Jump to content

Recommended Posts

EJeLw0CUUAAtSsT.jpg

இன்று காலை 10 மணி வரையான 3 மணித்தியாலங்களில் 69 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 49 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/3-மணித்தியாலங்களுக்கு-69-வ/

கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்!

நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி சார்பாக வாக்களிக்க வலியுறுத்தி வருவதை காணமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக கல்முனை தேர்தல் தொகுதியில் இந்நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்படுகிறது.

இதன் போது திடீரென வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வந்த சுபத்ரா ராமய விகாராதிபதி சங்கரத்ன தேரர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரிடம் நீதியான தேர்தலை நடாத்த மக்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க நிர்ப்பந்திப்பவர்களை வாக்கு சாவடிக்கு அருகாமையில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சென்றார்.

இதே வேளை சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் நிலவியது.மேலும் பிக்குவை பலவந்தமாக வெளியேற்றியதையும் காணமுடிந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131294

Link to comment
Share on other sites

25 வாக்குச் சீட்டுகளுடன் இருவர் கைது

குருநாகல்- வெல்லவ பொலிஸ் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வாக்குச் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கள்ள வாக்குச் சீட்டுகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 36 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் சோதனையிட்டபோது, இருக்கைக்கு அடியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 வாக்குச் சீட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே குறித்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய இருவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://athavannews.com/25-வாக்குச்-சீட்டுகளுடன்-வ/

Link to comment
Share on other sites

வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கைது!

முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதனை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் வாக்களிப்பு நிலையத்திற்குள் வாக்களிப்பது தொடர்பில் புகைப்படம் எடுத்து அதனை செய்தி வெளியிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. அத்தோடு குறித்த நிலயத்தின் சிரேஸ்ர தலைமை அலுவலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/131295

Link to comment
Share on other sites

பலாங்கொடயில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முற்பட்ட சந்தேகநபர் கைது

தேர்தல் சட்டங்களை மீறி ஒரு கட்சியினருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதற்கு முயன்ற சந்தேகநபர் ஒருவரை பலாங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரிடமிருற்து 2×9 செ.மீ கொண்ட 348 துண்டு பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 26 வயதான சந்தேகநபர், பலாங்கொட- வட்டவல ஸ்ரீ அக்போதி வித்யாலயத்தின் வாக்கு மையம் அருகே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

http://athavannews.com/பலாங்கொடயில்-துண்டுப்-பி/

Link to comment
Share on other sites

ஜனாதிபதித் தேர்தல்: மட்டக்களப்பில் இதுவரை 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

udaya-kumar.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கம் இதுவரையில் 22தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.உதயகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்பகல் 11 மணி வரையில் 22.49 சதவீதம் வாக்களிப்பு வீதம் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் இங்கு சுமுகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களிலும் 398,301 வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது கல்குடா தேர்தல் தொகுதியில் 22.45 சதவீதமும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 22.01 சதவீதமும் அதேபோன்று பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23.48 சதவீதமும்  வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தல்-மட்ட-2/

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்!

நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி சார்பாக வாக்களிக்க வலியுறுத்தி வருவதை காணமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக கல்முனை தேர்தல் தொகுதியில் இந்நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்படுகிறது.

இதன் போது திடீரென வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வந்த சுபத்ரா ராமய விகாராதிபதி சங்கரத்ன தேரர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரிடம் நீதியான தேர்தலை நடாத்த மக்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க நிர்ப்பந்திப்பவர்களை வாக்கு சாவடிக்கு அருகாமையில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சென்றார்.

இதே வேளை சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் நிலவியது.மேலும் பிக்குவை பலவந்தமாக வெளியேற்றியதையும் காணமுடிந்தது.

முன்னர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கருணா, பிள்ளையான் குழுக்கள் தேர்தலை குழப்ப சதி?: ஐ.ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஹக்கீம் முறைப்பாடு!

30-10-2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட துணைக்குழு சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது.

அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று செவ்வாய்கிழமை (29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக சிறுபான்மை மக்கள் செறிந்தும், பரவியும் வசிக்கும் நாட்டின் இதர பகுதிகளிலும் இவ்வாறான முறைகேடுகளும், அடாவடித்தனங்களும் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலை மோசடிகள் மலிந்ததாக்கி தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்களை தேர்தலின்போது களமிறக்கி மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளின் விளைவுகள் ஆபத்தானவையாக அமையலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கோர யுத்தம் நடந்த காலத்தில் வட மாகாணத்தில், வன்னியில் வசித்துவந்த நிலையில் பின்னர், இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற வேறு மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்கள் பூர்வீக வசிப்பிடத்தில் தமது வாக்குகளை அளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு யுத்தம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால் இனியும் அவசியமில்லை என கூறி மறுக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது. இது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இதற்கு முன்னர் வாக்குரிமையுள்ள குறித்த இடத்துக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வந்தமை பற்றியும் கூறப்பட்டது. இதன்போது இவ்வாறான விடயங்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதோடு அவற்றை தடுப்பதற்கு தாமதமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக இலங்கைக்கு வருகைதரும் அறுபதுக்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இங்கு வந்து, முன் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.

தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது சம்பந்தமான விடயத்தை பொறுத்தவரை, வாக்களிப்பின் இறுதிக் கட்டத்தில் வாக்காளர்களை மிரட்டி பலவந்தமாக வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகளை திணித்தல் மற்றும் மோசடிகள், அச்சுறுத்தல் என்பன மேற்கொள்ளப்படும் நிலைமை பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

மாலை வேளை, புவியியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமங்களின் அமைவிடம் போன்றவை இவ்வாறான ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு பெரிதும் ஏதுவாக அமைந்துவிடுவதை இவ்வாறான பிரதேசங்களின் கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நன்கு உணர்த்துவதாகவும் எடுத்துரைக்கப்பட்டன.

கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களில் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றமை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான காரியங்களில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் நடந்துகொண்ட விதம் இவற்றுக்கு சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தனியார் தொலைகாட்சிகள் சிலவும், அச்சு ஊடகங்கள் சிலவும் ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்தி, பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்காளர்களை தவறாக வழிநடத்தி வருவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடத்திலும் அவருடனான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் கூறினார்.

வாக்களிப்பு மோசடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படக்கூடிய கிராமங்கள் மற்றும் வாக்குச் சாவடிகள் பற்றிய பட்டியலொன்றை தமது கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

தன்சானியா, சியராலியோன், சிம்பாப்வே, பங்களதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பொதுநலவாய மற்றும் சார்க் நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றதன் மூலம் தாம் செய்த பங்களிப்புகள் பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது நினைவூட்டினார்.

இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் தினத்திற்கு முன்னர் இரண்டாம் கட்டமாக இங்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவில் பிரதான கண்காணிப்பாளர் மரிசா மார்டியஸ் இடம்பெறுவார்.
அத்துடன் பலத்த பலப் பரீட்சையாகவும், தீர்க்கமானதும், விறுவிறுப்பானதாகவும் அமையப்போகும் 2019ஆம் ஆண்டின் இந்த ஜனாதிபதி தேர்தலை பொதுநலவாய நாடுகளினதும், சார்க் நாடுகளினதும் தூதுக்குழுக்களும் கண்காணிப்பதற்கு முன்வந்துள்ளன.

https://www.pagetamil.com/84191/

Link to comment
Share on other sites

கண்டியில் இலக்கத்தகடு இல்லாத ஜீப் வண்டியில் வந்திறங்கிய மர்ம குழு

கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று நிற்பதாக தெரிவக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வாகனத்தில் இலக்கத்தகடு இல்லை எனவும், ஃப்ராடோ ஜீப் வண்டியே நிற்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வண்டியிலிருந்து ஒரு குழு வந்திறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dolosbage Junior பாடசாலைக்கு முன்பாகஇந்த வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

625.200.560.350.160.300.053.800.300.160.

https://www.ibctamil.com/srilanka/80/131311

Link to comment
Share on other sites

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல்!

kk.jpg

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த சென்ற வேளை, இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மு.தம்பிராசா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/எம்-கே-சிவாஜிலிங்கத்தின்/

கேகாலையில் வாக்களித்த சிலர் மீது தாக்குதல்- பாதுகாப்பு தீவிரம்

333.jpg

கேகாலை – தெரணியகல பகுதியில் வாக்களித்த  சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டுமென சிலர் அச்சுறுத்தியதாகவும் அதையும் மீறி தான் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த சிலர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வீடொன்றுக்குள் நுழைந்த சிலர், வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடுஆண் ஒருவரையும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால், அங்கு அமைதியின்மையான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://athavannews.com/கேகாலையில்-வாக்களித்த-சி/

600 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை

600 வாக்குச் சீட்டுகளுடன் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்யப்பட்ட நாகொட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தல்கஸ்வல பகுதியில் வைத்தே  இன்று காலை பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு பொறுப்பான பிராந்திய தேர்வு அலுவலகர் வழங்கிய தகவலுக்கமையவே நாகொட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் சந்தேகநபர் பொலிஸ் பிணையில் தற்போது  விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நாகொட  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/600-வாக்குச்-சீட்டுகளுடன்-க/

Link to comment
Share on other sites

வாக்களிப்பு மையத்திற்குள் திடீர் கைது

மாதிரி வாக்குச்சீட்டுக்களை வாக்களிப்பு மையத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்ற பொதுஜன பெரமுனவின், வாக்களிப்பு நிலைய முகவர் ஒருவர் திடீர் என கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் மகஸ்தோட்ட மத்தும பண்டார வித்தியாலய வாக்களிப்பு மையத்திலேயே இவர் கைதானார்.

இதேவேளை, குரநாகல் வாரியப்பொல பகுதியில் இருவேறு சம்பவங்களில் இருவர் கைதாகினர்.

போலி வாக்குச்சீட்டுக்கள் வைத்திருந்த பெரமுன, புதிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவாளர்கள் கைதாகியுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/131315

Link to comment
Share on other sites

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறை: மலையகத் தமிழர்கள் மீது தாக்குதல்

_109712588_406df6b7-aaad-4a04-a131-63f38

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறையின்போது கேகாலை - தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வாக்களிக்க சென்ற வாக்காளர்களை ஒரு தரப்பிற்கு வாக்களிக்க வேண்டுமென சில தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.

அதையும் மீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதே சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

_109712272_slpollviolence.jpg

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நபர் தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது ஒரு வீட்டுக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து, தெரணியகல பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.

இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியில்லாத சூழ்நிலையை இயல்புக்கு கொண்டு வரும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் வழக்கம் போல வாக்களித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை வாக்களிக்காத வாக்காளர்களுக்கு தாம் முழுமையான பாதுகாப்பை வழங்குவதாகவும், அச்சமின்றி வாக்களிக்க வருகைத் தருமாறும் போலீசார் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

பதுளையில் பெண்ணொருவர் மீது தாக்குதல்

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மதியம் 1 மணிவரை 139 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவிக்கிறது.

பதுளை - ஹப்புத்தளை பகுதியில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக இந்த நிலையம் தெரிவிக்கின்றது.

அரசியல்வாதிகள் சிலர் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவர் வெட்டி தாக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் பொரலந்த ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50444162

Link to comment
Share on other sites

வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்

 காலி - நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம - காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என  அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.

election1.jpg

 'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும்  வருபவன் நானே,  நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என  குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான  சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/69040

Link to comment
Share on other sites

ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாராலும் பேருந்தில் பயணித்த 10 பேர் தருமபுரம் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டை, கூழாவடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதலுக்கு ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் முயற்சித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் கொலைக் குற்றச்சாட்டு வழக்குள்ளது. அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் உள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலும் 10 பேர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனரென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://athavannews.com/ஆவா-குழுவைச்-சேர்ந்த-14-பேர/

Link to comment
Share on other sites

6 மணித்தியாலங்களில் 139 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு

இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையான 6 மணித்தியாலங்களில் 139 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 91 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 31 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

EJfAOUDUUAASsll.jpg

http://athavannews.com/6-மணித்தியாலங்களில்-139-தேர்/

Link to comment
Share on other sites

சற்று முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்ட இளைஞர்களால் பதற்றம்!

நாடு பூராகவும் இன்று வாக்கெடுப்பு அமைதியாக இடம்பெற்று முடிந்த பின்னர், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், இரவு 7 மணியளவில் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை வீதியால் சென்ற இளைஞர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/131362

Link to comment
Share on other sites

மதவாச்சியில் பேருந்துகள் மீது தாக்குதல் வாக்களித்து திரும்பிய மக்களுக்கு நேர்ந்த கதி

மன்னாரில் வாக்களித்து விட்டு புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது மதவாச்சி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்துகள் மீது ஓயா மடு பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அரசு பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் அந்த மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் அரச பேருந்துகளில் மதவாச்சி ஊடாக புத்தளம் சென்று கொண்டிருந்த போது இன்று (சனிக்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில் மதவாச்சி பகுதியில் வைத்து இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கல் வீச்சுத் தாக்குதலின் போது குறித்த பேருந்தில் பயணித்த சில பயணிகள் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். குறித்த தாக்குதல் தொடர்பாக மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Madawachchi-Attack-Election-2019-1.jpg

Madawachchi-Attack-Election-2019-2.jpg

Madawachchi-Attack-Election-2019-3.jpg

Madawachchi-Attack-Election-2019-4.jpg

Madawachchi-Attack-Election-2019-5.jpg

Madawachchi-Attack-Election-2019-6.jpg

http://athavannews.com/மதவாச்சியில்-பேருந்துகள/

Link to comment
Share on other sites

புத்தளத்தில் இருந்து வடக்குக்கு சென்ற 10இற்கும் மேற்பட்ட பேருந்துகள் வழிமறிப்பு மீண்டும் களேபரம்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்குச் சென்ற மக்கள், மீண்டும் புத்தளம் நோக்கி வரும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியின் சிரம்பையடி மற்றும் சாலியவெவ ஆகிய பகுதிகளில் பேருந்துகள் பல மணி நேரம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மன்னாருக்குப் பயணித்த இ.போ.ச. பேருந்துகள் மீது, தந்திரிமலை – ஓயாமடுவ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தருவதற்கு அச்சமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புத்தளம் அநுராதபுரம் சிரம்பையடியிலுள்ள புத்தளம் விஷேட அதிரடிப் படை முகாமுக்கு முன்னால் 5 பேருந்துகளும் சாலியவெவ பகுதியில் ஏழு பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தந்த மக்கள் சுமார் ஐந்து மணித்தியாலங்களாக அந்தந்தப் பகுதிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்தனர்.

பின்னர் மாலை 4.30 மணியளவில் புத்தளம் வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Puttalam-President-Election-Issue-2-1536

Puttalam-President-Election-Issue.jpg

Puttalam-President-Election-Issue-1-1536

Puttalam-President-Election-Issue-3-1536

http://athavannews.com/புத்தளத்தில்-இருந்து-வடக/

Link to comment
Share on other sites

மதகுருமார்களை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை தற்போது பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதமாக அமையாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.