(எம்.மனோசித்ரா)

இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக இம்முறை ஜனாதிபதி தேர்தல் அமையவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

எனவே அரச அதிகாரத்தில் இருக்கின்றவர்களும், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர்களும் இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை என்பதால் இலங்கை வரலாற்றில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் விஷேடமானதாக இருக்கும்.

காரணம் இது வரையில் இடம்பெற்றுள்ள தேர்தல்களில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என யாரேனுமொருவர் களமிறங்கியுள்ளார். இவர்களே நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

இவ்வாறு பிரதான தலைவர்கள் களமிறங்காத முதலாவது தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்றமை விஷேட அம்சமாகும்.

http://www.dailyceylon.com/192216/