Jump to content

தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி

இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சிக்­க­லான விடயமா­ கவே உள்­ளது. வாக்­க­ளிப்­பதா, வாக்­களிக் ­காமல் விடு­வதா என்ற சிந்­த­னையும் அவர்­களை வாட்­டு­கின்­றது என்றே கூற வேண்டும். வாக்­க­ளித்தால், யாருக்கு வாக்­க­ளிப்­பது என்ற கேள்­விக்கு இத­மான தர்க்­க­ரீ­தி­யான திருப்­தி­ய­ளிக்கத் தக்க பதில் அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள். ஒருவர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ. மற்­றவர் சஜித் பிரே­ம­தாச. இவர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்டி தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றது. இவர்­களில் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தையே தேர்தல் களம் கொண்­டி­ருக்­கின்­றது என்று கணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தேர்தல் தொடர்­பான முன் ஆய்­வு­களின்­ படி, பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­டையே போட்டி கடு­மை­யாக உள்­ளது என்றும், இறுக்­க­மான நிலை­மையே நில­வு­கின்­றது என்றும் கூறப்­ப­டு­கின்­றது. இதனால் சிறிய வாக்கு வித்­தி­யா­சமே வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்கும் என்று கணிக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள் மட்­டு­ மல்­லாமல் மூன்றாம் நிலையில் உள்ள ஜே.வி­.பி.யின் தலைவர் அனுரகுமார திசா­நா­யக்­கவும் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளி­லேயே பெரிதும் தங்கி இருக்­கின்­றார். இதனால் அந்த வாக்­குகள் மூன்­றாகப் பெரு­ம­ளவில் பிரிந்து செல்லும் என்றும் இடையில் சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாகப் பரி­ண­மித்­தி­ருக்கும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

எனவே, இந்தத் தேர்­தலில் 2015 ஆம் ஆண்டு தேர்­தலைப் போன்று சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. அதிலும் குறிப்­பாகத் தமிழ் மக்­களின் வாக்­குகள் அதிமுக்­கி­யத்­துவம் வாய்ந்­தி­ருக்­கின்­றன.

வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள முன் னாள் பாராளு­மன்ற உறுப்­பி­னரும், முன் னாள் வட­மா­காண சபை உறுப்­பி­னரும், ரெலோ கட்­சியின் முக்­கி­யஸ்­த­ராக இருந்து இந்தத் தேர்தல் கால சூழலில் அந்தக் கட்­சியில் இருந்து வில­கி­யுள்­ள­வ­ரு­மா­கிய எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்று வரு­கின்றார் என்ற தேர்தல் கணிப்பும் உள்­ளது.

இதுதான் உண்­மை­யி­லேயே கள நிலை­மை­யென்றால், புதிய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான ஆதா­ர­மாகத் திகழ்­கின்ற தமிழ் வாக்­கு­களும் பிரி­வ­டைந்து தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் பிடி­வாதம் மிக்க தலை­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் சிவா­ஜி­லிங்கம் போட்­டி­யி­டு­வதில் இருந்து விலக வேண்டும் என்று பகி­ரங்க கோரிக்கை விடுத்­துள்ளார். அவ்­வாறு சிவா­ஜி­லிங்கம் தேர்­தலில் இருந்து பின்­வாங்­கினால் தமிழ் மக்­களின் வாக்­குகள் சித­ற­மாட்­டாது. வெற்­றி­யா­ளரைத் தீர்­ம­னிப்­ப­தற்கு அது முழு­மை­யாகப் பயன்­படும் என்­பதே சம்­பந்­த­னு­டைய கோரிக்­கையின் உட்­கி­டக்­கை­யாகும்.

சம்­பந்­தனின் வேண்­டு­கோ­ளுக்குப் பதி­ல­ளித்­துள்ள சிவா­ஜி­லிங்கம் 13ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும், அர­சியல் தீர்­வுக்கு ஒற்­றை­யாட்­சி­யையும் பௌத்­தத்­தையும் நிபந்­த­னை­க­ளாக முன்­வைக்­காமல் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தத் தயா­ராக இருப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்­த­னைகள் சம்­பந்­த­மாக சஜித் பிரே­ம­தா­ச­வுடன் பேச்­சுக்கள் நடத்தி அவற்றை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­மொழி பெற்றுத் தந்தால் தேர் ­தலில் இருந்து பின்­வாங்­குவேன் என சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­ராஜின் நினைவு தின வைப­வத்தில் உரை­யாற்றுகையில் சம்­பந்தன் சிவா­ஜி­லிங்­கத்தை நேர­டி­யாக விளித்து, தேர்தல் போட்­டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கோரி­யி­ருந்தார். அவ­ரு­டைய கோரிக்கை ஊட­கங்­களில் முக்­கி­யத்­துவம் பெற்ற செய்­தி­யாக வெளி­யா­கி­யி­ருந்­தது.  

அதனைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சிவா­ஜி­லிங்கம் சம்­பந்­தனைப் போன்றே அவ­ருக் ­கான பதி­லையும் ஊட­கங்­களின் வழி­யா கத் தெரி­விப்­ப­தாகக் குறிப்­பிட்டு தனது இரண்டு நிபந்­த­னை­க­ளையும் 14ஆம் திகதி இர­வுக்குள் அவர் நிறை­வேற்­றினால் போட்­டியில் இருந்து தான் விலகிக் கொள்­வ­தாக சிவா­ஜி­லிங்கம் கூறி­யுள்ளார்.

இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் கொண்டு வரப்­பட்ட 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­டத்­தி­லேயே மாகா­ணங்­க­ளுக்­கான காணி மற்றும் பொலிஸ் உரி­மைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் வடக்கும், கிழக்கும் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே அந்தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு இருக்கும். அர­சியல் தீர்வு காணும் வரையில் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்கள் இணைந்­தி­ருக்­கவும் முடியும் என்­பது சிவா­ஜி­லிங்­கத்தின் கருத்து.

21.jpg

இந்த இரண்டு நிபந்­த­னைகள் தொடர்­பாக சஜித் பிரே­ம­தா­சவுடன் சம்­பந்தன் பேச்­சுக்கள் நடத்­தி ஓர் உறு­தி­மொ­ழியைப் பெற வேண்டும். திரு­கோ­ண­மலை ஆயர், தென்­கை­யிலை ஆதீனம், சின்மயா மிஷன் முதல்வர் ஆகிய மதத்­த­லை­வர்­க­ளுடன் இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி மதத்­த­லை­வர்கள் தனது நிபந்­த­னைகள் தொடர்­பி­லான உறு­தி­மொ­ழியில் திருப்தி அடை­வார்கள் என்றால் தான் தேர்­தலில் இருந்து வெளி­யே­று­வ­தாக சிவா­ஜி­லிங்கம் உறு­தி­யாகத் தெரி­வித்­துள்ளார்.

தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவே வெற்றி பெற வேண்டும் என்­பதே சம்­பந்­த­னி­னதும், கூட்­ட­மைப்­பி­னதும் உறு­தி­யான நிலைப்­பாடு. எனவே, அவரை வெல்­ல­வைப்­ப­தற்­காகத் தமிழ் மக்­க­ளு­டைய வாழ்­வி­டங்­க­ளா­கிய வடக்கு–கிழக்கு பிர­தே­சங்­களில் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஈடு­பட்­டுள்­ளது.

தேர்­தலில் முன்­னணி வேட்­பா­ளர்­க­ளாகத் திகழும் கோத்த­பா­யவும், சஜித் பிரே­ம­தா­ச வும் தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வுகாண மாட்­டார்கள் என்ற மனப்­ப­தி வைக் கொண்­டுள்ள தமிழ் மக்கள் சிவா­ஜி­லிங்­கத்தைத் தமது மாற்றுத் தெரி­வாகக் கொண்­டி­ருக்­கின்ற நிலைமை தேர்தல் களத்தில் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வேண்டும் என்று தமிழ்த் ­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யினர் கோரி­யி­ருந்த போதிலும், தேர்­தலில் பங்­கு­ பெ­றாமல் தமது வாக்­கு­களை வீண­டிப்­ப­திலும் பார்க்க, தமிழ்த் தரப்பில் இருந்து களத்தில் இறங்­கி­யுள்ள சிவா­ஜி­லிங்­கத்­துக்கு வாக்­க­ளிப்­பதன் மூலம் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள் மீதும் தங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை அவர்­களை நிரா­க­ரிக்­கின்றோம் என்ற தமது அர­சியல் நிலைப்­பாட்டை தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், சர்­வ­தே­சத்­துக்கும் எடுத்­து­ரைக்க முடியும் என்று தமிழ் மக்­களில் ஒரு சாரார் தீவி­ர­மாகச் சிந்­திக்­கின்­றனர்.

இந்த நிலையில் சிவா­ஜி­லிங்­கத்தை தேர் தல் களத்தில் இருந்து பின்­வாங்கச் செய்து அவரை ஆத­ரிக்க விரும்­பு­ப­வர்­களை சஜித் பிரே­ம­தா­சவை வெல்லச் செய்­வ­தற்­காகப் பயன்­ப­டுத்த முடியும் என்­பது சம்­பந்­தனின் அர­சியல் கணக்கு. அந்த வகை­யி­லேயே சிவா­ஜி­லிங்­கத்­திடம் நேர­டி­யாகத் தனது கோரிக்­கையை அவர் முன்­வைத்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக இந்த கலசம், தீப்­பொறி ஆகிய பத்­தி­களில் ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்­தது போன்று இந்தத் தேர்­த­லா­னது தமிழ் மக்­களைச் சிக்­க­லான ஒரு நிலை­மைக்குள் வலிந்து தள்­ளி­யி­ருக்­கின்­றது.

இந்தத் தேர்தல் முழு­நாட்­டுக்கும் பொது வா­னது. ஆனால் இந்தத் தேசிய தேர்­தலில் அனைத்து இன மக்­களும் விரும்பி ஏற்­றுக்­கொள்ளத் தக்க கொள்கை வழி நிலைப்­பாட்டைக் கொண்ட எவரும் வேட்­பா­ள­ராக இடம்­பெ­ற­வில்லை. வேட்­பா­ளர்­க­ளாகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் அர­சி­யலில் முன்­ன­ணியில் உள்ள அனை­வரும் சிங்­க­ள­வர்கள். அத்­துடன் அவர்­க­ளு­டைய கொள்­கைகள் பெரும்­பாலும் பேரி­ன­வாத சிந்­த­னை­யையும் பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களின் சமூக, அர­சி­யல், பொரு­ளா­தார முன்­னேற்­றத்­தை­யுமே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றன. சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களைப் பிர­தி­ப­லிக்­கின்ற தன்­மையை அவர்­க­ளு­டைய கொள்­கைகள் கொண்­டி­ருக்­க­வில்லை.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் தீவி­ர­மான இன­வாத, மத­வாத கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மறை­முக நிகழ்ச்சி நிரல் வழி­யி­லான நட­வ­டிக்­கை­க­ளினால் சிறு­பான்மை இன மக்கள் தொடர்ச்­சி­யாகப் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய அடிப்­படை உரி­மைகள் இதனால் அப்­பட்­ட­மாக மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்­க­ளு­டைய அர­சியல், சிவில் நிலைப்­பா­டுகள் மட்­டு­மல்­லாமல் அவர்­க­ளு­டைய வாழ்­வியல் இருப்­பும்­கூட இந்த நட­வ­டிக்­கை­க­ளினால் கேள்­விக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இத்­த­கைய ஒரு நிலையில் நடை­பெறு­ கின்ற ஜனா­தி­பதி தேர்­தலின் ஊடாக தங்­க­ளுக்கு ஒரு விமோ­சனம் கிடைக்கும். தாங் கள் அனு­ப­வித்து வரு­கின்ற கஷ்­டங்கள் ஒரு முடி­வுக்கு வரும் என்று நம்­பிக்கை கொள்­ளத்­தக்க அர­சியல் சூழலை அவர்­களால் காண முடி­யாமல் உள்­ளது. தேர்தல் என்­றதும் அவர்­க­ளு­டைய மனங்­களில் நன்­மையை நோக்­கிய நம்­பிக்கை துளிர்­வி­டு­வ­தற்குப் பதி­லாக என்ன நடக்­குமோ என்ற சந்­தேகக் கோடு­களே அவர்­க­ளு­டைய மனங்­களில் விழுந்­தி­ருக்­கின்­றன.

முதன்மை நிலையில் உள்ள வேட்­பா­ளர்­ களின் பிர­சா­ரங்­களும் அவர்­களை ஆசு­வா­சப்­ப­டுத்­தவில்லை. அவர்­க­ளு­டைய நியா ய­மான எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு முர­ணான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­ன­வா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. அதுமட்­டு­மன்றி நாட்டு மக்கள் என்ற ரீதி­யிலும், இந்தத்  தேர்­தலில் வாக்­க­ளிக்கும் உரி­மை­யுள்ள வாக்­கா­ளர்கள் என்ற ரீதி­யிலும் சிறு­பான்மை இன மக்­களின் - குறிப்­பாகத் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் தீர்வு காணப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­க­ளுக்கு அந்த வேட்­பா­ளர்கள் செவி­சாய்க்­கவே மறுத்­து­விட்­டார்கள்.

தேர்தல் காலத்தில் மக்­க­ளு­டைய தேவை கள் என்ன அவர்­க­ளுக்கு என்­னென்ன சேவை­களைச் செய்­யலாம் என்­பது பற்­றிய தங்­க­ளு­டைய நிலைப்­பாட்­டையும் தமது வேலைத்­திட்­டங்­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது வேட்­பா­ளர்­க­ளி­னதும் அவர்கள் சார்ந்த கட்­சி­க­ளி­னதும் கடப்­பா­டாகும். அந்தக் கடப்­பாட்டின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விட­யங்கள் மக் ­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­க­ளையும், அவர்­களின் அபி­லா­சை­க­ளையும் பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­தி­ருப்­பதும் அவ­சியம்.

மக்­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டா­ததும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளையும் தேவை­க­ளையும் உள்­ள­டக்­காத தேர்தல் வாக்­கு­று­தி­க­ளினால் பய­னில்லை. அத்­த­கைய தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் மக்கள் மத்­தியில் எடு­ப­ட­மாட்­டாது. அவ்­வாறு எடு­ப­டாத ஒரு நிலையில் வாக்­கா­ளர்­க­ளா­கிய பொது­மக்­க­ளுக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான வெளி அதி­க­மா­கி­விடும். தேர்­தலில் எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு வேட்­பா­ளர்கள் வாக்­கா­ளர்­களை நெருங்கிச் செல்­கின்­றார்­களோ அந்த அள­வுக்கு அவர்­களின் செல்­வாக்கும் மக்கள் மத்­தியில் அதி­க­ரிக்கும்.

ஆனால் தமிழ் மக்­க­ளுக்கும் முன்­னணி வேட்­பா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான அத்­த­கைய தேர்­தல்­கால நெருக்­கத்தை இந்தத் தேர்­தலில் காண முடி­ய­வில்லை. ஆட்சி மாற்­றத்­துக்கு வழி வகுத்­தி­ருந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு வேட்­பா­ள­ருக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான நெருக்கம் காணப்­பட்­டது. அது பல்­வேறு நம்­பிக்­கை­களின் அடிப்­ப­டையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த நிலைமை இந்தத் தேர்­தலில் இல்லை. இதன் கார­ண­மா­கவே இந்தத் தேர்தல் தமிழ் மக்­க­ளுக்கு சிக்­கல்கள் நிறைந்­த­தாக அமைந்­துள்­ளது. தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வ­தற் குத் தயா­ரில்லை. அவர்­க­ளு­டைய பிரச்­சி ­னைகள் குறித்து கவனம் செலுத்த முடி­யாது. ஆனால் அவர்கள் தங்­க­ளுக்கே வாக்­க­ளிக்க வேண்டும் என்ற மேலாண்மை நிலை ­யி­லேயே முன்­னணி வேட்­பா­ளர்கள் திகழ்­கின்­றார்கள்.

இந்த முன்­னணி வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­கிய கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் கடந்த காலச் செயற்­பா­டுகள் தமிழ் மக்­க­ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தன. யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என்­ப­திலும் பார்க்க யுத்­தத்தில் எப்­ப­டி­யா­வது வெற்­றி­ய­டை­ய வேண்டும். எந்த வகை­யி­லா­வது தமக்கு எதி­ராகப் போர்­பு­ரியும் விடு­த­லைப்­பு­லி­களை அழித்­தொ­ழித்­து­விட வேண்டும் என்ற நோக்­கமே மேலோங்­கி­யி­ருந்­தது.

அத்­த­கைய மேலோங்­கிய நோக்­கத்தைக் கொண்ட யுத்­தத்தைக் கடும்­போக்கில் வழி­ந­டத்தி முன்­னெ­டுத்­ததில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற ரீதியில் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ பெரும் பங்­கு­கொண்­ டி­ருந்தார். யுத்­தத்தில் அதீத ஆயுத பலமும், அதீத வியூ­கங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன இதனால், யுத்­தத்தில் நேர­டி­யாகப் பங்­கேற்­றி­ராத பொது­மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­னார்கள்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இருக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளா­கி­யி­ருந்த பொது மக்­க­ளையும் விடு­த­லைப்­பு­லி­க­ளா­கவே ஆயுதப் படைகள் நோக்கி இருந்­தன. இந்த நோக்­கத்­துக்கு ஆயு­தப்­ப­டை­களை பாது­காப்பு அமைச்சின் செய­லளார் என்ற வகையில் கோத்­த­பாய பெரும் பங்­கேற்­றி­ருந்தார். இதனை உறு­திப்­ப­டுத்தும் வகை யில் அவர் பல தட­வை­களில் யுத்­தத்தைத் தானே வழி­ந­டத்­தி­ய­தா­கவும் கூறி­யி­ருந்தார் என்­பதும் நினைவில் கொள்­ளத்­தக்­கது.

யுத்த மோதல்­களின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் அவ­ருக்கு எதி­ராகக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. அவற்றை அவர் மறுத்­து­ரைத்­தி­ருந்தார். ஆனாலும் அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து அவர் வில­க­வில்லை. விலக்­கப்­ப­ட­வு­மில்லை.

இரா­ணு­வ­மயம் சார்ந்து கடு­மை­யான சிவில் நிர்­வாகப் போக்கைக் கொண்­டி­ருந்­த­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால், அவ­ரு­டைய அதி­கார மேலா­திக்கப் போக்கு கடந்த காலத்­திலும் பார்க்க மேலும் மேலோங்கி இருக்கும் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது. மீண்டும் வெள்ளை வேன் வரும், ஆட்கள் கடத்­தப்­ப­டு­வார்கள். அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் கைதுசெய்­யப்­ப­டக்­ கூடும் என்ற அச்சம் தலை­யெ­டுத்­துள்­ளது.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட் டால் விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூர்­வ­தற்கு அனு­ம­திக்­க­மாட்டேன் என்று கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெளி­நாட்டு ஊடகம் ஒன்று எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கையில் கூறி­யுள்ளார். விடு­த­லைப்­பு­லிகள் நடத்­தி­யது விடு­தலைப் போராட்­ட­மல்ல. அது பயங்­க­ர­வாதப் போராட்­டமே. அவர்­களை நினை­வு­கூர்­வ­தற்கு மஹிந்த ராஜ­                                                                                பக் ஷ காலத்தில் அனு­ம­திக்­க­வில்லை. நான் ஆட்­சிக்கு வந்தால் அந்த நிலை­மையே தொடரும் என்று கோத்­த­பாய கூறி­யி­ருப்­ப­துவும் தமிழ் மக்கள் அவர் தொடர்பில் கொண்­டுள்ள அச்­சத்தை அதி­க­ரிக்­கவே செய்­துள்­ளது.

இனப்­பி­ரச்­சி­னை­யுடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­க­ளிலும் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளிலும் அதிகம் பரிச்­சயம் இல்­லா­தவர் அல்­லது அவை குறித்து அதிகப் பங்­கு­பற்றல் இல்­லா­தவர் என்றே தமிழ் மக்கள் மத்­தியில் சஜித் பிரே­ம­தாச அறி­யப்­பட்­டி­ருக்­கின்றார். அவ­ரு­டைய தந்­தையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்தார் என்ற செல்­வாக்கைத் தனது அர­சியல் முத­லீ­டாகக் கொண்­ட­வ­ரா­கவே அவர் திகழ்­கின்றார்.

தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க விட­யங்­களில் பிரச்­சி­னை­களில் நேர­டி­யாகத் தொட ர்­பு­டை­ய­வ­ரா­கவோ அல்­லது சம்­பந்­தப்­பட்­ ட­வ­ரா­கவோ அவர் அறி­யப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதும் அவர் தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெறா­த­வ­ராகத் திகழ்­வ­தற்­கு­ரிய கார­ண­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆயினும் புது­மு­க­மா­கவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் அறி­மு­க­மா­கி­யுள்ளார். ஆயினும் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களில் ஆளுமை உடை­ய­வ­ரா­கவோ அல்­லது பக்­கு­வப்­பட்ட ஓர் அர­சி­யல்­வா­தி­யா­ கவோ அவர் தன்னை இந்தத் தேர்தல் களத்தில் இனம் காட்­டிக்­கொள்­ள­வில்லை. பெரும்­பான்மை இன மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்­கான அர­சியல் வழி­மு­றை­களைக் கொண்ட அவ­ரு­டைய மேடைப் பேச்­சுக்கள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் புறந்­தள்ளு­ வ­தா­கவும், அவற்றில் அக்­க­றை­யற்ற தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தா­க­வுமே அமைந்துள்ளன.

ஆனாலும் அவருடைய தேர்தல் விஞ் ஞாபனம் கோத்தபாய ராஜபக் ஷவின் விஞ் ஞாபனத்திலும் பார்க்க சற்று வித்தியாச மானதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினை கள் குறித்து சிறிய அளவில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் காணப்படுவது தமிழ்த் தரப்பில் அவருக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு ஊக்குவித்துள்ளது. ஆனாலும் ஒப்பீட்டள வில் கோத்தபாய ராஜபக் ஷவிலும் பார் க்க சஜித் பிரேமதாச அரசியல் ரீதியில் நல்லவராகத் தெரிகின்றார். பிரச்சினைக  ளுக்குத் தீர்வுகாண்பதில் அக்கறை கொண் டிருப்பதாகத் தன்னை இனம் காட்டியுள்ளார் என்ற காரணத்துக்காக தமிழ்த்தேசிய கூட் டமைப்பு அவரை ஆதரித்துள்ளது.

நாங்கள் தமிழர்கள் ஏன் சஜித் பிரேம தாசவை ஆதரிக்கின்றோம், ஏன் கோத்தபாய ராஜபக் ஷவை  நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பின் கீழ் ஏழு அம்சங்களில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகவும், பத்து விடயங்களுக்காக கோத்தபாய ராஜபக் ஷவை நிராகரிப்பதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு பிரசாரப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தமிழ் மக்கள் இருவரையுமே நம் பிக்கைக்கு உரியவர்களாக ஏற்க முடியாத நிலையில் ஒருவருக்கு வாக்களிக்க வேண் டியவர்களாக உள்ளனர். உங்கள் மீது நம் பிக்கை இல்லை. உங்களால் எங்களுக்கு எந்தவித பயனும் கிடைக்க மாட்டாது என கூறிக்கொண்டு இருவரில் ஒருவரை ஆதரிக்க வேண்டிய கட்டாய நிலைமை யில் அவர்கள் இருக்கின்றனர். கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந் தத்தைக் கொண்டுள்ள இந்த முரண்பாடான அரசியல் சூழலில் அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவம், அரசியல் முதிர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

அவர்களின் முடிவு நல்ல முடிவாக அமை யும். நல்லதொரு முடிவாகவே இந்தத் தேர் தல் முடிவு அமையும் என்ற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது.

பி. மாணிக்கவாசகம்

 

https://www.virakesari.lk/article/68879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பெரும்பாலானவர்கள் சஜித்திற்கே வாக்களிப்பர், ஆனால் கூட்டமைப்பு சொல்வதற்காக அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.