Jump to content

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பிரச்சினைகள் ஏற்படலாம் – அமெரிக்க தூதரகம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

US-embassy-colombo.jpg

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பிரச்சினைகள் ஏற்படலாம் – அமெரிக்க தூதரகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பெரிய கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உள்நாட்டு ஊடகங்களை கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add

Link to comment
Share on other sites

பிரச்சினைகளை உருவாக்குவது அமெரிக்கா என்பதால், முன்கூட்டியே எச்சரிக்கவும் அதனால் முடியும். 🙃

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு முன்னரா பின்னரா என்று இன்னமும் திட்டமிடப்படவில்லை போலும் 😉

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

9 hours ago, தமிழ் சிறி said:

அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உள்நாட்டு ஊடகங்களை கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது

கிழிஞ்சிது போ ! ஈஸ்டரின் போது உள்ளூர் அதிகாரிகள் கிடைத்த அறிவுரைகளை மக்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பிரச்சினைகள் ஏற்படலாம் – அமெரிக்க தூதரகம்

நோயாளி : மருந்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
வைத்தியர் : ஆ, சாப்பாட்டிற்கு முன்னரும் சாப்பிடலாம் இல்லை சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிடலாம்.

( எப்படியோ சாப்பிடலாம் என்று சொல்லியாச்சு 🙂  )  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Lara said:

பிரச்சினைகளை உருவாக்குவது அமெரிக்கா என்பதால், முன்கூட்டியே எச்சரிக்கவும் அதனால் முடியும். 🙃

3 hours ago, ampanai said:

நோயாளி : மருந்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
வைத்தியர் : ஆ, சாப்பாட்டிற்கு முன்னரும் சாப்பிடலாம் இல்லை சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிடலாம்.

( எப்படியோ சாப்பிடலாம் என்று சொல்லியாச்சு 🙂  )  

லாரா, அம்பனை.... நீங்கள் பகிடி விடுகின்றீர்கள்.
ஏதோ.. நடக்கப் போகுது என்று,  யோசனையாக இருக்குது.
என்ன... நடந்தாலும், தமிழர்கள் தான்... முதலில், அவர்களின் குறியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

லாரா, அம்பனை.... நீங்கள் பகிடி விடுகின்றீர்கள்.
ஏதோ.. நடக்கப் போகுது என்று,  யோசனையாக இருக்குது.
என்ன... நடந்தாலும், தமிழர்கள் தான்... முதலில், அவர்களின் குறியாக இருக்கும். 

தேர்தல் முடிந்த பின் முஸ்லிம்கள் மேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒரு கதை உலாவுகிறது. நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

23 hours ago, Lara said:

தேர்தல் முடிந்த பின் முஸ்லிம்கள் மேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒரு கதை உலாவுகிறது. நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தென்பகுதில வீதியில் திரிகிற முஸ்லீம்களை கொஞ்சநாளைக்கு வீட்டுக்குள்ள இருக்க சொல்லி பள்ளிவாசல்கள் அறிவிக்கின்றனவாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.