சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு
சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.
இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த முடிவினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்.
http://athavannews.com/சௌதியில்-தளர்த்தப்பட்ட-க/
பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு
பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது.
இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.
பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார்.
பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.
‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள் என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன்.
ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன்.
குழந்தைகள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் அவர்களது முகம் எனது முகத்தில் பிரதிப்பலிப்பதை அவர்கள் பார்க்கலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
http://athavannews.com/பிரபஞ்ச-அழகியாக-தென்-ஆபி/
நியூஸிலாந்தில் எரிமலை வெடித்து சிதறியது – ஐந்து பேர் உயிரிழப்பு
நியூஸிலாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வெள்ளைத்தீவிலுள்ள குறித்த எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அதன் வாய் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, நியூஸிலாந்து நேரப்படி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது.
இந்த வெடிப்பினால் மேலெலும்புள்ள சாம்பல் புகை, சுமார் 12,000 அடி உயரத்திற்கு தென்படுவதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளில் பலர் காணாமற்போயுள்ளதுடன், அந்தப் பகுதியெங்கும் புகை வியாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://athavannews.com/நியூஸிலாந்தில்-எரிமலை-வ-2/
ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு துசித குமார் டிசில்வா என்ற ஊடகவியலாளரும் அவரது குடும்பத்தினரும் அளுத்கம, ஹெட்டிமுல்லாவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் வைத்து ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளானர்.
அத்துடன் தாக்குதல் தாரிகள் ஆரம்பத்தில் ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மகனை அச்சுறுத்தியுள்ளதாகவும், பின்னர் வீட்டிலுள்ள பொருட்க்களுக்கு சேதம் விளைவித்தும் உள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஊடகவியலாளரும், அவரது மனைவியும் அளுத்கமவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே இத் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
https://www.virakesari.lk/article/70763