பறவைகள் மரிக்கும் ஆபத்துகள் போக கீழேயுள்ளவைகளும் நிகழலாம்..
காற்றாலை நிறுவியவுடன் அதன் இறக்கைகள் (பிளேடுகள்) சுற்றும்பொழுது ஏற்படும் ஒருவித ஒலியை தொடர்ந்து கேட்டால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது எப்படி என்றால் உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு மிக அருகில் சென்றால் ஒருவித "ஹும்ம்ம்" என்ற 'க்ரோனா' ஒலியை கேட்டிருப்பீர்கள். அதையே தொடர்ந்து கேட்டால் நமக்கு ஒருவித மன நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவேதான் இம்மாதிரி மின்சாரம் செல்லும் இடங்களுக்கருகே மனிதர்கள் வசிப்பதை தவிர்த்துவிடுவார்கள்.
மேலும் காற்றாலையின் இறக்கைகளின் நுனி, அதிக வேகத்தில் சுழலும்போது உடைந்தால் ஏற்படும் சிதறல்கள்- கூர்மையாக சிதறும் பட்சத்தில், அருகில் மனிதர்கள் வசித்தால், இச்சிதறல்கள் தாக்கி கடும் காயங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
காற்றாலை தனியார் உடமையாக அமைவதுதான் இங்கு அடிப்படைச் சிக்கல். மாகாணசபையின் பங்கும் பங்குபற்றுதலாம் இல்லாமல் மாகாண மக்களுக்கு பங்கு விற்க்காமலும் இத்தகைய முதலீடுகள் வரவேற்க்கப் படலாமா?. பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, சமாந்திரமான 1. மறவன்புலவு-கேரதீவு, 2.அரியாலை-பூம்புகார், 3.கல்முனை (கட்டைக்காடு) பூனகரி நிலத் தொடர்களில் வாய்ந்த சமாந்தரமான மூன்று நிலத் தொடர்கள் இடம் ஆக்கரமிக்கப் படுவதை சிங்கள குடியேற்றங்களுக்கு அத்திவாரமாவதை ஏற்க்கக்கூடாது. இத்தகைய முடிவுகள் மாகாண சபை தேர்தல்வரை பின்போடபடவேண்டுமென தமிழர் கூட்டமைப்பு தீர்க்கமாக சொல்லவேண்டிய தருணமிது. என் கோரிக்கையை யாராவது சம்பந்தர் ஐயாவின் உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவார வேண்டுகிறேன்.
வழங்கப்பட்டது பொருளாதாரதிற்கான நோபல் நினைவு பரிசு. இது நோபல் பரிசு அல்ல. நோபல் பரிசு என்பது மறைந்த அல்பிரட் நோபல் அவர்கள் 1985 இல் தனது உயிலில் எழுதி வைத்தபடி 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும் பரிசுகள்.
பொருளாதாரத்துக்கு தனது பரிசை வழங்கும்படி நோபல் தனது உயிலில் எங்கும் குறிப்பிடவில்லை. சமாதானம், இலக்கியம், இரசாயனம், பெளதிகம், விஞ்ஞானம் அல்லது மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளுக்குமே நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று அவரது உயிலில் கூறப்பட்டிருந்தது.
பொருளாதரத்திற்கான நோபல் நினைவு பரிசு என்பது சுவீடன் நாட்டின் தேசிய வங்கியால் நோபல் நிறுவனத்தின் அனுசரணையுடன் பிற்காலத்தில் (1968) தான் உருவாக்கப்பட்டது. இதற்கான பரிசு தொகையை சுவீடன் நாட்டின் தேசிய வங்கியே நோபல் நிறுவனத்திற்கு வழங்கிவருகிறது.
இவ்வாண்டு பொருளாதரத்திற்கான நோபல் நினைவு பரிசை வெல்பவர்களில் ஒருவர் திரு அபிஜித் பனர்ஜியின் துணைவியார் எஸ்தர் டூப்லோ பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டு பின் அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.