Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • Replies 317
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இங்கே கோட்டா வென்றால் தமிழருக்கு விடியும் என எழுதியவர்கள் யாரென்பதையும், அதை எதிர்து எழுதியவர்கள் யார் என்பதையும் கடந்த 2 மாத பதிவுகளை பார்த்தாலே புரியும். கோட்டா வந்தால் எம் மக்கள் மீதான நெருக்க

எனக்கு இங்கே கருத்து எழுதுபவர்களை யோசிக்க அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்ல. முன்னர் யுத்தகாலத்தில் “பெட்டி அடித்தல்” கதைகள் எழுதியமாரி இப்போ, சீனா, அமெரிக்கா, இந்தியா என சும்மா பிளந்து கட்டுவதை வி

 • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்ட முடிவு 

Generic placeholder image

727,713

கோட்டாபய ராஜபக்‌ஷ 53.19%
53.19% Complete
Generic placeholder image

559,921

சஜித் பிரேமதாஸ 40.92%
40.92% Complete
Generic placeholder image

53,803

அநுர குமார திசாநாயக்க 3.93%
3.93% Complete
Generic placeholder image

10,335

மஹேஷ் சேனாநாயக 0.76%
0.76% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 1,368,177
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,333
மொத்த வாக்கெடுப்பு 1,383,510
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1,670,403

கேகாலை மாவட்ட முடிவு 

Generic placeholder image

320,484

கோட்டாபய ராஜபக்‌ஷ 55.66%
55.66% Complete
Generic placeholder image

228,032

சஜித் பிரேமதாஸ 39.60%
39.60% Complete
Generic placeholder image

15,043

அநுர குமார திசாநாயக்க 2.61%
2.61% Complete
Generic placeholder image

1,711

மஹேஷ் சேனாநாயக 0.30%
0.30% Complete

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 575,831
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,152
மொத்த வாக்கெடுப்பு 580,983
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 676,440
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Twitter இல் இந்த screen shot ஐ பார்த்தேன்.

EJjmeUjXkAASApk?format=png&name=900x900

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Final Results 

Gotabaya Rajapaksa - 6,924,255

Sajith Premadasa - 5,564,239

Anura Kumara Dissanayaka - 418,553

Mahesh Senanayake - 49,655

M. L. A. M. Hizbullah - 38,814

Ariyawansha Dissanayake - 34,537

EJkPBCNUUAASXYo?format=jpg&name=large

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-1.jpg

இறுதி முடிவு வெளியானது: 13 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்று ஜனாதிபதியானார் கோட்டா

13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குக்கள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவின் படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின்சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இறுதி-முடிவு-வெளியானது-13-இ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒற்றுமை தெரியுது.

Bild

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் வெட்டி ஆடும் ராஜதந்திரிகள் நிறைந்தது சிறிலங்கா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Kadancha said:

வேறு திரியில் சொல்லி இருந்தேன், ஆகக் குறைந்தது 6 மில்லியன் வாக்குகள் கோதாவிற்கு இருக்கிறது என்றும்.

தமிழரின் வாக்குகள் கோத்தாவின் வெற்றிக்கு தேவை இல்லை, legitimacy க்கு தான் கோதாவிற்கு தமிழர் வாக்குகள் அவசியம் என்று.  

இனித்தான்,  சீனா ஓர் புறமும் , அமெரிக்கா மற்றும்  இந்திய கூட்டு   ஆட்டம் ஆரம்பம்.

சீனாவை அசைப்பது கடினம்;ரணிலை வைத்து முயன்று பார்த்தார்கள் முடியவில்லை,அதனால் கோத்தவை வைத்து இப்ப புது முயற்சி

1 hour ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

Bildergebnis für நல்லூர் தேர்

ஹ்ம்ம்.... இனி,  வெள்ளை வான், எல்லாம் திரும்பவும் ஓடப் போகுது...
ஐந்து வருடத்துக்கு.... நல்லூர்  திருவிழாவுக்கும், போக ஏலாது.

5 வருடத்துக்கு பின்னர் நல்லூரில் கந்தனே புலம் பெயர்ந்து இருப்பார் 😆😆😆😆 அடாவடி மினிஸ்டர் அதையும் அட்டையை போட்டிருப்பார்

Link to post
Share on other sites

இன்றைய உலகம் ட்ரம்ப், பூட்டின், துருக்கி அதிபர்,  சிரியாவின் அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர் போன்று கடும்போக்காளர்களை தெரிவு செய்துவருகின்றது. அந்த வரிசையில் சிங்களமும் இணைந்துள்ளது. 

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு விரிந்து ஆட்சியை கைப்பற்றி மலர்ந்துள்ளது. அதற்கு, அந்த வெற்றிக்கு வித்திட்டது சிங்கள மக்கள்.

அன்னம் சிங்கள மக்களை வெல்ல முடியாமல் போய்விட்டது. 

வெள்ளைவான், வறியமக்களின் வழிகாட்டி, சர்வாதிகாரம் /ஊழல் அற்ற ஆட்சி என்பன எடுபடவில்லை. சரி, பாதுகாப்பு தான் சிங்கள மக்கள் மனங்களில் ஆழமாக இருந்தது என கூறினால், அதற்கு எதிராக அன்னம் சார்பாக சரத் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதுவும் பயனளிக்கவில்லை. மகேஸ் சேனநாயக்காவாலும் கொத்தாவிற்கு எதிரான இராணுவ மற்றும் பாதுகாப்பு பற்றிய பயத்தை நீக்க முடியவில்லை. 

மங்கள போன்றவர்கள் பொருளாதார நெருக்கடிகள், நாட்டின் கடன் என கூறினாலும் அதையும் சிங்கள மக்கள் பொருட்படுத்தவில்லை. 

Link to post
Share on other sites

கிட்டத்தட்ட பத்து வீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமல்லாது ஐம்பது வீதத்திற்கும் மேலாக மொட்டு பெற்றுள்ளது. 

இங்கே சிவாஜிலிங்கம் அவர்களையே இல்லை ஹிஸ்புல்லாவையோ குறை கூற முடியாத அளவிற்கு வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டு வென்றுள்ளது. 

இந்த மொட்டின் பலத்தை சிறுபான்மை இன தலைவர்கள் கணிக்க தவறி விட்டார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசியல்  ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் இப்போது காட்டியது போல.. வாக்கு ஒற்றுமையை தொடர்ந்து..வெளிக்காட்டிக் கொள்வதோடு..  நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, nedukkalapoovan said:

எல்லாமே சம் சும் மாவை கும்பலின் புத்திபேதலித்த கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவு.

கோத்தாவை.. போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளாமல் காப்பாற்றி.. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றி.. படுகொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றி.. நாட்டின் சனாதிபதியாகக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ணியது.. மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கு மகிந்த வழங்கிய கடமையை அவர் செவ்வனவே செய்து முடித்துள்ளார். மைத்திரியின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது..

அவரை நல்லவர்.. நல்லாட்சி நாயகன் என்றதும்..

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை.. உள்ளூர் விசாரணை ஆக்கி.. இறுதியில் அதையும் இல்லாமல் செய்த சம்சும் மாவை கும்பல் தான்.. கோத்தாவின் இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்கள் ஆவர்.

கோத்தாவுக்கு இன்று இரண்டு தெரிவுகள் உள்ளன.

1. சிறுபான்மை இனத்தை அரவணைத்துச் சென்று கட்சியினைப் பலப்படுத்துவது.

2. சிறுபான்மை இனத்தைப் பகைத்து சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வது.

இரண்டாம் தெரிவு கோத்தாவுக்கு அவ்வளவு இலகுவாக இருக்காது. காரணம்.. ரணில்.. ஒரு ராஜதந்திரத்தில் தோற்றால்.. அவர் சும்மா இருக்கமாட்டார்.

ரணில் இப்போது.. மைத்திரி.. சந்திரிக்காவை நம்பி.. இன்று பெரும் அரசில ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளார். அதில் இருந்து மீள வேண்டின்.. அவர் நிச்சயம்.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள சிங்களவர்களின் மத்தியில் தனதும் கட்சியினதும் செல்வாக்கை கட்டி எழுப்பவே நினைப்பார். செயற்படுவார்.

எனவே.. கோத்தா எடுத்த எடுப்பில்.. சிறுபான்மை இன மக்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய விளைவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் முனைவார். 

ஆக.. எதிர்கால சிங்கள தேச அரசியல் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஆனால்.. தமிழ் மக்களுக்குரிய தெரிவு.. இலங்கைத் தீவுக்குள் எழும்.. சர்வதேச செல்வாக்கை தமக்குச் சாதமாக்கி.. தமக்கான அநீதிகளுக்கு நீதியையும்.. உரிமைகளையும் பெற்றும் கொள்வது தான்.!

எனியும் சம் சும் மாவை கும்பலை நம்பிக் கொண்டிராமல்.. தமிழ் மக்கள் நாட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் நீதிக்குரலை.. உரிமைக்குரலை சர்வதேசம் அழுத்தம் ஒன்றை நோக்கி தொடர்ந்து எழுப்புவதே.. தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவுக்குள் தக்க வைக்க உதவும். இன்றேல்.. தமிழ் மக்கள் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவர். 

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

கோத்தாவின் குடும்பி ரணிலின் கையில்;  சொல்லு கேட்காமல். போனால் அமேரிக்கா பிரஜாவுரிமை பிரச்சினை கையில் எடுக்கப்படும். கோத்தா பல சிக்கல்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சந்திக்க வேண்டி வரும்.

இப்படி ஒரு சூழலை ரணில் ஏலவே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியான போது.. பாராளுமன்றத்தில் ஐ தே கட்சி ஆட்சி இருந்த நிலையில் சந்தித்தவர். ஆகவே ரணிலுக்கு இது புதிதல்ல.

கோத்தா சனாதிபதியானலும்.. பாராளுமன்ற பெரும்பான்மை இன்றி.. கோத்தாவால்.. குறிப்பாக மகிந்தவின் அரசியல் அமைப்பில் கைவைத்து.. அதனை தமக்கு ஏற்றாற் போல் மாற்ற முற்படுவது வெற்றி அளிக்காது.

எனவே மிக விரைவில்.. பாராளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கும். இதையே அன்று சந்திரிக்காவும் செய்தார். 

அப்படி ஒரு நிலை வந்தால்.. மீண்டும் தமிழ் மக்கள் தமது ஒருமித்த பலத்தைக் காட்ட வேண்டும்.. வாக்குகளால். ஆனால்.. அதில் சம் சும் மாவை கும்பல் ஆதாயம் தேட விளைவதை மட்டுப்படுத்த வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கான நீதியும் உரிமையும் சம் சும் மாவை கும்பலால்.. சுயலாபத்திற்கு தாரை வார்க்கப்படும் நிலையே உருவாகும்.. மீண்டும்.. மீண்டும்.. தமிழ் மக்களை சம் சும் மாவை கும்பல் ஏமாற்ற எனியும் இடமளிக்கக் கூடாது.

மேலும் சர்வதேசம் நோக்கிய தமிழ் மக்களின் நீதிக்கான.. உரிமைக்கான குரல் வலுப்பெறுதல் மிக மிக மிக அவசியம். சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீதி உரிமை இலங்கைத் தீவில் அமைய வாய்ப்பு மிக மிக மிக குறைவு. தமிழ் மக்களின் ஒற்றுமையும்.. பலமும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் அழுத்தங்களும்.. பலமும் தான்.. தாயகத்தில் ஒரு உருப்படியான செயற்திட்டத்தை வகுக்க உதவும்.  அதுவே தாயக மக்களை பாதுகாத்து நிற்க முடியும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, nedukkalapoovan said:

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

17 minutes ago, Dash said:

எனக்கு என்னவோ கோத்தா சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி நிலை தான் போல் உள்ளது; ரணில்,சீனா,இந்தியா,அமெரிக்கா,மஹிந்த, நாமல் என பல தரப்புக்களின் அழுத்தங்களை சந்திக்க வேணும்.

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கே கருத்து எழுதுபவர்களை யோசிக்க அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்ல.

முன்னர் யுத்தகாலத்தில் “பெட்டி அடித்தல்” கதைகள் எழுதியமாரி இப்போ, சீனா, அமெரிக்கா, இந்தியா என சும்மா பிளந்து கட்டுவதை விடுங்கள். புவிசார் அரசியல் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரும் காரணி என்றாலும் அதில் மட்டுமே எல்லாம் தங்கி இல்லை. 

 எந்த தரப்பு வந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா தொடர்பான இலங்கையின் கொள்கையில் பெரிய அசைவு வராது. அண்மையில் மைத்திரி ஏற்படுத்திய குழப்ப நிலையில் கூட, இந்த விடயத்தில் இருதரப்பும் விட்டுக்கொடாமல் நடந்ததை கண்டோம்.

எல்லாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இலங்கை வெட்டி ஆடும். அதில் ராஜபக்சயள், ரணில், சஜித் எல்லாரும் ஒரு அணிதான்.

1. அடுத்து பொதுத்தேர்தல் வரும்.  அதில் 2/3 பெற்று அரசியலமைப்பை தமக்கு ஏற்ப மாற்றுவதே ராஜபக்சேக்களின் முதல் குறி.

2. தொடர்ந்து அடுத்த தேர்தல்களை எப்படி வெல்லுவது என யோசிப்பர். கோட்டா இன்னும் ஒருதரம் அதன் பின் நாமல். அதுவரை எப்படி சிங்கள வாக்குகளை தக்க வைப்பது? அல்லது இழக்கும் அணிக்காக வாக்குகளை சிறுபான்மை வாக்குகளால் ஈடு செய்வது? இதற்காக ஒன்றில் மேலும் இன்வாதத்தை கையில் எடுக்கலாம் அல்லது சுமூகமாக போகலாம். 

3. சுமூகமாக போனால் ரணிலோ, சம்பிக்கவோ இனவாதத்தை கையில் எடுப்பர். எனவே இலகுவில் வெல்லும் வழி, இனவாத்தை தூண்டி விடுவதே. அதற்கு ஒரே வழி இன்னும் இன்னும் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து பயங்கரவாதிகளை உருவாக்கி பின்னர் அழிப்பது. மிக விரைவில் இரு சிறுபான்மை இனங்களும் பெரும் நெருக்குதலை காணும். இது இந்த மாவீரர் அனுட்டிப்பில் தடை, கைது எனத் தொடங்கும். அப்பாவி சிறுபான்மை மக்களை துன்புறுத்தி அதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் அவர்களின் இருப்பு தக்க வைக்கப்படும்.

4. ஒரே சமயத்தில் இலங்கையின் நீதி, சுயாதீன குழுக்கள் என்பனவறின் அதிகாரம் படிபடியாக முடக்கப்பட்டு சகலதும் அரசே என்றாக்கப்படும்.

5. நாங்கள் தொடர்ந்தும் வைகோ போல, அமெரிக்கா, சீனா, இந்தியா என யாழில் எழுதி கொண்டிருப்போம். 

 • Like 3
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für ஷிராந்தி ராஜபக்ஷ

மகிந்தவின் மனைவி... ஷிராந்தி ராஜ்பக்சவும்... லேசுப் பட்ட ஆள் இல்லை.
கோத்தாவுக்கு... குடைச்சல் கொடுப்பதில், முன்னணியில் இருப்பார்.

அப்படி அவர் செய்தால் கோத்தாவின் மனைவி சும்மா விடுவாரா தமிழ் சிறி. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.