(எம்.எப்.எம்.பஸீர்)

நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக  மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள் அனை­வரும்  தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும்  மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக­்காளர் தொடர்பில் வேட்­பா­ளர்கள் செல­விட்ட தொகை 625 ரூபா என மதிப்­பீடு செய்­யப்பட்­டுள்­ளது.  

தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களின் பிர­காரம்,  கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் மொத்த செலவு 715 மில்­லியன் ரூபா­வாகும். அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்கு செல­வி­டப்­பட்ட தொகை 54 ரூபா­வாகும்.   2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக 1856 மில்­லியன் ரூபாவை தேர்­தல்கள் திணைக்­களம் செல­விட்­டுள்­ளது.  

இதன்­போது வாக்­காளர் ஒரு­வ­ருக்கு 132 ரூபா செல­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில்  2015 ஆம் ஆண்டில் 2706 மில்­லியன்  ரூபாவை தேர்­தல்கள்  திணைக்­களம் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக  செல­விட்­டுள்ள நிலையில்,  அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்­காக 180 ரூபா  செல­வி­டப்­பட்­டுள்­ளது.  இந்­நி­லை­யி­லேயே இம்­முறை  ஜனா­தி­பதித் தேர்தல் செல­வீனம் 5500 மில்­லியன் ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ள­துடன்,  வாக்­காளர் ஒரு­வ­ருக்­கான செலவு 344 ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ளது. அதன்­படி இம்­முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக  வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக் குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு  965 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/68997