தோல்விக்குப் பிறகு மஹிந்த தரப்பு இந்தியாவைச் சாடினாலும், அதற்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் அவர்.

இலங்கைத் தேர்தல்படத்தின் காப்புரிமைRAVEENDRAN / GETTY

"இனிமேல் இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதாரம் சார்ந்தே இலங்கையுடனான தனது உறவை வரையறுக்கும். முன்பைப் போல தமிழர் பிரச்சனை சார்ந்து நெருக்கடி அளிக்காது" என்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான வீரகத்தி தனபாலசிங்கம். சீனாவைப் புறம்தள்ளிவிட்டு தங்களுடனான உறவை மேம்படுத்தும்படி வலியுறுத்தும் நிலையில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை என்கிறார் அவர்.

அதேபோல, சீனாவுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அளிப்பதை முதலில் எதிர்த்ததே யுஎன்பிதான். பிறகு, ரணில் ஆட்சிக் காலத்தில்தான் 99 வருடக் குத்தகைக்கு அந்தத் துறைமுகம் சீனாவுக்கு அளிக்கப்பட்டது" என்கிறார் தனபாலசிங்கம்.

சீனாவைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன் இருப்பை உறுதியாக நிலைநிறுத்துவதை மனதில்வைத்து இலங்கையுடனான உறவை வலுப்படுத்திவருகிறது. முதலீடுகளைச் செய்துவருகிறது. ஆனால், சமீப காலம் வரை இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கையுடனான உறவைத் தொடர்ந்துவந்தது.

ஆகவே, யார் இலங்கையின் புதிய ஜனாதிபதியானாலும் இந்த வேறுபாடே சீனா மற்றும் இந்தியாவுடனான உறவைத் தீர்மானிக்கும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50366064

Share this post


Link to post
Share on other sites

கவனிக்க;  இந்தியா புகையிரத பாதை வடக்கில் அமைத்தது.  வெளியுறவு அமைச்சகம் யாழில் திறந்தது.  பலாலி வானூர்தி நிலையத்திற்கு சேவை தொடங்கியது.  காங்கேசன்துறையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.  கொழும்பிலும் பல அடுக்கு மாடி மற்றும் விடுதிகள் கட்டுகிறது.  

நாடு முழுக்க இலவச வைத்திய வாகன சேவை தொடங்கியது.

மற்றும் சம்பூர் ஆலையை அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் மூடி ஆயிரத்திற்கு மேற்படட தமிழரை கிளப்ப முனைகிறார்கள்.  அதற்கும் தடை.

யாழிலும் பலாலி நிலையத்தில் 90% தொழில் யாழ் தமிழருக்கு வ்ந்திரு சட்டம் கொண்டுவந்தது.

இந்தியாவிற்கு தமிழர் இல்லாவிட்டால் இலங்கையில் இடமில்லை என்று நல்லா தெரியும். 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, விவசாயி விக் said:

கவனிக்க;  இந்தியா புகையிரத பாதை வடக்கில் அமைத்தது.  வெளியுறவு அமைச்சகம் யாழில் திறந்தது.  பலாலி வானூர்தி நிலையத்திற்கு சேவை தொடங்கியது.  காங்கேசன்துறையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.  கொழும்பிலும் பல அடுக்கு மாடி மற்றும் விடுதிகள் கட்டுகிறது.  

நாடு முழுக்க இலவச வைத்திய வாகன சேவை தொடங்கியது.

மற்றும் சம்பூர் ஆலையை அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் மூடி ஆயிரத்திற்கு மேற்படட தமிழரை கிளப்ப முனைகிறார்கள்.  அதற்கும் தடை.

யாழிலும் பலாலி நிலையத்தில் 90% தொழில் யாழ் தமிழருக்கு வ்ந்திரு சட்டம் கொண்டுவந்தது.

இந்தியாவிற்கு தமிழர் இல்லாவிட்டால் இலங்கையில் இடமில்லை என்று நல்லா தெரியும். 

மிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • பிரித்தானியா பாராளுமன்றத் தேர்தல் 2019! எமக்காக குரல் கொடுக்கும் நண்பர்களை வென்றெடுங்கள்!   தமிழினம் பேரழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒரு இனம். அதனை உலகத்தில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்; இலங்கை தீவின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தமிழினத்தை பாதுகாக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க விடக் கூடாது என்ற சூழ்ச்சி திட்டத்துடன் ஒரு கொடூரமான இன அழிப்புத் திட்டத்தினை நிறைவேற்றும் முக்கியமான சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ச, அதிஉச்ச அதிகாரங்களுடன இன்று இலங்கை ஜனாதிபதியாக வந்துள்ளார். இந்த பின்புலத்தில்  இலங்கையிலுள்ள எம் இனத்திற்காக முழு வீச்சுடன் குரல் கொடுத்து அவர்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களில் தங்கியுள்ளது.  தாம் வாழும் நாடுகளின் அரசியல், ராஜதந்திர சக்திகளின் மத்தியில் தமிழ் மக்கள் ஆளுமை உள்ளவர்களாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக 2009 மே இன அழிப்பின் உச்சத்தின் போது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்ததுடன் தொடர்ச்சியான பன்முக அழுத்தங்கள் மூலம் இந்த நாட்டின் கொள்கையை சர்வதேச விசாரணைக்கு சார்பாக மாற்றியமைத்தது. சோர்வு, தயக்கமின்றி அரசியல் ராஜதந்திர அழுத்தங்களை முழு வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது தனி மரம் தோப்பாகாது. தமிழ் மக்கள் தனித்தனியாக நின்றோ அல்லது இந்நாட்டின் மக்களை தம் பக்கம் திருப்பாமலோ எம் மக்களின் பாதுகாப்பையும் எமது தேசத்தின் விடுதலையையும் இன்றுள்ள சூழ்நிலையில் உறுதிப்படுத்த முடியாது. இந் நாட்டின் அதிகார பீடங்களில் எமக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கன ஒரு சந்தர்ப்பம் இன்று உங்கள் முன் வந்துள்ளது. நாளை இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தமிழர்களின் அபிலாசைகளையும் மற்றும் எம் தேசத்தின் எதிர்காலத்தையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாற்றியமைக்கக் கூடியது. உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மட்டங்களில் எமக்கான நண்பர்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது.  அதனால் நாளைய தேர்தலில், எந்தக் கட்சியாக இருந்தாலும் எம் மக்களின் அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய நண்பர்களை வென்றெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி எம் மக்களின் ஜீவாதாரமான நலன்களை முன்னகர்த்த வேண்டுமாறு உரிமையுடன் கோருகின்றோம். இதற்கான வழிவகைகளையும் ஆவணங்களையும் ஒருங்கிணைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளது.  தமிழ் மக்கள் செயல் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது.  நண்பர்களை வென்றெடுப்போம்! எம் தேசத்தின் இருப்பினை நிதர்சனமாக்குவோம்! தொடர்புகளுக்கு 0208 808 0465, 07508365678, 07943100035, 07814486087 -- Best Wishes S. Sangeeth      BTF Media Coordinator +44 (0) 7412 435697 Disclaimer This email and any attachments with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please let us know at the earliest. Any unauthorised use, disclosure, or copying is not permitted. Every effort has been made to ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does not accept any liability in respect to an undetected virus and recommends that the recipient(s) use an up to date virus scanner. Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne Business Centre, Broad lane, London, N15 4AG Telephone: +44(0)20 8808 0465 Website: www.britishtamilsforum.org   E-mail: info@britishtamilsforum.org   Twitter: https://twitter.com/tamilsforum Facebook: https://www.facebook.com/BritishTamilsForum
    • பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து  செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன்  இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில்  பொறிஸ்ஜோன்சனின் இந்த  கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு  டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர்  இதனை தெரிவித்துள்ளார்    வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு  செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என  பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார், பிரெக்சிட்டை நிறைவேற்றினால்  நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம்  ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/70893  
    • யாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழாவை வடக்கு, கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம் என யாழில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-எதிர்வரும்-18-ஆம்-தி/
    • இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது-இந்திய மத்திய அரசு 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இந்தியாவிலுள்ள-இலங்கையர/