Jump to content

வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை – இரணைதீவு மக்கள் குற்றச்சாட்டு

Recommended Posts

kilinochchi.jpg

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்.

இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வானூர்தியில், படகுகளில் வாக்களிப்பு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வாக்களிக்க-ஏற்பாடுகள்-செ/

Link to comment
Share on other sites

29 minutes ago, போல் said:

அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

வன்னி தமிழ் மக்கள் என்றாலே துயர வாழ்க்கைதான், வாக்களிப்பதிலும் கூட உதவிகள் இல்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

வன்னி தமிழ் மக்கள் என்றாலே துயர வாழ்க்கைதான், வாக்களிப்பதிலும் கூட உதவிகள் இல்லை. 

இந்த மக்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்று சொறிலங்காட சிங்கள அரசுக்கு 5 வருஷமா முண்டு கொடுத்து, ஊர் ஊரா ஓடி சஜித்துக்கு வாக்களிக்க கோரும் சம்பந்தன், சுமந்திரன், மாவை கோஷ்டி இந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை!

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

இந்த மக்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்று சொறிலங்காட சிங்கள அரசுக்கு 5 வருஷமா முண்டு கொடுத்து, ஊர் ஊரா ஓடி சஜித்துக்கு வாக்களிக்க கோரும் சம்பந்தன், சுமந்திரன், மாவை கோஷ்டி இந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை!

அவையள் முந்தி ரணிலுக்காக வழக்காடிச்சினம்.

இப்ப சஜித்துக்கு ஆக மேடை மேடையா ஏறி துதி பாடீனம்.

தமிழ் மக்களை திரும்பி பார்க்க கூட நேரமில்லை. 

Link to comment
Share on other sites

மக்களின் பிரச்சினை: ஆதவனின் செய்தியை அடுத்து தேர்தல் ஆணைக்குழு உடனடி நடவடிக்கை!

kilinochchi.jpg

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படாதமை தொடர்பான மக்களின் முறைப்பாடு குறித்து ஆதவன் செய்திகள் வெளியிட்ட செய்திப் பிரசுரத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பூநகரி பிரதேச செயலக அதிகாரிகளின் தலையீட்டின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த மக்களுக்கான படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு குறித்த பகுதி மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டு விட்டு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை எனவும்  இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஆதவன் செய்திப்பிரிவு நேற்று (14.11.2019) செய்தி பிரசுரித்திருந்தது.

http://athavannews.com/மக்களின்-பிரச்சினை-ஆதவன/

Link to comment
Share on other sites

52 minutes ago, போல் said:

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பூநகரி பிரதேச செயலக அதிகாரிகளின் தலையீட்டின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த மக்களுக்கான படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.