• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பிழம்பு

இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது - சர்வதேச நெருக்கடி குழு

Recommended Posts

அலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு

 

தமிழில் - ரஜீபன்

 

 

 

 

 

 

இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில்  நிற்பவராக பரவலாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார்.

அக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசமைப்பு தடை செய்துள்ளதால் கோத்தாபய தனது சகோதரரை  பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இறுதியாக ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார தன்மை கொண்டதாக காணப்பட்டது.

அந்த குடும்பத்தின் அரசியல் எழுச்சி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தவுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் முக்கிய போட்டியாளராக சஜித்பிரேமதாச காணப்படுகின்றார்-தற்போதைய பிரதமரை விட சாதாரண மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாச பிரபலமானவராக காணப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட கருத்துக்கணிப்புகளும், அதிகளவிற்கு ராஜபக்ச சார்பானதாக காணப்படும்  தனியார் ஊடகங்களும்,கடந்த கால வாக்களிப்பு முறைகளும்,-

இதுவரை வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாச ராஜபக்ச எதிர்ப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவானவற்றை கைப்பற்ற கூடிய சிறிய கட்சிகளையும் எதிர்கொள்கின்றார்.

கடந்த உயிர்த்தஞாயிறு தினத்தன்று  இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக .பெரும்பான்மை சிங்களவர்களை கவர்வதற்காக கோத்தாபய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில நாட்களிலேயே அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்பதை அறிவித்தார்.இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரிப்பதற்கான வாய்ப்பை அவர் கைப்பற்றிக்கொண்டார்.

அனைத்து வகையான பயங்கரவாதங்களையும்  ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள அவர் ஆள்கடத்தல் ,கொலை குற்றச்சாட்டில் அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைதுசெய்தமையே பாதுகாப்பை பலவீனப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது என ( ஆதாரமின்றி) தெரிவிக்கின்றார்.

rajapa_1.jpg

2009 இல்,இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்திற்காக போராடிய பிரிவினைவாத போராளி அமைப்பான விடுதலைப்புலிகளிற்கு எதிராக பெற்றவெற்றியில் பாதுகாப்பு செயலாளர் என்ற தனது பங்களிப்பை கோத்தாபய அதிகமாக வலியுறுத்துகின்றார்.

கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளை மையமாக கொண்ட இராணுவபாணியிலான -அரசியல்வாதிகளிற்கு பதில் தொழில்சார் வல்லுனர்கள் தலைமை தாங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

நகரஅபிவிருத்தி அதிகார சபையின் தவைராகயிருந்தவேளை அவர் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களிற்காக கோத்தபாய ராஜபக்ச நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக காணப்படுகின்றார்.

சிலவேளைகளில் ஈவிரக்கமற்ற விதத்தில் வேலையை முடிப்பார் என்ற உணர்வும் காணப்படுகின்றது.

தனது அரசாங்கம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ள கோத்தாபய தனிப்பட்ட உரிமைகளை விட தேசப்பற்றே முக்கியமானது,பாதுகாப்பு மிக முக்கியமானது என ஆக்ரோசமாக வாதாடியுள்ளார்.

 

கோத்தாபய ராஜபக்ச ஆட்சி குறித்து அச்சம்

 

 

கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கான வாய்ப்புகள் இனரீதியிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மத்தியில்  அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

உறுதியான சிங்கள தேசியவாதியான கோத்தாபாயவை தெரிவு செய்வது இலங்கையின் இனங்கள் மத்தியில் ஏற்கனவே காணப்படும் பாரதூரமான பிரிவினைகளை இன்னமும் ஆழமாக்கிவிடும், கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட ஜனநாயக பலாபலன்களை  அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் பொறுப்பாகயிருந்தவேளை முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட  பௌத்த குழுக்களிற்கான அவரின்  ஆதரவு குறித்தும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

2018- மற்றும 2019 இ;ல் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளிற்கு கோத்தாபயவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்பட்டது என்பதற்கான  ஆதரங்களும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன.

முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் முக்கிய தேசியவாத மதகுருக்களின் ஆதரவு கோத்தாபய ராஜபக்சவிற்கு உள்ளமையும் இந்த அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

கோத்தாபய தீவிரவாத தன்மை கொண்ட பௌத்தர்களுடன் தனக்கு தொடர்புள்ளதை நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் உள்ள ஏனையவர்களுடன் இணைந்து முஸ்லீம் வாக்குகளை பெற முயன்றுள்ளார்.

வர்த்தகர்களிற்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில முஸ்லீம் வர்த்தகர்கள் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்ற போதிலும்,முஸ்லீம்கள் தங்கள் பாரம்பரிய ஆதரவை ஐக்கியதேசிய கட்சிக்கே வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

எனினும் இதன் காரணமாக கோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர்.

gota_posteres_no_13.jpg

கோத்தாபய வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தோல்வியடையும்.

ராஜபக்சாவின் கண்காணிப்பின் கீழ் யுத்தத்தின் இறுதி வருடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனர்கள்.இவர்களில் மே 2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பின்னர் ஒருபோதும் மீண்டும் காணப்படாதவர்களும் உள்ளனர்.

ஒக்டோர்பர் 15 ம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காணாமல்போனவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பபட்டவேளை சரணடைந்தபின்னர் எவரும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்தார்.இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பபட்டவேளை கடந்த காலங்கள் குறித்து கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை என்றார்.

 

குறிப்பாக தமிழர்களிற்கும்- பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கும் மறக்குமாறு கோரப்படுவது வேதனையை அளிப்பதாகவும் -சாத்தியமற்றதாகவும் உள்ளது.

 

தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளமையும்,காணாமல்போனவர்கள் குறித்து இராணுவத்தினை பதிலளிக்குமாறு  கேட்கத்தவறியுள்ளமையும் காயங்களை மாறாமல் வைத்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இன்னமும் வலுவானதாக மாறமுடியாமல் திணறுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கோத்தாபய இந்த அலுவலகத்தை கலைத்துவிடுவார் என பலர் கருதுகின்றனர்.

 

சஜித் பிரேமதாச

sajith_jaffna.jpg

 

சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால், இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை.

அவரது தேர்தல் விஞ்ஞாபனம் சில சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது- சுயாதீன விசாரணை அதிகாரியை உருவாக்குவது குறித்து அவர் குறிப்பிடுகின்றார்.

ஆனால் சஜித்பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை அவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீவிர அர்ப்பணிப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாகயில்லை.

அவர் வீடமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் அவர் வறிய நடுத்தர இலங்கையர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வுமே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கோத்தாபயவிற்கு சமமாக பயங்கரவாதத்தை ஒழிப்பது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலைப்பாடு குறித்தும்- ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் குறித்த பலத்த ஏமாற்றம் சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்ற போதிலும் அவர்கள் இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும மாற்றுக்கருத்திற்கு காணப்படும் சிறிய தளத்தை தக்கவைப்பதற்கு பிரேமதாச வெற்றிபெறுவது அவசியம் என கருதுகின்றனர்.

https://www.virakesari.lk/article/68925

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தமிழ்நாட்டுக்கு சனி பிடிப்பது இந்த கள்ள ரயில் ஏறி வருபவர்களால் தான் 
  • சட்டம், நீதித்துறை ஆகியவற்றை தவறாக நடத்துபவர்கள் தானே என்கவுண்டரையும் செய்கிறார்கள். சட்டதை தவறாக நடைமுறைப்படுதுபவர்கள் என்கவுண்டரை மட்டும் நியாயமாக சரியாக நடத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ககிறீர்கள். குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவிகளைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டரை செய்ய வாய்பபு உள்ளதல்லவா?  
  • தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, ரஜினி எதிர்ப்பாளர்களையும், சீமானையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் லாரன்ஸ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் லாரன்ஸ் பேசும் போது, ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், மறைமுகமாக தன்னுடையப் பேச்சில் சீமானையும் சாடினார். இது தொடர்பாக லாரன்ஸ் தன்னுடைய பேச்சில் கூறியதாவது: நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ஒரு மேடையில் அறிவித்தார். அந்த மேடையில் மற்றவர்களைப் புகழ வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஸ்டாலின் சார் தொடங்கி இன்னொருவர், அவர் பெயரைச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அந்த மேடையில் இதர அரசியல் தலைவர்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை. அவர் இரண்டு வார்த்தைப் பேசினாலே, அது தான் அன்றைய செய்தியாக இருக்கிறது. அனைவரும் அரசியல் பேசுகிறார்கள். ரஜினி சாருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள். அவர் வரட்டும் பார்த்துக்கலாம். அவருக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். அதை அவர் நடக்கும் போதே பார்த்துக் கொள்ளலாம். 96ம் ஆண்டு வந்திருந்தால் ந்னறாக இருந்திருக்கும் என்கிறார்கள். அவருக்கு அப்போது விரும்பவில்லை. இந்த வயதில் அவருக்குப் பணம், புகழ் வேண்டுமா?. பலரும் அவரை வீட்டில் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். பலருமே பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்கிறார்கள். பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான். அவருக்குப் பணம், புகழ் எல்லாம் தேவையில்லை. இந்த மேடையில் கூட குடும்பத்தினரை முதல் வரிசையில் உட்கார வைக்கலாம். ஆனால், இரண்டாம் வரிசையில் உட்கார வைத்த ஒரே தலைவர் ரஜினி மட்டுமே. இந்த வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி ஐயா மறைந்த போது, கடுமையாகப் போராடி இடம் வாங்கினார் ஸ்டாலின் சார். அப்போது அவர் கண்கலங்கியது, அதைப் பார்க்கும் போது ஸ்டாலின் சார் ஒருமுறை முதல்வராக வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அது தான் ரஜினி சார் ரசிகனின் மனது, அவர் அனைவரையும் வாழ்த்துவார். எடப்பாடி ஐயா எப்படி முதல்வர் என்று நினைத்தேன். பின்பு உடனுக்குடன் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்ந்தேன். இவர்கள் எல்லாம் தவறாக அரசியல் பண்ணுவதில்லை, மேடையில் நாகரீகம் இல்லாமல் பேசுவதில்லை. அவர்களுடைய உழைப்பில் ஒவ்வொருவரும் நன்றாக வந்துள்ளார்கள். ஆனால், அரசியலில் ஒரு சிலர் நாகரீகமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ரஜினி சாரிடம் பதவிக் கேட்கவில்லை, இந்த மேடைக்குப் பேச்சுக்குப் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசாமல் இருந்தால் கூட கவலைப்பட மாட்டேன். அரசியல் தலைவர்கள் பலரும் நாகரீகமாகப் பேசுகிறார்கள். ஒரு தலைவர் மட்டும் தான் அநாகரீகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இந்த நாட்டுக்கே கேடு எனச் சொல்வேன். அரசியலிலேயே அது தவறான விஷயம். அது பெரிய ஆபத்து. ரஜினி சாரைப் பேசி அதன் மூலம் வரும் விளம்பரத்தால் தான் வாழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என் தலைவரின் மேடையில் யாரையும் திட்டிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. இங்குச் சிலர் அரசியலுக்கு யார் வந்தாலும் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ரஜினி சாரை பற்றி யாராவது தவறாகப் பேசினால், நான் திரும்பப் பேசுவேன். அரசியலை அரசியலாகப் பேசுங்கள். இங்கு என்னோட உணர்ச்சியை அடக்க முடியாமல் பேசிவிட்டேன். எனக்கு அரசியல் ஒன்றுமே தெரியாது. அரசியலில் நான் ஜீரோ. தயவுசெய்து மறுபடியும் என்னைச் சீண்டி கற்றுக் கொள்ள வைத்துவிடாதீர்கள். இவ்வாறு லாரன்ஸ் பேசினார். லாரன்ஸ் தன்னுடைய பேச்சில் பெயர் சொல்ல விரும்பாதது மற்றும் இறுதியில் சீண்ட வேண்டாம் என்று கூறியது சீமானைத் தான் என்கிறார்கள். ஏனென்றால், சமீபத்தில் சீமான் தரப்புக்கும், லாரன்ஸுக்கும் பிரச்சினை உண்டானது. இறுதியில் இருவருமே சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/92655/
  • சொறிலங்கா கொலைகாரர்களை தூதுவர்களாகவும், தூதரக அலுவலர்களாகவும் நியமிப்பது போர்க்குற்ற அரசியல் சார்ந்தது. அங்கையும் போய் சொறிய வெளிக்கிட்டா ஒட்ட நறுக்குப்படும்.