Jump to content

'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்

ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக
வரதராஜா பெருமாள்

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனதாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்க இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய போதிலும், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் அதற்கு தடையாக செயற்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தான் ஒருபோதும் இந்தியாவை குறைக்கூற போவதில்லை என தெரிவித்த வரதராஜ பெருமாள், வி.பி.சிங் மற்றும் கருணாநிதி ஆகியோரையே தான் குறைக்கூறுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையுடன் ராஜீவ் காந்தி ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு, ராஜீவ் காந்தி வைத்த கையொப்பத்தை, வி.பி.சிங் மதிக்காது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மு. கருணாநிதி,படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மற்றும் விடுதலைப் புலிகள் இணைவதற்கும் ஆதரவாக செயற்பட்டாரே தவிர, ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் அக்கறையுடன் செயற்படவில்லை என அவர் கூறினார்.

சிங்களத் தலைவர்கள், இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இணைந்து செயற்பட்ட நிலையிலேயே, தனக்கு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை நடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகார பகிர்வு என்ற விடயம் உள்ளடங்களாக தாம் அந்த சந்தர்ப்பத்தில் 19 அம்சக் கோரிக்கைகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்த போதிலும், அவர்கள் அதனை புறக்கணித்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாநிதி மற்றும் சிங்களத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து சரியாக செயற்பட்டிருக்கும் பட்சத்தில், 1990ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு இடம்பெற்ற பாரிய அழிவை தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும் என வரதராஜா பெருமாள் கூறுகின்றார்.

1990ஆம் ஆண்டே தமிழர் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கும் பட்சத்தில், அதிகாரம் மிக்க மாகாண சபை முறைமையை பெற்றிருக்க முடியும் எனவும், பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரதராஜ பெருமாள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றினாரா?

வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைக்கும் நோக்குடன் வரதராஜ பெருமாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் அவரிடம் வினவியது.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தான் எதிரானவர் என்ற நிலையில், எவ்வாறு அவர்களின் கொடியை தான் ஏற்றியிருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வமான கொடியாக காணப்படுகின்ற கொடியே, வடக்கு, கிழக்கு மாகாண சபையின் கொடியாக அப்போது காணப்பட்டதாகவும், அந்த கொடியையே தான் ஏற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு கிடையாது.

இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

ராஜீவ் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் இலங்கை பிரிவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரித்த வரதராஜ பெருமாள், இலங்கை தரப்பினரே இந்தியாவிடம் சென்று பயிற்சிகளை பெற்று வந்ததாகவும் நினைவுட்டினார்.

பிரபாகரன் உயிரிழந்தமையில் பெருமை கிடையாது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் உயிரிழந்து, தன்னுடன் சார்ந்தவர்களையும் பலி கொடுத்து, தமிழ் மக்களின் உயிர்களையும் பலியாக்கி, தமிழர்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்தமையில் எந்தவித பெருமையும் கிடையாது என வராராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்படத்தின் காப்புரிமைSTR

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த உங்களை மக்கள் எவ்வாறு நம்புவது என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தலைவர் என்பவன் மக்களுக்காக கடமையை பொறுப்பேற்று செய்பவனே தவிர, அதனை தவரவிடுபவன் அல்லவென அவர் கூறினார்.

தான் தமிழ் மக்களுக்காக கையில் எடுத்த பொறுப்பை நிறைவேற்றவே இந்த மண்ணில் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான முயற்சிகளையே தான் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைவதற்கு யார் உதவி வழங்க வேண்டும்?

கிழக்கு மாகாண மக்களின் பெரும்பான்மை விருப்பத்தை வெற்றிக் கொள்ளுவோமாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சாத்தியம் காணப்படுவதாக வரதராஜ பெருமாள் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

வடக்கு, கிழக்கு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

மாகாண சபை அதிகாரங்கள் வெற்றிக் கொள்ளப்பட்டு, மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தினால் அதிகாரங்கள் பெரும்பாலும் கிடைத்து விடும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

அதைவிடுத்து, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரே தடவையில் வெற்றிக் கொள்வது என்பது சிரமமான விடயம் என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50436748

இன்னும் என்னவெல்லாம் கேக்கவேண்டி இருக்குமோ?!

Link to comment
Share on other sites

இந்திய அரசின் கைக்கூலியாக மிக மிக நீண்டகாலமாக இருந்துவார வரதராசர் இப்பிடிப்பட்ட பொய்களை காலங் காலமாக அவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார். கைக்கூலி வரதராசர் புளுகும் மாகாணசபைகள் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் விளைவாகவே திணிக்கப்பட்ட ஒரு அரைகுறைத் தீர்வு என்பதை மதிமயங்கி உளறும் வரரதராசரின் களிமண் மூளைக்கு நினைவிருக்க முடியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வெத்து வேட்டு. உப்பிடி கொஞ்சத்தை வைச்சு சர்வதேசத்தை ஏமாத்தலாம் எண்டு சிங்களம் அப்பப்ப வெளியில கொண்டுவந்து ஏதாவது சொல்ல வைத்தவுடன், அவர்களுக்கு ஏற்றமாதிரி எதையாவது உளறிக்கொட்ட வேண்டியதுதான். ஆட்சி மாற மற்றவர் கூப்பிட்டவுடன் அவர்களுக்கும் வாலாட்ட வேண்டியது. கொள்கை இல்லாமல் போராட வெளிக்கிட்டு தன்மானத்தோடு வாழவும் முடியாமல் எடுபிடி வேலை. அதற்குள் அறிக்கை, பேட்டி ஒரு கேடு. அத்தோடு காணாமல்ப் போய்விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் எதனையும் பெற்றுக் கொடுக்கக் கூடாது என்று செயற்பட்டவர்கள்.. அவரின் பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

இவர் எல்லாம் ஹிந்திய எஜமானர்களுக்காக கூவுவது வியப்பே இல்லை. பயந்தோடி... எல்லாம் தலைவரைப் பற்றிப் பேசுவது கேவலம்.. தமிழுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளாக எங்க  பார்த்தாலும்

வெறி  நாய்களின்  குலைச்சல் தாங்க  முடியல....

சந்திரன் இருந்தாலும்  குலைக்குதுகள்

மறைஞ்சாலும் குலைக்குதுகள்

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

சாத்தான் ஓதிய வேதத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போர் மவுனிக்கும் மட்டும்  தண்ணியில்லா பாலைவனத்தில் ஒளிச்சு கிடந்தவனெல்லாம் கதைக்க வெளிக்கிட்டு விட்டாங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக வாழ்பவர்கள் அனைவரும் போராளிகள். வரதராஜப்பெருமாள் சொல்லிக் கொள்வதைப் போல், அவரும் போராளியென்றால் மாற்றுக் கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் கொண்ட போராளிகளையும் மதிக்கத் தெரிய வேண்டும். போராளிகள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதானே ! வெல்வது மட்டும்தான் போராட்டம் என்றில்லை. தோற்றாலும் போராட்டம்தான். மற்றபடி மக்களைப் பலி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போரை முன்னெடுப்பதில்லை. விளைவுகளைக் களமும் காலமும் தீர்மானிக்கின்றன. பிரபாகரன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராளி. அவரைப் போன்றோர் களத்தில் வீழ்வதில்லை ; துரோகத்திலேயே வீழ்கின்றனர்.

Link to comment
Share on other sites

1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களுக்காக வாழ்பவர்கள் அனைவரும் போராளிகள். வரதராஜப்பெருமாள் சொல்லிக் கொள்வதைப் போல், அவரும் போராளியென்றால் மாற்றுக் கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் கொண்ட போராளிகளையும் மதிக்கத் தெரிய வேண்டும். போராளிகள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதானே ! வெல்வது மட்டும்தான் போராட்டம் என்றில்லை. தோற்றாலும் போராட்டம்தான். மற்றபடி மக்களைப் பலி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போரை முன்னெடுப்பதில்லை. விளைவுகளைக் களமும் காலமும் தீர்மானிக்கின்றன. பிரபாகரன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராளி. அவரைப் போன்றோர் களத்தில் வீழ்வதில்லை ; துரோகத்திலேயே வீழ்கின்றனர்.

துரோகம் தமிழர் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் உள்ளதோ ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கோட்டவை ஆதரித்த வரதருக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை அவர் ஒரு செல்லாகாசு என்பதையும் இவர் சொல்வதை எல்லாம் தமிழர் வீட்டில் வளர்க்கும் நாய் கூட கேட்காது என்பதையும் குறிபுணர்த்தியுள்ளார்கள்.

11 hours ago, Paanch said:

சாத்தான் ஓதிய வேதத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

இந்த சமயத்தில் கூட்டமைப்பு யாரின் நேரடி வழிநடத்தலில், கண்காணிப்பில் இருந்தது என்பதும் கவனிக்க வேண்டியதே.

Link to comment
Share on other sites

35 minutes ago, goshan_che said:

இந்த சமயத்தில் கூட்டமைப்பு யாரின் நேரடி வழிநடத்தலில், கண்காணிப்பில் இருந்தது என்பதும் கவனிக்க வேண்டியதே.

அந்த சமயத்தில் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கவில்லை!

இல்லாததை யாராலும் வழிநடத்தவும் முடியாது!

இப்படித்தான் பலர் பலரை ஏமாற்ற முனைகின்றனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

அந்த சமயத்தில் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கவில்லை!

இல்லாததை யாராலும் வழிநடத்தவும் முடியாது!

இப்படித்தான் பலர் பலரை ஏமாற்ற முனைகின்றனர்!

இலங்கையின் உச்ச நீதி மன்றம் வடக்கு-கிழக்கு இணைப்பு செல்லாது எனக்கூறி பிரித்த நாள் 16/10/2006.

அப்போ கூட்டமைப்பு இருந்தது. 

மற்றயவர்களை ஏமாற்று பேர்வழிகள் என தூற்றும் முதல். எமக்கு போதிய விளக்கம் இருக்கிறதா என ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்தால் நல்லம்.

 

Link to comment
Share on other sites

14 minutes ago, goshan_che said:

இலங்கையின் உச்ச நீதி மன்றம் வடக்கு-கிழக்கு இணைப்பு செல்லாது எனக்கூறி பிரித்த நாள் 16/10/2006.

அப்போ கூட்டமைப்பு இருந்தது. 

மற்றயவர்களை ஏமாற்று பேர்வழிகள் என தூற்றும் முதல். எமக்கு போதிய விளக்கம் இருக்கிறதா என ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்தால் நல்லம்.

சரி ஏற்றுக் கொள்கிறேன்!

 

Link to comment
Share on other sites

சுமந்திரன் வழக்காடி தோற்ற வழக்குகளில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.